Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் எந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டாலும் அதனை குறை கூறும்; சிலர் இருக்கத் தான் செய்கின்றார். மத்தல விமான நிலையத்தை அமைத்ததும் அதனை நூதனசாலை என்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நீச்சல் தடாகம் என்று விமர்சித்தனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தெரிவித்தார். கொழும்பு, கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாம் எதனை செய்தாலும் குறை கூறுகின்றனர் அல்லது விமர்சிக்கின்றர். அன்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய போதும் எம்மை விமர்சித்தனர். இன்று நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்ற போதும் விமர்சனம் செய்கின்றனர். இதுவே இவர்களின் வழக்கம். எனவே அதனை…

    • 2 replies
    • 485 views
  2. -நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் அரசாங்கத்தினால் வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ச…

    • 6 replies
    • 659 views
  3. மஹிந்த சிந்தனைக்கு மற்றொரு வெற்றி! இரண்டானது கூட்டமைப்பு?! — 01/05/2013 at 11:18 pm தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்படும் முரண் நிலை மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இருவேறு மேதின நிகழ்வுகள் ஊடாக பகிரங்கப்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்றைய மேதின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலும் கூட்டமைப்பிற்குள் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் எதிர்காலத் தூண்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மேதின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் மாவைசேனாதி…

    • 1 reply
    • 517 views
  4. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான சஹாரா இந்தியா குழுமம் நாட்டு மக்களிடம் தேசபக்தியைத் தூண்டும் வகையில் ஒரு விளம்பரத்தை மே 1 அன்று எல்லா நாளிதழ்களிலும் வெளியிட்டிருந்தது. அதன்படி மே 6 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நாடு முழுவதுமுள்ள தமது அலுவலகங்கள் மூலமாக 11 லட்சம் பேரை தேசிய கீதத்தை சேர்ந்திசையாகப் பாட வைத்து, அதனை மூலம் உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளதாம் சஹாரா. அதில் தேசபக்தி உள்ள உங்களைப் போன்ற இந்தியர்களையும் இணைத்து கின்னசுக்கு தயாராகும்படி அறைகூவி அழைக்கிறது சகாரா. இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி தேசிய ஹாக்கி அணி, ஃபார்முலா ஒன் கார் பந்தய குழு, ஐபிஎல் கிரிக்கெட்டின் புனே வாரியர்ஸ், கட்டுமானத் துறை என 7 வகையான தொழில்களில் சக்கைப்போடு போடும் சகாராவின்…

  5. 17 ஆண்டுகள் ஓடி விட்டன. கிறிஸ்தவ விசுவாசிகளான அவளது பெற்றோர்கள் இப்போதெல்லாம் தேவாலயத்திற்கு செல்வதில்லை. குடும்பத்திற்குள் கூடி இறைவனைத் தினந்தோறும் வேண்டிக் கொள்கிறார்கள். வெளியே துணையாக இருப்பதாய் அவர்கள் நம்புவது அந்தக் கடவுளைத்தான். ஆனால் அவனது ஆலயத்திற்குள் செல்ல அவர்களால் முடியாது. 33 வயது நிரம்பிய அப்பெண்ணால் சினிமாவுக்கு போக முடியாது, ஒரு கடை கண்ணிக்கு போக முடியாது, எந்த விழாவுக்கும் ஏன் இழவுக்கும் கூட போக முடியாது. தினந்தோறும் காலையில் பேருந்தில் அலுவலகம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புகிறாள். அலுவலகத்தில் வேலை செய்யும் 13 பேரில் பெரும்பாலானோர் அவளது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களது உறவினர்கள். எனவே தங்களது வெறுப்பை, புறக்கணிப்பை தினமும் அவள…

  6. கோத்தாவின் இரகசிய நடவடிக்கைக்காக மட்டக்களப்பு பிரதேசத்தில் களமிறங்கிய குழு! பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டவிரோத ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக மட்டக்களப்பு காரைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து நேற்றிரவு 11.45 அளவில் குழுவொன்று வெளியில் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் அதிரடிப்படை சாரதி ஒருவருடன் 3 அதிரடிப்படையினர், கருணாவுடன் தொடர்புடைய மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட 6 அடங்குகின்றனர். இவர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிம்பரத்வௌ நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள், இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள், அதிரடிப்படையினர் பயன்படுத்தும் எம்.16 ரகத்தை சே…

  7. தாயகம் திரும்பிய மாவீரர் மேஜர் கணேஸின் மனைவி, பிள்ளைகள் விமான நிலையத்தில் கைது! 01/05/2013 at 10:57 pm அச்சம் காரணமாக தமிழ் நாட்டின் திருச்சியில் கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் (கோவர்ஜன் 10, நிதுர்சன் 7) தங்கியிருந்த ஜெயந்தினி 33 இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார்.நிலைமை சீர்டைந்ததாக கூறப்பட்ட செய்திகளை நம்பி தனது சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில் கடந்த ஞாயிறுக்கிழமை 28.04.2013 அன்று அதிகாலை தனது இரு பிள்ளைகள், உறவினர்கள் இருவர், நண்பர் ஒருவர் ஆகியோரோடு திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து ஒரு வாகனத்தை வாடகைக்கு பிடித்துக்கொண்டு தங்களுடன் வந்த நண்பர் ஒருவரின் கொழும…

