Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று! Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 10:44 AM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்…

  2. Published By: VISHNU 04 MAR, 2024 | 01:25 AM வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்த…

  3. யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர…

      • Haha
      • Sad
      • Thanks
      • Like
    • 24 replies
    • 2.4k views
  4. 'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை நிலைப்பாடுகளை ஏற்கோம் - காஸா மக்கள் தொடர்பான தீர்மானங்கள் எங்கே என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கேள்வி 03 MAR, 2024 | 04:11 PM (நா.தனுஜா) தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கும் இலங்கை, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதைவிடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்குத் துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து…

  5. பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில் முன்னேற்றம் அவசியம் : வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம் 03 MAR, 2024 | 03:55 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் அளிக்கப்பட்ட உத்தரவாதத்துக்கு இலங்கை நன்றி தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் விடயத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்திய …

  6. 03 MAR, 2024 | 02:48 PM இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து புறப்பட்ட படகுகள் இலங்கையின் கடல் எல்லையில் நின்று போராடினர். இதேவேளை கடற்றொழிலாளர்களின் போ…

  7. 2023 ஆம் ஆண்டில் கைதிகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியளித்ததன் மூலம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ததன் மூலம் 2023ஆம் ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகள் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதுடன், சிறைக் கைதிகள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதற்கு உதவுவதாகவும், சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார். …

  8. 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 03 ஆம் திகதிவரை நடத்தப்படும் மற்றும் மூன்றாம் கட்ட முதல் பள்ளி தவணை மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாவது பாடசாலை தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளித் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும்…

  9. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகை தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/294096

  10. “அன்னம்” சின்னத்தில் களம் இறங்க ரணில் திட்டம்? கட்சி சாா்பற்ற வேட்பாளராக போட்டி March 3, 2024 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கூட்டணியில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தற்போது நிமல் லான்சா குழு மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சிரேஷ்டர்கள் குழுவின் தலைமையிலான பல சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது. …

  11. இலங்கை - இந்திய பிரச்சினைகளை தீர்க்க மீண்டும் பேச்சு 03 MAR, 2024 | 10:42 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்ளை பயன்படுத்தியும், இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தும் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதனால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாத…

  12. இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழிவு : ஜனாதிபதி ரணிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைப்பு 02 MAR, 2024 | 11:46 PM ஆர்.ராம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் பல வருட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முன்மொழிவுகளை முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கும் குறித்த செயற்றிட்டத்தினை ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுப்பதன் ஊடாக சமாந்தரமான வளர்ச்சிகள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அவர் அனுப்பி வைத்துள்ள முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத…

  13. Courtesy: Nada. Jathu உலகம் முழுவதுமே மனிதனின் தன்னிச்சையான செயற்பாடுகளால் தனது இயற்கையை இழந்து சமநிலையைத் தக்க வைக்க முடியாத சூழலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது இன்றைய யதார்த்தமாகின்றது. இவற்றை தடுப்பது என்பது ஒரு முரண்நிலை விவாதமாகும் இவற்றை முகாமைத்துவம் செய்வது என்பது மட்டுமே சாத்தியமானதும், சாதகமானதும் எதிர்கால உலக இயக்கத்திற்கு சாதுரியமானதும் ஒரு செயற்பாடாகும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இந்த வள அழிப்புக்கள் அமேசனில் தொடங்கி புன்னாலைக்கட்டுவன் வரைக்கும் மாப்பியாக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் யாதெனில் மூன்றாம் உலக நாடுகளில் இவற்றை முகாமை செய்ய வேண்டிய அரசுக்கள் மற்றும் பொறுப்புடைய அரச நிறுவனங்களே இந்த இயற…

  14. பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது என பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார். தனது தளத்தின் உரையாடல் பகுதியொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும், 1. உரலார் கேள்வி :- தமிழரசுக் கட்சியின் பதவி தேர்வுகளை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தொடுத்தவர்கள் சுமந்திரனதும், சாணக்கியனதும் ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சுமந்திரனோ தான் கட்சிக்காக நீதிமன்றில் வழக்காடுவேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அங்கு என்ன நடக்கிறதென்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? உலக்கையார் பத…

    • 2 replies
    • 603 views
  15. சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் 02 MAR, 2024 | 06:58 PM சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாற…

  16. யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5இல் போராட்டம் - எம்.வி.சுப்பிரமணியம் 02 MAR, 2024 | 04:27 PM வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்று (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி…

  17. 02 MAR, 2024 | 05:56 PM (ஆர்.ராம்) தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு முதலில் விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகலுக்குப் பின்னர் வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் அவர் பங்கேற்கவுள்ளதோடு அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார். இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ய…

  18. வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த சதித்திட்டம்! வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டதில் நேற்றையதினம்(1) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

  19. 02 MAR, 2024 | 11:29 AM இலங்கையில் நீதி செத்துவிட்டது என போராட்டம் நடத்தியவர்கள் இன்று தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சனிக்கிழமை (02) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதே…

  20. Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 10:02 AM இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்தகாலத்தைய தற்போதைய மனித உரிமை மீறல்கள் பொருளாதார குற்றங்கள் தொடர்பி;ல் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல்நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் உலகளாவிய மற்றும் சர்வதேச நியாயதிக்க எல்லைக்க…

  21. 02 MAR, 2024 | 10:17 AM கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணியை கைவசப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப் பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரதேசத்துக்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். …

  22. ரஷ்ய பசிபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. “இன்று, பசிபிக் கடற்படையின் முதன்மையான, கார்ட்ஸ் ஆர்டர் ஆஃப் நக்கிமோவ் ஏவுகணை கப்பல் வர்யாக் இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது” என கடற்படையின் பத்திரிகை அலுவலகம் இன்று ரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 187 மீ நீளமுள்ள இந்த கப்பல் 529 பேர் கொண்ட ஏவுகணை கப்பலாகும். கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1 ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகி…

  23. 01 MAR, 2024 | 03:58 PM வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்புமுறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 10995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ம் மார்ச்மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அம…

  24. 01 MAR, 2024 | 03:32 PM இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும், வலய - உலகளாவிய பிரச்சினைகளின்போது ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என்றும் உறுதியளித்தார். திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) இடம்பெற்ற இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகார ஆணை அளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெர…

  25. 01 MAR, 2024 | 03:49 PM (மெல்றோய்) திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார். தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.