Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் பங்குச் சந்தையில் நடைபெறும் மோசடிகளால் அதன் பெறுமதி வீழ்ச்சி அடைவதாகக் கூறப்படுகிறது. பங்குச் சந்தையின் கட்டுப்பாட்டாளர் Tilak Karunaratne சென்ற17 ஆம் திகதி பதவியிழந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையினை ஏற்படுத்துவது சவாலாக அமையும். இவருக்கு முன்னர் பதவி வகித்தவரும் சென்ற வருடம் பதவி விலகியிருந்தார். Sri Lanka stock market roiled by scandal - AFP Sri Lanka's stock market, once a darling of investors, has seen its value plummet 26 percent in the past year and now faces a crisis of confidence after its regulator quit in a storm of controversy. The tiny bourse became the world's top gainer soon after the country ended decades of ethn…

  2. சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். படையினருக்கான தொழிற்சார் பயிற்சிகள், மற்றும் இலங்கையின் கோரிக்கையின் பேரில் இராணுவ உதவிகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்களில் அவர் பங்குபற்றுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலார் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை அவர் சந்தித்து கலந்துரையாடுவார். இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த வருடம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். அவருடன் சீன மக்கள் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் விஜயம் செய்யவுள்ளனர். பாதுகாப்ப…

    • 5 replies
    • 701 views
  3. [size=4]இலங்கை- இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் ஆரம்பமானது.[/size] [size=4]கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமான இந்த உயர் மட்ட பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.[/size] [size=4]இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் அதிகாரிகள் மட்டத்திலான இந்தப் பேச்சுவார்த்தையின் முதலாவது சுற்று கடந்த ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது.[/size] [size=4]இரு நாட்டு இராணுவத்திற்கிடை யிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கொழும்பில் நேற்று ஆரம்பமான இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை…

  4. [size=4]நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கதைவிடுகின்றனர். அதை நம்பவேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் தெரிவித்தார்.[/size] [size=4]கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெ.ஜ.ஐ.மு. சார்பாக போட்டியிடும் பெஸ்டர் ஏ.எம். றியாசின் ஏற்பாட்டில் கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]இங்கு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா உட்பட அமைச்சர்கள், பாராளும…

  5. மாங்குளத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.மாங்குளம் புதிய கொலனியில், தந்தையை இழந்து உறவினருடன் வசித்து வந்த சிறுமியே சிறிலங்கா படைச் சிப்பாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2010ம் ஆண்டு இறந்ததை அடுத்து, இவரது தாயார் மறுமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து .இந்தச் சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரன் மற்றும் 9 வயது, 7 வயதுடைய இரு சகோதரிகளும் தந்தையின் சகோதரி ஒருவரின் பராமரிப்பிலேயே இருந்து வந்தனர். இவர்களை பராமரித்து வரும் அந்தப் பெண் சிறிலங்கா படையினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்ததால், அவர…

    • 6 replies
    • 1.2k views
  6. [size=4]இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரனை நடத்த வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தேசிய செயற்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது எனினும், சரியான செயற் திட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான நம்பகமான உள்நாட்டு பொறிமுறைமையொன்றை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என …

  7. [size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை வரவுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) நேற்று நியமித்திருக்கிறார்.[/size] [size=4]இலங்கை வரும் குழுவுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசிய, பசுபிக், மத்தியகிழக்கு, வட ஆபிரிக்க பிரிவுகளுக்குப் பொறுப்பான தலைவர் ஹன்னி மெகாலி தலைமையேற்கிறார். இவருடன்களச் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கான பிரிவின் மூத்த அதிகாரி அஸ்ரா பெட்ராவும், மேலும் சில உயர்நிலை அதிகாரிகளும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். [/size] [size=4]செப்ரெம்பர் 14ஆம் திகதி வரும் இந்தக் குழு ஆறு நாள்கள் தங்கியிருந்து கொழும்பில் அரச, எதிர்க்கட்ச…

