ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 டிசம்பர், 2012 - 18:25 ஜிஎம்டி இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது. காலை வேளையில் தேவாலயத்தில் பூசை நடந்துகொண்டிருந்த நேரத்தில் பௌத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும் தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர்…
-
- 2 replies
- 479 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசக் கூடாது - றியர் அட்மிரல் சரத் வீரசேகர [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 00:51 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பதிலியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தக் கூடாது என்று, சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படை அதிகாரியாகவும், குடிமக்கள் பாதுகாப்புப் படையின் தளபதியாகவும் இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று முன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 564 views
-
-
பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் எமது செய்திப் பிரிவுக்குதெரிவித்தார். நேற்று இரவு மருத்துவ பீட மாணவர்கள் ஐவரும் விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்பீடம் ஆகிய மாணவர்கள் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் துணைவேந்தருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=706221683010476744
-
- 7 replies
- 757 views
-
-
முன்னாள் போராளிகளை வஞ்சம் தீர்க்காதீர்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-12-10 17:07:00| யாழ்ப்பாணம்] தென்னையில் தேள் கொட்டப் பனையில் நெறி கட்டியது என்றொரு பழமொழி தமிழ் வழக்கில் உண்டு. இந்தப் பழமொழிக்கும் யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கும் நிறையத் தொடர்புண்டு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம், இப்போது முன்னாள் போராளிகள் உட்பட பொதுமக்களைக் கைது செய்யும் அளவில் நிலைமை ஏற்பட்டுள்ளது. வன்னிப் போரின்போது படையினரின் விசாரணைக்குட்பட்டு, புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் படைத்தரப்பின் அவதானிப்பும் கண்காணிப்பும் இருந்தபடியே உள்ளது. துன்பச் சுமைக்குள் அகப்பட்டு, புனர்வாழ்வு ம…
-
- 2 replies
- 652 views
-
-
இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது. காலை வேளையில் தேவாலயத்தில் பூசை நடந்துகொண்டிருந்த நேரத்தில் பௌத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும் தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர் என்று பெயர் வெளியிட விரும்பாத தேவாலய பிரதிநிதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது பெயர் இங்கு வெளியிடப்பட…
-
- 2 replies
- 601 views
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கியால் வெளியிடப்படும் 2013ஆம் ஆண்டுக்கான தெற்காசிய நாடுகளுக்கான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீத எதிர்வுகூறல் குறைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான இந்த எதிர்வு கூறல் குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் 2013ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 6.4 வீதமாக அமைந்திருக்கும் என எதிர்வுகூறிய ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது இந்த எண்ணிக்கையை 6.2 வீதமாக குறைத்துள்ளது. அதுபோன்று 2012ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறலையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த 5.5 வீதத்திலிருந்து 5.3 வீதமாக தற்போது குறைத்துள்ளது. கடந்த ஆண்டு தெற்காசிய பிராந்தியத்தின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 6.2 ஆக அமைந்திரு…
-
- 1 reply
- 502 views
-
-
ஒவ்வொரு போராட்ட வடிவமும் அடக்கப்படும் போது, இன்னொரு வடிவம் பிறக்கிறது. அந்த வடிவம் தோற்றுப் போனால் இன்னுமொரு வடிவம் வருகிறது காலம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கற்களைக் கொண்டு வேட்டையாடிய சமுதாயம், இன்று ஏவுகனைகளைக் கொண்டு அணு ஆயுதங்களால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களை புரட்டும் போது கிடைக்கும் தகவல். அப்படியொரு வரலாற்று நினைவு கூறலை அல்ஜீரியப் போராட்டம் பற்றிய- LA BATAILLE D’ALGER சினிமாவும் கூறுகிறது. வரலாறு கற்றுத்தரும் அத்தனை பாடங்களையும் இந்த சினிமா பதிவு செய்துவிடவில்லை. ஆனால், அல்ஜீரியப் போராட்டத்தின் படிப்பினைகளை இந்த சினிமா படம்பிடித்திருக்கிறது. அதை இப்போது பார்ப்போமா (விடியோ) http://arabeevideo.com/video/5243_film-LA…
-
- 1 reply
- 764 views
-
-
யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு ஒரு வருட நிறைவடைந்ததை நினைவு கூறியும் அவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் சோஷலிச முன்னிலை கட்சியினர் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://tamil.dailymirror.lk/--main/54501-2012-12-10-14-49-04.html
-
- 1 reply
- 454 views
-
-
