ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
பொதுபல சேனா அமைப்பு கல்முனையில் காரியாலயம் ஒன்றை அமைக்க உள்ளதாக அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளஅமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்பிரதேசத்தில் அலுவகமொன்றைத் திறக்குமாறு அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக விதானகே தெரிவிக்கின்றார். பொதுபலசேனா போன்ற அமைப்புகளுக்கு எதிராக அண்மையில் கல்முனை மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அங்கு காரியாலயமொன்றை அமைப்பது சவால்மிக்கதென அவர் சுட்டிகாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4039
-
- 2 replies
- 519 views
-
-
பொஸ்டன் குண்டும் புலிகளின் குண்டும் – ஒப்பிடுகிறார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 00:06 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளால் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவராக உள்ள அவர், பொஸ்டனில் வெடித்த குண்டுகள் தொடர்பாக கொழும்பு ஊடுகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில், “பொஸ்டன் குண்டுத் தாக்குதலுக்கு நேரக்கணிப்புடன் கூடிய, கரிமருந்து துகள், ஆணிகள், சிறிய இரும்புக்…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஷிராணியை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் விசாரணை நிலுவையில் இருப்பதால் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 1 reply
- 391 views
-
-
தமிழகத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையை சேர்ந்தவர்கள் விளையாட கூடாது என்பதற்காக போராட்டம் நடத்தும் மாணவர்கள், தமிழ் உணர்வாளர்களை, உளவு பார்த்ததாக தனியார் புலனாய்வு நிறுவன அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஐ.பி.எல். நிர்வாகத்துக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட இந்த தனியார் புலனாய்வு நிறுவன அதிகாரி, சட்டவிரோதமாக செல்போன், தொலைபேசி உரையாடல்களை நவீன கருவி மூலம் பதிவு செய்து வந்ததாக, தமிழக போலீஸ், தகவல் தொழில்நுட்ப சட்டம், வயர்லஸ் மற்றும் டெலிகிராஃபி சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவரும், சென்னை வழக்கறிஞருமான புகழேந்தி, சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி…
-
- 0 replies
- 705 views
-
-
கம்பளை, ஹம்பகமுவ வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் இயங்கி வரும் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான 'லக்கி எம்போரியம்' என்ற ஆடையகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நேற்று முன் தினம் பகல் நேரத்திலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தின் போது கடையின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல் சம்பவமானது இனரீதியான பின்னணி எதனையும் கொண்டதல்லவெனவும் மாறாக தனிப்பட்ட பிரச்சினையாலேயே இடம்பெற்றதெனவும் அப்பகுதியைச் சேர்ந்த தற்போது ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கும் அரசியல்வாதி…
-
- 1 reply
- 584 views
-
-
இலங்கை இராணுவத்தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அனுசரணையின் கீழ் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் அழைப்பின் பேரில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பிமலையில் (தொப்பிகலையில்) நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத்தூபியை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். தொப்பிகலைப் பிரதேசம் 30வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டது. அந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார். அது மட்டுமல்லாமல் தொப்பிகலையில் இராணூவ பாரம்பரியத்தைக் கொண்ட பாரம்பரிய பூங்காவொன்ற…
-
- 0 replies
- 291 views
-
-
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம் மேர்வின் சில்வா போன்று செயற்படுகின்றமை தொடர்பில் யாழ்.குடாநாட்டிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கடும் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர். யாழ், குடாநாட்டிலுள்ள பொதுக் காணிகளை சிங்களம் ஆக்கிரமிப்பதற்கு வசதியாக அவை தனது காணிகள் போன்று தானே கையொப்பமிட்டு ஆக்கிரமிப்புக்குரிய காணிகளை சிபார்சு செய்கின்ற பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார். சிங்கள ஏகாதிபத்தியத்தின் மூலம் அரச உத்தியோகத்தர்களை தாக்குவதற்கு முற்படுகின்ற இந்த மேர்வின் சில்வா சில சமயங்களில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவு…
