ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழக தொழுகை அறை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, தொழுகை அறையின் சுவர் பகுதிக்கு கழிவு எண்ணெய் (ஒயில்) வீசி சேதமாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தொழுகை அறையின் பெயர் பலகையும் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பெயர்ப் பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகள் பல்கைலைக்கழக நிர்வாகத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி தொழுகை அறை வழங்குமாறு பல்கலைக்கழக முஸ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் (முன்னாள்) நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, 'இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது' என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனி ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாது…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் இளவாலை உயரப்புலம் பகுதியில் தந்தையினால் சிறுமி ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ரூபன் நிலாஞ்சினி வயது 9 என்ற சிறுமியே இவ்வாறு தந்தையினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தில் குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பல முரண்பாடான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் வந்த தந்தை மகளை பாலியல் வல்லுறக்கு உட்படுத்திவிட்டு பின்னர் அடித்துக் கொலை செய்துள்ளார் எனவும் குறித்த சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் பெற்…
-
- 2 replies
- 701 views
-
-
அரைசொகுசு கடுகதி ரயிலொன்று யானைக்காட்டில் அதுவும் நள்ளிரவில் இரண்டு பெட்டிகளை விட்டு விட்டு சென்றமையினால் பயணிகள் பெரும் அல்லோலகல்லோலப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைசொகுசி கடுகதி ரயிலின் சில பெட்டிகளே கல்லோயாவுக்கும் ஹபரணைக்கும் இடைப்பட்ட யானைக்காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கழன்றுகொண்டன. 2 ஆம் வகுப்பு உறங்கலிருக்கைக்கும் 3 ஆம் வகுப்புக்கும் இடையில் உள்ள கொழுவி கழன்றதானாலேயே புகையிரதப் பெட்டிகள் நடுக்காட்டில் துண்டித்து விடப்பட்டன. இதனால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும் அல்லோலகல்லோலப்பட்டதுடன் இரவு நேரம் என்பதனால் பயத்தில் அந்தரித்தனர். பெட்டிகள் கழன்றுக்கொண்டமையினால் அந்த ரயில் பயணத்தில் சும…
-
- 0 replies
- 487 views
-
-
இந்திய பாராளுமன்றக் குழு - பீரிஸ் இன்று சந்திப்பு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (09) வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்திக்கவுள்ளது. இந்திய குழுவினர் நேற்று (08) இரவு இலங்கையை வந்தடைந்ததாக விமானநிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வர்த்தக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இவர்களது பயணம் அமைந்துள்ளது. இவர்கள் இன்று (09) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை (10) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இக்குழுவினர் இந்திய அரசின் …
-
- 1 reply
- 593 views
-
-
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடத்தவேண்டும் என்றாலும், முன்கூட்டியே இந்த ஆண்டுக்குள் தேர்தல் வரலாம் என காங்கிரசைத் தவிர்த்த மற்ற கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன. இதை, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து, அதைத் தாங்கிப்பிடித்துவரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியும் சொல்வதுதான் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டதால், காங்கிரஸ் கட்சி வேறு ஒரு கூட்டாளியுடன் தனி அணிதான் அமைத்தாகவேண்டும் என்பது உறுதி. விஜயகாந்தின் தேமுதிக திமுக அணியிலா காங்கிரஸ் அணியிலா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதிமுக தலைமையில் தனி அணி என்பது முடிவாகிவிட்டத…
-
- 0 replies
- 442 views
-
-
மாத்தளை மனித புதைகுழி சம்பவத்துடன் கோதபாயவை தொடர்புபடுத்த முயற்சி மாத்தளை மனித புதைகுழி சம்பவத்துடன் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை தொடர்புபடுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் திடீரென மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சடலங்கள் புதைக்கப்பட்டகாலப்பகுதியில் மாத்தளையின் இணைப்பு அதிகாரியாக கோதபாய ராஜபக்ஷ கடமையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளான கமால் குணரட்ன, சவேந்திரா சில்வா போன்றோரும் மாத்தளையில் கடமையாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதபாய…
-
- 0 replies
- 305 views
-
-
தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்ந்தும் சிதைக்கப்படுகிறது - அரியநேத்திரன் கவலை கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்ச்சியாக அழிவடைந்து வந்த நிலை தற்போதும் அது தொடர்கின்றது. தற்போது யுத்தம் நடைபெறாவிட்டாலும் வேறொரு விதத்தில் எமது பொருளாதாரம் சிதைக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மண்கமழும் மங்கல விழாவின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். கடந்த பல தசாப்தங்களாக நாட்டில்…
-
- 3 replies
- 451 views
-
-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக உள்ளது என்றும், இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் இலங்கை அயலுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக…
