Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் மாயம் யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.adaderana.lk/tamil/news.php?nid=39145

  2. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட்டது. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பல அச்சுறுத்தல்களையும் தாண்டி போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக ஆலயங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் இன்று விசேட வழிபாடுகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வுகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலி கிளிநொச்சி அறிவகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் …

  3. "எங்களை வைத்து இந்த அரசு அரசியல் லாபம் காண்கிறது" யுத்த வெற்றி விழாவால் வதைக்கப்பட்ட சிப்பாய்கள் யுத்த வெற்றி விழாவால் வதைக்கப்பட்ட சிப்பாய்கள் யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பெயரில் தாம் பெரிதும் வதைக்கப்படுவதாக இராணுவச் சிப்பாய்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இன்று கொழும்பு நகரை முடக்கிய யுத்த வெற்றி விழா நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இதில் தமது படைப் பிரிவுகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு பிரிவினரும் அணி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பல மணி நேரம் இத்தகைய அணிவகுப்பில் ஈடுபட்டமையால் பெரிதும் களைப்படைந்து சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டனர். காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த…

  4. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் அவல ஒலி : இனியொரு… மனிதகுலத்தின் ஒரு பகுதி சில மணித்துளி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட நாள். மனிதகுலத்தை இருளின் விழிம்பிற்குள் இருத்திவைத்துவிட்டு உலகத்தின் அழகிய மூலை ஒன்றில் மரண ஓலங்களுக்கு மத்தியில் மனிதர்களைக் கொசுக்கள் போன்று கொன்றுபோட்ட நாள். மனித குலத்தைப் பாதுகாப்பதற்கு என்றே உலகத்தின் ஒவ்வோரு மனிதனின் உழைப்பிலும் மில்லியன்களைச் சுரண்டி உருவான நூற்றுக்கணக்கான உரிமை அமைப்புக்கள் அனைத்தும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க ஆயிரமாயிரமாய் மனித உயிர்கள் மாமிசங்களாக்கப்பட்ட நாள். குழந்தைகளும், முதியோரும், சிசுக்களைத் தாங்கிய பெண்களும், நெஞ்சுரம் மிக்க நாளைய சந்ததியும் பிணக் குவியல்களாக அழித்துப் போடப்பட்ட நாள். முள்ளிவாய்க்…

  5. யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் - ஜனாதிபதி 18 மே 2013 யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிக்க முடியாது எனக் கருதிய அரசியல் தலைவர்கள், புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறுவதனையும், படுகொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதனையும் இந்தத் தலைவர்களினால் நிறுத்த …

  6. வடக்கெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! 18 மே 2013 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தில் ஆகுதியான அனைவருக்குமான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நகரிலுள்ள தமிழரசுக்கட்சி வளவினுள் இன்று மாலை நடைபெற்றிருந்தது.நூற்றுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பெருமனவானோர் பங்கெடுத்திருந்தனர். பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையினில் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்திற்கான நினைவேந்தல் கூட்டம…

  7. லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு : ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் 18 மே 2013 இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது. சாம் கிருஷ்ணா செவ்வி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும், இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் …

  8. தடைகளை வென்று, விடுதலைக்கான பாதையில் நம்பிக்கையுடன் முன்செல்ல இந்நாளில் உறுதியேற்போம்! முள்ளிவாய்க்காலும் மே18 ம் திகதியும் தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத பதிவுகளாகி நான்கு ஆண்டுகளாகிவிட்டன. முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் மீது சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையின் அதியுச்ச வடிவமாக இன்று ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகெங்கும் இனப்படுகொலைக்கும் போர்க்குற்றத்திற்கும் உள்ளான மக்களின் குரல்களில் ஒன்றாக, உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்விகளை எழுப்பும் ஒரு நிலம் அது. அது மட்டுமன்றி, கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலின் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்…

  9. சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போருக்கு அந்த நாட்டில் தங்க இடமளிக்காத வகையில் புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஜூலியா கில்லார்ட் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இன்றைய தினம் அந்நாட்டு பாராளுமன்றில் இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் பிரவேசிக்கும் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் மனுஸ் மற்றும் பபுவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். குறித்த இரண்டு தீவுகளிலும் முகாம்களில் தங்க வைக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது. …

  10. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போலவே புலம்பெயர் தமிழர்களும், சில அரசியல் கட்சிகளும் தமிழர்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், இவர்கள் இருக்கும் வரை தமிழர்களுக்கு எதிரிகளே தேவையில்லை எனவும் இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரே நாட்டிற்குள் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தமிழர்கள் மனங்களில் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்பதைத் தான் நம்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள மக்களின் மனதை எனக்கு நன்கு தெரியும். 1982ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாடு வேண்டுமெனக் கோரிய பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட கொப்பேகடுவையை வடக்கு மக்கள் வெற்றிபெறச் செய்தனர். ஒரே நாட்டிற்குள் வாழ…

  11. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளளனர். இன்று மாலை 4 மணியளவில் இவர்கள் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். http://tamilworldtoday.com/home

