ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இன்னும் ஊக்கம் வேண்டும் நாடு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல், இராணுவ, சமூக விவகாரங்களில் மிகச் சிக்கலானதொரு நேரத்தைத் தமிழினம் கடக்கும் வேளை இது. இந்தச் சமயத்தில் தேசிய ரீதியில் தமிழரினத்தின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களின் செயற்பாடும் போக்கும் சர்ச்சைக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம் இது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் 24 பிரதிநிதிகளில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றைய இருவரான அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரை ஒத்த தி. மகேஸ்வரன் எம். பியும் தமிழ்த…
-
- 0 replies
- 894 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAR, 2024 | 03:46 PM யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு சமூக ஊடகங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்திய…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்க இராணுவம் திட்டம் கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை இராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பொருத்தமான காணியை தேடிவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறியுள்ளார். அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக இராணுவத்திற்குள் தனியான கம்பனியொன்றை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய அண்மையில் வலியுறுத்தியிருந்தார். எனினும் இந்த யோசனை குறித்து தற்போது கலந்துரையாடப்படுவதாகவும் பொரும்பாலும் இதற்காக இராணுவத்திற்குள் தனியாக நிர்வாக சபையொன்று அமைக்கப்படலாம் எனவும் பிரிகேடியர் ஹப்புஆரச்சி கூறினார். வீடுகள் நிர்மாணம் மற்றும் வீதி நிர்மாண…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கலை நிகழ்வொன்றை பார்வையிடச்சென்றிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தனர். அவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான கை துண்டிக்கப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் எற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் 12 ஆவது சந்தேக நபராக மானிப்பாயை சேர்ந்த ராஜ்குமார் கபில்ராஜ் (வயது 24) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவ…
-
- 1 reply
- 302 views
-
-
10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்! 05 APR, 2024 | 05:20 PM கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் ( விடுதி) அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு சிறுமியின் தந்தையாவார். சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்த…
-
- 1 reply
- 492 views
-
-
சிறிலங்காவில் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு நிரந்தர கண்காணிப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை வழங்க உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
மகிந்தராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் மகிந்த பிரதம வேட்பாளராகவோ, குழுத் தலைவராகவோ நியமிக்கப்படுவாரா? என்பது தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது, மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கவும், ஆனால் பிரதமர் வேட்பாளராக நியமிக்காதிருக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/41316/57//d,article_full.aspx
-
- 0 replies
- 243 views
-
-
மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பத்தை மக்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தடை விதித்து வருகின்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பணமும் பதவியும் தலைமையும்.. ஆட்கொண்டு பகுதி பகுதியாக பிரித்துள்ள சுயநலத்தின் எல்லை எங்குவரை செல்லும்? தாயகத்திலிருந்து ஒரு மடல்.. [Friday, 2011-11-18 16:33:01] உலகத்தில் எந்த இனமும் அனுபவிக்காத அழிவுகளையும் இன்னல்களையும் அனுபவித்தும் இதுவரை அதற்கான பதில்கள் கிடைக்காத நிலையிலும் எமது தியாகம் ஒரு நாளும் வீணாகாது எனும் ஒரே நம்பிக்கையுடன் இன்றும் ஈழ மண்ணில் தமிழ் தேசிய உறுதியுடன் மனதை திடமாக்கிக்கொண்டு தாயக மண்ணில் வாழும் எங்களுக்கு புலத்தில் நடக்கும் பல்வேறு செயற்பாடுகள் எங்களை மீண்டுமொருமுறை உயிருடன் புதைப்பது போன்றே உள்ளது. எந்தச் சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாது இன விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு வீரகாவியமான எமது மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் தினத்தை அனுஷ்டிக…
-
- 0 replies
- 861 views
-
-
மருத்துவர் துரைராஜா வரதராஜா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களுக்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டுமென்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக வன்னியில் கடமையாற்றிய மருத்துவர் துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் வைத்தியசாலைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய மருத்துவர்கள், பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இராணுவ விசாரணைகளின் பின்னர் அவர்கள் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இராணுவத்தினர் சிவிலியன்…
-
- 0 replies
- 250 views
-
-
முப்படையினரையும் பலப்படுத்தி வடக்கில் பாரிய தாக்குதல்கள்: மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் முப்படையினரையும் பலப்படுத்தி வடக்கில் பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். நிக்கரவப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விபரங்களுக்கு
-
- 2 replies
- 1k views
-
-
முழு நாட்டையும் இராணுவ மயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தால் எந்தவித நன்மையும் இல்லை எனக் கூறி, வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருக்கின்றது. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்திருக்கின்றார். அந்த உரையின் முழு விபரம் வருமாறு: கௌரவ சபாநாயகர் அவர்களே! யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் என பொது மக்களும், சம்பளம் உய…
