ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143417 topics in this forum
-
யுத்தம்தின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் போரின் அவலங்கள் சுமந்து நிற்கும் களத்துக்காட்சிகள். அங்கு வாசிக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வெடிபொருட்களுடன் வாழுகின்றார்கள். http://thaaitamil.com/?p=34414
-
- 1 reply
- 618 views
-
-
[size=4]கனடாவில் நவம்பர் மாதம் 3 ந்திகதி நடைபெறப்போகும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மாவீரர்களின் பெயரால் ஒரு கூட்டம் எதிர்த்து மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறது.[/size] [size=4]துயிலுமில்லப் பாடலை தனது கட்சியின் கொள்கை விளக்கப் பாடலாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மாற்றி மாவீர்களை அசிங்கப்படுத்தியபோது மௌனமாக இருந்த இவர்கள் மற்றும் இவர்கள் ஆதரவு இணையங்கள், நவம்பர் 3 ந்திகதி நடைபெறப்போகும் ஒரு நிகழ்ச்சிக்காக மாவீர்கள் பெயரைச் சொல்லி மாவீர்களை அவமதித்த நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து நின்று எதிர்ப்பது முரண்பாடாக உள்ளது. [/size] [size=4]உண்மையிலேயே கலைநிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டியது நவம்பர் மாதத்தில் அல்ல மாவீரர் வாரத்தில்தான் ( நவம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=3][size=4]உலகம் முழுமைக்கும் ஒரு பாரிய அதிர்ச்சியை அளித்திட சிறிலங்காவின் சிங்கள பயங்கரவாத அரசு தயாராகிவிட்டது.உண்மையில் இது உலகத்திற்கு விடப்படும் சவால் என்பதை விட, ஒரு தலைக்காதல் மயக்கத்தில் தன்னுடைய தேசத்து மக்களின் இறையாண்மையை அடகு வைத்த இந்தியாவுக்கு வைக்கும் ஆப்பு.தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசு என்ற மதப்பிலும் கனவிலும் இருக்கும் இந்தியாவுக்கு வைக்கும் ஆப்பு.உலக நாடுகளின் அழுத்தங்களை தவிர்க்கவும்,மிரட்டும் சக்திகளை திணறடிக்கவும்,மிகவும் சாதுர்யமாக அரசியல் நகர்த்தல்களில் முதல் கட்ட வெற்றி கண்டிருக்கிறது ஸ்ரீலங்கா அரச பயங்கரவாத அரசு. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அரசின் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட வேண்டி ஸ்ரீ லங்கா அரசை தெற்காசியாவின் இஸ்ரேல் ஆக உ…
-
- 7 replies
- 1.1k views
-
-
[size=4]விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களை இன்னும் சில வாரங்களில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட ஆலோசனைக்குழு நேற்று அறிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு செயன்முறையின் இறுதி நடவடிக்கை மற்றும் அடுத்தக்கட்ட செயற்பாடு என்பவை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என அதன் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் விசார…
-
- 0 replies
- 482 views
-
-
தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் எவ்வாறான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐ.நா உதவி செயலாளர் அஜய் சில்பரிடம் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இன்று யாழ். வந்த உதவிச் செயலாளரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினார்கள். யுத்ததின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெருமளவான அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாக அரசாங்கம் கூறிவருகின்றது. இதற்கு அரசாங்கத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றும் ஒரு சில தமிழ் அமைச்சர்களும் ஒத்து ஓதிவருகின்றனர். …
-
- 2 replies
- 705 views
-
-
[size=4]கொழும்பு – 07 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமைக்கு ஏதிராக விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர். இதன் காரணமாக உயர்ஸ்தானிகராலயத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/49876-2012-10-04-10-51-10.html
-
- 17 replies
- 1.3k views
-
-
[size=3][size=4]இலங்கையின் பாரம்பரிய தொழில்கள் துறை மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.[/size] [size=4]இது தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்ய சென்னை செசன்ஸ் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இலங்கைக்கு சென்றுவிட்டதால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து 1996-ல் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவையடுத்து டக்ளஸ் தேவானந்தா சார்பில் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும், கொலை வழக்கு தொடர்பாக வீடியோ கான்பர…
-
- 0 replies
- 698 views
-
-
தமிழகத்தில் இயங்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மூன்று இயக்கங்களுடன் விடுதலைப்புலிகள் தொடர்புகளை வைத்திருப்பது குறித்து இந்திய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். [size=3][size=4]இந்த விடயம் தொடர்பான தகவல்களை இந்திய - இலங்கை புலனாய்வு பிரிவினர் பரிமாறிக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் சட்டமா அதிபர் இலங்கேஸ்வரனின் மனைவி, தனது கணவர் இறந்து விட்டதாக கூறி, ஆவணங்களை சமர்பித்து, கடவூச்சீட்டு ஒன்றை பெற்று கொண்டு, தமிழகத்திற்கு செல்ல முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.[/size] [size=4]இவர் தமிழகம் செல்ல அங்குள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உதவி இ…
-
- 0 replies
