ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
பிரிவு: தமிழ் நாடு இன்று காலை பச்சையப்பன் கல்லூரிக்கு வெளியே சாலைமறியல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையினர் மாணவர்களை கலைக்க முயற்சி செய்தனர் , மாணவர்களின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றால் கூட்டத்தைக் கலைக்க இயலவில்லை, தடியடி நடத்தி கலைத்தது. தடியடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படு காயம் அடைந்தனர். எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்! மாணவர் வர்க்கமாய் ஒன்று திரண்டு போராடுவோம்! ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போல பல மடங்காக எங்களது போராட்டத் தீ பற்றி பரவும்! என்று …
-
- 0 replies
- 4.9k views
-
-
-கெலும் பண்டார, யொஹான் பெரேரா 'இலங்கையிலுள்ள பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தும் விடாமுயற்சியின் வெளிப்பாடாகவே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கருத முடியும்' என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிராக பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியுற்ற நிலையில் நாடாளுமன்றில் அது குறித்து பேசிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து பட்டும் படாமலும் மனமில்லாமலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கத்தின் சாதனைகளை அங்கீகரிப்…
-
- 1 reply
- 571 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியாவுக்கும் பங்கு இருந்தது என ஐ.நா. தெரிவித்திருப்பதால், இந்தியாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா, கோலாலம்பூரைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ. கணேசலிங்கம் என்பவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அம் மனுவில் கணேசலிங்கம் கூறியிருப்பதாவது: நான், சிங்கப்பூரில் பிறந்த இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவன். ஐ.நா. அமைத்த குழு தனது அறிக்கையில், “பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்´ என அழைக்கப்படும் குறிப்பிடப்படும் இலங்கைப் போரில், இலங்கை அரசுடன், இந்தியாவும் ஒத்துழைத்து செயல்பட்ட…
-
- 1 reply
- 548 views
-
-
இந்தக் காணொளியில் இந்தியா ஜெனிவா மாநாட்டில் பேசியதும், அதன் திரண்ட கருத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து புதிய தலைமுறை தொலைக்கட்சி வெளியிட்டது. நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ykJfcx6Ib1M http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19714:2013-03-21-13-13-45&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 788 views
-
-
தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்தது . அதன் தொடர்ச்சியாக , இன்றும் மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் நுங்கம்பாக்கத்தில் கூடினார்கள் , கூடிய அவர்கள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இட ஆயத்தமானார்கள் . அதற்காக போராட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக காவல்துறை அவர்கள் மீது கடும் தடியடியை பிரயோகித்தது அதில் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர் கார்த்தி என்பவர் படுகாயம் அடைந்து ராயபேட்டை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் . சிதம்பரம் வீட்டை மட்டும் இல்லாமல் , சாஸ்திரி பவனையும் ஒரு மாணவர் குழு முற்றுகை இட்டது . அதிகபடியான விவரங்களை எதிர்நோக்கி உள்ளோம் .http://www.dinaithal.com/index.php?optio…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 18 replies
- 1.1k views
-
-
இலங்கை உடனான உறவை துண்டிக்க முடியாது என இந்தியப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார். 13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமல் படுத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார். அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா., மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் முடிந்திருப்பதை இலங்கையில் சமஉரிமை வழங்கும் தருணமாக பார்க்கிறோம் என தெரிவித்தார். உலக நாடுகள் ஏற்கும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை கூடாது: இலங்கை பி…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்செயல்கள் தொடர்பில் 'அனைத்து நாடுகளும் ஏற்கக்கூடிய சுதந்திரமான நம்பகமான விசாரணை அவசியம்' என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவினால் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது. இந்தியா கொண்டுவந்துள்ள திருத்தத்தில் 'இலங்கைக்கு எதிராக சுயேச்சையான, சுதந்திரமான விசாரணை தேவை…
-
- 0 replies
- 533 views
-
-
மறுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்... இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது. இனப்படுகொலை செய்த ராஜபக்சவைத் தண்டிக்க வேண்டும்! என ஒற்றைக் குரலில் பெரும் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள் தமிழக மாணவர்கள். வழக்கமாக மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி இந்த முறை எடுபடவில்லை. தங்களுக்குத் தாங்களே ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு மேலும் உத்வேகத்துடன் போராடுகிறார்கள் மாணவர்கள். கடந்த 8-ம் தேதி, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்…
