Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுவர் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். உலகின் எந்தவொரு நாட்டின் கடற்பரப்பிற்குள்ளும் அனுமதியின்றி நுழைய முடியாது என அவர் சுட்டிக் காட்டினார். இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பரப்பிற்குள் நுழைந்து, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக கடல் வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்தார். http://www.tamilcnn.org/archives/157821.html

    • 1 reply
    • 736 views
  2. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன வக்பு மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது, எதிர்வரும் ஜூன் மாதம் பலஸ்தீனத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டுக்கு அமைச்சர் ஹக்கீமுக்கு அழைப்பை விடுத்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/63428-2013-04-09-10-22-19.html

  3. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய கப்பல் கழகம் சார்பில் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி, கொலும்பு இடையிலான கப்பல் போக்குவரத்து சில பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய கப்பல் கழகம் மூலம் மீண்டும் டெண்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 200 பயணிகள் வரை பயணம் செய்யும் வகையில் சிறிய கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிரான போரட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்றுள்ள நிலையில், இவ்வகையான பயணிகள் போக்குவரத்துக் கப்பலை இயக்குவதன் மூலம் …

  4. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான நேர்காணலொன்றை இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் ஆழி தனது ஏப்ரல் 2013 இதழில் வெளியிட்டுள்ளது. அதன் ஆசிரியர் செ.ச.செந்தில்நாதனுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியிலிருந்து... ஜெனீவாவில் ஏற்கப்பட்ட தீர்மானம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? நாம் ஓரடி முன்னே சென்றிருக்கிறோமா பின்னடைவைச் சந்தித்திருக்கிறோமா? தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையில் உள்ள மோதலைப் பற்றிப் பேசாமல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புச்சாட்டுதல்| என்கிற கருத்தை மையப்படுத்தியது எனக் கருதப்படுகிற இந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களுக்கு உண்மையிலேயே எந்தச் சாதகமும் இல்லை. மாறாக இந்த இரண்டாம் தீர்மானம…

  5. இலங்கை வவுனியாவில் நடைபெற உள்ள கோவில் நிகழ்வில் கலந்துகொள்ள பாடகர் மாணிக்கவிநாயகமும் இன்னும் சில பாடகர்களும் நாளை இலங்கை செல்வதால் அதனை கண்டித்து இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அடையாரில் உள்ள பாடகர் மாணிக்கவிநாயகத்தின் வீட்டினை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர் . அதனை தொடர்ந்து மாணிக்கவிநாயகத்திடம் இலங்கைக்கு செல்லகூடாது என்று மனு அளித்தனர். பின்னர் செய்தியளர்களிடம் பேசி அவர்கள் உலக மக்களின் எதிர்ப்பை மீறி அங்கு சென்றால் இவர் நடிக்கும் படங்கள் , பாடல்களை தமிழகம் எங்கும் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13887:singer-manicka-vinayagam&a…

    • 3 replies
    • 1.1k views
  6. இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையில் ஏற்படுத்தாமை போன்ற காரணிகளினால் மீளவும் முரண்பாடுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் பதிவாகியுள்ளத…

  7. 'எனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து பிள்ளையான் வெளியேற வேண்டும்' - பொலிஸ்மா அதிபரிடம் அருண் தம்பிமுத்து முறைப்பாடு [Tuesday, 2013-04-09 08:16:24] முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி. சந்திரகாந்தன், முதலமைச்சராக கடந்த 2008ம் ஆண்டு பதவியேற்ற காலத்திலிருந்து மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைப்பாளரான தம்பிமுத்துவின் வீட்டிலேயே தனது உத்தியோக பூர்வ இல்லத்தினை வைத்து நடாத்தி வருகின்றார். தற்போது குறித்த வீடும் சொத்துக்களும் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்துவின் பெயரில் உள்ளது. அருண் தம்பிமுத்து தற்போது வெளிநாட்டிலிருந்து வந்து மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளராக பதவியேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடு…

    • 1 reply
    • 490 views
  8. இந்திய குழுவினர் இன்று இலங்கையில் இந்திய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (08) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறது. இரு நாட்டுகளிற்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்திய பாராளுமன்ற குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் நாளை (09) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மெற்கொள்ளவுள்ளனர். அங்கு இந்திய உதவியுன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடவுள்ளனர். இலங்கை வரும் குழுவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும்…