  8. பொன்சேகாவின் மே தின ஒன்று கூடலிற்கு தடை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா நடத்தவிருந்த மேதினம் ஊர்வலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தனது கட்சினயின் மேதின பேரணியைக் குழப்ப அரசாங்கத்தின் அடியாட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளமை காரணமாகவே இதனைக் கைவிட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்துடன் இந்த பேரணிக்கு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பிலும் குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேதினத்தை நடத்துவதற்கு எம்மால் தெரிவு செய்யப்பட்ட இடத்துக்கான அனுமதியை அரசு தரவில்லை. எமது மே தினம் தொடர்பாக எம்மால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், பெனர்கள் போன்றனவற்றைப் பொலிஸார் அகற்றியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார். …

  9. மே தினத்தன்று முகமூடி அணிந்த நபர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டில் நடமாட்டம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது வீட்டிற்குள் மே தினத்தன்று (1-5-2013) புதன்கிழமை நான்கு மணியளிவில் சென்ற முகமூடி அணிந்த நான்கு நபர்கள் அங்கிருந்த உதவியாளரிடம் கஜேந்திரகுமார் எங்கே என்று விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் வெளியே சென்றுள்ளதாக அந்த உதவியாளர் கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அந்த நபர்கள் படம்பிடித்துச் சென்றுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் தம்மை பிறர் அடையாளர் கண்டுகொள்ளாத வகையில் மழைக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்தவாறு தமது வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட…

  10. அசாத் சாலி கைது May 2, 2013 08:27 am கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் முஸ்லீம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அசாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக்காலமாக அசாத் சாலி பாதுகாப்பு பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்த நிலையில் இன்று (02) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் பிரிந்து சென்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் அசாத் சாலி கைது செய்…

  11. உத்தியோக பூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை உதயன் விருந்தினர் விடுதியில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொண்டதுடன் உதயன் அலுவலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு தாக்குதல் குறித்து நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழில் தங்கியிருக்கும் இவர்கள் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.onlineuthayan.com/News_More.php?id=231691994323456800

  12. ஜோன் மெபி அவர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்கட்சிதான் தற்பொழுது ஆட்சியில் இருக்கிறது Labor MP calls for Sri Lanka CHOGM boycott A federal Labor backbencher has broken ranks and called for Australia to boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Sri Lanka later this year. Canada's government has already threatened to boycott the November meeting in protest against alleged human rights violations. A newly released Amnesty International report has accused the Sri Lankan government of intensifying a crackdown on critics through violence and intimidation. Foreign Affairs Minister Bob Carr has said Canada's boycott would be counter-productive and it would …

  13. எடிசனும் புலம்பெயர் தமிழருமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்; அரசு இப்படியும் சொல்லும் என்கிறார் ரணில் "மின்குமிழை உலகுக்கு அறிமுகப்படுத்திய தோமஸ் அல்வா எடிசனும் புலம் பெயர் தமிழர்களுமே மின் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என அரசு கூறும் காலம் வெகு தொலைவிலில்லை'' என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கவின் கட்சி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றின் போதே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: தமது ஊழல், மோசடிகளை மூடி மறைப்பதற்காக மின்கட்டணத்தை அதிகரித்த அரசு, தற்போது ஒவ்வொருவர் மீதும் குற்றஞ்சாட்டி தான் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது. முன்னாள் மின்சக்தித்துறை அமைச்சர் சம்…

    • 2 replies
    • 531 views
  14. த.தே.கூவே மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டத்தினை செய்கின்றதாம்; கண்டுபிடித்து கூறுகிறார் விமல் வடக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடினர். எனினும் தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ள வேளையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாகவே பார்க்கின்றனர் என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் வாழும் 1000 வறிய குடும்பங்களுக்கு 175 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்புக் கடனாக வழங்கி வைக்கும் வைபவம், பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்த…

    • 0 replies
    • 318 views
  15. தமிழரின் உரிமைக்குரல் இன்னும் ஒடுங்கிவிடவில்லை உலக தொழிலாளர் வர்க்கத்துடன் கைகோர்ப்போம்; மேதினச் செய்தியில் சரவணபவன் எம்.பி. தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத் தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை.எமது உரிமைகளுக்கான போராட்டத்துக்கு உலகத் தொழிலாளர் வர்க்கம் கைகொடுக்கும் எனத் திடமாக நம்புகின்றோம். இவ்வாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தொழிலாளர் வர்க்கத்தின் உன்னத நாளான மேதினத்தை அதன் புரட்சிகர மேன்மையுடன் கொண்டாடும் அனைத்து உழைக்கும் மக்களுக்கு…

