ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பகுதியில்உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . முகாமில் படையினருக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் குண்டு வெடித்துள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14512:mullaitivu-army-camp-blast-6-sinhala-soldiers-lives&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 378 views
-
-
இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது. துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலு…
-
- 3 replies
- 627 views
-
-
வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வகையில் அந்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். திங்களன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், யாழ்ப்பாணம் குரநகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளதுடன், இந்திய அரசின் உதவியில் காங்கேசன்துறை துறைமுகப்பகுதியில் மூழ்கியிருந்த கப்பல்களை அகற்றி அதனை ஆழமாக்கும் பணிகள் முடிவடைந்து அதனை இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் வைபவ ரீதியாக…
-
- 0 replies
- 588 views
-
-
தலவாக்கலையில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்டாரவளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சிலர் இன்று 7 ஆம் திகதி அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். இந்தக்கூட்டத்திற்கு பதுளை, பண்டாரவளை போன்ற பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தத் தொழ…
-
- 0 replies
- 326 views
-
-
40 ஆண்டுகால பொதுநலவாய நாடுகள் அமர்வில் முதல் தடவையாக பிரித்தானியா மஹாராணி பங்கேற்க மாட்டார் பிரித்தானிய மஹாராணி பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்க மாட்டார் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால பொதுநலவாய நாடுகள் அமர்வில் முதல் தடவையாக பிரித்தானியா மஹாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக அமர்வுகளில் மஹாராணி பங்கேற்பதனை தவிர்த்துள்ளார் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. எவ்வாறெனினும் பிரித்தானிய மஹாராணிக்கு பதிலாக இளவரசர் சார்ள்ஸ் இந்த அமர்வில் பங்கேற்பார் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல…
-
- 0 replies
- 331 views
-
-
முல்லைத்தீவு மாஞ்சோலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் படைசிப்பாய் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டவராவார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது தாயைப் பகுதியின் ஊடாக குண்டு பாய்ந்து தலைப் பகுதியூடாக குண்டு வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதோடு இவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://nerudal.com/nerudal.57115.html
-
- 1 reply
- 443 views
-
-
வடக்கு மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாண மீனவர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீட்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளுக்கு மக்கள் சரியான வழிகளில் ஆதரவினை வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91447/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 657 views
-
-
சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு! எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் திருச்சி நகர் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி 12 இடங்களில் பெண்கள் விடுதலை முன்னணி, சார்பாக நடத்தப்பட்டது. பெண் தோழர்கள் 20 பேர் அளவில் குழந்தைகளுடன் வேன் மூலம் பிரச்சாரம் செய்தனர், ஒவ்வொரு இடத்திலும் பெண் தோழரின் பறை முழக்கம், அரசியல் முழக்கம், பாடல்கள், பேச்சு என செய்யப்பட்டது. மக்கள் ஒவ்வொரு இடத்திலும் 50 , 100 பேர் எனும் அளவில் கூடி நின்று ஆதரவளித்தனர், நிதியும் கொடுத்து உதவினர், மக்களில் சிலர் நம்மையே சாகடிக்கிற அரசியல் வாதிகள், ஈழத் தமிழர்களுக்கு என்ன கிழிக்க போறங்க என ஆத…
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இர…
-
- 0 replies
- 326 views
-
-
சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்கத் திட்டம் தாயக, இலங்கைச் செய்திகள்| 06. 05. 2013, திங்கட்கிழமை, தமிழீழ நேரம் 10:19 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர். முன்னாள் நீதியரசர்…
-
- 1 reply
- 321 views
-
-
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: அமெரிக்க தூதுவர் வேண்டுகோள்! [Monday, 2013-05-06 18:03:07] தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் தெரிவித்தார். அத்துடன் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒழுங்கான விசாரணைகள் பாதுகாப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். டுவிட்டர் சமூக இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.seithy.com/listAllNews.php?newsID=82088&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 413 views
