ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
இலத்தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை நெஞ்சகத்தில் நிறுத்தி தொடந்து போராடவேண்டும் என பெரியார் திராவிட கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டுள்ளார், 19 மே 2012 (சனிக்கிழமை) லண்டனில் நடக்கவிருக்கும் முள்ளிவாய்க்கள் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுக்காக அவர் கொடுத்த ஒலிவடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. http://youtu.be/ROP24MCvsI0 http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 571 views
-
-
ஈழப்போராட்டம் தொடர்பாக ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.... : கலைஞர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்ந்ததும், பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் ஆகிய 5 நூல்களை எழுதி உள்ளார். இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமைதாங்கி, நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், ‘’தமிழர்கள் எங்கெல்லாம் அவதிக்கு ஆளாகிறார்களோ, அங்கெல்லாம் நம்முடைய கரம் நீண்டு அதனை காப்பாற்ற முன்வரவேண்டும் என்ற சூளுரையை ஏற்கின்ற நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இன்று தமிழன் தலைக…
-
- 3 replies
- 3.3k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை பதவி விலக செய்து, அந்த இரண்டு நாடாளுமன்ற பிரதிநித்துவங்களை வடக்கை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருவருக்கு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வடபகுதி மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனவும் இதனால் வடபகுதி மக்களுக்கு நெருக்கமான தமிழ் அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு பொருத்தமான சில தமிழ் இளைஞர்களை தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிற்கு புதிய அரசியல…
-
- 3 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அண்மித்த பகுதியில் பறவைகள் சரணாலயத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் நாலு ஏக்கர் நிலத்தினை கரைதுறைபற்று பிரதேச செயலர் செ.தயானந்தாவின் துணையுடன் அபகரித்த அமைச்சர் றிசாட் பதியுதீனின் வேட்பாளர் சசிரேகன் என்பவர் மக்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவில் அத்துமீறிய சிங்கள் குடியேற்றத்திற்கு உதவி புரிதல், சட்டவிரோத மணல்அகழ்வு, மரக்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற பிரதேச செயலர் செ.தயானந்தா பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் நான்கு ஏக்கரை சசிரேகன் என்பவருக்கு வழங்கியிருக்கின்றார். ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மீனவ…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று அடிக்கடி கோருவதை அண்மையில் இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் விமர்சித்துள்ளர். தமது அண்மைய இலங்கை விஜயத்தின் போது தாம் சந்தித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பிரிவினையை கோரவில்லையென்றும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு பேற வேண்டும் என்பதே அவர்களது அவாவாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஸ்வராஜ், கடந்த மாதம் இலங்கைக்கு வந்த போதும் இந்த விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக அவர் பிரதான தமிழ் கட்சிக் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இவ்விடயத்தில் பாராட்டி இருந்தார். ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழரசுகட்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனாதிபதி மஹிந்தவைப் புகழ்ந்து தெய்வம் எனக் கூறியவருக்கு தர்ம அடி வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வது என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் போல் காடர் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய உதவித் தூதர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பொருளியர் ஆசிரியரும் தமிழ்த் தேசிய முன்னணிய…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும் ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது. இதன் முதற் கட்டமாக மக…
-
- 4 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: சிறிலங்காவில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' [‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka] என்ற நூல் தொடர்பாக, இது வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 'திவயின' என்ற சிங்கள நாளிதழின் ஊடகவியலாளரான சி.ஏ..சந்திரபிறேம எழுதியுள்ள 'கோத்தாவின் போர்‘ என்ற இந்த நூல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..ஏ. சுமந்திரன், சிறி…
-
- 1 reply
- 1.6k views
-
-