TNAயின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளர் நிசாந்தனின் வீட்டின் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது:- 10 டிசம்பர் 2012 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளரான நிசாந்தனின் வீட்டின் மீது இன்றிரவு கைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.நகரின் வைமன் வீதியிலுள்ள அவரது வீட்டின் மீது இன்றிரவு 9 மணியளவினில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றதாகவும் எனினும் கைக்குண்டு முன்னாலுள்ள மரமொன்றின் மீது மோதி வெடித்தமையினால் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை என நிசாந்தன் மேலும் கருத்து தெரிவித்தார். ஈபிடிபி சார்பில் கடந்த யாழ்.மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட நிசாந்தன் பின்னர் அவர்களுடன் முரண்பட்…
-
- 2 replies
- 534 views
-
-
தடுத்து வைக்கப்பட்டு உள்ள யாழ்பல்கலை மாணவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் அல்ல யோசப் இராணுவமுகாமில்? 10 டிசம்பர் 2012 கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் வசமிருப்பதாக கூறப்பட்டு வருவது முழுமையான பொய்யென தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் முன்னதாக கைது செய்யப்பட்ட குறித்த மாணவர்கள் மூவரும் வவுனியாவிலுள்ள பிரபல சித்திரவதை கூடமான யோசப் முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் பார்வையிட செல்லும் வேளையில் யோசப் முகாமில் இருந்தே அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அழைத்து வரப்பட்டிருந்ததாக பல்கலைக்கழக பீடாதிபதியொருவர் கவலையுடன் தெரிவித…
-
- 0 replies
- 608 views
-
-
தர்சானந் மற்றும் இன்னொரு மாணவர் தலைகீழாகத் தொங்கவிட்டு மிருகத்தனமாக சித்திரவதை . சிறீலங்கா | ADMIN | DECEMBER 10, 2012 AT 19:42 அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் மற்றும் இன்னொரு பல்கலைக் கழக மாணவர் மீது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.. கொடுமையான தாக்குதல்கள் காரணமாக அவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாகபயங்கரவாத குற்றப் புலனாய்வுத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இரண்டு மாணவர்களின் கால்களிலும் கயிற்றால் கட்டி …
-
- 3 replies
- 1k views
-
-
(கெலும் பண்டார) நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்ட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க இந்த கோரிக்கையினை சபாநாயகரிடம் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சேபனையை அடுத்து சபாநாயகர் இந்த தீர்மானத்தினை கைவிட்டுள்ளார். எவ்வாறாயினும் எனக்கு பன்றி இறைச்சி கறி வேண்டும். இதனை சபாநாயகர் நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன் என ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார். நாடா…
-
- 4 replies
- 603 views
-
-
சிறிலங்காவை அச்சுறுத்தும் மர்ம பொருள் என்ன? December 10, 2012, 4:34 am|views: 398 அண்மைக்காலமாக சிறிலங்காவில் மர்மப் பொருளொன்று பெரும் பிரகாசத்துடன் தோன்றி அச்சுறுத்தி வருகிறது. குறித்த மர்ம பொருளை நாட்டின் பல பகுதிகளிலும் பார்வையிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பொருள் அதிக வெளிச்சத்துடன் காலை மற்றும் மாலை தோன்றி மறைவதாக நேரில் கண்டவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். சிலாபம், பண்டாரவள, பதுளை, அனுராதபுரம், நொச்சியாகம உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான மர்மப் பொருட்கள் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் தென்படும் மர்மமப் பொருட்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இரணவில…
-
- 3 replies
- 925 views
-
-
எத்தகைய சவால்கள் வந்தாலும் பிரதம நீதியரசர் பதவி விலக மாட்டார்! [Monday, 2012-12-10 09:32:25] இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி விலகப் போவதில்லை. எத்தகைய சவால்களையும் சந்திப்பதற்கு அவர் தயாராக உள்ளார் என்று அவரது சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாம் முற்றாக மறுக்கின்றோம். அந்தக் குற்றச்சாட்டுகளையோ அல்லது முடிவினையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற நீதியரசர் சிராணி திலகவர்த்தன சாட்சியமளித்…
-
- 1 reply
- 352 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைப்பதற்காக, அரசின் 9 கட்சிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானம். [Monday, 2012-12-10 08:39:33] தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் முடிவு செய்துள்ளன. 1. அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்னியூஷ்ட் கட்சி, 2. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி, 3. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 4. அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 5. அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், 6. அமைச்சர் றிச…
-
- 1 reply
- 300 views
-
-
பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தையொட்டிய வீதிகள் மூடப்பட்டதால் நகர மண்டபப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54483-2012-12-10-11-04-40.html