-
-
அஸாத் சாலி மீண்டும் வைத்திய சாலையில் 2013-05-06 19:27:41 தடுப்புக்காவலிருக்கும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி மீண்டும் உடல் நிலை பாதிப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கடந்த வௌ்ளிக்கிழமை உடநல நிலை குறைவுகாரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு பின்னர் நேற்றைய தினம் வைத்திய சாலையிலிருந்து வெ ளியேறியிருந்தார். எனினும் மீண்டும் இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=4401
-
- 0 replies
- 266 views
-
-
மின்கட்டண அதிகரிப்பை ரத்துச்செய்யாவிட்டால் நாடுதழுவிய ரீதியில் வேலை நிறுத்தம் : கே.டி.லால்காந்த ஜனாதிபதிக்கு கடிதம் By General 2013-05-06 12:45:43 உத்தேச மின் கட்டணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே உடனடியாக மின் கட்டண அதிகரிப்பை முழு அளவில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ரத்துச்செய்யாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியாகிய நீங்களும் அரசாங்கமும் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மிகவும் அநீதிய…
-
- 0 replies
- 266 views
-
-
திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே அசாத் ஸாலியின் கைது நடவடிக்கை! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்!! தமிழ் தேசத்தின் மீது கடந்த 65 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த தேசத்தின் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லிம் மக்கள் மீதும், தற்போது அஸாத் ஸாலி மீதும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிக மோசமான நடவடிக்கைள் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அஸாத் ஸாலி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமது கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார். அஸாத் ஸாலி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து…
-
- 0 replies
- 378 views
-
-
அசாத் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தவில்லை! - அரசின் கூற்றுக்கு மகள் மறுப்பு!! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை அவரின் மகள் மறுத்துள்ளார். தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான அசாத் சாலி கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டது முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று மாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி விட்டதாக சிறிலங்காவின் படைத்துறை விவகாரங்களுக்கான அதிகாரி லக்ஷ்மன் ஹூலுகல்ல இன்று ஊடகவியலாள…
-
- 0 replies
- 316 views
-
-
மகிந்தவை இந்தியா பாதுகாத்தது எப்படி? - திரைமறைவுத் தகவல்களைத் தரும் உபுல் ஜோசப் பெர்ணான்டோ [ சனிக்கிழமை, 04 மே 2013, 11:18 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பற்றிய சிறப்பு அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார். வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், தனது சோதிடர்கள் அதற்கான நல்ல நேரத்தை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச விடுதலைப் புலிகளின் ம…
-
- 6 replies
- 761 views
-
-
இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடல் எல்லையை மீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 11 இலங்கை மீனவர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் எட்டுப் பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் காக்கிநாடா கடலோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய நிலையில் இரவு மின் துண்டிக்கப்பட்டதை …
-
- 5 replies
- 795 views
-
-
பலவந்தமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் தமது சொந்த வீட்டைவிட்டு விரட்டி தம்மை நடுத்தெருவில் விட்டுள்ளதாக புல்மோட்டை ஜின்னாபுரம் மக்கள் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், நாம் இப்பிரதேசத்தில் 1988ஆம் ஆண்டு முதல் வசித்து வருகின்றோம். நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து இடம்பெயர்ந்து சென்று மீண்டும் 2006, 2007 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மீள் குடியேறினோம். இதன் பின்னரே எமது குடியிருப்புகளுக்கு அண்மையில் கடற்படையினரின் முகாம் 2010 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் எமது குடியிருப்புக் காணிகள் தமக்குத் தேவையென கூறி எம்மை மிரட்டி பல அட்டூழியங்களை மேற்கொண்டு பலவந்தமாக அதிகாரத்தை பயன்படுத்த…
-
- 1 reply
- 436 views
-
-
