Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (மார்ச் 27) திறந்து வைக்கப்படவுள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள் மற்றும் ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டது , அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பி. விமலசேன தெரிவித்துள்ளார். இதற்காக ஜேர்மன் அரசாங்கம் இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள். (ரூ. 357 கோடி) வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் வைத்தி…

  2. யாழ்ப்பாணம் 14 மணி நேரம் முன் சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (ஆதவன்) சாவகச்சேரி கடலேரி வற்றியுள்ளதால் அந்தப் பகுதில் கடற்றொழிலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர். கடலேரி வற்றி பல இடங்களில் மணல் திட்டுக்கள் காணப்படுகின்றமையால் படகுகள் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கடற்றொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ) சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (newuthayan.com)

  3. Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 03:54 PM நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம…

  4. Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 04:08 PM அநுராதபுர வரலாற்று சிறப்பு மிக்க ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு புதிய சீருடை இன்று திங்கட்கிழமை (25) அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை புதிய சீருடையில் கடமைகளை பொறுப்பேற்ற அதிகாரிகள் மகாசங்கத்தினரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரினால் தர்மோபதேச பிரித் ஓதப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரிடம் அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க புதிய சீருடை…

  5. 25 MAR, 2024 | 05:16 PM இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் இளநீர் ஏற்றுமதி மூலம், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 2,705 மில்லியன் ரூபாவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179685

  6. கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது . ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பற…

  7. இலங்கையில் ஏழுமலையான் கோவில் ! இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன. இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான…

  8. 25 MAR, 2024 | 09:57 AM பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (24) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாட்களுக்கு சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் சீனா இலங்கைக்கு அளித்த கடனை மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார். அவர் நேற்று (24) இரவு 08.20 மணியளவில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து மேலும் 10 தூதுக்குழுவினர் சீனாவிற்கு விஜயத்தை மேற்க…

  9. 24 MAR, 2024 | 03:55 PM கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது . சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மாதங்களாக இந்த நோய் தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார் . ஒன்றரை…

  10. 23 MAR, 2024 | 10:45 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கப்படும்போது அவருடைய நோக்கம் உட்பட தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசுவதற்கான நிபந்தனை வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதானது வெற்றி பெறுவதற்கு அல்லவெனவும், தேசிய இனப்பிரச்சினையை தென்னிலங்கைத் தலைமைகள் புறக்கணித்தமையாலேயே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதோடு தென்னிலங்கைத் தலைவர்களுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற…

  11. 23 MAR, 2024 | 10:25 PM நாட்டில் வேகமாக காசநோய் கரவிவருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்புநோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். உமிழ்நீர், சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு , கம்பஹா மற்றும் கள…

  12. இந்திய தேர்தல் அறிவிப்பால் தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை 23 MAR, 2024 | 10:44 PM (ஆர்.ராம்) இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொதுத்தேர்தல் அறிவிப்பால் தாமதமடைந்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுவதோடு, அவர்களது உபகரணங்களும…

  13. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 04:11 PM காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்க…

  14. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார். நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296893

  15. ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது. இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. 34 அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, தி…

  16. 23 MAR, 2024 | 02:04 PM பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பி…

  17. 23 MAR, 2024 | 02:17 PM (எம்.நியூட்டன்) பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வளர்க்கின்றபோதுதான் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகரான மருத்துவர் திருமகள் தெரிவித்தார். தேவை நாடும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மல்லாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் பிள்ளைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க வேண…

  18. 23 MAR, 2024 | 10:44 AM சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோர…

  19. 23 MAR, 2024 | 10:42 AM பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. …

  20. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 08:58 AM நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார். பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம். நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். https:…

  21. 22 MAR, 2024 | 08:49 PM இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத…

  22. இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை! இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஒட்டகபுலம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற உறுமய சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மக்களுக்காக 408 காணி உறுதிகள் கையளிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்…

    • 3 replies
    • 685 views
  23. 22 MAR, 2024 | 06:05 PM இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு ஒன்றினை மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது. சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாடு ஆராய்கின்றது. இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள…

  24. குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க…

  25. 22 MAR, 2024 | 07:05 AM மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்ப…

      • Sad
    • 1 reply
    • 728 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.