ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள நிலம் ஒன்றில் 1.4 பில்லியன் டொலர்கள் செலவில் 'நகர வளாகம்' ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் கைச்சாத்திட்டுள்ளதாக புதனன்று சிறிலங்காவின் உத்தியோகபூர்வ வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை சிறிலங்கா அரச துறைமுக அதிகாரசபையானது மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக இதன் தலைவர் பிரியாத் பண்டு விக்ரம தெரிவித்துள்ளார். சிறிலங்காத் தலைநகரின் கரையோரத்தை நவீனமயப்படுத்தும் விதமாக சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமானது [China Communications Construction Company Limited – CCCC] துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் 1.43 பில்லியன் டொல…
-
- 1 reply
- 240 views
-
-
ஆபத்தான பயணங்களைத் தொடரப் போவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24281
-
- 0 replies
- 302 views
-
-
யாழ்ப்பாணம், நல்லூர், கோண்டாவில் ஸ்டேஷன் வீதியைச் சேர்ந்த சிவபாதம் சுப்பிரமணியம் தனது 47ஆவது வயதில் முதன் முறையாக தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24305
-
- 1 reply
- 396 views
-
-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இராணுவத்தினர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=24340
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையின் 13 வது சட்டத்திருத்தம் குறித்த கருத்து, அது ஏமாற்று வேலை என்பதை அழகாக விளக்குகிறார், குருபரன், யாழ் பல்கலையின் சட்ட விரிவுரையாளர். இவர்களை போன்றவர்களிடம் ஈழ விடுதலை போராட்டம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கிறது என்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது இரண்டு காணொளிகளையும் முழுமையாக பாருங்கள், பகிருங்கள்: 1. http://www.youtube.com/watch?v=wGROiPZNuRE 2. http://www.youtube.com/watch?v=89dIfVIjBNA https://www.facebook.com/guruparank?hc_location=stream
-
- 4 replies
- 627 views
-
-
இலங்கையைின் கல்கமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை பள்ளிவாசலில் வைத்து வெட்டி, அவரை மனிதநேயமற்ற முறையில் நடத்திய செயல்பாடு தலிபானிகள் பாணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாமில் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24086
-
- 1 reply
- 538 views
-
-
யாழ்ப்பாணம் நகர்புரங்களில் காட்சிபடுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளே பொறுப்பு கூறவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். மேலும், http://tamilworldtoday.com/?p=24155
-
- 1 reply
- 679 views
-
-
ஆபத்தான பயணங்களைத் தொடரப் போவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24281
-
- 0 replies
- 445 views
-
-
வடக்கு மாகாணத்தில் மொத்தம் 36 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24285
-
- 0 replies
- 358 views
-
-
சீதனம் கேட்டான் காதலன்! இளம் ஆசிரியை தற்கொலை!! பன்னிரெண்டு வருட காதலன் திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்... கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது. முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்…
-
- 19 replies
- 3.1k views
-
-
பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக, நீதியான விசாரணைகள் நடத்தப்படாதது குறித்து, சிறிலங்கா அதிபரிடம் நியாயம் கேட்கப் போவதாக கூறியதால், பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான, மகிந்த ராஜபக்சவின் சந்திப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. “ஒரு நாட்டின் அரச தலைமைக்குக் கீழ் உள்ள எந்தவொரு குழுவையும், சிறிலங்கா அதிபர் சந்திப்பது சலுகை அடிப்படையிலே தான் என்ற இராஜதந்திர நெறிமுறையை மேற்குநாடுகளால் சிந்திக்க முடியாதுள்ளது. அரசதலைவருடனான சந்திப்பின் போது எழுப்பவுள்ள பிரச்சினைகள் குறித்து, சந்திப்புக்கு முன்னதாகவே ஊடகங்களிடம் கருத்து வெளியிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. குறித்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைய…
-
- 1 reply
- 632 views
-
-
இன்னும் 10 வருடங்களுக்காவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்பதன் காரணமாக தாம் அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று (24) தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24157
-
- 1 reply
- 538 views
-
-
நாட்டை பிளவுபடுத்தமாட்டோம் வேட்பாளர்களுக்கு சத்தியக்கடுதாசி! 'நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாகவும் நாட்டை பிளவுபடுத்த எந்த வகையிலும் முயற்சிக்கப் போவதில்லை' என்று வேட்பாளர்களிடம் தேசப்பற்று இருக்கிறதா உறுதி செய்ய சத்தியக் கடுதாசி பெறப்படவுள்ளது எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தேசப்பற்றை உறுதி செய்வதாக வாக்குறுதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வடமேல் மற்றும் வடக்கு மாகாணசபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இவ்வாறு சத்தியக் கடதாசி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாகவும் நாட்டை பிளவுபடுத்த எந்த வகையிலும் முயற்சிக்க…
-
- 1 reply
- 358 views
-
-
வடக்கு தேர்தலினில் என்னிடமே கூடிய வேட்பாளர்கள் இருக்கப்போகின்றார்கள்.வடக்கு தேர்தலினில் ஈபிடிபி சார்பினில் போட்டியிட 20 பேருக்கு இடமொதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையினில் வடக்கிற்கான முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் என்னிடமே இருக்கும்.ஜனாதிபதியுடன் பேசி நானே முதலமைச்சரை தெரிவு செய்வேனென டக்ளஸ் மேலும் தெரிவித்தார்.இன்றிரவு யாழ்.பொதுசன நூலகத்தனில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனினும் வடக்கு தேர்தலினில் தாங்களும் போட்டியிடுவீர்களாவென எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் ஆம் அல்லது இல்லையென பதிலளிக்கவில்லை.இது பற்றி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வேளை அறிவிப்பேன்.அது அதிர வைக…
-
- 2 replies
- 708 views
-
-