-
- 2 replies
- 756 views
-
-
பயிற்சிகளுக்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கையில் ... 18 ஏப்ரல் 2013 பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கையைச் சென்றடைந்துள்ளன.மூன்று இந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. இரு தரப்பு கடற்படையின் கூட்டுறவின் அடிப்படையில் இந்த கப்பல்கள் கொழும்பிற்கு சென்றுள்ளன. ஐ.என்.எஸ் சுஜாதா, ஐ.என்.எஸ் தரங்கினி மற்றும் ஐ.சீ.ஜீ.எஸ் வருணா ஆகிய கடற்படை யுத்தக்; கப்பல்களே இவ்வாறு இலங்கை சென்றுள்ளன. எதிர்வரும் 21ம் திகதி வரையில் குறித்த கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEd…
-
- 1 reply
- 696 views
-
-
கொக்குத் தொடுவாய் நாயாறுகளில் கண்ணிவெடி அகற்றும் பணி படையினரிடம் சிங்களக் குடியேற்றத்திற்கு திட்டம்? 18 ஏப்ரல் 2013 முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய், நாயாறு பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்ட எப்.எஸ்.டி (FSD) நிறுவனம் திடீரென முன்னறிவித்தல் எதுவுமின்றி தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டு அந்தப் பிரதேசம் இராணுவக் கண்ணிவெடி அகற்றும் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாக மிதிவெடி செயற்பாட்டலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்தார். "திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவே சர்வதேச மிதிவெடி அகற்றல் நிறுவனங்களை வெளியேற்றி இராணுவத்தினரிடம் அந்தப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குற்றஞ்சாட்டி உள்…
-
- 0 replies
- 272 views
-
-
செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தே.சு.மு. மற்றும் ஜா.ஹெ.உ. வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்த அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்க்க போவதாக தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் நாட்டில் பாரதூரமான சிக்கல் நிலைமை ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவான புரிந்துணர்வு இல்லை என்பதால், எதிர்வரும் மே மாதம் முதல் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் பிரசாரங்களை தமது கட்சி ஆரம்பிக்கும் எனவும் அ…
-
- 0 replies
- 285 views
-
-
அனைத்து அபிவிருத்திகளுக்கும் ரிசாத் - முனைஸ் முட்டுக்கட்டை வன்னியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க இலங்கை அரசு மறுத்துவருகின்றது. அதன் மூலம் மீளக்குடியமர்ந்த குடும்பங்களை கூட அங்கிருந்து விரட்டியடித்து விட அது முற்பட்டுள்ளதாக குற்றஞ் சாட்டியுள்ளார் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கூட்டமைப்பு சார்பு தலைவரான அம்பலவாணர் தனிநாயகம். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவருடன் பிரதி தலைவர் சிவலோகநாதன் செந்தூரனும் ஆஜராகியிருந்தார். எமது பகுதிகளில் யுத்தத்தின்; பின்னராக ஜம்பது சதவீதமான மக்கள் கூட இதுவரை மீளக் குடியமர்ந்திருக்கவில்லை. ஆனால் இன்று வரை சாதாரணமான போக்க…
-
- 1 reply
- 515 views
-
-
புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் கிடையாது - இராணுவம் 17 ஏப்ரல் 2013 தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். முழு வீச்சில் ஆயுதக் குழுவாக மீளவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்று இலங்கையில் மீண்டும் புலிகள் ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறியிருந்தது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பெருமளவிலான தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்க முனைப்பு காட்டி வருவதாக தி எக்கனோமிஸ்ட் தெரிவித்திருந்தது. வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே உள்நாட்டில் இவ்வாறான போராட்டங்கள் வெ…
-
- 1 reply
- 2.8k views
-
-
இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை – TNA 16 ஏப்ரல் 2013 இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மன்னார் ஆயரும் கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை அமைக்கப்பட வேண்டுமென கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வ…
-
- 0 replies
