Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாணவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்யக்கோரியும் மேற்கொண்டுவந்து கற்றல் செயற்பாடுகளை பகிஸ்கரிப்பினை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுடைய கற்றல் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு ஆர்வலர்களது வேண்டுகோளின் பிரகாரமும் பகிஸ்கரிப்பினை கைவிட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றிரவு அறிவித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இன்று இரவு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடகக் குறிப்பிலேயே இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் பயத்தின் காரணமாக தமது குரல்களை அடக்கி கொண்டு விட்டதாக இவ்விடயத்தினைக் கருதிக் கொள்ளக் கூடாது என்றும், தொட…

  2. போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது. ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயி http://www.seithy.co...&language=tamil

  3. யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களினில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதேயிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கணடுபிடிக்கப்பட்டுள்ளான். மதம் மாற்றப்பட்டு இச்சிறுவன் வளர்க்கப்பட்டு வருகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். முதலில் தன்னை கடத்திவந்த சிலர் குறித்த வீட்டாரிடம் கையளித்ததாகவும் அங்கு தான் வேலையாளாக இருந்ததாகவும் பின்னரே தன்னை மதம் மாற்றி பெயர் மாற்றத்தையும் அவர்கள் செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான். அத்துடன் குறித்த சிறுவன் மத ரீதியான கிரியைகளுக்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் த…

  4. பிரித்தானிய மகாராணியின் வைரவிழா கொண்டாட்டங்களுக்கு போர்குற்றவாளியும் இலங்கை ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ வருவதனை தடுத்து நிறுத்தும் மற்றொரு முயற்சியினை பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபடியாக, பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்கள் வதியும் தொகுதிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம், மஹிந்த ராஜபக்ஷவினை வரவிடாமல் தடுக்க ஆவன செய்ய வலியுறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இதனை இலகுபடுத்தும் நோக்கில், கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கு வசதியான இரண்டு மாதிரி கடிதங்கள் கீழ்வரும் இணைப்புக்களில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வசதியான ஒரு முறையின் மூலம் தமது தொகுதிக்கு…

  5. பிரத்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு வரும் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், பிரித்தானிய பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில், கடந்த 23-05-2012 புதன்கிழமை, பிரித்தானிய பாராளுமன்ற வளாக Committee Room 9 கூடத்தில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக, பிரித்தானிய செயலகம் மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எதிரொலித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வெரேந்திர சர்மா அவர்கள் இவ்விவகாரத்தினை, இதர பாரளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். http://www.parliamen...e…

  6. வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு; படைமுகாம்கள் அகற்றப்படுவது கட்டாயம் உதயனுக்குப் பொன்சேகா பரபரப்புப் பேட்டி வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். "உதயனு"க்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றின்போது இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு: சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் …

    • 3 replies
    • 1.3k views
  7. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இவ்வாண்டு இறுதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கான அனுமதியை, ஐ.நா பொதுச் சபையிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியிருந்தார். இதனையடுத்து நேற்றையதினம் ஐ.நா பொதுச்சபையில், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நவநீதம்பிள்ளை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் இன வம்சாவழியைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் குழுவில் முக்கிய உறுப்பின…

  8. அரசியல் தீர்வுக்கான செயன்முறை எனும் அரசின் காலம் தாழ்த்தும், மற்றும் சர்வதேசத்திடம் நேரத்தை கடத்தும் முயற்சியில் தாம் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ஆக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் தர்சானந் 18-05-2012அன்று காலை 8.15 மணியளவில் யாழ்ப்பாணம் கலட்டி சந்திக்கருமாமையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரும்பு கம்பிகளால் கொடுரமாக தாக்கப்பட்டார். கடந்த ஒக்டோபர் 2011 இல் அப்போதைய மாணவர் ஒன்றியத்தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்…

