Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் நான்காவது எரிபொருள் கிணற்றின் அகழ்வு பணிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என கெய்ன் நிறுவனம் தெரிவிக்கின்றது. அகழ்வு நடவடிக்கைகள் இவ்வருட நடுப்பகுதியிலேயே இடம்பெறும் என இதற்கு முன்னர் நிறுவனம் தெரிவித்திருந்தபோதிலும் அடுத்தமாதம் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அதன் காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கெய்ன் நிறுவனம் இதற்கு முன்னர் மன்னாரில் மூன்று எரிபொருள் கிணறுகளில் அகழ்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் இரண்டு கிணறுகளில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் துளையிடும் கப்பல் முற்கூட்டியே கிடைத்தமையும், ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் மிக சிறந்த மட்டத்தில் காணப்பட்ட…

    • 7 replies
    • 593 views
  2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்படி மாறிவிட்டது என நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது. எத்தனையோ கல்வி மகான்களை உருவாக்கும் இந்த வளாகம் இன்று 28 ஆவது பட்டமளிப்பிற்காக கூடியிருந்தது. எனினும் பல்கலை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் வரவேற்பு பதாகை பிரிட்டிஷ் காரருக்கா பட்டமளிப்பு என ஒரு கணம் சிந்திக்க வைத்தது. ஏன் இந்த மாற்றம் இது தமிழர்கள் வாழும் பகுதி அழகாக எமது தமிழ் மொழியால் பட்டமளிப்பு விழா என எழுதப்படாதமை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் அதன் வடிவமைப்புக்களும் யாழ்ப்பாணக் கலாச்சாரங்களைக் காட்டுவதாக காணப்படவில்லை. அத்துடன் நாட்டில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்த பட்டிருக்கும் நிலையில் பல்கலைகழக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்று பாதகை தனிய…

  3. வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. காணியற்ற சிங்கள மக்களை பதிவு செய்யும்படி வவுனியா ஏ - 9 வீதிக்கு 56 ஆவது படைப் பிரிவு அறிவித்தல் பெயர்ப் பலகை ஒன்றைப் போட்டு, பெருந்தொகையான தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுவருகின்றது. இந்த பதிவுகள் அனைத்தும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. ஏ - 9 வீதிக்கு கிழக்குப் பக்கமாக…

  4. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை இரவு ஜெனிவா பயணமாகவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோரே இன்று ஜெனிவா புறப்படவுள்ளனர். ஜெனிவா பயணம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துக் கூறுகையில்... “இன்றைய சூழலில் தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே நாங்கள் ஜெனிவா பயணிக்கின்றோம். அங்கு உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்வதோடு எமது மக்களின் நிலைமையினையும் எடுத்துக்கூறவிருக்கிறோம்” என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59742-2013-02-28-08…

  5. முள்ளியவளையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீவிர முயற்சி 28 பெப்ரவரி 2013 முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமது பூர்வீக கிராமங்களான, கொக்குத் தொடுவாய், நாயாறு பகுதிகள் சிங்களக் குடும்பங்களால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு பெயர்களும் மாற்றப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பகுதியில் தமது சொந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களை பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்க அமைச்சரொருவரின் பின்னணியில் அவரின் ஆதரவாளர்கள் புல்டோசர்கள் சகிதம் வந்து மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியத்துவமிக்க பல பகுதிகளில் வேறு இனத்தவர்களை குடியேற்றும் முயற்சிகள் மிக மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாகவே தமத…

  6. முல்லையில் 1455 முஸ்லிம்களுக்கு தலா 1/2 ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்படவுள்ளன- 28 பெப்ரவரி 2013 முல்லைத்தீவு மாவட்டத்தில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான், கூழாமுறிப்பு பகுதிகளில் தலா அரை ஏக்கர் வீதம் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது யுத்தம் காரணமாக முல்லைதீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து பல பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுமுகமான நிலைமையில் அவர்கள் மீள் குடியேறி வருகின்றனர். இவர்களில் பலர் குடியிருப்பதற்கு காணியற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில் 14…