    • 2 replies
    • 928 views
  12. 18 மே இனப்டுகொலை நாளன இன்று தமிழினப் இனப்படுகொலையைக் கண்டித்து , ஐ.நா. மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது என்ற கோஷங்களுடன் சென்னை மெரினா கடகரையில் தடையை மீறி புலிக்கொடிகளுடன் பேரணி நடத்திய தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14779:pulikkotikal-march-in-defiance-of-the-ban,-with-the-arrest-of-students-movies&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 663 views
  13. வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த ஆழி நீர்ப்பரப்பும் தன் அலைக் கரங்களை ஒடுக்கிவிட்டு விம்மி விம்மித் தணிகிறது. பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்கள்: காணுமிடமெங்கும் குறை உயிரில் முனகும் ஜீவன்கள்; எரிந்து கருகிய கூடாரங்கள்; இடிந்து சிதைந்த குடியிருப்புக்கள்; சிதறிக் கிடக்கும் ஆடைகள்; பாவனைப் பொருட்கள். ஒரு புறம் இறந்து கிடக்கும் உடல்கள் மீதும், இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேலும் இரக்கமின்றி ஏறி ஓடும் இராணுவத்தினரின் உழவு இயந்திரங்கள்; மறுபுறம் உயிர் ஒன்றை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நடக்கவும் தென்பின்றி தடுமாறிச் சாரை சாரையாக நகரும் மக்கள் கூட்டம்!…

  14. யாழ்.பல்கலைக்கழக சூழலில் மீண்டும் நள்ளிரவு முதல் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகள் கெடுபிடிகள் மத்தியில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் விடுதிகளினிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகளை முன்னெடுக்கலாமென்ற அச்சத்திலேயே மாணவர்கள் விடுதிகளுட்பட்ட பல்கலைக்கழக சூழல் சுற்றிவளைக்கப்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டைய மாவீரர் தின கைதுகள் மற்றும் மிரட்டல்களையடுத்;து இம்முறை பல்கலைக்கழக சமூகம் அடக்கிவாசிக்குமெனவே பாதுகாப்பு தரப்பு நம்பியிருந்தது.எனினும் அவ்வச்சமான சூழலையும் தாண…

  15. வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் முள்ளிவாய்க்காலில் உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்று 4 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே நேற்று இரவு விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட…

  16. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லபபட்ட மக்கக்கு வடக்கு கிழக்கில் அங்சலி செலுத்தப்பட கொழும்பில் யாரிய அளவில் முள்ளிவாய்க்கால் போர் வெற்றி விழாகொண்டாடப்படுகிறது. தமிழர் தாயகத்தில் இன்று துயர் பகிர்வு; முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர உணர்வெழுச்சியுடன் ஏற்பாடுகள் தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என்பவற்றால் செய்யப்பட்டுள்ளன. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்…

  17. இப்படுகொலை குறித்து வன்னி மக்கள் சிலரது கருத்துக்களை தொகுத்து தருகிறார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர். முள்ளிவாய்க்கால் போர் நடந்து இன்றைய நாட்களுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. உலகையே உலுக்கிய முள்ளிவாய்க்கால் படுகொலை இந்தறூற்றாண்டின் மாபெரும் அவலம். இந்தப் படுகொலையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்படுகொலை குறித்து வன்னி மக்கள் சிலரது கருத்துக்களை தொகுத்து தருகிறார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர். எங்கட வீட்டில நாலு பேர் செத்தவை. ஏன்ட இரண்டு பிள்ளையளும் மனுசனும் தம்பியும் முள்ளிவாய்க்காலி கொத்துக குண்டில செத்திட்டினம். இப்ப ஒரு பிள்ளையும் நானும் இருக்கிறம். எங்கட வாழ்வில முள்ளிவாய்க்கால மறக்க ஏலாது. என்ட வாழ்க்கை முள்ளிவாய்க்க…

  18. இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொ…

  19. ஒரே நாட்டிற்குள் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தமிழர்கள் மனங்களில் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்பதைத் தான் நம்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள மக்களின் மனதை எனக்கு நன்கு தெரியும். 1982ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாடு வேண்டுமெனக் கோரிய பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட கொப்பேகடுவையை வடக்கு மக்கள் வெற்றிபெறச் செய்தனர். ஒரே நாட்டிற்குள் வாழவேண்டும் என்ற இந்த மனப்பான்மை மீண்டும் தமிழர்கள் மத்தியில் இன்று கட்டியெழுப்பப்படுகின்றது என்பதை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டு அழுத்தங்களும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களும் எமக்குப் புதியவை அல்ல. வருடக்கணக்காக இருந்த ஆயுதப் பயங்கரவாதத்தை சர்வதேசம…

  20. தமிழீழம்: விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது?, என கேள்வி எழுப்பியுள்ளது விடுதலைப் புலிகள் அமைப்பு. மே 18 ம் தேதியை இன அழிப்பு நாளாக அறிவித்துள்ள விடுதலைப் புலிகள், இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது. எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும்…

  21. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நட…

    • 1 reply
    • 476 views
  22. சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.

    • 0 replies
    • 498 views
  23. அதிகாரங்களை இல்லாதொழித்தல் என்ற வாதம் பரவலாக ஓங்கி நிற்கின்ற நிலையில், சிறுபான்மை சமூகத்தினரை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு வெளிப்பட்டிருக்கிறது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளது. கிழக்கு இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. இதனைத் தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துவருவதாகவும் ஹசன் அலி எம்.பி தெரிவித்தார். இதுகுறித்து கருத்துரைத்த ஹசன் அலி எம்.பி, கிழக்கில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக தகவல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதனையும் கூறமுட…

    • 2 replies
    • 378 views
  24. விடுதிகளில் குற்றங்கள் நடைபெற்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே நபர்களை கைது செய்யமுடியும்: யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எந்தவொரு 18 வயதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாமாக விரும்பி விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்யமுடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை மாத்திரமே எம்மால் கைது செய்யமுடியும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிதார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதியொன்றினுள் ஒரு குற்றம் நடைபெறுகின்றது என்றால் அக்குற்றம் தொடர்பாகப் புலனாய்வுகள் மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து கட்டளையைப் பெற்ற பின்பே நாம் …

  25. யாழ் பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று ஏதாவது அஞ்சலிகள் இடம்பெறலாம் என்று தெரிவித்தே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை பெருமளவான படை குவிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.