    • 0 replies
    • 630 views
  8. சிறீலங்கா நட்பு நாடு என்றால், தமிழ்நாடும், தமிழர்களும் இந்திய நாட்டின் எதிரிகளா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறீலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும் என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதிப்பதாகும். தமிழக மீனவர்கள் 546 பேரை கொன்று குவித்த ஒரு நாட்டின் படையினருக்கு தொடர்ந்து பயிற்சி கொடுப்போம் என்று கூறுவார்களேயானால், இந்திய மீனவர்கள் மீதும், அந்நாட்டு தமிழினத்தின் மீதும் சிறீலங்கா படைகள் நடத்திய, நடத்திவரும் தாக்குதல்கள் நியாயமானது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா? சிறீலங்காவின் நட்பைப் பெற இ…

    • 0 replies
    • 562 views
  9. சர்வதேச காணாமல்போனோர் தினத்தை ஒட்டி நாளை வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ள போவதில்லை என மக்கள் கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் இணைத்தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது, சர்வதேச காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் மக்கள் கண்காணிப்பு குழு கலந்து கொள்ளபோவதில்லை என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். நேற்று மாலை கொழும்பில் என்னுடன் சக இணைத்தலைவர் நிமால்கா பெர்னாண்டோ, ஏற்பாட்டாளர் மனோ கணேசன், செயலாளர் பி. ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்ட எமது நிர்வாக குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எமது முடிவிற்கு கூட்டமைப்பு…

  10. கொழும்பில் பதற்றம் - பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டத்தினால் போர்க்களமானது கோட்டை 29 ஆகஸ்ட் 2012 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்புகை குண்டுத்தாக்குதல். மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை உடனடியாக திறக்க கோரி பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்hட்டத்;தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முதலில் தண்ணீரைப் பீய்ச்சியடித்துள்ளனர்இ இதனையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்கையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுத…

  11. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சி கொடுக்கும் என்று திமிராக பேசிய பாதிகாப்பு இணை அமைச்சரை பள்ளம் ராஜுவை கண்டித்தும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று காலை 9 மணி அளவில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 150 பேர் பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இரண்டு மணிநேரம் தொடர்வண்டிகளை நகர விடாமல் செய்தனர் நாம் தமிழர்கள் . பின்பு காவல் துறையினர் அவர்களை கைது செய்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். http://thaaitamil.com/?p=30469

  12. தென்மராட்சி கல்வயலில் கல்வி அதிகாரிகளின் அலட்சியத்தினால் கைவிடப்பட்ட பாடசாலை, சிறிலங்காப் படையினரின் பாரிய முகாமாக விரிவாக்கப்பட்டு வருகிறது. 5ம் தரம் வரையிலான மாணவர்கள் கற்று வந்த யா/கல்வயல் ஞானப்பிரகாச வித்தியாலயமே சிறிலங்கா படைமுகாமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு முகாம் அமைத்திருந்தனர். இந்த முகாமை தற்போது அவர்கள் விரிவாக்கி வருகின்றனர். இந்தப் பாடசாலை, 1996ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நடவடிக்கையின் போது கடுமையாகச் சேதமடைந்தது. எனினும் இந்தப் பாடசாலைக் கட்டடங்களைத் திருத்தி, மீள இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பாடசாலை வளவில் சிறிலங்காப் படையினர் முகாம் அமைந்தனர்.…

    • 0 replies
    • 517 views
  13. தாக்குதலுக்குள்ளாகி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுந்தரம் சதீஸ் என்ற அரசியல் கைதி நேற்றிரவு அவசரமாக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்… “தீவிரமான தாக்குதலுக்குள்ளான சதீஸ் – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது நிலைமை மோசமடைந்திருப்பதால் அவசரமாக கொழும்புக்கு நேற்றிரவு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சதீஸின் இடதுபக்கம் பரலைஸ் நிலையில் காணப்படுவதாகவும் தாக்குதலில் நரம்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் அவரது மனைவி கவிதா எம்மிடம் தெரிவித்தார். மிலேச்சத்தனமாக இத்தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெ…

