ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
திருகோணமலை ஐயனார்கேணி வீதியில் 2012-04-18ம் திகதி அன்று இரவு 09.30 மணியளவில் 28 வயதுடைய கிரிக்கெட் வீரரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 26 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 30 வயதுடைய சந்தேகநபர் விமானி என தெரியவந்துள்ளது. குறித்த விமானி இங்கிலாந்து சென்றிருந்த போது ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்பவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் இலங்கயைில் உள்ள தனது கணவரான ஈஸ்வர…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை ஆதாரங்களுடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பின் பல மாதப் பயணத்தின் முடிவில் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பிச் சென்றுள்ள குறித்த நபர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையி…
-
- 1 reply
- 989 views
-
-
கொழும்பு வர்த்தகர் ஒருவரைக் கடத்தி, காணாமல் போகச் செய்த சம்பவத்தின் சூத்திரதாரி யாழ்க் கட்டளைத் தளபதி மகிந்த அத்துருசிங்கவென பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு, பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக்சிட்டி சந்தைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் 3-26 மற்றும் 3-27 ஆகிய இலக்கங்களில் ‘பெனமா ட்ரேடஸ்” என்ற வர்த்தக நிலையம் அமைந்துள்ளது. இந்த வர்த்தக நிலையத்தில் மின்னியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரான 42 வயதான ராமசாமி பிரபாகரன் என்ற நபரே கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன ஆகியோருக்கெதிராக இந்த வர்த்த…
-
- 0 replies
- 724 views
-
-
பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம் நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது. திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களை…
-
- 165 replies
- 17.5k views
-
-
சிறிலங்காவில் போர் முடிவடைந்தாலும், மீண்டும் ஒரு பதற்ற நிலை ஏற்படாதிருக்க உறுதிப்படுத்த வேண்டிய வலுவான தேவை எழுந்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க மற்றும் இந்திய நாட்டு இராணுவ பிரதிநிதிகளிடம் கோத்தபாய இதனை தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் பாதுகாப்பு மட்டுமல்ல, பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் நாம் கூடுதலாக அக்கறை செலுத்திவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
கடந்த ஞாயிறு அன்று.. கொழும்பைச் சென்றடைந்த லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சனல் 4 ஊடகவியலாளர் சிரானி சபாரட்ணம்.. கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டுள்ளார்..! ஒரு சர்வதேச மதிப்பு மிக்க ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இக்கதி என்றால்.. இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் சாதாரண தமிழ் மக்களின் நிலை சிறீலங்காவில் எவ்வளவு ஆபத்தானது என்பது.... குறித்தும் இங்கிலாந்தும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்..???! சிறீலங்காவில் தொடரும் ஜனநாயக விரோதப் போக்கை.. அகற்றி.. அங்கு தமிழ் மக்கள் கூடிய அரசியல் சமூக சுதந்திரம் பெற்ற பிரஜைகளாக ஜனநாயக உரிமையோடு வாழ தமிழீழத்தை சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..…
-
- 8 replies
- 1.8k views
-
-
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை லண்டனில் பேச அனுமதிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உலகத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கின்றார். மத்திய லண்டன் Bank நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மன்சன் அரங்கத்தில் நாளை காலை 9:00 மணியளவில் மகிந்த உரையாற்ற இருக்கின்றார். எனவே தமிழ் மக்களை அந்த இடத்தில் காலை 8:00 மணிக்கு அணிதிரள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த முறை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் மகிந்த பேச இருந்ததை, தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தியபோது, உலகத் தமிழினம் மகிழ்ச்சி அடைந்ததைச் சுட்டிக்காட்டிய சீமான், இம்முறையும் போர்க்குற்ற நபரின் ப…
-
- 0 replies
- 781 views
-
-
சிங்கள அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக போர்க் கொடி ஏந்துபவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கைத்தீவில் உள்ள ஈழத் தமிழர்களும் தங்கள் உரிமைக் குரலை உயர்த்த தொடங்கிவிட்டனர் என்பதுதான் என இந்தியாவின் வீக்கென்ட லீடர் ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த யூன் 1ம் நாள் வெளிவந்த குறித்த ஆக்கத்தின் தமிழாக்கம் : முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்றாண்டுக்குப் பிறகு, தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் அரசு ஒடுக்குமுறையை மீறி, தமிழீழத் தாயகம் தொடர்ந்து இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், ஈழத்தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஞாயிறு( 27-05- 2012), பல்லாயிரக் கணக்கானோர்…
-
- 0 replies
- 736 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் சென்று அங்கு அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர் உட்பட்டவர்களே, படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை வரவழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நீண்ட கால நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிந்து வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அகதி அந்தஸ்து பெற்ற ஒருவரை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த நேற்று திங்கட்கிழமை 85 பேரைக்கொண்ட படகு அகதிகள் அவுஸ்திரேலிய செல்வதை கரையோர கண்காணிப்பு …