-
- 0 replies
- 360 views
-
-
அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? - அமெரிக்கத் தூதுவர் [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 10:08 GMT ] [ கார்வண்ணன் ] [கொழும்பில் நேற்று அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தில் நிகழ்த்திய உரையின் முதல் பகுதி இது.] சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து உரையாற்றும்படி கேட்கப்பட்டுள்ளேன். முதலில் நாங்கள் சிறிலங்காவுடனான, சிறிலங்கா மக்களுடனான எமது உறவை வெகுவாக மதிக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது குறித்தும், சில வாரங்களுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இரண்டாவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்தது ஏன் என்பது க…
-
- 2 replies
- 598 views
-
-
யுத்தம் முடிவடைந்தும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்கள் பாரியதோர் ஒரு இன அழிப்பு என்பதை முதலில் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று யாழ்.சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவிடம் தமிழ் தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தமிழர் தாயகப் பகுதியில் நடைபெறும் வன்முறைகள் அனைத்தும் தமிழ் இன அழிப்பின் ஒவ்வொரு பாகங்கள் என்பதை இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ளும் வரையில் தமிழர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வினை இந்திய அரசாங்கத்தினால் ஒருபோதும் முன்வைக்க முடியாது என்றும் தமிழ் தரப்புகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன. யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நடைபெறும் இந்த இன அழிப்பை தடுத்து நிறுத்தாவிட்டால…
-
- 0 replies
- 407 views
-
-
-
பயண எச்சரிக்கையை தளர்த்துமாறு பிரித்தானியாவிடம், இலங்கை கோரிக்கை 09 ஏப்ரல் 2013 பயண எச்சரிக்கையை தளர்த்திக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய திணைக்களத்திடம் கோரியுள்ளது. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். பயண எச்சரிக்கையில் புதிதாக பாரியளவில் மாற்றங்கள் செய்யப்படாத போதிலும், புதிய இணைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அண்மையில் புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பயண எச்சரிக்கை…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழர்கள் இலங்கையில் இனப்ப்டுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதன் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றியும் தென்னிந்திய திரைப்பட துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகினருக்கு போட்டியாக இலங்கை திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் இணைந்து கொழும்பில் விசேஷ பூஜை நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தின் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தமிழ்திரையுலகினர் மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கை திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் இணைந்து கொழும்பில் விசேஷ பூஜை நடத்தவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் 11ம் தேதி இலங்கையில் படப்பிடிப்புக்களை நடத்துவதில்லை எனவும் அன்றைய தினம் அனைவரும் வெள்ளை உடை அணிந்து பூஜை வழிப…
-
- 0 replies
- 946 views
-
-
சிறிலங்கா அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் ! எதிர்பிரச்சாரங்களில் சிங்களக் கைக்கூலிகள் ! http://win.yarl.com/?p=16744 தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துச் செய்த சிங்கள அரசானது முள்ளிவாய்க்கால் பெருவெளியில் தமிழினத்தை மட்டுமல்ல தமிழீழ இலட்சியத்தினையும் புதைகுழியில் போட்டுப் புதைத்துவிட்டதாக கனவு கண்டுகொண்டிருக்கும் இவ்வேளை உலகத் தமிழர்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு எதிரான தீவீர செயற்பாடுகளில்ஈடுபடத் தொடங்கியுள்ளது. கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகையொன்றின் சனிக்கிழமைப் பதிப்பில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருவதோடு புலத்து புலிகள் சிங்கள தேசத்துக்கு எதிராக த…
-
- 5 replies
- 948 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில்,இலங்கைப் படைத் தளபதிகளுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், . அனைத்துலக ஊடகங்களுக்கு கிடைத்துள்ள பெரும்பாலான ஒளிப்படங்கள், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் கீழ் செயற்பட்ட பிடைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை வெளிப்படுத்தியவையாகும். . இது எதிர்காலத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதை தடுக்கும் சதித் திட்டமாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. . சனல் 4, சிறிலங்காவில் ஜனநாயத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, உலகத் தமிழர் ப…
-
- 4 replies
- 647 views
-
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களும், வெறுப்பூட்டும் நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்குகொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களில் பாரபட்சமாக நடப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் காட்டமாகக் கூறியுள்ளார். முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசமைப்புச்சட்டத்தின்படி அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் தாக்கப்படும்போது தமிழர்கள் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் …