  9. சிங்கள பேரினவாதியும் இனப்படுகொலைவாதியுமான ராஜபக்ச, பிரித்தானிய அரசியின் 60வது வருட நிறைவு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட சிவந்தனும், பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனும் பிரித்தானிய தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்து இணைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் மொழி, தமிழ் மொழி, உலகிற்கு நாகரீகம் கற்றுக்கொடுத்தது தமிழினம் இன்று க…

  10. சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே சரத் பொன்சேகாவை மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ததாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தம் மற்றும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால அடிப்படையிலான மீளாய்வு ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாக அடையாளப்படுத்தியதனைத் தொடர்ந்து இலங்கை மீதான மனித உரிமை மீறல் அழுத்தங்கள் வலுப்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு முழுயைமான பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என அவர் த…

  11. சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறுகாணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்;லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள…

  12. உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த அமெரிக்காவின் 2011ம் ஆண்டுக்கான அறிக்கை இன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் செயற்படும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான செயலகம், ஆண்டுதோறும் நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் அறிக்கைகளில், சிறிலங்கா குறித்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் ம…

  13. நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவனல்லன். ஆனால் போராளிகளை மதிக்கத் தவறியதில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவருமான உதயன் என்றழைக்கப்படும் பெரியதம்பி பரம்சோதியின் இறுதிச்சடங்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது அஞ்சலி உரையாற்றுகையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான வீ. ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ; …

  14. போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மரணங்கள் மற்றும் உரிமைமீறல்கள் குறித்து சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைக்கான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நேற்று மொஸ்கோவில் சந்தித்தபோதே ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளதாக,ரஸ்யாவின் RIA Novosti செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. “இறைமையுள்ள நாட்டின் அனுமதியில்லாமலும், ஐ.நா பாதுகாப்பு சபையை தவிர்த்தும், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைக்கு கட்டாயப்படுத்தும் முயற்சி மிகவும் தவறானது என்று நம்புகிறோம். போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்களை சிறிலங…

  15. அரசு தொடந்தும் மக்களை சித்திரவதை செய்கிறது - அம்னஸ்டி கண்டனம் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் நடப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது ஆண்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது ஆண்டறிக்கையில் அந்த அமைப்பு விபரமாக குறிப்பிட்டுள்ளது. அதில் இலங்கை குறித்து குறிப்பிடும் போதே இந்தக் கருத்துக்களை அது கூறியுள்ளது. மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த செயல்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கும் பல நிகழ்வுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடு…

    • 0 replies
    • 564 views
  16. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் இங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த தகவல்கள் அனைவவருக்கும் கண்ணீரை வரவளைப்பதாக அமைந்திருந்தது. முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு முரளீதரன் (43), முரளீதரன் கிருஷ்ணகுமாரி, முரளீதரன் சாருஜன் (7), அபிதா(5) ஆகியோர் முல்லைத்தீவு செல்வபுரத்தில் வைத்து 18.05.2009 அன்று இராணுவப் பேருந்தில் ஏற்றியதை நேரில் கண்ட சாட்சியான அவரது உறவினர் காணாமல் போனோரின் புகைப்படத்துடன் கண்ணீர்விட்டு அழுதது அனைவரது நெஞ்சையும் நெகிழ்வித்தது. காணாமல் போனோரின் இன்றைய வயது ம…

  17. ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்…

  18. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபம் இனந்தெரியாத நபர்களால் இன்று மாலை தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சத்தங்களையடுத்தே மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மட்டு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்றுமாலை 4.00 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறிப்பிட்ட மண்டபம் தீவைத்து எரிக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று பிற்கல் 4.00 மணியளவில் குறிப்பிட்ட மண்ட…

  19. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் முழுமையான விடுதலைக்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தனிநபர் யோசனைக்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இந்த யோசனையைக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் இதற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும் என அந்தக் கடசியின் தலைவர் இரா.சம்பந்தனும் கருத்துத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.seithy.co...&language=tamil