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனும் ஒஸ்லோவில் நாளை ஒன்றிணைந்து சிறிலங்கா மீது புதிய தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், வெளிநாடுகளில் பல்வேறு அரசியல்கட்சிகளில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களும் சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீளத் தொடங்குவதைக் குழப்பும் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கொழும்பு ஊடகத்திடம் கூறியுள்ளன. அவர்களின் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியே ஒஸ்லோ கூட்டம் என்றும் அந்த வட்டாரங்கள் க…
-
- 1 reply
- 983 views
-
-
சிறிலங்காவின் ஆயுதப்படைகளுக்குள் அதிகரித்து வரும் தற்கொலைகள் மற்றும் கொலைகள் காரணமாக, முப்படையினர் மற்றும் காவல்துறையினரை உளவியல் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. 2006ம் ஆண்டில் இருந்து சிறிலங்காப் படைகளுக்குள் தற்கொலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 2006இல் சிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த 52 பேரும், 6 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர். 2007ம் ஆண்டில், 11 காவல்துறை அதிகாரிகள் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த 52 பேரும் தற்கொலை செய்தனர். 2008இல் 14 காவல்துறை அதிகாரிகளும், முப்படைகளையும் சேர்ந்த 64 படையினரும் தற்கொலை செய்து கொண்டு…
-
- 1 reply
- 854 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி தருமாறு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பொதுச்சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்ற இணங்கியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனின் பணியகம் நேற்று அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க நீதியாளரான நவநீதம்பிள்ளை, 2008ம் ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்றிருந்தார். இவர் இந்தப் பதவியை ஏற்க முன்னர், நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வின் நீதியாளராக பணியாற்றியிருந்தார். …
-
- 0 replies
- 931 views
-
-
போக்குவரத்து நோக்கத்திற்காக 14 ஹெலிகொப்டர்கள் ரஸ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 30 பேர் பயணம் செய்யக் கூடிய புதிய எம்.ஐ 17 ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்கள் பதினான்கு இவ்வாறு கொள்வனவு செய்பய்பட உள்ளது. ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்வதற்காக ரஸ்ய அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.இந்த ஹெலிகொப்டர்களுக்கான பராமரிப்பு செலவுகளையும் ரஸ்யா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர்களை ரஸ்ய நிறுவனமொன்று இலங்கைக்கு விற்பனை செய்ய இணங்கியுள்ளது. முதல் தடவையாக ஒரே நேரத்தில் பதினான்கு ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது http://www.seithy.c…
-
- 0 replies
- 640 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தீவிரவாத இயக்கங்களுடன் புலிகள் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிலிப்பைன்ஸின் பிரதி வெளிவிவகார அமைச்சர் எர்லின்டா பெசிலியோ இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு …
-
- 0 replies
- 882 views
-
-
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்று இரவு யாழ் பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சிவரொட்டிகளை மேற்கொண்டனர் . வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது : "முள்ளிவாய்கால் முடிவல்ல","வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்","உரிமைக்காய் குரல் கொடுப்போம் நீதிக்காய் போராடுவோம் ", "உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை",தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதே…
-
- 0 replies
- 532 views
-
-
நீங்கள் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள்(Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர் நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன? சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம். 30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர…
-
- 3 replies
- 1.2k views
-
-
http://sivasinnapodi.wordpress.com/2012/05/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/ <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/6rN4z4aRe0E" frameborder="0" allowfullscreen></iframe>
-
- 2 replies
- 1.2k views
-
-
யுத்த வெற்றியின் மூன்றாவது வருட நிகழ்வுகளுக்கான ஒத்திகைகளை முன்னிட்டு, இன்று முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் காலி வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு தடை செய்யப்படவுள்ளது. காவல்துறைமா அதிபர் காரியாலயம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த மாதம் 19 ஆம் திகதி யுத்த வெற்றியை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்காரமாக காலை 6.