-
- 1 reply
- 614 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 01:48 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் 53வது டிவிசன் மற்றும் 8வது அதிரடிப்படைப்பிரிவு ஆகியவற்றுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை சிக்க வைக்கும் சதியாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், அனைத்துலக ஊடகங்களுக்கு கிடைத்துள்ள பெரும்பாலான ஒளிப்படங்கள், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் கீழ் செயற்பட்ட பிடைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை வெளிப்படுத்தியவையாகும். இது எதிர்காலத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண …
-
- 2 replies
- 832 views
-
-
பலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்ரேலர்களிடமிருந்து மீட்கப்படுவது அவசியமென்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷிடம் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன அமைச்சருக்கும், இலங்கையின் நீதியமைச்சருக்கும் இடையிலான உரையாடல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விட…
-
- 5 replies
- 504 views
-
-
தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால் விளைவு விபரீதம் என எச்சரிக்கிறது இலங்கைக்கு எதிராக தமிழகத்தின் திரைப்பட சூப்பர் ஸ்டார்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால், தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மலையகம் முழுவதும் முன்னெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்படும் தமிழக நடிகர்கள் இலங்கையில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கைக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தால், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அந்த நடிகர்களின் படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக காங்கிரஸின் ஆலோசகர் ரி…
-
- 1 reply
- 443 views
-
-
பொதுபல சேனா இந்த மாதத்தில் இருந்து தமது அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதுடன், சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்தும் பணிகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விஹாரன்தேனியே நந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு ஒரு மாதம் தங்கியிருக்கும் இவர்கள், அங்குள்ள பௌத்த தேரர்கள் மற்றும் இலங்கையர்களை சந்தித்து தமது அமைப்பின் நோக்கங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90565/language/ta-IN/article…
-
- 1 reply
- 519 views
-
-
கோத்தாவையும் மூத்த இராணுவ அதிகாரிகளையும் சிக்கவைக்கும் சதியாம் [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 00:58 GMT ] [ கார்வண்ணன் ] மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி விவகாரத்தில் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், மூத்த இராணுவ அதிகாரிகளையும் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார். “மாத்தளைப் புதைகுழி விவகாரத்தில் ஐதேக, ஜேவிபி போன்ற எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் திடீரெனக் கரிசனைகாட்ட ஆரம்பித்துள்ளன. இந்தப் புதைகுழியில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் காலப்பகுதியில் மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக …
-
- 1 reply
- 897 views
-
-
புலிகள் கருணாநிதியை அச்சுறுத்தியிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதியது – விக்கிலீக்ஸ் 09 ஏப்ரல் 2013 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டில் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆயுத வன்முறைகளை வெடிக்கச் செய்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. போதியளவு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் வன்முறைகளில் ஈடுபடுவோம் என த…
-
- 7 replies
- 717 views
-
-
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்தம் வடியவடிய கோயிலுக்குள்ளே ஓடித்திரிந்ததால் நேற்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலின் கட்டிடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கட்டட வேலையில் ஈடுபாட்டிருந்த பணியாளர் ஒருவர் நேற்று காலை கோவிலுக்குள் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தார். இவரது செயற்பாடுகள் வித்தியாசமாக அமைந்திருந்தன. இவரைக் கட்டுப்படுத்த அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்நிலையில் முற்பகல் 10 மணியளவில் இந்நபர் கூரிய கத்தி ஒன்றினால் தனது நாக்கை இழுத்து தானே அறுத்துக்கொண்டார். இதன் பின்னரும் ஆலயத்துக்குள் அவர் ஓடித்திரிந்தார். நாக…
-
- 0 replies
- 495 views
-
-
வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொழும்பின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக குப்பை அகற்றும் பணிகள் சீராக இடம்பெறாமையால் வீதியோரங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:குஷான் பத்திராஜ) http://tamil.dailymirror.lk/--main/63440-2013-04-09-12-09-12.html
-
- 0 replies
- 178 views
-