    • 0 replies
    • 408 views
  14. கியூ பிரிவு காவல்துறையினரின் பேச்சை நம்ப வேண்டாம்! உண்ணாவிரதி செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கை எடுங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர் செந்தூரன் 23வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அதிலும் கடந்த 9 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. எந்நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் இதுவரை 6 தடவை தான் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அதனால…

    • 0 replies
    • 429 views
  15. விடுதலைப்புலிகள் என்ற அமைப்பிற்கு விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். இதற்குக் காரணம் அவர்கள் விடுதலைக்காகப் போராடுகின்றார்கள் என்பதற்காக மட்டுமல்ல… மாறாக அவர்களின் நிர்வாகத்தில் அச்சமற்ற உறக்கம், எந்த நேரமும் வீதியில் பெண்கள் பாதுகாப்புடன் நடமாடக் கூடிய சுதந்திரம், களவு, கொள்ளையயன்ற பேச்சுக்கே இடம் இல்லாத நிலைமை, இவை காரணமாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தனர் என்ற உண்மையை புரிந்து கொள்வது அவசியம். விடுதலைப் புலிகள் மீண்டும் தோற்றம் பெற்று விடுவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசிடமும், இந்திய மத்திய அரசிடமும் இருக்கவே செய்கிறது. விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவார்கள் என்ற நினைப்பை இல்லாமல் செய்ய வேண்டுமாயின், மீண்டும் புலிக…

    • 0 replies
    • 693 views
  16. இந்திய அமைதிப்படையை அனுப்பி தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்த முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில், பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது சாவுத் தண்டனையை இரத்து செய்யக் கோரி, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 21 வயதான தோழர் செங்கொடி, கடந்த 28.08.2011 அன்று தீக்குளித்து ஈகியானார். தோழர் செங்கொடியின் முதலாமாண்டு நினைவேந்தல் 28.08.2012 அன்று செங்கொடியின் ஊரில் எழுச்சியோடு நடந்தது . இந்நிகழ்வில் அனைத்து தமிழ் உணர்வுக் கட்சிகளும் , இயக்கங்களும் , இயக்கம் சாரா உணர்வாளர்களும் கலந்து சென்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தினர் . பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள், ம.தி.மு.க. துணைப் …

    • 0 replies
    • 407 views
  17. கடந்த கால சம்பவங்கள் எமக்கு பல மனிதர்களையும் துல்லியமாக இனம் காட்டி இருக்கின்றது. அந்த வகையில் நாம் இனியும் ஏமாற முடியாது என கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன் தெரிவித்தார். மட்டக்களப்பு திகிலிவெட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதேர்தல் பிரசார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு கி.சேயோன் மேலும் தெரிவிக்கையில்! கடந்த காலங்களில் தமிழ் பேசுகின்ற எமது மக்கள் வடக்கு கிழக்கில் பல கசப்பு அனுபவங்களையும், சொல்லொணா துயரங்களையும் அனுபவித்து இருக்கின்றனர். கடந்த கால சம்பவங்கள் எமக்கு பல மனிதர்களையும் துல்லியமாக இனம்…

    • 0 replies
    • 311 views
  18. புலனாய்வுப் பிரிவினர் ஏற்றிய புலிக்கொடி பற்றி புலனாய்வுப் பிரிவே விசாரணையாம்:- 29 ஆகஸ்ட் 2012 யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர் ஊர்வலத்தில், மாட்டு வண்டி ஒன்றில் ஈழ கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வண்டியில் இருந்து கொடியை பாதுகாப்பு தரப்பினர் அப்புறப்படுத்தியிருந்தனர். வடக்கில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த புலிகளின் ஆதரவாளர்கள் செய்த வேலையாக இது இருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலிக்கொடியும் பரபரப்பும் வரலாற்றுப்புகழ் மிக்க சந்நிதி முருகன் கோவிலில் நேற்று காலை பறந்த புலிக்கொடி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலை வேளை தேர்முட்டிப…