- 438 views
-
-
கைதடி சிறுமிகளில் ஓரு பகுதியினர் வந்தடைந்தனர்! விடுதி காப்பாளரின் கணவர் கைது!! 16 ஏப்ரல் 2013 குளோபல்தமிழ்ச்செய்தியாளர் யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இரட்சணிய சேவை சிறுவர் நன்னடத்தை இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் பத்துப்பேர்; வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களது பெற்றோரே வைத்தியசாலையில் அழைத்து வந்து அனுமதித்துள்ளனர். எனினும் மாங்குளத்தில் மேலும் மூவர் தங்கியிருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் அவர்களையும் யாழ்ப்பாணம் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்கின்றன. குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 16 சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 665 views
-
-
ராஜபக்ஷவுக்கு நெருங்கும் முடிவு! இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஒரு சிறு ஆய்வு ஒன்றை இந்திய ஊடகமான நக்கீரன் நாளிதழ் கேள்வி பதிலாக வெளியிட்டுள்ளது. ராஜபக்சேவுக்கு இந்திய அரசு ஆதரவா இருப்பதால்தான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருப்பதாக தமிழர்கள் குமுறுகின்றார்களே..! ராஜபக்சேவை இந்தியா நம்பவில்லை என்பதும், அவரின் ஆட்சியைக் கலைக்க இந்திய அரசு ரகசிய வேலைகளைப் பார்த்துக்கிடண்டு இருப்பதும் லேட்டஸ்ட் தகவல். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளராகவும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்தவருமான ஆனந்தசங்கரி போன வாரம் சென்னைக்கு வந்தப்ப, இங்கிருக்கிறவங்ககிட்டே பேசுனப்பதான் இந்த செய்திகளை சொல்லியிருக்கிறார்.'' புதுசாகவும் ஆச்சரியமாகவ…
-
- 1 reply
- 882 views
-
-
ஷிராணியை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் April 17, 2013 10:03 pm ஷிராணியை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் விசாரணை நிலுவையில் இருப்பதால் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=37854
-
- 0 replies
- 536 views
-
-
இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என தொண்டமானுக்கு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது : மனோ கணேசன். இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இரத்தினபுரி மாவட்ட வேவல்வத்தை பொலிஸ் பிரிவில் அலுபொல தோட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இன கோஷ்டி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தமது குடியிருப்புகளுக்குள் நுழைந்தவர்களின் மீது தமிழ் தொழிலாளர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு தரப்பினரும் காயப்பட்ட நிலையில் தற்போது பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இதே பகுதியில் கலபொட தோட்டத்திலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் நிவித்திகல பகுதியில் தொலஸ்வல என்ற தோட்டத்திலும், சில நாட்கள் முன்பு …
-
- 1 reply
- 683 views
-
-
சிறிலங்காவில் அல்-குவேடா இயக்கத்தின் பிரிவுகள் இயங்கி வருவதாகவும், இந்தக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும் அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வொசிங்டனில் இருந்து வெளியாகும் இந்த ஊடகம், பொஸ்டன் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரானே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஈரான் இராணுவத்தின் ஒரு பிரிவான, குவாட் படைப்பிரிவு, ஹிஸ்புல்லாவின் ஒத்துழைப்புடன் நடத்திய இந்த தாக்குதலில் சிறிலங்காவிலும் பங்களாதேசிலும் உள்ள தனிநபர்களான அல்-குவேடா பிரிவுகளும் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குவாட் படையின் வழிகாட்டுதலில், ஹிஸ்புல்லா அமைப்பு சுனி இன முஸ்லிம்களை அல்-குவேடாவுடன் இணைந்து சிறிலங்காவிலும், பங்…
-
- 9 replies
- 803 views
-
-
உள்நாட்டில் அமெரிக்காவை எதிர்த்து, அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களை கணக்கிலும் எடுக்க மாட்டோம் என அமைச்சர்கள் ஜி.எல். பீரிசும், கெஹலிய ரம்புக்வலவும் வீரம் பேசுகிறார்கள். ஆனால், அமெரிக்க அரசை கவர ஒரு மாதத்திற்கு116,000 டாலர்களை செலவழித்து நமது அமெரிக்கத் தூதுவர் விக்கிரமசூரியவும், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் அமெரிக்க தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசன், இலங்கை தொடர்பாக மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார். உண்மையில் இலங்கை - அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு என்ன? அது சண்டையா? சமாதானமா? 'லவ்வா, இழவா" ? இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும். அதேபோல் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரும் ப…