  9. பிரித்தானியாவில் அரசியில் தஞ்சம்புகுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்! ஏப் 9, 2013 சிறீலங்காப்படையினரின் போரதில் பாதிப்பரைடந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்று சென்றிருந்த ஒருவர் அங்கு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ராமசந்திரன் சிவகுமார் என்ற 41 வயதுடைய அவர் கடந்த பத்து வருடங்களாக படையினரால் சுடப்பட்ட குண்டு ஒன்றை தலையில் தாங்கியவாறு வாழ்ந்து வந்தார். அவர் கடந்த 2001ம் ஆண்டு பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து பெற்றிருந்தார்.இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர் தமது இல்லத்தில் வழுக்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததா…

  10. மத்தள சர்வதேச விமான நிலைய சூழலில் உ்ள்ள பறவைகளின் வாழிடங்களை அழிக்கும் நடவடிக்கையில் - சிவில் விமான சேவைகள் அதிகார சபை [Tuesday, 2013-04-09 08:47:20] மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பறவைகள் தங்குமிடங்களை அழிக்கும் நடவடிக்கையில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஈடுபட்டு வருகின்றது. குறித்த விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் பறவைகள் பறப்பதால் விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்படும் எனவே அவற்றை தடுக்கும் முகமாகவே அப் பகுதியில் உள்ள பறவைகளின் வாழுமிடங்கள் மற்றும் விலங்குகள் உணவாக உட்கொள்ளும் தாவர வகைகளையும் அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் நிறைவேற்றுப் ப…

  11. இம் மாதம் 15ம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் நிலைகொண்டிருப்பதால் நோய் தாக்கம் அதிகரிப்பு - பேராசிரியர் ரோஹினி செனவிரட்ன [Tuesday, 2013-04-09 08:21:29] ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக நிலைகொண்டிருப்பதால்தான் வெப்ப நிலை இந்தளவு மோசமடைந்துள்ளது. வெப்ப நிலையினால் சரும நோய்கள், வியர்க்குரு போன்றவற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. என சமூக வைத்தியத்துறையின் பேராசிரியர் ரோஹினி செனவிரட்ன தெரிவித்துள்ளார். இதனால் உடம்பு முழுவதும் வியர்க்கும் போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தை ஈடுகொடுக்க வேண்டுமாயின் மக்கள் கூடுதலான திரவ உணவை உண்ண வேண்டுமென்றும் இவை எல்லாவற்றிலும் சுத்தமான நீரை அதிகமாக பருகுவதே வெப்பத்தை சமநிலைப்படுத்து…

  12. ஹரிணி விவகாரம்: வெளிவிவகார அமைச்சின் மூலம் கவனிப்பதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி! ஹரிணி விவகாரம்: வெளிவிவகார அமைச்சின் மூலம் கவனிப்பதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி! டுபாயில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள இளம்பெண் ஹரிணி (தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்) உட்பட 19 ஈழத்தமிழர்கள் விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்தில் கொண்டுள்ளார். இவ்விகாரத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக கவனத்தில கொள்வதாக அவர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். 'தமிழீழத் தேசியக் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக …

  13. சாரதிகள் வேகமாக பயணிக்க முடியும் - ஜனாதிபதி இலங்கையிலுள்ள வீதிகள் காபர்ட் செய்யப்பட்டு உயர்தரத்தில் தற்போது இருப்பதனால் சாரதிகள் கொஞ்சம் வேகமாக வாகனங்களை செலுத்த முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அனுராதபுரத்தில் காபர்ட் செய்யப்பட்ட வீதியை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து வைத்ததன் பின்னர் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வாகன போக்குவரத்து தொடர்பில் பொலிஸாரிடம் தற்போதிருக்கின்ற சட்டத்திட்டங்கள் காலம் கடந்தவையாகும். ஆகையினால் சாரதிகளை கொஞ்சம் வேகமாக பயணிப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 209 views
  14. அமுக்க வெடியில் சிக்கி முகமாலையில் ஒருவர் பலி யாழ்ப்பாணம், முகமாலை, முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் அமுக்கவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று இன்று (08) காலை 10 மணியளவில் தமது பணியை மேற்கொண்டிருந்தவேளை பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சக பணியாளர்கள் விரைந்தபோது குறித்த பணியாளர் வெடி ஒன்றில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். அமுக்க வெடியில் …