    • 2 replies
    • 571 views
  7. தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய By V.Priyatharshan 2013-02-28 20:10:46 உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு சொந்த நாடு இல்லை. அதனை பெற்றுக் கொள்ளவே பிரபாகரன் போன்றவர்களை பயன்…

    • 4 replies
    • 687 views
  8. உலகத் தமிழர் பேரவையின் இவ் ஆண்டிற்கான சர்வதேச மாநாடு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தில் 27.02.2013 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இலங்கை மீதான அழுத்தங்களும் அதிகரித்துவரும் சூழலில் இம் மாநாடு மேலும் இலங்கை அரசிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த இம் மாநாட்டில் பிரித்தானியாவின் மூன்று பெரும் அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அமைச்சர்களான , பிரித்தானியத் துணைத் தலைமை அமைச்சரும், லெபரல் ஜனனாயகக் கட்சியின் தலைவருமான NICK CLEGG, பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ED MILIBAND, லிபரல் ஜனனாயக கட்சியில் மூத்த தலைவரும், அமைச்ச…

    • 4 replies
    • 652 views
  9. 2014 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது: கெஹெலிய வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013 15:59 2013ஆம் ஆண்டில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் மாத்திரமே இடம்பெறும் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதற்கமைய வட மேல், தென் மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சிலர் தெரிவிப்பதை போன்று 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் கெஹெலிய மேலும் தெரிவித்தார். - See more at: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59750-2014-.html#sthash.6m8TYVP9.dpuf

  10. இலங்கை மீதான நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது - ஐ.தே.க [Thursday, 2013-02-28 08:48:04] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்கள் ஏற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக இழிவான குற்றச்சாட்டுக்கள் சுமத்திய போதிலும், அதனை அரசியல் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளாது. ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் பாதகமான நிலைமையாகவே இந்த நிலையைக் கருத வேண்டும். போரின் பின்னர் பொற்காலமொன்றை உருவாக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்ட போதிலும், ஆட்சியாளர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள…

  11. முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 10:30 ஜிஎம்டி இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் முஸ்லிம்கடைகள், ச…

    • 8 replies
    • 768 views
  12. அப்பா! எங்கள் அப்பா!!!!

  13. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்ற வீமனின் தாயர் உயிரிழப்பு! பிப் 26, 2013 தளபதிகளில் ஒருவராக இருந்த வீமனின் தாயாரான ஏகாம்பரநாதன் இராஜேஸ்வரி (வயது 62) நேற்று யாழில் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களான கடுமையான விரத்தியில் இருந்த அவர் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டுள்ளார் இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சுமார் இரண்டு வாரங்கள் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார். http://www.sankathi24.com/news/27425/64//d,fullart.aspx

  14. தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள்: - தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் [Thursday, 2013-02-28 19:16:05] தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் சுப்பிரமனியம் சிவகரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, தமிழர் விடுதலைக்கூட்டனியின் செயலாளர் வி;ஆனந்த சங்கரி அண்மைய நாட்களில் மிக மோசமான அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்களின் தேசிய வாதி போல் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். கடந்த ஒரு தசாப்த…

  15. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ முன்வருமாறு யோகேஸ்வரன் எம்.பி அழைப்பு. [Thursday, 2013-02-28 19:14:32] மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில் கனடா நாட்டின் தொண்டர் பாலா அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவியை கொண்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மேலதிகமான நிதியையும் சேர்த்து வாகரைப் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழும்பும் முகமாக சுயதொழில் …

  16. இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் நிலை: பொன்சேகா சர்வதேச விசாரணையொன்றை இலங்கை எதிர்கொள்ளும் அபாயநிலை தோன்றியுள்ளது. இதற்கான முன்னெடுப்புக்கள் ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்னெடுக்கப்படுகின்றது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராக பல்வேறு மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை சுமத்தியுள்ளன. இதனை எதிர்கொள்ள அரசாங்கத்தினால் முறையான செயற்றிட்டம் இல்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நேற்று புதன் கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொன்சேகா இதனைத் தெரிவித்தார். சர்வதேச விசாரணைக்குழு இலங்கை வந்து போர்க…

