ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
http://naathamnews.com/?p=6484 தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 17 replies
- 3.1k views
-
-
மகிந்தர் லண்டன் வந்த சமயம், பாக் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் சுமார் 35 அறைகள் பதிவுசெய்யப்பட்டு அவை அனைத்தும் பாவிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் மகிந்தரின் தீவிர ஆதரவாளர்களும்,மற்றும் சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்குமாக சுமார் 35 அறைகள் பதியப்பட்டுள்ளது. வழமையாக ஒரு நாட்டு அரசாங்கத்தால் வரவேற்க்கப்படும் பிற நாட்டு அரசுத் தலைவர்கள் அந் நாட்டில் தங்க, அழைப்புவிடுத்த நாடே வசதிகளைச் செய்து கொடுப்பது வழக்கம். இதனைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசின் தலையில் முழகாய் அரைத்துள்ளனர் மகிந்தரின் காவலாளிகள். 35 அறைகளில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்களே அதிகாலையில் எழுந்து கொடிகளுடன் வெளியே வந்…
-
- 1 reply
- 1.9k views
-
-
சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள் கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு நன்றி: தமிழக அரசியல் http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…
-
- 7 replies
- 2.4k views
-
-
இலங்கையின் நல்லிணக்கத்துக்காக உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவிததுள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக சபை கூட்டம் அண்மையில் லண்டனில் நடைபெற்றது.எனினும் இதன்போது இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதியின் உரை ரத்துச்செய்யப்பட்டது. எனினும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் செயலாளர் கமலேஸ் சர்மா ஏற்பாடு செய்திருந்த பிரித்தானிய மகாராணிக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்றார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க நடைமுறைகளுக்கு தாம் உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ரிச்சட் உகு, இன்று தெரிவித்துள்ளார் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிக்கிறது இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட …
-
- 4 replies
- 866 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ‘நான் ஏற்றமாட்டேன்’ என கூறி மறுத்துள்ளார். அத்துடன் “ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையோருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது, தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தேசிய கொடி ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கோர…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து இலங்கை அரசு கவலையடைந்துள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துக்கள் மேற்படி ஆர்ப்பாட்ங்கள் தொடர்பாக அரசாங்கம் பதட்டத்தில் மூழ்கியுள்ளதை நன்கு எடுத்துக் காட்டுவதாக கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கருத்து தெரிவித்ததாக உதயன் பத்திரிக்கை தனது பதிப்பில் தெரிவித்துள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்ட மேற்படி அமைச்சர் ஹெகலிய கூட மிகுந்த பதட்டத்துடனேயே காணப்பட்டதாகவும் மேற்படி பத்திரிகையாளர் தெர…
-
- 1 reply
- 712 views
-
-
கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் மண் ஏற்றச்சென்றவர்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள். கடந்த செவ்வாய் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டாவளைப்பகுதியில் ஆற்று மண் ஏற்ற சென்றவர்களை மறித்த படையினர் மணல் ஏற்றுவதாக இருந்தால் பணம் கொடுத்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள் இதனை மறுத்தவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். இதனால் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் நாள்தோறும் கண்டாவளைப்பகுதியில் சிறீலங்காப்படையினர் ஏதோஒருவகையில் மக்களுக்கு தொல்லைகொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 884 views
-
-
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார் இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அ…
-
- 0 replies
- 974 views
-
-
பிரிட்டிஷ் அரசியாரின் வைர விழா கொண்டாட்டத்தில் இலங்கை அதிபர் கலந்துகொண்டதனைத் தொடர்ந்து கனடிய மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம், தொரொண்டோ பிரிட்டிஷ் பொது தூதரகத்தின் முன் நடந்துள்ளது. இங்கிலாந்து அரசியான அவர், நாட்டின் தலைவர் மட்டுமல்லாது கனடாவின் அரசியாரும் ஆவார். ராஜபக்சே போர் குற்றவாளி என எழுதப்பட்ட எதிர்ப்பு பலகைகளை ஏந்திய தமிழ்மக்கள், தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்தும் போராட்டத்தின்போது முழங்கியுள்ளனர். மேலும், பொதுநலவாய நாடுகளில் இலங்கையின் அங்கத்துவத்தை எதிர்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர் கனடிய தமிழ்மக்கள். வரலாற்று சிறப்புவாய்ந்த அத்தகைய கொண்டாட்டத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பது போர்குற்றங்கள்;…
-
- 0 replies
- 766 views
-
-
தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கதயார் என சீன பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர - சீன பாதுகாப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த இராணுவ தளபதி இரு தரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். இதனிடையே, இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படும் விஷேட திறமைகள் சீனாவுடன் பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் ஜகத் ஜயசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 321 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிராக யோசனையின் பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அவரின் அலுவலக பணியாளர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் யோசனைக்கு இவர்கள் உதவியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார். பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்துடன், நவநீதம்பிள்ளையின் ஆசிய பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் ரோரி மன்கோவன், பலருக்கு அனுப்…
-
- 2 replies
- 944 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் கமரூன் கோரியிருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என செனல்4 ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுககள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார் என பிரதமரின் பேச்சாளர் க்ரேய்க் ஒலிவர் தெரிவித்துள்ளதாக செனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்தவிற்கும், பிரதமர் கம…
-
- 0 replies
- 642 views