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்-4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிட்டும். இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமையாகும் என கெலம் மக்ரே குறிப்பிட்டதாக திவயின சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சீர்குலைப்பதற்கு தூண்டும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட…
-
- 4 replies
- 529 views
-
-
ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார் 22 ஜூலை 2013 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்த சங்கரி போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுயைமாக சாடியவர்களில் முக்கியமான தமிழ் அரசியல் தலைவராக ஆனந்த சங்கரியை ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, புளொட் அமைப்பின் தவைலர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial…
-
- 41 replies
- 2.6k views
-
-
வவுனியா,கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி மக்களை திசைதிருப்பலாம் என கனவுகாணும் கைக்கூலிகளது வேலையே என தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வவுனியா,கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்டு,தமிழரசுக் கட்சியின் வவுனியா,கிளிநொச்சிக் கிளை என உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் வவுனியா,மற்றும் கிளிநொச்சி மாவட்ட கிளையின் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த வேலைகளை செய்வது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மாவையை முதலமைச்சர் வேட்பாளராக …
-
- 1 reply
- 545 views
-
-
சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் எச்சரிக்கையை அடுத்து, மகியங்கனையில் உள்ள பள்ளிவாசல் பல நாட்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளதால், ரமழான் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக் குழுவொன்றின் அச்சுறுத்தலை அடுத்து மகியங்கனை பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூடப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த 19ம் நாள் இங்கு முஸ்லிம்கள் தொழுகையை நடத்த முயன்ற போது, ஊவா மாகாண அமைச்சர் அனுர விதானகமகே அங்கு தொழுகை நடத்த தடைவிதித்ததுடன், பள்ளிவாசலைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றிருந்தார். இந்தப் பள்ளிவாசலைத் திறந்து மீண்டும் தொழுகையை நடத்த ஏற்பாடு செய்யும்படி, பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 18 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 296 views
-
-
-நவரத்னம் கபில்நாத் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற அமைப்பே இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது. உண்ணாவிரதம், மறியலுக்கு மாவை அண்ணன் மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா?, சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து சம்பந்தன் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?, சம்பந்தன் ஐயா சகலதும் தெரிந்த நீங்கள் சடுதியில் மாறியது ஏன்?, சந்தி சிரிக்க வைக்க பெற்ற தொகை எவ்வளவு?, மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி நகரிலும் இது போன்ற சுவ…
-
- 0 replies
- 649 views
-
-
1983 கறுப்புயூலை எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியதோ அதேபோல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தி வருகிறது என கறுப்பு யூலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இத்தகைய பெரும் கொடுமைகள் உதிரிச் சம்பவங்கள் அல்ல. சிங்களத்தின் மகாவம்ச மனோபாவத்தில் ஊறிப்போன தமிழினப்படுகொலை சிந்தனையின் வெளிப்பாடாய் நிகழ்த்தப்படுகின்ற இனஅழிப்பின் வடிவங்களே. கறுப்புயூலையின் பிதாமகன் ஜே.ஆரும் முள்ளிவாய்க்காலின் பிதாமகன் மகிந்தரும் இயங்கியது, இயங்குவது ஒரு சூத்திரத்தின் அடிப்படையில்தான். தமிழின அழிப்பு என்பதே இச் சூத்திரம் எனவும்…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோடுவதற்கு அரசாங்கம் தற்போது பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம், அல்லது அரசாங்கத்திலுள்ள சில அரசியல்கள், அல்லது அரசாங்கத்தின் கூலிகள் இந்த சுவரொடடிகளை ஒட்டியிருக்கக் கூடும் என்ற பல சந்தேகங்கள் நிலவுகின்றன. மேலும், http://tamilworldtoday.com/?p=24093
-
- 0 replies
- 522 views
-
-
நடைபெற உள்ள மடுமாதா திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24057
-
- 0 replies
- 360 views
-
-
நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் பள்ளி வாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹில்புல்லா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24075
-
- 0 replies
- 343 views
-
-
-வடிவேல்-சக்திவேல் 'கிழக்கு மாகண சபையினை தமிழர்கள் ஆட்சி செய்யமாட்டார்கள். அவ்வாறு ஆட்சி செயதால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்' என ஜனாதியின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'நான் காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்பவனல்ல. காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வேண்டும் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புமைப்புத்தான் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றது. அதில் என்ன இருக்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதுதா…
-
- 15 replies
- 1k views
-
-
பலரின் நிலை பரிதாபம் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகொன்று இன்று விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த படகில் சுமார் இருநூறிற்கும் மேற்பட்ட அகதிகள் புறப்பட்டு சென்றிருந்ததாகவும் அவர்களுள் 150 இற்கும் மேற்பட்டவர்கள் இலங்கை தமிழ் அகதிகள் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக குறித்த படகில் பயணித்தவர்களது 28 வரையிலான சிறு குழந்தைகளது நிலை பரிதாபகரமாகவே இருந்து வருகின்றது. எனினும் இந்தோனேசிய மீனவர்களது படகுகள் சுமார் 30 இற்கும் மேற்பட்டவை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.சிலர் நீந்தி கரை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மூழ்கிய படகு பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்…
-
- 2 replies
- 512 views
-