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரையில் காலிவீதி சுற்று வட்டத்திலிருந்து பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதி சுற்று வட்டம் வரையிலான பாதை மூடப்படும். இதன்படி கோட்டை பகுதிக்கு வரும் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டம் வழியாகவோ, காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலோ வலப்பக்கம் திரும்பி பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 576 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை சீமெந்து ஆலை தமது பணிகளை ஆரம்பிக்கும் போது, வடக்கு கிழக்கு உட்பட்ட இடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு அது பாரியளவில் உதவும் என வலி கமகே குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலையில் ஒரு மணித்தியாலத்துக்கு 2600 சீமெந்து பொதிகளை உற்பத்தி செய்யமுடியும். இதன்படி வருடத்தில் 249. 600 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும் எனவும் இதன்மூலம் வருடம் ஒன்றுக்கு 90 மில்லியன் ரூபாய்களை வருமானமாக எதிர்ப்பார்ப்பதாகவும் விலி கமகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த சீமெந்து உற்பத்திக்கான முழ…
-
- 1 reply
- 872 views
-
-
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய அழிவுகளையும் மீளமுடியாத துயரங்களையும் விட்டுச் சென்றுள்ளது. மூன்று தசாப்தங்களாக நீடித்த போர், 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து – புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழ்மக்களை விடுவித்து- நாட்டில் அமைதியைக் கொண்டு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்து மூன்றாண்டுகள் ஓடி மறைந்து விட்டன. போரின் போதும், போர் முடிவுக்கு வந்த போதும் - நாட்டை சிங்கப்பூராக மாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அரசாங்கம் அள்ளி வீசியிருந்தது. இவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலை இப்போது எப்படியிருக்கிறது என்று ப…
-
- 0 replies
- 778 views
-
-
எல்.ரி.ரி.ஈ. தற்கொலை குண்டுதாரி எனக் கூறிக்கொண்டு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்திற்கு வந்து அடைக்கலம் கோரியவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொஷிங்டனுக்கு 2005 இல் அறிவித்தது என ஒரு விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் தெரிவிக்கின்றது. இவரை விசாரித்தபோது அமெரிக்க தூதுவரகத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை என அறிந்துகொள்ள முடிந்தது. இதைத் தொடர்ந்து இந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜே.லண்ஸ்ரெட் தனது செய்தியில் நவம்பர் 5.2005ஆம் திகதி கூறியுள்ளார். தமிழ் பேசவல்ல தூதுவராலய ஊழியரின் துணையுடன் இவரை விசாரித்ததாக அந்த கேபிள் கூறுகின்றது. இவரது பெயர் ஜீவரட்ணம், பிறந்த திகதி ஓகஸ்ட் 25.1983, பிறந்த இடம் காத்தான்குடி மட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கர்களின் விவகாரத்தில் நீதியை வழங்குதல், பரிந்துரையை முன்வைத்தல் அல்லது இது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தல் என எந்தவொன்றைச் செய்வதற்கும் இவர்களுக்கு தார்மீக ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது மிக முக்கியமானதாகும். இவ்வாறு சிங்கள ஊடகரான Malinda Seneviratne கொழும்பை தளமாகக் கொண்ட Colombo Telegraph என்னும் ஊடகத்தில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆகிய இருவரும் சிறிலங்கா சமாதான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளனர். கடந்த செவ்வாயன்று, அமெரிக்க இராஜா…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை வரும் 16ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளும், அதற்கு எவ்வாறு பதிலளிக்கவுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ‘புரொன்ட்லைன் கிளப்‘ தெரிவித்துள்ளது. ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக, சிறிலங்கா அரசாங்கம் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது. ஈழப்போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் நோக்கிலேயே, ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற ஆலோசனை நிறுவனத்தின் உதவியை சிறிலங்கா நாடியுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க காங்கிரசுடனும், ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட முகவரமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது. இந்த நிறுவனம் சிறிலங்கா விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை, விநோதா பஸ்நாயக்க என்ற சிறிலங்காவின் இளம் நிபுணத்துவ ஆலோசகரிடம் வழங்கியுள்ளது. இவ…
-
- 0 replies
- 820 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த வகையில் தற்போது ஆளும் கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் தனித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை எனவும் ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் ஏற்கனவே போதுமான பேச்சுக்களை நடத்திவிட்டன என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரு கட்சிகள் பேச்சு நடத்தவேண்டும் என்ற எண்ணக்கருவை தாண்டி அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தவேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பாதி…
-
- 0 replies
- 440 views
-