-
- 1 reply
- 535 views
-
-
இலங்கை நாடு பூர்வீக இந்து நாடு.அதன் பூர்வீக சமயம் இந்து சமயம்- த.தே.கூ. மட்டு பா-உ சீ.யோகேஸ்வரன் இலங்கை நாடு பூர்வீகத்தில் இந்து நாடாகும். இந்து மதம் இலங்கையின் பூர்வீக மதமாகும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். “இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்”எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டப…
-
- 0 replies
- 681 views
-
-
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக இலங்கை இராணுவம் தற்போது சோற்றிலும் கைவைத்துள்ளது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிக வேதனையுடன் தெரிவித்தார் வடக்கிலுள்ள படைமுகாம்களது அதிகாரிகளால் தற்போது புதிதாக பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலொன்றின் பிரகாரம் அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உயர்கல்வி நிறுவனங்களினில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு படை முகாம்களிலிருந்து உணவு பரிமாறப்படுமென்பதே அதுவாகும் . ஆனால் அதற்காக அதுவொன்றும் இலவசமாக வழங்கப்படுமென்று எவரும் நம்பி விடக்கூடாது. அனைத்திற்கும் இறுதியில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து செயற்படும் 512 படைப்பிரிவு தலைமையத்திலிருந்து பற்றுச்சீட்டுக்கள் அ…
-
- 2 replies
- 2k views
-
-
முதலீட்டுத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துமாறு இலங்கை அரசு, முதலீட்டுச் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அரசின் புதிய கொள்கைத் திட்டத்தின்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், கட்டுமானத் திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தி யப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்ற பணியாளர்களை இலங்கை அரசு பணியில் ஈடுபடுத்தவுள்ளது. இலங்கை அரசின் புதிய கொள்கைப் பிரகடனத்தின்படியே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்…
-
- 2 replies
- 754 views
-
-
இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பதினைந்து இராஜதந்திர தலைவர்கள் இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். பங்களாதேஷ், ஈரான், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பலஸ்தீனம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இச் சந்திப்பில் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை மேலும் அதிகளவில் அபிவிருத்தியடைவதை காண விரும்புகின்றோம். மற்றும் வேறொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் அனுமத…
-
- 0 replies
- 367 views
-
-
(சென்னை) சிங்கள புத்த பாசிச சக்திகள் முஸ்லிம் மக்களை குறி வைக்க துவங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலம், கலாச்சாரம், வணிக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் சிங்கள புத்த பேரினவாத குழுக்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில் சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும், இதற்கு துணைபோகும் ராஜபக்ஷே அரசை கண்டித்தும் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் போராட்டங்களை நடத்தியது. இதனைத்தொடர்ந்து, ‘நேற்று தமிழர்கள்!இன்று முஸ்லிம்கள்! சிங்கள பாஸிசத்தை அனுமதியோம்! என்ற தலைப்பில் சென்னையில், எழும்பூர் ஹோட்டல் சிங்கப்பூரில் நேற்று 16-ஆம் தேதி மாலை 4.45 மணி அளவில் கருத்தரங்கம் ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது. இக்கருத்தரங்கில் பாப்புல…
-
- 1 reply
- 825 views
-
-
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் போதை பொருள் பாவனையில் குறிப்பாக மதுபானத்தில் முதலாவது இடத்திலுள்ளது. எனவே, போதைவஸ்து பாவனை ஒழிப்புக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டமொன்றை இந்து இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். 'இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கல…
-
- 0 replies
- 435 views
-