Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய விதிகள் தொடர்பில் ஹோட்டல் தொழிற்துறை சார்ந்தவர்கள் பலதரப்பட்டக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். இலங்கையில் ஒரு வாரத்துக்கு அதிககாலம் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா மற்றும் கடவுச்சீட்டுத் தகவல்களை ஹோட்டல்களும் விருந்தினர்-ஓய்வு விடுதிகளும் அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பதற்கும் விடுமுறையை கழிப்பவர்கள் என்ற போர்வையில் இருப்போரால் புரியப்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இப்படியான மேலதிக கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று …

  2. முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது நாட்டையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாக அமையும், எனவே முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுபல சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை தொடர்பு படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், உலமா சபை தேசிய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=80782&category=TamilNews&language=tamil

  3. மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் அராஜக அரசாங்கத்தை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டதால் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி 'அரசே நாட்டை விட்டு ஓடு" என விரட்டியடிக்க இன்றிலிருந்தே போராட ஆயத்தமாவோமென எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிக் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் ஹேமக…

    • 1 reply
    • 250 views
  4. -சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் நான்காம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் இரண்டு மணிநேரம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருகைதருமாறு கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பு உரிய காலத்தில் கிடைக்காமையினால் அன்றைய தினம் அவரால் நான்காம் மாடிக்கு செல்லமுடியவில்லை. இந்நிலையிலேயே இன்றையதினம் காலை 10 மணிமுதல் 12 வரை விசாரணை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணத்தில் இராணுவ மயமாக்கல்' என்ற தலைப்பில் 'டைம்ஸ் ஒப் இந்தியா' என்ற இ…

  5. கொதிநிலையில் கோத்தபாய - இந்தியா, அமெரிக்காவுடன் முறுகல் ஏப் 19, 2013 தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போராட்டங்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறீலங்காவிற்கு எதிராக எடுத்துவரும் அதிர்ச்சிகரத் தீர்மானங்கள் குறித்தும் சிறீலங்கா அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் கடும் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ள ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களில் ஒருவரான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்தியாவின் கடந்தகாலச் செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துவரும் அதேவேளை, சிறீலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கள் குறித்தும் தனது கடும் கோபத்தை வெளியிட்டு வருகின்றார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு அமைப்பு…

  6. -ரி.பாருக் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட கொங்கோ ஜனாதிபதியின் பிள்ளைகள் எனவும் தாம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறி வர்த்தகர் ஒருவரையும் அவரது மனைவியையும் ஏமாற்றி அவர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா வரையில் ஏமாற்ற முயன்;ற ஆபிரிக்கர்கள் இருவரை தாம் தேடி வருவதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் கூறினர். இலங்கை வர்த்தகர் குறிப்பிட்ட ஆபிரிக்க பிரஜையை கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளார். இவர் தான் கொலை செய்யப்பட்ட ஆபிரிக்க ஜனாதிபதியின் மகன் எனவும் தமது தந்தை கொலைசெய்யப்பட்டபின் தாம் பிரான்ஸில் குடியேறியுள்ளதாகவும் இந்த வர்த்தகரிடம் கூறினார். இலங்கையில் ஒரு கூட்டு முயற்சியை தொடங்க பங்காளிகளை தேடி வருவதாக இவர் வர்த்தக தம்பதியி…

  7. ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏ9 வீதி ஊடாகக் குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பஸ்கள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன. . கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும், தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. . இந்நிலையில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பயணிகள் அனைவரும் வயது வேறுபாடின்றி இறக்கப்பட்டு முழுமையான வாகனச் சோதனை…

  8. யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். . ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார். . இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார். இவர் பெண் குழந்தை ஒன்றின் தாயாவார். . இருதயநோய் காரணமாக நிர்மலாதேவி மாதாந்தம் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று ஊசி ஏற்றி வருகிறார். அவ்வாறே நேற்றுமுன்தினமும் ஊசி போடுவதற்காக முற்பகல் 10.45 மணிக்கு அங்கு சென்றுள்ளார். . அங்கு ஊசி ஏற்றப்பட்ட பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்…

  9. மன்னாரில் புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் உடைப்பு! மாந்தை மேற்கு அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் நேற்று புதன் கிழமை இரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று இரவு 11 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த இனம் தெரியாத நபர்கள் கண்ணாடிப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை தூக்கி எடுத்து சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று நடு வீதியில் வைத்து உடைத்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து அப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந…