இலங்கை மேன்முறையீட்டு நீதவான் ஒருவர் இந்திய விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தண்ணீர் போத்தலினால் சக நீதவான்களை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான் மாநாடு ஒன்றுக்காக இந்தியா சென்று நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட நீதவானின் இந்த நடவடிக்கையினால் விமான நிலையத்தில் குழுமியிருந்த ஏனைய பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையைச் சேர்ந்த சக நீதவான்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பத்து நிமிடங்களுக்கு மேல் கடும் சொற்களினால் குறித்த நீதவான் திட்டித் தீர்த்ததாக பெங்களுர் …
-
- 1 reply
- 455 views
-
-
"வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. இதை நாங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார். தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் தமிழ் மக்கள், ஒரு போதும் அரசின் நட்ட ஈட்டை வாங்கமாட்டார்கள்''. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. வடக்கில் ஓர் அங்குலக் காணியைக் கூட அரசு பலாத் காரமாக எடுக்கவில்லை யென்றும், நட்ட ஈடு வழங்காமல் காணிகள் எதனையும் அரசு எடுத்திருக்குமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிரூபித்துக் காட்டட்டும் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுமுன் தினம் தெரிவித்தி…
-
- 0 replies
- 466 views
-
-
நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் வரையில் அங்கு தேர்தல் நடை பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே உள்ளோம். எமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த முயன்றால் அதனை நாம் தடுத்து நிறுத்துவோம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்குத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் இம்மாத இறுதிக்குள் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக சி…
-
- 0 replies
- 397 views
-
-
வெள்ள நீரில் மூழ்கிய நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் ஷாஜஹான் நீர்கொழும்பு நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதன் காரணமாக பாசாலை மாணவர்கள் வேலைக்கு செல்வோர் உட்ப பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தின் பல்லன் சேனை வீதி, கட்டவ பிரதேசம், நகரமத்தியில் தம்மிட்ட வீதி மற்றும் போலவலான பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டன சட்ட விரோத கட்டிடங்கள் காரணமாகவும், பிரதான வடிகான் துப்பரவு செய்யப்படாததன் காரணமாக வடிகானில் நீர் நிறைந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது போன்று அடிக்கடி ஏற்படுவதாகவும் தளுபத்ததை பிரதேசவாசிகள் கு…
-
- 0 replies
- 600 views
-
-
முஸ்லிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி மூன்று மாத காலம் தடுத்து விசாரணை செய்யப்பட உள்ளார். இனவாதத்தை தூண்டியதாகத் தெரிவித்து அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் இந்த் தடுப்பு உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சட்டவிரோதமான முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும், பிணை மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவு…
-
- 0 replies
- 410 views
-
-
காந்தரூபன், செஞ்சோலை இல்லத்தின் காணிகள் சிறிலங்கா படையினரால் சுவீகரிப்பு மே 6, 2013 கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை போன்ற அறப்பணி நிலையங்கள் அமைந்திருந்த நிலம் சிறிலங்கா படையினரால் சுவீகரிக்கப்படவுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில், மலையாளபுரம் என்ற இடத்திலுள்ள மூன்றரை ஏக்கர் காணியே படையினருக்காக சுவீகரிக்கப்படவுள்ளது. தங்களுக்கான இராணுவ வைத்தியசாலை அமைப்பதற்கே இந்த நிலத்தை தாங்கள் சுவீகரிக்கவுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவித்தல் குறித்த காணியில் ஒட்டப்பட்டுள்ளது. இந்தக் காணிக்கு உரிமை கோருபவர்கள் எவரும் இனம்காணப்படாத காரணத்தாலேயே தாங்கள் இந்தக் காணியைச் சுவீகரிக்கவுள்ளதாகவும் படை…
-
- 0 replies
- 820 views
-
-
மட்டக்களப்பில் புத்தர் சிலையை அகற்றி பிள்ளையார் படத்தை வைத்த இளைஞர்கள்! [Monday, 2013-05-06 09:06:29] மிகவும் துணிச்சலான இளைஞர்கள் புத்தர் சிலையை எடுத்து எறிந்து பிள்ளையார் படத்தை மாட்டியுள்ளனர் இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரியகல்லாறு கிராமத்தின் அருகே அமைந்திருந்த புத்தர் சிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி களுவாஞ்சிகுடி பொலிசார் மீண்டும் அதே இடத்தில் பொலிஸ் சாவடி அமைத்து வருகின்றனர். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த புத்த தூபி அடித்து நொறுக்கபபட்டுள்ளது தூபியினுள் இருந்த புத்தர் சிலையும் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இப்புத்தர் தூபிக்குப் பக்கத்தில் இ…
-
- 1 reply
- 420 views
-