-
- 0 replies
- 684 views
-
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேர் பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் அனுமதியுடனேயே இவர்கள் 16 பேரும் பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பூசாவுக்கு அனுப்பக் கூடாது எனவும் அவ்வாறு இடமாற்றுவதனை நிறுத்துமாறும் மனித அமைப்புகள், அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கேட்டிருந்த நிலையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8…
-
- 0 replies
- 534 views
-
-
அன்பான பிரித்தானிய, ஐரோப்பிய வாழ் தமிழீழ உறவுகளே! இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுடைய அரசியல் போராட்ட நகர்வை எமது ஒட்டுமொத்த மக்கள் சக்தியின் மூலமே முன்னகர்த்தி வெற்றிகொள்ள முடியும். ஈழத்தமிழர்களுடைய போராட்ட இயங்குசக்தியாக இன்று புலம்பெயர் மக்களே உள்ளனர். முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் எமது தேசியத் தலைவர் அவர்கள் அந்தப் பொறுப்பை எமது புலம்பெயர் மக்களிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார். புலம்பெயர் மக்களாகிய நாம் அனைவரும் இன்றைய காலத்தின் வரலாற்றுக் கட்டாயத்தை உணர்ந்து, எங்கள் நிலைப்பாட்டை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு, ‘நாம் ஓய்ந்துவிடவில்லை! எமக்கு வேண்டும் தமிழீழம்! எங்கள் போராட்டத்தை நசுக்கிய உலகமே, எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தா!’ என்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினரை வரவேற்க பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. நேற்று லண்டனைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அங்குள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டுமே வரவேற்பு அளித்தனர். பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட வரவேற்பில் பங்கேற்கவில்லை. சிறிலங்கா தூதரக ஏற்பாட்டில் இரு சிறுவர்கள் மகிந்த ராஜபக்ஷவையும் சிராந்தி ராஜபக்சவையும் மாலை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. எனினும் அது பொய்ப் பிரச்சாரம் என தற்போது …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவது தொடர்பாக பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத போதிலும், வேறு இரண்டு விடயங்களில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான முன்னணிச் சக்தியாக தமிழரசுக் கட்சி இருக்க வேண்டும் என்ற தமிழரசுக்கட்சியின் கடும் போக்கின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதறக்கூடிய சூழ்நிலை தொடர்வதையும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. வெவ்வேறு கட்சிகளின் கூட்டடாக இருப்பது மட்டும் கூட்டமைப்பில் உருவாகியிருக…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாளை 06-06-12இல் சென்னை பிரித்தானிய தூதரகத்தின் முன் காலை 10.30 மணியளவில் ராசபக்சேவின் பிரித்தானிய வருகையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் புரிந்த காரணத்தினால் கைது செய்யக் கோரியும், காமன்வெல்த் குழுவிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும் அனைத்து கட்சி, இயக்கம் சார்பாக திரளுவோம். பிரித்தானிய அரசுக்கு தமிழர்க்ளின்... கோரிக்கையை நினைவு படுத்துவோம்.... புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எல்லைகள் கடந்து நாம் ஒன்றாய் நிற்போம். ... குறுகிய நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தச் செய்தியை தங்களது தோழர்களிடத்தில் குறுஞ்செய்தியாகவோ, மின்னஞ்சலாகவோ, முக நூல் பகிர்வோ செய்து அனைவரும் ஒன்று திரள உதவுங்கள். நாளை பெரும் திரளாய் தோழர்கள் ஒன்று திரள வேண்டுகிறோம்..... Th…
-
- 0 replies
- 641 views
-
-
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பிரிவின் மகளீர் அணி தலைவியாக செயற்பட்ட தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார். 2009 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தமிழினி கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுமார் இரண்டு வருடங்கள் கழிந்துள்ள போதிலும், அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து இதுவரை சட்ட அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் அணுசரனையில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள தமிழ் பெண்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டி…
-
- 0 replies
- 467 views
-
-
இன்று 05-06-2012 நியூசிலாந்தின் வியாபார நகரமான ஆக்லாந்தின் மத்திய நகரங்களில் ஒன்றான பல்மோரல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.கடும் குளிர் மட்டுமல்லாமல், மழையுடன் கூடிய பலத்த காற்றும் வீசிய போதும் நியூசிலாந்து தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது, பிரித்தானியாவிற்கு வருகை தரும் இனஅழிப்பு இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவை விட்டு விரட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டி நின்றது. மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் இந்நிகழ்வில் பங்குபற்றியது பிரித்தானியாவில் போராட்டத்தை முன்னெடுக்கும் எம் உறவுகளுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை அனைவரினது நெஞ்சங்களிலும் நிறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அது மட்டுமல்லாது நியூசிலாந்தின் தலைந…