-
- 1 reply
- 337 views
-
-
யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுது. கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய், இராணுவமே வெளியேறு, போன்ற கோசங்கள், பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,புதிய மாக்சிஸ் லெனின் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஆற…
-
- 1 reply
- 759 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nNpwtFzEv_Y
-
- 6 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு தென்னாபிரிக்க வழக்கு மையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை தென்னாபிரிக்க வழக்கு மையத்தின் பணிப்பாளர் நிகோல் பிரைட்ஸ், தென்னாபிரிக்க அதிபருக்கு அனுப்பியுள்ளார். தற்போது ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு எதிரான பரப்புரைகளில், மனிதஉரிமைகள் பவுண்டேசன், குவாடெங் தமிழ் கூட்டமைப்பு, தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பு …
-
- 1 reply
- 564 views
-
-
மன்னார் மாவட்டத்தில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப் பேரணி இன்று காலை 10 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலய மண்டபத்தில் விசேட கூட்டத்துடன் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்தது. பினனர்; மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் முகமாக மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதேவேளை, காணமல்போன மற்றும்…
-
- 0 replies
- 327 views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பின்நோக்கி நகர்த்துவ தற்காகவே மீண்டும் புலிப் பூச்சாண்டியை அரசு அவிழ்த்துவிட்டுள்ளது. அதனாலேயே இப்போது போர் ஓய்ந்தபின்னும் தமிழ்மக்கள் மீது புலி முத்திரை குத்தப்படுகிறது. இதனூடாக மீண்டும் கறுப்பு நாள் நோக்கிய பயணத்துக்கு நாட்டை அழைத்துச் செல்ல அரசு தயாராகி வருகிறது இவ்வாறு குற்றஞ் சாட்டியுள்ளன பொது எதிரணிக் கட்சிகள். இதேவேளை, பிரதம நீதியரச ருக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு கைவிடாவிட்டால், இந்த விடயத்தை சர்வதேசம் கொண்டு சென்று நாட்டின்மீது பொருளாதா ரத் தடைவிதிப்பதற்கான அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் தயங்கமாட்டோம் என்றும் பொது எதிரணிக் கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல…
-
- 0 replies
- 312 views
-
-
Call to boycott Sri Lankan cricket tour CRITICS of Sri Lanka's human rights record are calling for a boycott of the national cricket team's tour of Australia and say the Boxing Day Test will be an opportunity to protest. Two groups have called for a boycott ahead of the first Test in Hobart this week, prompting a scathing rebuke from Sri Lankan high commissioner Thisara Samarasinghe. Claiming inspiration from the former anti-apartheid sporting sanctions against South Africa, the Tamil Refugee Council and the Refugee Action Collective in Victoria are pushing for the boycott. ''There will be a stain of injustice that won't wash out of the cricket whites if t…
-
- 1 reply
- 480 views
-
-
இலங்கை நிலைமை குறித்து சுயாதீன மதிப்பீடு செய்யப்பட வேண்டும் - மெல்கம் பெரேசர் 10 டிசம்பர் 2012 இலங்கை நிலைமைகள் குறித்து சுயாதீன மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் பெரேசர் தெரிவித்துள்ளார். படகு மூலம் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டதன் பின்னர் துன்புறுத்தப்படுகின்றார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் மூலம் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டால், படகுப் பயணிகளை நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஓர் சூழ்நிலையில் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்…
-
- 0 replies
- 387 views
-
-
சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர்மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில், “பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். தற்போது 9 மாணவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வை…
-
- 0 replies
- 545 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உடனடி விடுதலையை கோரி நிற்கும் சிவில் சமூகத்தின் அறிக்கை. சிறீலங்கா | ADMIN | DECEMBER 10, 2012 AT 10:29 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கைதுக்கும், அவர்கள் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டமைக்கும் எதிரான கண்டனத்தை வெளியிட்டு அவர்களது உடனடி விடுதலையை கோரி நிற்கும் அறிக்கை கீழே கையொப்பமிட்டுள்ள நாம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வியாழக்கிழமை, 29-11-2012 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் விடுதலை செய்யப்பட்டமையினை வரவேற்கும் அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மா…
-
- 0 replies
- 345 views
-