  17. 2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே அமைந்திருந்ததென சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஆயுதங்களின் விற்பனையினை கட்டுப்படுத்துதல் மற்றும் இதன் வெளிப்படைத்தன்மை உறுதி செய்தல் தொடர்பிலான புதிய அறிக்கையொன்றிலேயே இக்கருத்தினை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட ஆயுதங்களில் பெருமளவானவை சீன ஆயுத உற்பத்தி நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையே என்பதனை சர்வதேச மன்னிப்பு சபை அடையாளங்கண்டுள்ளதாவும் தெரிவித்துள்ளது…

    • 3 replies
    • 452 views
  18. கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை வேளையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேகாலை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், காவல்துறையினருடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தாக்குதல் சம்பவத்தில் பள்ளிவாசலின் சில ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. குறித்த பள்ளிவாசல் வளாகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/G…

  19. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும், கைதிகளின் நலன்கள், அவர்களின் வழக்கு விசாரணை நிலைமைகள் என்பன குறித்து; கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற கைதியையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களின் விஜயம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஐந்து பிரிவுகளை உள்ளடக்க…

  20. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக்கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது. ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர். மருத்துவர் என்.எஸ் மூர்த்தி என அனைவராலும் அறியப்படும் மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் நாட்டு நலனையே முன்னிறுத்தி வாழ்ந்தவர். பார்வைக்கும் பழக்கத்திற்கும் இனிமையானவர். அன்பான பேச்சும் அழகான சிரிப்பும் அவரின் ஆளுமையாக மெருகேறி மிளிர்ந்தன. வீண் பகட்டற்ற எளிமையும் அவருக்கேயுரிய உயர்தனிப் பண்புகளும் அவரை நோக்கி எல்லோரையும் ஈர்த்தன. அவர் தனது இளமைக்காலத்திலேயே தமிழரசு…

  21. பிரித்தானியத் தலைநகர் லண்டனில் தமிழீழத்திற்கான "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஹறோ கவுன்சில் மண்டபத்தில் நடாத்தப்பட்ட இந்த அறிமுக அரங்கில் ஈழத் தமிழர்கள் என்ற உணர்வோடு அமைப்பு வேறுபாடு இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அறிமுக அரங்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் தலைமை தாங்கி "தமிழீழ சுதந்திர சாசனம்" தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார். 1955 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா சுமார் 50,000 தொண்டர்களைக் கொண்டு மக்கள் கருத்துப் பெற்று அவர்களின் நியாயமான விருப்புக்கள்ஐயும், கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக தனது விடுதலைக்கான சாசனத்தை வரைந்திருந்தது. அதே போன்று ஈழத்தில் (த…

  22. விஜய குமாரதுங்கவின் 25 வது நினைவு தின நிகழ்வு நேற்று புதன் கிழமை பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க , பிரதம அதிதியாக கலந்து கொண்ட டில்லியில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் பிரதாப் பானு மேத்தாவிற்கு விஜயகுமாரதுங்க தொடர்பான நூலினை கையளிப்பதையும் , நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க , இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா , அமைச்சர் ரவூப் ஹக்கீம் , மற்றும் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6599:--25--------&cati…

  23. யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் பெண் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி – பின்னணியில் யார்? 28 பெப்ரவரி 2013 யாழ்.பல்கலைக்கழக பொதுபட்டமளிப்பு விழாவில் பெண் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி மற்றும் அநாகரிக செயற்பாடுகள் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. இன்றைய தினம் பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வழமை போன்று செய்தி சேகரிப்பு பணிக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீதே பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் சி;லர் தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்ள முற்பட்டுள்ளனர். அதிலும் முன்னணி பெண் ஊடகவியலாளர்கள் இருவரை இலக்கு வைத்தே குறித்த பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் தாக்க முற்பட்டுள்ளதுடன் அவர்களை ஆபாச வார்த்தைகள் மூலம் மிரட்டியுமுள்ளனர். தா…

  24. சிங்களவராக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன்; இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையாக இருக்கவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ [Thursday, 2013-02-28 08:53:22] இலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நிமல்கா பெர்னாண்டோ யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.