  10. ஈழத்தில் தமிழர்களை அழித்த மகிந்த அரசு இன்று முஸ்லீம் மக்களை கருவறுக்கும் செயற்பாட்டில் பலவழிகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவகருல்ல தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்காக தமிழாத்திக் இரண்டு முஸ்லீம் கட்சிகள் பாடுபட்டு வருகின்றது ஒன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றது முஸ்லீம் முன்னேற்ற கழகம் இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் ஈழத்தில் இன அழிப்பினை நிகழ்திய மகிந்த அர…

    • 1 reply
    • 751 views
  11. தற்போது தமிழகத்தில், நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று நடைப்பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்தார். கடும் வெயிலின் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகி, மயக்கம் அடைந்தார் என தெரியவருகிறது. மயக்கம் அடைந்த நிலையிலும் நடைப் பயணத்தை கைவிடாது, டாக்டர்கள் சிகிச்சைக்குப்பின், மீண்டும் நடைபயணத்தை தொடர்ந்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரது மூன்றாம் கட்ட நடைபயணம், நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து தொடங்கியது. முதல் நாளில் 20 கி.மீ., பயணம் மேற்கொண்ட வைகோ, கோட்டூரை அடைந்தார். அன்று இரவு கோட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பின், இரவு அங்குள்ள ம.தி.மு.க.…

    • 7 replies
    • 889 views
  12. தமிழராய்ச்சி நினைவிடத்தை கேவலப்படுத்திய சிங்கள வியாபாரிகள் ஏப் 19, 2013 சித்திரைப் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்.குடா எங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது. தென் இலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளால் யாழ்குடா எங்கும் வீதிகளில் கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. வர்த்தக நிலையங்களைத் திறந்துவைத்து வரி கட்டி வியாபரம் செய்யும் நிலையில், இவர்கள் வீதிகளில் நடை பாதைகளில் கடைகளை விரித்து மலிவான விலையில் விற்பதால் வர்த்தகர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன், எங்கெங்கெல்லாம் கடைகளை போட முடியுமோ அங்கெல்லாம் எந்தவித அனுமதியுமின்றி கடைகளைப் போட்டு தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள, முஸ்லீம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந…

    • 2 replies
    • 467 views
  13. ஆசியாவில் செல்வாக்குச் செலுத்துவோர் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 28 ஆவது இடம் ஆசியாவில் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 28ஆவது இடம் கிடைத்துள்ள அதேவேளை, முதலாவது இடத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெற்றுள்ளார். பிரித்தானியாவின் ஆசிய விருதுகள் அமைப்பினால், ஆண்டுதோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேர் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் 2013ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியல் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டது. இதேவேளை, இரண்டாவது இடத்தை இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் 3ஆவது இடத்தை சீன பிரதமர் லீ கெகியாங் பிடித்துள்ளனர். நான்காவது இடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஐந்தாவது இடம் ராகுல…

    • 2 replies
    • 429 views
  14. வவுனியாவில் இராணுவ முகாம் அமைப்பதற்கு அரசாங்கம் காணிகளை சுவீகரிக்கத் திட்டம் 19 ஏப்ரல் 2013 வவுனியாவில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கம் காணிகளை சுவீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் பாரியளவில் காணிகள் சுவீகரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இராணுவ முகாம்களை அமைப்பதற்கு காணிகள் சுவீகரிக்கப்பட உள்ளமை குறித்து காணி உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏ9 வீதிக்கு அருகாமையில் உள்ள காணி உரிமையாளர்களுக்கு இது குறித்து ஏற்கனவே காணி அமைச்சு அறிவித்துள்ளது. சட்டத்திற்கு அமைவான முறையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு உரிய நட்ட ஈடுகள் வழங்கப்படுமு; என தெரிவித்துள்ளது. நாட்டின் எந்தவொரு இடத்திலும் எந்…

  15. நாட்டின் உள் விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்கிறது அமெரிக்கா! – மகிந்த ராஜபக்ச காட்டம்!! இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்து வருவதாக சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஜனாதிபதி மஹிந்த, சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராக சதி செய்யும் ஒரு தரப்பு இருப்பதையே காட்டுவதாகவும், அமைச்சர்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் தலையீடுகள் குறித்து அமைச…