  19. தமிழர்களுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி ! செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்யவேண்டும் என செந்தூரன் கடந்த 23 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார். செந்தூரனுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வெளியே வெடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செந்தூரன் செய்த உண்ணா நிலை போராட்டம் , நாம் தமிழர் , மதிமுக செய்த முற்றுகை போராட்டம் , நாம் அரசுக்கு கொடுத்த அழுந்தங்கள் , ஊடகங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இன்று செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள தோழர்கள் ஏழு பேர்களை அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு.. சேகர், சதீஸ்குமார், சிவா , பிசி முகமது , குட்டி, பராபரன் மற்றும் ஒரு வயோதிகர் சண்…

  20. IN its 1970s heyday - before war and poverty made movie theatres a luxury northern Sri Lankans could ill afford - the Sridhar Cinema was Jaffna's "A Number One" film house. The smart new cinema, with its dress circle and regular Bollywood offerings, was hugely popular in the northern capital, as was its young owner Ratnasabapathy Mahendraraviraj, who built the theatre on family land just 1.5km from the heart of Jaffna town. But the decline and current predicament of the once-grand Sridhar Cinema - and its now Australian-resident owner - reflects a wider problem plaguing many displaced Tamils as they return to their war-ravaged homes. For 16 years the cinema…

    • 5 replies
    • 1.4k views
  21. நிந்தவூரில் கோர விபத்து : 6 பேர் பலி நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இன்றிரவு (28.08.2012) 8.35 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேராக மோதியதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 6 பேரே மேற்படி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திலேயே ஐவர் உயிரிழந்ததாகவும் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு சிறுவன் மற்றும் ஒர…

  22. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒன்பது பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைக் கிளைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், யுனிசெப் உள்ளிட்ட சிலவற்றின் ஊடாக இந்த உதவிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…

  23. [size=4]படிப்பறிவில்லாத பிள்ளையான் இனிமேல் கிழக்கு மாகாண முதல்வராக முடியாது என்று அவரது முன்னாள் கூட்டாளியும், சிறிலங்காவின் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி ருத்ரமலர் ஞானபாஸ்கரனுக்கு ஆதரவாக - வாழைச்சேசையில் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “2008ம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிட முடியாது போனதால் தான் பிள்ளையானால் முதல்வராக முடிந்தது. பிள்ளையான் முதல்வராகத் தகுதியானவர் அல்ல. அவர் படிப்பறிவற்றவர். அவரது முதல்வர் பதவிக்காலம் முடிந்து விட்டது. இம்முறை அவரால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற…

  24. இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்திய மத்திய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து வாதாட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு புதுடெல்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் கடந்த 18-ந் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குறித்த இவ் விசாரணையில் தம்மையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு வை.கோ மன்றிடம் கோரினார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. அப்போது வைகோ, தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகளைச் சுட்டிக் காட்டியே இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான், விடுதலைப்ப…

  25. தொன்டமனாறு வெளிக்களநிலையத்தில் தயாராகும் வினாத்தாள் ஒன்றில் இருந்து வெளியான கேள்வி . இவ் வினாத்தாள் தயாரித்தவர் இலங்கை அரசுடன் நட்பாக உறவாடி தமிழர்களின் விடுதலை போராட்டத்தினையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தி வருகிறார் என்று ஆசிரியர்கள் கவலைப் படுகின்றனர். இந்த வினாத்தாள் வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவருடைய மனைவி இராணுவத்துடனும் மகிந்த அரசுடனும் மிகுந்த நட்பாக உறவாடி வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அவர்களுக்கு பலவழிகளிலும் சந்தோசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே இவரது கணவர் இவ்வாறான கேள்வியைத் தயாரித்து வழங்கியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் அண்மையில் நடத்திய பொதுசாதாரண ப…

    • 15 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.