    • 0 replies
    • 446 views
  15. இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையால் பொருளாதாரத் தடை விதிக்கப்படவிருந்த நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக குற்றம் சாட்டினார். ராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இன்று நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்…

    • 1 reply
    • 671 views
  16. கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் முட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கே. எம். ஜே. எக் சென்டர் (முட்டை வியாபாரம்) செய்யும் முஹமட் சமீர் மசூஹ{ட் என்பவருக்கு சொந்தமான 25 இலட்சம் ரூபா பெறுமதியான 226- 2225 என்ற இலக்கத்தையுடைய லொறியே இவ்வாறு காணாமல் போயுள்ளது. சம்பவ தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை குளியாபிட்டி, ஹெட்டிபொலவில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து முட்டைகளை கொள்வனவு செய்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட லொறி கொழும்புக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஜம்பாட்டா வீதியிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு முன்பாக மேற்ப…

  17. அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முத்திரை குத்தப்பட்டு காலவரையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலைசெய் அல்லது கருணை அடிப்படையில் கொலைசெய் என அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்து அவுஸ்திரேலியாத் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச சட்டங்களின் படியும் அவுஸ்திரேலிய சட்டங்களின் படியும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 25 தமிழர்கள் உட்பட 28 பேர் இத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த திங்கட்கிழமை (08 – 03 – 2013) அதிகாலை 2 மணி தொடக்கம் தடுப்புமுகாமின் முற்பகுதியில் அமர்ந்தவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள், “தங்களை விடுதலை செய்யுமாறு அல்லது…

  18. மகிந்தவின் கையில் சிக்கியுள்ள இந்தியாவின் குடுமி [ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:08 GMT ] [ கார்வண்ணன் ] சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அனைத்துலக சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை இந்தியா மீறியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபுணர்கள் குழுவொன்று அறிக்கை அளித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஆராய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா கல்வி அமைச்சின் செயலர் ஆரியரத்ன ஹேவகே தலைமயிலான நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்தக் குழுவில் கடல்சார் விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள், புவியியலாளர்கள், கடல்சார் பொறியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு அளித்துள்ள அறிக்கையிலேயே, ச…

  19. இனத்தேசியவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் 08 ஏப்ரல் 2013 இனத் தேசியாவதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சகல பிரஜைகளும் சுபீட்சமாக வாழக்கூடிய ஓர் சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இனப்பிரச்சினையை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் இந்த முயற்சி வெற்றியளிக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான சகலவிதமான குற்றச்சாட்டுக்களையும் உரிய முறையில் விசாரணை நடாத்த தயார் எனவும், உலகின் ஏனைய ஜனநாயக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்ப…

  20. Started by BLUE BIRD,

  21. -எம்.என்.எம்.ஹிஜாஸ் அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் குற்றஞ்சாட்டினார். புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது புத்தளம் நகரில் வாராந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டமை தொடர்பில் நகர சபை தலைவர் கருத்து தெரிவித்தார். இதன்போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என்ற குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார். புத்தளம் நகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை புத்தளம் நகர சபை தூரநோக்குடன் செயற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அபிவிருத்தி திட்டங்களினை சில அரசியல் இலாபங்களுக்காக தடைவிதிக்க முற்படுகிறா…

  22. இலங்கையிலுள்ள வீதிகள் காபர்ட் செய்யப்பட்டு உயர்தரத்தில் தற்போது இருப்பதனால் சாரதிகள் கொஞ்சம் வேகமாக வாகனங்களை செலுத்த முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அனுராதபுரத்தில் காபர்ட் செய்யப்பட்ட வீதியை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து வைத்ததன் பின்னர் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வாகன போக்குவரத்து தொடர்பில் பொலிஸாரிடம் தற்போதிருக்கின்ற சட்டத்திட்டங்கள் காலம் கடந்தவையாகும். ஆகையினால் சாரதிகளை கொஞ்சம் வேகமாக பயணிப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/63306-2013-04-08-12-19-58.html

  23. கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=3873

  24. 'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

  25. வருடாந்த வோல்ஸ்வேகன் கார் கண்காட்சி 14ஆவது தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்பு பிரசேத்திலுள்ள பழைய கார்கள் இதில் கலந்துகொண்டனர். காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த கார் சாவரி பாதுக்கையை சென்றடைந்தவுடன் நிறைவடைந்தது. (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ) http://tamil.dailymirror.lk/--main/63272-2013-04-08-08-13-54.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.