-
- 0 replies
- 615 views
-
-
மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் ஆதரிப்பது என திரிணமூல் காங்கிரஸ் முன்வந்திருப்பதாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெரும்பான்மையை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை. இந்த நிலையிலும், திமுக கோரிய அதே இரண்டு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் தீர்மானம் எப்படி அமைய வேண்டும் என்பது, மார்ச் 19-ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசிய வார…
-
- 0 replies
- 510 views
-
-
பல பகுதிகளிலும் உள்ள ஈழத்தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய அளவிலான ஒரு அடையாள உண்ணாவிரதத்தை ஏற்ப்பாடு செய்துள்ளார்கள் அதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஒருக்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் 2009ம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடுவது ,பொதுவாக்கெடுப்புமூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவது போன்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் அனைவரும் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்இடம் வள்ளுவர் கோட்டம் எதிரில் நாள் 22/03/2013 நே…
-
- 0 replies
- 356 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரைவயில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. (படங்கள்: வருண வன்னியாராச்சி) http://tamil.dailymirror.lk/--main/61192-2013-03-21-08-15-43.html சிங்களவனால் கொண்டுவரப்பட்ட LLRC ரிப்போட்டை நிறைவேற்றும்படி அமேரிக்கா வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டு வருவதையே ஏற்று கொள்ளாத சிங்கள இன வெறியர்கள் தமிழர்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவார்கள் என்பதினை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
-
- 1 reply
- 406 views
-
-
ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூடத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா, போர் முடிவுற்றிருக்கும் தற்போதைய நிலைதான் நல்ல சந்தர்ப்பம். அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான 13-வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நில உரிமை மதிக்கப்பட வேண்டும்.தமிழர்கள் வாழ…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கை யுத்தம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 21 மார்ச் 2013 இலங்கை யுத்தம் தொடாபில் இந்திய உச்ச நீதிமன்றில் மலேஷிய சட்டத்தரணியொருவர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இலங்கை யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த உயிரிழப்புக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கியதாகவும், இது தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.பொதுமக்கள் நல மனுவொன்றே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய சட்டத்தரணி ஏ. கணேசலிங்கத்தின் சார்பில் மஹாரியா என் கோ என்ற சட்டத்தரணிகள் நிறுவனத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகள் கூட்டாக இணைந்து யுத்தம் நடத்த…
-
- 2 replies
- 710 views
-
-
கைது செய்ய வந்த மகன் இல்லாதமையினால் பெற்றோர், சகோதரிகள் கோப்பாய் பொலிஸாரால் கைது மகனை ஒப்படைக்கும் படி கூறி வீட்டுக்கு வந்த பொலிஸார் தேடிவந்த நபர் இல்லாத நிலையில் தந்தை, தாய் மற்றும் சகோதரிகளையும் பொலிஸார் கைது செய்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொறியியலாளர் ஒருவரின் வீட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாக கூறி இரவு வந்தவர்கள் மகன் எங்கே என்று கேட்டுள்ளார்கள். தனது மகன் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து தாங்கள் அவரைக் கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். அதனையடுத்து வீட்டில் பொலிஸாரை காவல் வைத்து விட்டு…
-
- 1 reply
- 520 views
-
-
தூத்துக்குடியில் (21.3.2013) ராஜபக்சேவிற்கு பாடைகட்டி,ஒப்பாரி வைத்து மாணவர்கள் நூதன போராட்டம். பொதுமக்கள் கலந்துகொண்டு ஒப்பாரி போராட்டத்தை சிறப்பித்தனர்.மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13495:padai-parai&catid=36:tamilnadu&Itemid=102 Share this post
-
- 0 replies
- 583 views
-
-
படைகள் பறித்த காணிகள் இனிக் கிடையவே கிடையா; மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் தீவிரம் வடக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் இனிமேல் ஒருபோதும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. வடமாகாணத்தில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக அதே மதிப்பீட்டு பெறுமதியில் மாற்றுக் காணிகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி படையினர் வசமுள்ள காணிகள் இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாயுள்ளது. காணி ஆணையாளர் நாயத்தி…