-
- 1 reply
- 496 views
-
-
கூட்டமைப்பின் முடிவு பிரதமர் -ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும் April 1, 2019 வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்வுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பானது நாளை செவ்வாய்க்கிழமை பிரதமருடனும் நாளை மறுதினம் புதன்கிழமை ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும் அவர் க…
-
- 0 replies
- 240 views
-
-
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த 25.04.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் பரிசோதனையில் சிக்கிக் கொண்டுள்ளன.…
-
- 1 reply
- 609 views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டம் பாலம்பிட்டிப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக 46 குடும்பங்கள் தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 876 views
-
-
வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பி யாழ்ப்பாணம் செல்லவிருந்த நபர் ஒருவரிடம் பணம்,பொருட்கள் என்பனவற்றைக் கொள்ளையிட முயன்ற நபர் ஒருவர் வசமாக வாங்கிக் கட்டிய சம்பவம் ஒன்று நேற்று வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றிலிருந்து கொழும்புக்கு வந்துள்ளார். அவர் வழமையாக வெள்ளவத்தையிலேயே தங்குவதுண்டு. எனினும் சம்பவதினம் விமானம் தாமதமானதால் நேர காலத்துக்கு வர முடியவில்லை. இரவு 12 மணியளவிலேயே வெள்ளவத்தையை வந்தடைந்ததுடன் அங்கு மங்களா பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கி தங்குவதற்கு லொட்ஜ் ஒன்றைத் தேடியுள்ளார். இரவு வேளை என்பதாலும், லொட்ஜ் வழங்குவதில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாகவும் அவருக்கு எதுவ…
-
- 0 replies
- 1k views
-
-
நாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி தவறு எனவும் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது எனவும் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 681 views
- 1 follower
-
-
ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக சுமந்திரன் தெரிவு ஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். தென்னாசிய பிராந்தியத்தில் திடீரெனப் பிணக்குகள் உருவாகுகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார். ஆப்கானில்தான…
-
- 1 reply
- 486 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று(17) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பொன்னாலை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிறிலங்காவின் கடற்படையினர் அத்துமீறி அளவுக்கு அதிகமான குடிநீரை இறைத்து செல்கின்றனர். இதனால் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சுழிபுரம், சம்பில்துறை மற்றும் மாதகல் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை முகாம்களுக்கும் சம்பில் துறையிலுள்ள விகாரை மற்றும் விடுதிகளுக்கும் இவ்வாறு நீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதன் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள ஏனைய கிணறுகளின் நீர் வற்றிப் போவதுடன், உவர்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/41882/57//d,article_full.aspx
-
- 0 replies
- 235 views
-
-
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர். சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இடம்பெறும் விசாரணைகளிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 தற்கொலைதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விசாரணைகளில் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த அடையாளம் காணப்பட்ட எட்டு பேரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்கடடினார். அப்பெண்ணே தெமட்டகொடை சொகுசு வீட்டில் தற்கொலை தாக்குதலை நடத்தியதாக சந்த…
-
- 0 replies
- 757 views
-
-
நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குல் சம்பவங்களை அடுத்து அதிவணக்கத்திற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குண்டு துளைக்காத கார் வழங்கப் பணிக்கப்பட்டது. எனினும் பேராயர் அந்தக் காரை வாங்க மறுத்துள்ளார். “நான் பயப்படவில்லை. எனது பாதுகாவலர் கடவுளே. மக்களுக்கும் , நாட்டுக்குமே பாதுகாப்பு வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார். https://newuthayan.com/story/17/பிரதமர்-வழங்கிய-காரை-ஏற்.html
-
- 0 replies
- 383 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை நடைபெற்ற ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறப்பினர் குணதிலக்க ராஜபக்ச கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/governin…
-
- 6 replies
- 466 views
-
-
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழீழ விடுதலையின் தேவையினையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கான காரணிகளையும் அழுத்தம் திருத்தமாக வெள்ளித் திரையில் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான சிறுமி புனிதவதியின் துன்பம் நிறைந்த வாழ்வு நமது சொந்தங்கள் தமிழீழத்தில் இந்த வினாடிவரை அனுபவித்து வரும் அல்லல்களைப் பிரதிபலிக்கிறது. தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பாடசாலைகள் மீதான விமானத் bதாக்குதல்கள், தமிழ் இளைஞாகளின் கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி பிரேரிக்கப்பட்டுள்ள போதும் எந்தவகையான சமஸ்டி தீர்வென முடிவாகவில்லையென தெரிவித்துள்ளார் சுமந்திரன். சுமந்திரனின் முகநூல் சந்திப்பென நடத்தப்பட்ட நிகழ்விற்கு வாகனங்களினில் ஏற்றிவரப்பட்ட இளைஞர்கள் ஒருபகுதியினர் கலந்து கொண்ட நிகழ்வாக அது அமைந்திருந்தது.நிகழ்வினில் ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையினில் சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றினில் எந்த வகை சமஸ்டி சாத்தியம் என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்த சுமந்திரன் சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஏற்பட அப்பொழுது பேரம்பேச்சு ஆரம்பமாகும். அப்போதுதான் என்னவகையான சமஸ்டி என்பது பற்றி கூறமுடியும் என்றார். ஆனால், சமஸ்டிக்கான அடிப்படை ப…
-
- 0 replies
- 994 views
-