-
-
Rajapaksa’s action replay in UK by Col R Hariharan President Mahinda Rajapaksa’s key note speech at the Commonwealth Economic Forum organised by the Commonwealth Business Council (CBC) and the City of London today was called off by the organisers “due to pressure of pro-LTTE elements in London” as the Sri Lanka High Commission claimed. Though the Scotland Yard was ready to provide assured security, the CBC “decided it was not in their interest to stage the event” according to media reports. However, CBC website merely said: “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” The President is visiting UK to atten…
-
- 0 replies
- 442 views
-
-
ஒரு ஊடகத்தால் ஒரு இனத்தினை ஒருங்கிணைக்கவும் முடியும் மாறாக திசைதிருப்பவும் முடியும் அதில் இருந்து வெற்றிகொள்ளப்பட்டதுதான் பிரித்தானியாவில் தமிழர்களின் அணிதிரழ்வு! முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் அதாவது மே-18-2009ற்கு பின்னர் தமிழர்களின உத்தியோகபூர்வமான வானொலி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தப்பட்ட வேளையிலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தலைவர் அவர்களின் வளிகாட்டலில் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் பிரித்தானியாவில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. தலைவர் அவர்களின் தலைமையின…
-
- 13 replies
- 5.3k views
-
-
லண்டன் மாநகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் அலையென திரண்டு சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரட்டி விரட்டி இன்று புதன் கிழமை மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டம் பாரிய அவமானத்தையும் பெரும் தலைக் குனிவையும் ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர். முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இட…
-
- 14 replies
- 2.5k views
-
-
-
கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார். வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர். கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே சென்னை வழியாக கொழும்பு திரும்பினார் கூரே. அவர் சென்றுவிட்டது தெரியாத ஆர்வலர்கள் அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்பும், மத்திய ஆராயச்சி நிறுவனம் ம…
-
- 1 reply
- 734 views
-
-
எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள் 1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்புச் செய்ய விரும்புகிறார். இவர்கள் எதிர்பார்க்கும் தொகை 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 310€) 2) இராச…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமெரிக்க செனட் சபையில் ஒலித்த சிறிலங்கா விவகாரம் ! 07 ஜூன் 2012 அமெரிக்காவின் செனட் சபையில் சிறிலங்காவின் விவகாரம் மீண்டும் ஒருதடவை ஒலித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமன அங்கீகாரத்திற்கான செனட் சபை அமர்வின் போது சிறிலங்காவுக்கான புதிய தூதராக துமிசேல் சிஸன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவுக்கான தனது நியமனம் தொடர்பில் செனட் சபையில் கருத்து தெரிவித்த துமிசேல் சிஸன் அவர்கள் சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகளுக்கு முதலிடம் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைவரம் தொடர்பில் புதிய தூதுவர் துமிசேல் சிஸன் அவர்கள் அமெரிக்க செனட் சபையில் தெரிவிக்கையில் : இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அமைச்சருக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் - நிகழ்ச்சியை கைவிட்டு நாடு திரும்பினார் 07 ஜூன் 2012 கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார். வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர். கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே ச…
-
- 0 replies
- 694 views
-
-
வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம் தற்போது யாழ். மாவட்டத்திலும் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.நல்லூர், கோப்பாய், தெல்லிப்பழை ஆகிய மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து மாத்திரம் இந்த 61 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட உள்ளது. இவற்றில் தனியாரின் உறுதிக்காணிகளும் உள்ளடங்குகின்றன. இவற்றை காணி சுவீகரிப்பின் கீழ் மேற்கொள்வதற்கும் இராணுவம் திட்டங்களைத் தயார்ப்படுத்தி விட்டது. அது தவிர பிரதேச சபைகள், மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அரச காணிகள் என்ற போர்வையில் கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்ட செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்பட்டிருக்கிறது. காரணம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் எமது போராட்டத்தின் காரணமாகவும் நாளை லட்சக்ணகக்கில் தமிழ் மக்கள் கூடுவோம் என எதிர்பார்த்து சங்கடங்களை தவிர்ப்பதற்காக நிறுத்தபப்ட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலதிக செய்திகள் விரைவில். http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/ போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும் செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ…
-
- 93 replies
- 7.4k views
-
-
இந்தியாவின் கோவை பகுதிக்குச் சென்றுள்ள இலங்கை அமைச்சர் ஒருவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 பேர். வரை கைது செய்யப்பட்டனர். திருமண விழா ஒன்றில் பங்கேற்க இலங்கை அமைச்சர் கோவை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் தங்கியுள்ள விடுதிக்கு முன் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கோவை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/
-
- 2 replies
- 795 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டுக்கு கிடைத்துள்ள காணொளி ஒன்று, வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புகள் வெளித்தெரியத்தக்கதாக ஆடைகள் களைப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக சிறிலங்காப் படையினர் களிப்புடன் நின்பதைக் காட்டுகின்றது. இது தமிழர்கள் எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு- நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளி ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் முத்தலிப்பை, சக இராணுவ அதிகாரி ஒருவரே புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வைத்து லெப்.கேணல் முத்தலிப் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வன்னியிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 952 views
-