  20. ஆசியாவில் பிரசித்திபெற்ற ஜனாதிபதிகளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கோல்அப் எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பின் மூலம், சிறிலங்கா ஜனாதிபதிக்கு மூன்றாமிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. நாட்டு மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு சேவையாற்றிய ஜனாதிபதிகள் என்ற அடிப்படையிலே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக 91 வீதமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், 6 வீதமானவர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் திருப்தியற்றவர்களாகவும் மேலும் மூன்று வீதமானோர் தங்களது கருத்தினை வெளியிட விரும்பாதவர்களாகவும் பதிவாகியுள்ளனர். இதேவேளை, இந்த கருத்துக்கணி…

  21. மன்னார் தேவாலய சூழலில், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் ஒன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு செய்ய முன்நின்று செயற்பட்டனர் என காவற்துறையினர் கருதும் மன்னார் பிரதேசத்தில் உள்ள 5 கத்தோலிக்க மதகுருமாரை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இவர்கள் நாளைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் டெஸ்மன் குலாஸ், ஆயரின் உதவியாளர் விக்டர், வங்காலை ஜெயபாலன் குரூஸ், முருங்கன் அருள்ராஜ், மடு தேவாலயத்தின் நிர்வாகி எமலியானுஸ்பிள்ளை ஆகிய மதகுருமாருக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கூ…

  22. பரந்தன் சொத்துகளுக்காக கோத்தபாயவினால் கொல்லப்பட்ட கணடா வாழ் தமிழர் மகேந்திரராசா அண்மையில் தனது பரந்தன் சொத்துக்களைப் பார்வையிடச் சென்ற கணடா வாழ் தமிழரான மகேந்திரராசா என்பவர் பரந்தன் காஞ்சிபுரம் ஒழுங்கையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. அப்படுகொலையை நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ்நெட் நடந்த சம்பவத்தை விபரித்திருக்கிறது. பரந்தன் கண்டி யாழ்ப்பாணம் வீதியில் மகேந்திரராசாவுக்கு 8 ற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பலாத்காரமாக பாவிக்கப்பட்டு வரும் நிலையில் மீதமிருந்த கட்டிடங்களை கோத்தபாயவின் கட்டளைக்கமைய கார்கில் ஃபூட் சிட்டி நிறுவனத்துக்கு இராணுவம் வழங…

  23. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட்டதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசுக்களை கொளுத்திய சில இராணுவ முகாம்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்தி, அதற்கு பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் குறித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று (22) குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்படவிருந்ததை முன்னிட்டு, சில இராணுவ முகாம்களில் தொடர்ந்தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் கஜபா படைப்பிரிவின் நகர காவலரண், காங்கேசன்துறை, ரத்மலானை கலால் படையணி தலைமையகம், பேசாலை - காரைநகர் துறைமுக காவலரண், கல்லடி இராணுவ தலைமையகம், வவுனியா 22 வது படைப்பிரிவு, மாந்தோட்டம…

  24. வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதனைப் போன்று வடக்கு கிழக்கிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை வரையறுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய பல நாடுகளைப் போன்றே புலிகள் அமைப்பு பிரித்தானியாவிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாக காணப்படுகின்றது என அவர் ச…

  25. முள்ளிவாய்க்கால் நினைவுகள் எமது நெஞ்சங்களில் ஆராத துயராக வழிந்தோடிக் கொண்டிருக்கும் நிலையில், எம் உறவுகளின் உருதியைக் குடித்த அரக்கனான, சிறீலங்காவின் அதிபரும் போர்க்குற்றவாளியுமான மஹிந்த ராஜபக்ச இந்த மண்ணில் கால் வைக்கவிடாது விரட்டியடிக்க பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் (26-05-2012) சனிக்கிழமை லண்டன் Down Streetயில் நடைபெறவுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்கள் முடிசூடி அறுபதாண்டுகள் நிறைவையொட்டி நடைபெறவுள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.