-
- 0 replies
- 557 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்! - ஐநாவில் இன்று வாக்கெடுப்பு! [Thursday, 2013-03-21 08:18:12] இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது. இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2வது தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்தது. இந்த 2வது தீர்மானத்தின் …
-
- 0 replies
- 558 views
-
-
தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே தெரிவித்துள்ளார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் பேரெழுச்சி கொண்டுள்ள நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து, ஜெனிவாவில் வைத்து அமெரிக்கத் தூதுவரிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் வினவினர். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத…
-
- 14 replies
- 1.6k views
-
-
இந்தியாவில் உள்ள பிற மொழி மாணவர்களும் இப்போது ஈழத்திற்கு ஆதரவாய் [வீடியோ ] பிரிவு: தமிழ் நாடு தமிழகம் எங்கும் மாணவர்கள் போராட்டம் வீறு கொண்டு நடைபெறுவது அனைவரும் அறிந்த செய்தி . ஆங்காங்கே உள்ள தமிழ் மாணவர்கள் இந்த விடயத்தை பேசுகையில் அவர்களோடு படிக்கும் சக ஆனால் பிற மொழி மாணவர்களும் இந்த விடயத்தில் தெளிவு பெற்று அவர்களும் ஈழத்தில் தமிழர்கள், சிங்களவனோடு சேர்ந்து இனியும் வாழ முடியாது என்ற கருத்தை பதிவு செய்கிறார்கள் . In order to take our protest to next level im taking this issue to all other parts of the country .. here is the video where students from all parts of the country supporting Tamil nadu students protest and Tamil eelam .. pls watch it n share ... Tam…
-
- 0 replies
- 495 views
-
-
அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வடக்கு தமிழ் பெண்கள் இன்று முதல் இராணுவச் சிப்பாய்களாக கடமையாற்றவுள்ளனர். 95 தமிழ் யுவதிகள் இவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நான்கு மாதங்கள் இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த வடக்கு தமிழ் யுவதிகள் கிளிநொச்சியில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த பெண் வீராங்கணைகளின் கலைந்து செல்லும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ரத்னசிங்கம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=3587
-
- 0 replies
- 671 views
- 1 follower
-
-
Govt. may stop LIOC using Trinco storage facility WEDNESDAY, 20 MARCH 2013 08:10 The government is seriously considering whether to stop the Lanka Indian Oil Company (LIOC) from using the storage facilities at the Trincomalee Oil Tank Farm because the company is doing so without a legally valid agreement, a senior government source said yesterday. He said the Petroleum Industries Ministry has sought the Attorney General’s advice on the best course of action. “The Ceylon Petroleum Corporation (CPC) permitted the LIOC to use some of the storage tanks at the China Bay Oil Tank Farm when the LIOC entered Sri Lanka’s fuel distribution market during the Ranil Wickremesi…
-
- 0 replies
- 674 views
-
-
விசாரணைகளுக்கு அரசாங்கம் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா விசாரணைகளுக்கு அரசாங்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.சிவில் யுத்தம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பிலான அழுத்தங்களை சர்வதேச சமூகம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை அடிப்படையில் நிராகரிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தம்மிடம் எவரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு சகல விதத்திலும் பதிலளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவான வகையில் யுத்தம் முன்னெடுக்கப்பட…
-
- 3 replies
- 558 views
-
-
Concern is growing in Indian security establishments over increasing Chinese footprints in Sri Lanka’s strategic sectors. The National Security Council Secretariat has called an inter-ministerial consultation next week to decide on “possible approaches” to protect “Indian interests” in its neighbourhood. The latest to cause alarm are reports of Chinese-Sri Lankan collaboration in the area of space. A Sri Lankan firm is likely to launch its first communication satellite with Chinese help in 2015. In mid-2012, the National Security Adviser (NSA) had discussed this issue and the Department of Space was asked to “provide assessment of the security implications” on India d…
-
- 1 reply
- 431 views
-
-
இலங்கைப்போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் பசுமைத்தாயகம் அமைப்பு பதிவு செய்துள்ளது... இதுக்குறித்து அந்த அமைப்பை சேர்ந்த அருள் உடன் நேர்காணல்...
-
- 0 replies
- 434 views
-