-
- 0 replies
- 480 views
-
-
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம். யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 ஃ 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு- முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்த…
-
- 0 replies
- 447 views
-
-
லண்டனில் புதன் கிழமை நடக்கும் நிகழ்வில் மகிந்த உரைநிகழ்துவதை தடுக்க திரளாக திரண்டு எதிர்க்க அனைத்து புலம் பெயர் தமிழர்களும் அணி திரளுமாறும் அழைப்பு!லண்டனில் மகிந்த தங்கியுள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டு வருவதால் தமிழ் மக்களை அணி அணியாக திரளுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை திரளாக அணிதிரள வேண்டப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட…
-
- 0 replies
- 521 views
-
-
விடுதலைப்புலிகளது முடங்கியுள்ள சொத்துக்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு மீண்டும் முனைப்பு காட்டியுள்ளது. அவ்வகையில் கடற்புலிகளது உடைமைகளை மறைத்து வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி மீனவ சமாச தலைவரான இருதயதாஸ் மற்றும் முன்னாள் தலைவரும் தற்போதைய சமாச சம்மேளன தலைவரும் ஈபிடிபி முக்கியஸ்தருமான எமிலியாம்பிள்ளை ஆகியோரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் எமிலியாம்பிள்ளை தற்போதே சமாச தலைவர் பதவியை பெற்றுள்ளார். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சமாச தலைராக இருந்த தவரட்ணம் முறையற்ற வகையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் எமிலியாம்பிள்ளை அ…
-
- 0 replies
- 592 views
-
-
சிறிலங்காவுக்கு சவாலாக அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் ! http://naathamnews.com/?p=6412 சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சவால் நிறைந்த பயணமாக பிரித்தானியாவுக்கான வருகை அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். யூன் 6ம் நாள் புதன்கிழமை பொதுநலவாய பொருளாதார மாநாட்டில் சிறப்புரையொன்றினை மகிந்த ராஜபக்ச ஆற்றவுள்ளதாக Commonwealth Economic Forum அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளர்களுக்கான Commonwealth Economic Forum விபரத்தில் சிறிலங்கா அரசுத் தலைவரின் பெயரும் குறித்த நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டுள்ளதோடு 10மணிக்கு அவருடைய சிறப்பு பேச்சொன்றும் இடம்பெறுமென குறிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 541 views
-
-
பிரித்தானியாவில் 6ம் திகதி கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும் இடங்கள். Brighton Tel: 079 5880 9526 Crawley Tel: 074 0317 9162 Church Hall 346 Foleshill Road Coventry CV6 5AJ Tel: 077 0234 5932 Tel: 075 844229132 Tamil welfare association 308 Melton Road Leicester Le4 7sl Tel: 079 3052 2179 Brownsea Center Colden Street Kirkby in Ashfield Nottingham NG17 7DN Tel:077 8889 0197 Tel: 079 8345 4531 Peterborough Tel: 079 8423 5206 Tamil School Brinsworth Lane Rotherham S60 5BU Brighton Tel: 079 5880 9526 Bristol Tel: 079 8887 7604 Crawley Tel: 074 0317 9162 Coventry Te…
-
- 1 reply
- 795 views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில்,நேற்று (04-06-2012) அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு அஞ்சிய மகிந்த, பலத்த பாதுகாப்பின் மத்தியில் விடுதியில் இருந்து வெளியேறிச் சென்ற காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4681:2012-06-05-02-50-00&catid=1:latest-news&Itemid=18
-
- 3 replies
- 1.6k views
-
-
http://youtu.be/GLP_2eLr8JE தமிழர்களின் பிரதேசங்களில் பரவலான இராணுவ கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அந்தப்பின்னணியில் சிங்களக்குடியேற்றங்களைச் செய்து வருகின்றமையானது, தமிழ் மக்கள் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக, கிளந்தெழமாட்டார்கள் என்ற நோக்கில் என , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை ஒலிப்பரப்பான நாதம் வானோசையில் இடம்பெற்ற, சிறிலங்காவின் தமிழர் நில ஆக்கிரமிப்பும் – அபகரிப்பும் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்…
-
- 0 replies
- 554 views
-
-
சிரியாவில் ஒரே ஆட்சியின் கீழ் அமர்த்தப்பட்டவர்களுக்கு இடையிலும் எதிர்தரப்பினருக்கிடையிலும் நடந்த போர், 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை போரைக் காட்டிலும் குறைந்த அளவிலான இழப்பு விகிதத்தைக் கொண்ட ஒன்று. ஆனாலும், சிரியா நாட்டிற்கு எல்லா சக்திகளிடத்தும் மற்றும் ஐ.நா-விலிருந்தும் பெருமளவில் கவனத்தை கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்து கொன்று குவித்த ஈழத்தமிழர்களின் கதை, கண்ணீர் எங்கும் கேட்கப்படவில்லை ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. ‘இனப்படுகொலை ஆட்சியாளர்’ ராஜபக்சேவும் அவரது ஆட்சி அமைப்பும் உலக அமைப்புகளால் இன்னமும் பல சலுகைகளோடு சீராக சுமூகமாகவே இயங்கி வருகிறது. பிரிட்டன் அரசியாரின் வைர விழா கொண்டாட்ட அழைப்பு முதல் தாய்லாந்து புத்தர் கொண்டாட்டம் வ…
-
- 0 replies
- 554 views
-
-
லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்…
-
- 5 replies
- 1.8k views
-