Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் – சிறீகாந்தா தெரிவிப்பு June 20, 2024 “தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அதனை முற்றாக எதிர்ப்பதாகவும் அதை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். இந்த விடயத்தில் சம்பந்தன் ஒரு செல்லாக்காசு” என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடா்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிறீகாந்தா, “பொது வேட்பாளர் வி…

  2. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்பிப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனித உரிமைக…

  3. 19 JUN, 2024 | 04:37 PM புதிய மகசீன் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை நேரில் சந்தித்து உரையாடினார். குறிப்பாக, புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று 15 வருடங்களாக அரசியல் கைதியாக கொடுஞ்சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுருக்கும் கிருபாகரனுடன் (மொறிஸ்) தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தார். அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்…

  4. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது. https://thinakkural.lk/article…

  5. 44 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் பாதுகாப்பு படையின் தலைமையகங்களில் இரண்டு முக்கிய தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒரு பகுதி வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மற்றொன்று யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன. மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கரா என்பவர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் விக்ரமசிங்கே யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியாகவும் உள்ளனர். போர்ச்சூழல் காரணமாக 40 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி…

  6. 19 JUN, 2024 | 06:44 PM பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக் கருதப்படும் ஆனைக்கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிப்படுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்ற…

      • Thanks
    • 2 replies
    • 431 views
  7. இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்…

  8. Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 04:17 PM இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை காணப்படுகின்றது என சமூக அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். மக்கள் போராட்ட முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. மக்கள் போராட்ட முன்னணிக்கு வடகிழக்கு மக்கள் போராட்ட ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். ம…

  9. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 02:29 PM யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/186459

  10. Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 12:45 PM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக அரகலய போராட்ட குழுவினர் மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே முன்னணி சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் இ…

  11. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 01:47 PM யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால், காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கல்லுண்டாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டையும் பொலிஸ் நிலையம் எடுத…

  12. ஜப்பான் முழுவதும் தற்போது பரவிவரும் “சதை உண்ணும் பக்டீரியா“ நோய் தொடர்பாக இலங்கை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை இந்த நோயால் சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமிதாகினிகே, இந்த நோய் கடுமையாக பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் இது ஒரு அசாதாரணமான நிலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர், பல்வேறு வகையான பக்டீரியாக்கள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவுகின்ற போதிலும் அதில் சில வகையான பக்டீரியாக்கள் சிகிச்சையளிக்க கூடிய…

  13. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 03:41 PM திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கமைய நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை பெறுவதற்கு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அனுமதி வழங்கியுள்ளார். பியூமி ஹன்சமாலியின் இந்த வங்கி கணக்குகள் எட்டு முன்னணி வங்கிகளில் உள்ளன. 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொழும்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்…

  14. இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். -ஜனாதிபதி ரணில்.- கொரோனாக் காலத்தில் இஸ்லாமியர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது ‘அடக்கம் செய்தல் மற்றும் கொரோனா தொற்று நோயின்போது இடம்பெற்ற விடயங்கள் என்ன என்பது பற்றி நிறைய கலந்துரையாடல்களும் மனவேதனைகளும் ஏற்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். அந்த விடயத்தில் நானும் தலையிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலில், அனைத்து நாடுகளும் அடக்கம் செய்வதை நிறுத்தியது. அதன் பிறகு, உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் மு…

    • 2 replies
    • 412 views
  15. 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்ட…

  16. Published By: VISHNU 19 JUN, 2024 | 01:28 AM விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்ஸபான தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவனே டங்கல் காட்டுப்பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (18) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (17) மாலை சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பதற்றமடைந…

  17. Published By: VISHNU 18 JUN, 2024 | 08:03 PM ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார். ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பௌத்த மதத்தின் இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவ…

  18. 19 JUN, 2024 | 10:03 AM வவுனியா மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று (18) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஐன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர். வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை தாம் உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் க…

  19. Published By: DIGITAL DESK 3 18 JUN, 2024 | 01:23 PM குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடராக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்றையதினம் காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவந…

  20. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது. இதற்கிடையில் ஆண்டு இறப்புகள் 2017இல் 146,000இலிருந்து 2023இல் 181,000ஆக அதிகரித்திருந்தன. திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.…

  21. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அதிகபட்ச வேதனமாக 1,200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விசேட நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலதிக தேயிலைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளதாகவும் இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். முன்னர் 1,000 ரூபாவாக காணப்பட்ட வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதன் ஊடாக 70 சதவீதம் வேதன அதிகரிப்பு இடம்பெறும். தொழிற்துறையில் உள்ளவர்கள் வேதனத்தை அதிகரிக்குமாறு எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவ…

  22. 18 JUN, 2024 | 10:53 AM கொவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார். கொவிட்பெருந்தொற்று காலத்தில் பெரும் வேதனை காணப்பட்டது குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் அதேவேளை இந்துக்கள் பௌத்தர்கள் கிறிஸ்தவர்களும் வேதனையை அனுபவித்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வேளை இது குறித்து ஆராயநியமிக்கப்பட்ட குழு உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரைத்தது,உயர்நீதிமன்றமும் இதனை அங்கீகரித்தது என ஜனாதிபதி த…

  23. Published By: VISHNU 18 JUN, 2024 | 02:33 AM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோட்டபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. பஷில் ராஜபக்ஷவின் காட்டிக் கொடுப்பு வெற்றிப் பெற கூடாது. 69 இலட்ச மக்களாணையை பலப்படுத்தும் வகையில் அனைவரும் செவ்வாய்க்கிழமை (18) நுகேகொடயில் ஒன்றிணைய வேண்டும் என சர்வஜன சக்தியின் பிரதிநிதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சன்ன ஜயசுமன கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்தனர். கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி காரியாலயத்தில் திங்கட்கிழமை (…

  24. Published By: VISHNU 17 JUN, 2024 | 11:38 PM சாதாரணமாக எமது தமிழர் பகுதிகளிலுள்ள பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இந்த இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு மக்களின் போக்குவரத்திற்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்ற வட்டுவாகல் பாலம் உடனடியாக நிர்மாணிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், …

  25. தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்!-விக்னேஸ்வரன் Posted on June 17, 2024 by தென்னவள் 10 0 மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13ஆவது சீர்திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி தோன்றியதாகவும் அதற்கு முன் சிங்கள இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறுவது போல துட்டகைமுனு…

    • 0 replies
    • 288 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.