  16. பொதுநலவாய மாநாட்டில் இருந்து வெளியேறுமா இலங்கை?! — 18/04/2013 at 1:12 pm பொதுநலவாய மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று, பொதுநலவாய அமைப்பின் சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் 18 வது சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் சட்ட வல்லுநர் சங்கம், பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இது, சர்வதேச அளவிலான தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. பொதுநலவாய அமைப்பின் வழக்குரைஞர் சங்க மாநாட்டில், பொதுநலவாய சட்டக் கல்வி கூட்டமைப்பு, பொதுநலவாய ந…

  17. மீள்குடியேற்ற விவகாரம்: கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்! மீள்குடியேற்ற விவகாரம்: கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்! 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மேற்படி 3கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மாறாக அந்த மக்களுடைய விருப்பத்திற்கு முரணாக சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் இந்த மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் குடியேற்றப்பட்டனர். இதன் பின்னர் மிகவும் மெதுவாகவும், இரகசியமாகவும் அந்த இடத்திலேயே குடும்பம் ஒன்றுக்கு கால் ஏக்கர் வீதம்,காணி கொடுக்கப்பட்டு, படையினரால் சிறிய வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மக்களை குறித்த தற்காலிக இடத்திலேயே நிரந்தரமாக தங்க வைப்பத…

  18. கடன் அட்டை பயன்படுத்துவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை 07 பெப்ரவரி 2013 கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கையில் கடன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் வேறும் புதிய கடன் அட்டைகளை வழங்குவதாகவும் இந்தியாவின் சில வங்கிகள் அறிவித்துள்ளன.இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில நாடுகளில் கடன் அட்டைப் பயன்படுத்துவதனால் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இந்தியா வங்கிகள், பயண முகவர…

  19. இலங்கையில் அல்-கொய்தா மற்றும் ஜிகாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன என பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றது என அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையாகும். எனவே அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்புக்களும் உடனடியாக செயற்பட்டு உள்நாட்டில் இயங்கும் முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களை அடியோடு வேரறுக்க வேண்டும். பல முஸ்லிம்கள் இந்தப் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளனர். உலமா சபை ஊடாகவே மேற்படி முஸ்லிம் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இங்குள்ள அப்பாவி முஸ்லிம் குழந்தைகளை சவூதி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுக…

    • 1 reply
    • 855 views
  20. இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ விடுத்த எச்சரிக்கையை அடுத்து, சிறிலங்காவுக்கும் மாலைதீவுக்கும் தமது செய்மதிகளில் இடமளிப்பது குறித்து இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. அண்டை நாடுகளான சிறிலங்காவும், மாலைதீவும் செய்மதி திட்டங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படுவது இந்தியாவுக்கு பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம் ஒன்று புதுடெல்லியில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அண்டை நாடுகளுக்கு வாய்ப்பளிக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தது. சீனா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவுக்கும் மாலைதீவுக்கும் தமது…

  21. -எஸ்.கே.பிரசாத் யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்துவருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப…

  22. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இன்றைய தினம் 39 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். கடந்த வாரம் ஜெரால்டன் துறைமுகத்தைச் சென்றடைந்த 66 புகலிடக் கோரிக்கையாளர்களில் 39 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். உரிய வீசா இன்றி நாட்டுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1004 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருமளவு பணத்தைச் செலுத்தி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதில…

  23. இலங்கையில் அல்-கொய்தாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா எம்மிடம் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறையின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் பங்களாதேஷிலும் அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் இருப்பதாக அமெரிக்காவின் இணையத்தளம் ஒன்று ஈரானிய புலனாய்வுத் தகவல் தெரிவித்ததாக செய்திவெளியிட்டுள்ள போதும் அது குறித்து அமெரிக்கா எம்மிடம் உத்…

  24. இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பதினைந்து இராஜதந்திர தலைவர்கள் இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். பங்களாதேஷ், ஈரான், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பலஸ்தீனம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இச் சந்திப்பில் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை மேலும் அதிகளவில் அபிவிருத்தியடைவதை காண விரும்புகின்றோம். மற்றும் வேறொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் அனுமத…

  25. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிலிருந்து இருந்து இலங்கையை நீக்குமாறு, பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது நேற்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பொது நலவாய நாடுகளின் வழக்கறிஞர்கள் மாநாட்டின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் வழக்கறிஞர்கள் அமைப்பு, நீதிபதிகள் அமைப்பு மற்றும் கல்வி ஒழுங்கமைப்பு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்திருந்தன. இதில் தொடர்ந்து பல்வேறு வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிறைந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவது, தமது கொள்கைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.