- 623 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்போது சிற்றூழியர்களுக்கும் கணனி உதவியாளர்களுக்குமான நேர்முகப்பரீட்சை நடந்து முடிந்துள்ளது. அதில் 156 பேர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களில் 34 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வழமையில் நேர்முகப்பரீட்சைக்காக பல்கலைக்கழக பேரவை ஆட்களை நியமிக்கும். அவர்கள் நிர்வாக பொறுப்புக்களில் உள்ளவர்களும் கல்விப்புலத்தில் உள்ளவர்களும் பேரவை, மூதவை உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வழமை. இந்த நேர்முகப்பரீட்சைக்கு பீடாதிபதிகளான பேராசிரியர் வி.பி.சிவநாதன்,பேராசிரியர் வேல்நம்பி,பேராசிரியர் கந்தசாமி போன்ற பலர் நியமிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெற்று முடிவடைந்திருந்தது. இவர்கள் தெரிவு செய்த 34 பேரின் பெயர்களும் பேரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனு…
-
- 0 replies
- 624 views
-
-
போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னி பெருநில பரப்பில் நிர்க்கதியாக கண்ணீர் சிந்தி வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல், அவர்களது உரிமை போராட்டங்களை உள்ளடக்காமல், இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது, பேசவும் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான பிரியாணி குணரத்ன தெரிவித்தார். கொழும்பு மருதானை சிஎஸ்ஆர் மண்டபத்தில் நேற்று சமூக நீதிக்கான பெண்கள் நடவடிக்கை அமைப்பின் மாநாடு நடைபெற்றது. விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, ஜமமு ஊடக செயலாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில், உரையாற்றிய பிரியாணி குணரத்ன மேலும் கூறியதாவது, வடக்கு கிழக்கில் 90,000 …
-
- 0 replies
- 443 views
-
-
[size=4]ஐ.நா உதவி செயலாளர் யாழ். விஜயம்[/size] [size=2] [size=4] (எஸ்.கே.பிரசாத், சுமித்தி) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் அஜெய சிப்பர் இன்று சனிக்கிழமை யாழ். மாவட்டத்திற்கான மேற்கொண்டார். இதன்போது யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். யாழ். மாவட்டத்திற்கு இன்று காலை தந்த ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் தலைமையிலான குழுவினர் முதலில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சிவில் சமூக குழுக்களை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில சந்தித்தனர். இதன்போது, இக்குழுவினர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவி…
-
- 0 replies
- 305 views
-
-
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அகதி விஸா வழங்க முடியும் என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அந்நாட்டில் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 50 பேருக்கு இந்த தீர்ப்பின் விளைவுகள் முக்கியமாக அமையும். இந்த தீர்ப்புக்கு அமைய இவர்கள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் ஆகையால் இவர்களை, சொந்த நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ அனுப்ப முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம் 47 என அடையாளப்படுத்தப்படும் இலங்கையர் ஒருவருக்கு பாதுகாப்பு விஸா வழங்க மறுக்கும் தீர்மானம் சட்டத்துக்கு விரோதமானது எ…
-
- 0 replies
- 383 views
-
-
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உண்ணாவிரதம் இருந்ததால் உடல் பாதிக்கப்பட்ட அவருக்கு புழல் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரின் உடலில் நீர் சத்து குறைந்துள்ளதாக கூறி கடந்த செப்டெம்பர் 29ம் திகதி மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர். கடந்த 6 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தூரனின் உடல்நிலை சீரடைந்தது. அதைத் தொடர்ந்து 05.10.2012 அன்று அவர் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். htt…
-
- 0 replies
- 348 views
-
-
சிறிலங்கா அதிபரின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தாபய ராஜபக்சவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சண்டேலீடர் வாரஇதழின் முன்னாள் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜான்சுக்கு அடைக்கலம் அளிக்க அவுஸ்ரேலியா மறுப்புத் தெரிவித்துள்ளது. கோத்தாபய ராஜபக்சவினால் நேரடியாகவும், பலமுறை கடிதமூலமாகவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பிரெட்ரிகா ஜான்ஸ், சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான புதிய நிர்வாகத்தினால், கடந்த மாதம் சண்டேலீடர் ஆசிரியர் பதவியில் இருந்து, நீக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர், அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கு கொழும்பிலுள்ள தூதுரகம் மூலம் மனிதாபிமான நுழைவிசைவு கோரியிருந்தார். எனினும், அவரது இந்த விண்ணப்பத்தை அவுஸ்ரேலியா நிராகரித்துள்ளது, சிறிலங்காவில் துன்புறுத்தல்களை எ…
-
- 0 replies
- 256 views
-
-
பி.பி.சீ யின் முன்னாள் ஊடகவியலாளர் சுமத்திய போர்க் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறது இலங்கை இராணுவம். [saturday, 2012-10-06 08:52:15] பி.பி.சீ (BBC) சர்வதேச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளரினால் சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.வன்னிப் போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பி.பி.சீ ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் பிரன்சஸ் ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். வன்னி வைத்தியசாலையில் கடயைமாற்றிய நிரோஸ் என்ற வைத்தியரே தமக்கு தகவல்களை வழங்கியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். எனினும், போர் இடம்பெற்ற காலத்த…
-
- 0 replies
- 351 views
-
-
