Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 11 MAR, 2024 | 05:36 PM யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல் மற்றும் பொலீஸ் திணை்களங்கள் அவற்றுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றமை கவலைக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். சமத்துவக் கட்சியின் பொது செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சிவராத்தி தினத்தில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலீஸார் மேற்கொண்டு அடாவடித்தனமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும்…

  2. யாழ். பல்கலையின் பொதுப் பட்டமளிப்பு மார்ச் 14, 15, 16 இல் : 2,873 பட்டங்கள், 46 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்! 11 MAR, 2024 | 04:06 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவின்போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின…

  3. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 11:28 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனை வீட்டார் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். விசாரணைகளில் நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178401

  4. 10 MAR, 2024 | 08:57 PM சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உபட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் கசிப்பை எடுத்து சென்றபோது சாவகச்சேரி பொலிஸால் கைது செய்யப்பட்டார் . மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178375

  5. 10 MAR, 2024 | 01:52 PM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று (09) பிற்பகல் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன்ட் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவ…

  6. 10 MAR, 2024 | 09:11 PM வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார். அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தை வழங்கியுள்ளார். பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண …

  7. Published By: VISHNU 08 MAR, 2024 | 09:23 PM வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) மாலைவேளையில் நடைபெற்றுகொண்டிருந்த போது சற்று பதற்றநிலை அதிகரித்தது. இதனால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை ஏற்பட்டது. அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.…

  8. 10 MAR, 2024 | 04:15 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாகத் தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்ட வாகனத்தின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை (09) மாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைதானார் . இந்தநிலையில் 13 தேக்கு மர குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். https://www.virakesari.lk/article/178362

  9. 10 MAR, 2024 | 10:44 AM சுகாதார அமைச்சின் தேசிய தொழுநோய் அறிக்கையின்படி , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் படி ,2023 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 259 தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 116 தொழு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . 2019 ஆம் ஆண்டு 1,660 தொழுநோயாளிகளும், 2020 ஆம் ஆண்டு 1,213 நோயாளிகளும், 2021 ஆம் ஆண்டு 1,026 தொழுநோயாளிகளும், 2022 ஆண்டு 1,401 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/178340

  10. Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 08:26 PM ஆர்.ராம் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி பூஜைவழிபாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் எதேச்சதிகாரமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்நிலையில் சிவஞான…

  11. 10 MAR, 2024 | 10:18 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்தும் தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சினிலமவின் புதல்வரின் திருமணத்தில் சாட்சி கையெழுத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார். அங்க…

  12. 09 MAR, 2024 | 05:46 PM (எம்.மனோசித்ரா) தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மக்கள் அரண்' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று சனிக்கிழமை (09)நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்க…

  13. Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 02:38 PM இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்ட…

  14. வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக்கூட்டுதாபனத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து ஆளுநர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் ம…

  15. நாட்டிற்கு 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் 14% அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியமை, பல்நோக்கு கடன் திட்டத்தை அமுல்படுத்தியமை, ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …

  16. மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர். சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் நேரப்படி நேற்று முன்தினம் (07) காலை 11.30 அளவில் ட…

    • 0 replies
    • 358 views
  17. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்ல எத்தனிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக சபநாயாகர் இதேவேள…

  18. 09 MAR, 2024 | 02:58 PM காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்…

  19. Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 10:43 AM யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான செ. பிரின்சன் தலைமையில் உணவகங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள் , 05 கிலோ இடியப்பம் மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நி…

  20. 07 MAR, 2024 | 01:21 PM இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். இது சுற்றுலாப் பிரதேசங்களில் மிகவும் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த தென்னகோன், இது தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். https://www.virakesari.lk/article/178158

  21. Published By: DIGITAL DESK 3 08 MAR, 2024 | 02:44 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது. …

  22. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாணக்கியன் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சிய…

  23. 08 MAR, 2024 | 06:14 PM நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது. வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி, அந்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணிகளின் உரிமையாளர்கள் தமது காணியின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர், அந்த காணிகளை விடுவித்து, மக்களுக்கு வ…

  24. கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசம் : வானிலை அவதான நிலையம்! 08 MAR, 2024 | 01:49 PM கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் காற்றின் தர சுட்டெண் 158 (பி.எம்.2.5) எனவும் சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178248

  25. வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும் நேற்று நெடுங்கேணி பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1372652

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.