    • 0 replies
    • 227 views
  16. தமிழ் மக்களது 400 ஏக்கர் காணியில் சிங்கள குடியேறுற்றத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுரம் கிராம வீட்டுத்திட்டத்திலேயே காணி அபகரிப்பு நடைபெறுகிறது. 1995ஆம் ஆண்டு வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 400 தமிழ்குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைக்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர் வீதம் 400 ஏக்கர் காணிகள் அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச்…

    • 4 replies
    • 426 views
  17. 13 ஆவது திருத்தத்தை ஒழிக்காது வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த முற்படுமானால் அமைச்சுப் பதவியினை துறக்க நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேனென தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் இடம்பெற்ற தேசிய விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் வீரசன்ச, கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் மே தினத்தை நடத்திய தேசிய விடுதலை முன்னணி இம்முறை தனியாக ஏன் மே தினத்தை அனுஷ்டிக்க வேண்டுமென எண்ணலாம். ஏனெனில் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கதைக்க முடியாத விடயங்களை விரிவாக விளக்கவே இம் மு…

  18. இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் நியமனம் இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் கே. காந்தா இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் மிக விரைவில் அசோக் கே. காந்தா இலங்கையை விட்டு செல்லவுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே புதிய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராஜதந்திர சேவையில் சிரேஷ்ட அதிகாரியான வை.கே.சிங், தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொறுப்பான செயலாளராக…

  19. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் இந்த கட்சிகள் தமக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் முதலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் தமிழரசு கட்சியின் சிரேஷட உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ர…

  20. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டுமாயின் சமூகங்களிடையே அருகிப்போய்விட்ட நம்பிக்கையும் ஒற்றுமையும் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்கள் தமக்குச் சொந்தமான வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்ல விடாது தடுக்கப்படும்போது நல்லிணக்கம் வரப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பயங்கரமான முயற்சியொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 6,400 ஏக்கர் விஸ்தீரனமுள்ள காணிகள் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலு…

  21. தனது மகனும் மருமகளும் தன்னை மோசமாக நடத்துவதாக வயோதிப தாயொருவர் செய்திருந்த முறைப்பாட்டை விசாரித்த இந்திய நீதிமன்றமொன்று வீட்டுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மகனும் மருமகளும் நடந்துகொள்ளும் முறையைக் கண்காணிப்பதற்காக காவல்துறையினர் கமராவில் பதிவாகும் காட்சிகளை அடிக்கடி சோதிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய விடயங்கள் துஷ்பிர மனித உரிமை 72 வயதான விம்லா தாரிவால் என்ற அந்த விதவைத் தாய், தன்னை தனது மகன் அடிக்கடி தாக்குவதுடன் வீட்டைவிட்டு வெளியே அனுப்பவும் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவில் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துவருகின்ற கூட்டு…

    • 1 reply
    • 393 views
  22. தற்போதைய அரசு பிரேமதாஸ அரசின் காபன் பிரதி என சஜித் கூறுகிறார்! ‍இந்த அரசு பிரேமதாஸ அரசின் காபன் பிரதி என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அன்று ´கம் உதாவ´ இன்று ´தேயட்ட கிருள´ (தேசத்திற்கு மகுடம்), அன்று ´ஜனசவிய´ இன்று ´சமூர்த்தி´, அன்று ´மகசவிய´ இன்று ´மகநெகும´ என்று இன்று (01) இடம்பெற்ற பிரேமதாஸ நினைவு நிகழ்வில் உரையாற்றிய சஜித் சுட்டிக்காட்டினார். அன்று ´கம்உதாவ´ நிறைவுக்கு வந்தபோது மக்களுக்கு வீடுகள் மீதம் இருந்ததாகவும் இன்று தெயட்ட கிருள நிறைவு பெற்றால் மக்களுக்கு வெறும் நிலம் மாத்திரமே மீதமிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மற்றையவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன் தாம் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என சஜித…

    • 0 replies
    • 398 views
  23. http://www.vinavu.com/2013/05/01/may-day-rally-for-eelam-refugees/ ‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் மே நாள் அன்று சென்னையில் பேரணி மற்றும் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தின. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து தோழர்கள், மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பு மக்கள் கலை …

  24. வடக்கில் பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்குவோம். பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். உண்மைக்கு முரணான பிரசாரங்களை பரப்பி வடக்கில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 50இற்கும் குறைவானவர்களே பங்குபற்றுகின்றனர். எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையின்…

  25. தமிழ் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, தமிழ்த்தேசிய இனம் ஒன்றில்லை எனும் நிகழ்ச்சி நிரல் அரசினால் முன்னெடுக்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். "மே" தின நிகழ்வையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகத் தொழிலாளர் விடுதலை பெற்ற நாளாக உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ‘மே’ 1ம் நாள் தொழிலாளர் விழாவாகக் கொண்டாடுவது வழமையானதே. பலநாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், புரட்சி நடவடிக்கைகள் காரணமாக ஆட்சிகளே மாற்றியமைக்கக்கப்பட்டுள்ளமையும் வரலாறுகளாகும். இலங்கையிலும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.