நல்லூர் பிரதேச சபையின் காணியை அடாத்தாக பிடித்தனர் படையினர்; இராணுவப் பாதுகாப்பு சிறீலங்கா | ADMIN | OCTOBER 6, 2012 AT 09:33 திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி அடாத் தாகக் கையகப்படுத்தினர் படையினர். இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் பிரதேசசபை அண்மையில் கூடி விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய நிலையில் நேற்றுக்காலை படையினர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக்காலை அங்கு சென்ற படையினர் அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு காணியின் வாசல் கேற்றை மூடிப் பூட்டுப் போட்டதுடன் அதற்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கினர். பிரதேச சபையின் காணி என்று ஏற்கனவே அடையாளமிடப்பட…
-
- 0 replies
- 489 views
-
-
சிறிலங்காவில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த வருடம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னர் இதற்கான விளக்கத்தைச் சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கை தொடர்பான கடிதம் ஜெனீவாவிலுள்ள சிறிலங்கா பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்தாக தெரிகிறது. சிறிலங்காவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த விடயம் குறித்து சிறில…
-
- 5 replies
- 1.3k views
-
-
October 3, 2012 சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது. நியுயோர்க்கில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது, சிறிலங்கா அரசாங்கம் எதையும் மறைக்காது என்று தாம் உறுதியளித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். திருகோணமலையில் 5 மாணவர்கள் 2006ல் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று உத்தரவாதம் அளித்த…
-
- 1 reply
- 707 views
-
-
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
[size=4]2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கி மூன், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 67ஆவது பொதுச்சபை மாநாட்டின் போதே பான் கீ மூன்இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் இளைஞர் மாநாடானது முதல் தடவையாக ஆசிய நாடொன்றில் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஒரு விடய…
-
- 1 reply
- 725 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம் காட்டாததால் தான் தாம், ஆளும்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவிடம் கூறியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போதே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைத்ததற்கு நியாயம் கற்பித்துள்ளார். “மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வின் அவசியத்தையும், இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவத்தையும் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்புக்குள் கருத்தொற்றுமை இல்லை! - மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!! இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்களிப்பினைச் செலுத்தாமல் இருப்பதற்கு, இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்தொற்றுமை இல்லாமையே காரணமென தாம் கருவதாக தமிழ் ஊடகவியலாளர்களிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒரு கருத்தொற்றுமை இல்லை என்பதையே அவர்களது செயற்பாடுகளில் இருந்து உணரமுடிகின்றது. அரசியல் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வரும்படி நாங்கள் எத்தனையோ தடவைகள் கேட்டிருக்கிறோம். இவ்விடயத்தில் நாங்கள் விட்டுக்கொடுப்புடன…
-
- 1 reply
- 860 views
-
-
வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போ முகாமையாளரின் அலுவலகத்திற்குள் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க அனுமதி வழங்காததன் காரணமாக முகாதமையாளர், ஊடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிரச்சினையில் தலையிடுமாறு, வவுனியா பேருந்து ஊழியர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா டிப்போவுக்குள் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க அனுமதி கோரப்பட்ட போது, அதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, முகாமையாளரின் அலுவலகத்தை பள்ளிவாசலாக பயன்படுத்த அனுமதி கோரப்பட்ட போது, முகாமையாளர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக அவரை இடமாற்றம் செய்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 999 views
-
-
[size=2][size=4]பங்களாதேஷ், சிட்டகொங்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இலங்கையிலும் பங்களாதேஷிலும் உள்ள இலங்கையர்களில் சில பிரிவினருக்கு கவலையைக் கொடுத்துள்ள பங்களாதேஷில் நடந்த சம்பவங்கள், வெளிவிவகார அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் பின்வரும் விடயங்களை தெரிவிக்க விரும்புகிறது. பங்களாதேஷ், சிட்டகொங் மாவட்டத்திலுள்ள பல கோவில்கள் மீதும் பகோடாக்கள் மீதும் பௌத்தர்கள் மீதும் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அங்கிருந்த பௌத்தர்களிடையே பதற்றத்தை தோற்றுவித்…
-
- 0 replies
- 577 views
-
-
கிளிநொச்சி பொறியியல் பீடத்திற்கு இந்தியாவில் இருந்து விரிவுரையாளர்கள். சிறீலங்கா | ADMIN | OCTOBER 5, 2012 AT 23:06 சிறிலங்கா பல்கலைக் கழகங்களில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளனர் என பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் இரு பல்கலைக்கழகங்களில் இரு பொறியில் பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளமை காரணமாகவே வெளிநாட்டு விரிவுரையாளர்களின் சேவை தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாகக் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள பொறியில் பீடத்துக்கும் புதிதாக விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் அவ்வறான விரிவுரையாளர்களை உள்ளுரில் பெற்றுக் கொள்ள ம…
-
- 0 replies
- 631 views
-