Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 01 MAR, 2024 | 03:49 PM (மெல்றோய்) திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார். தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். …

  2. 01 MAR, 2024 | 05:48 PM யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் பயணிப்பதற்கு தரித்து நிற்கும் பேருந்துகள். நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. …

  3. காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது! காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் உள்ளிட்ட 5 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரா…

  4. தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலத்தில் 4.73% ஆக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 5% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதனால் பொருளாதாரமும் வலுவடைந்திருக்கிறது. அதனை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. அதனூடாக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத…

  5. குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், இரண்டு வயதுக்கு முன்பே இனிப்பு உணவு மற்றும் பானங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பிறகு மட்டுமே இனிப்பு உணவு பரிந்துரைக்கப்படுகிறது, அதே நேரத்தில் முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ”இனிப்பான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது அதிக எடை அல்லது உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது” என அவர் வலியுறுத்தினார். “சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பா…

  6. கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 269 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/293838

  7. ஈழத் தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது இந்திய மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டவேண்டும் - யாழ். பல்கலைகழக மாணவர் அமைப்பு 01 MAR, 2024 | 12:56 PM ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் இலங்கை இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம்.என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புபிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் …

  8. 01 MAR, 2024 | 10:12 AM பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாணவர்களின் புத்தகப் …

  9. 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல! 29 FEB, 2024 | 03:18 PM நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள …

  10. சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல் February 29, 2024 நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம். நடைமுறைக்கு வந்த உடனடியாகவே தமது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது நிகழ்நிலை காப்புச் சட்டம்! இந்த சட்டத்தினால் வரப்போகும் ஆபத்துக்கள் என்ன? தாயகக் களம் நிகழ்வில் விளக்குகிறாா் அருட்தந்தை சக்திவேல். கேள்வி – இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் அவசரமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தமைக்குக் காரணம் என்ன? பதில் – அரசாங்கத்துக…

      • Thanks
    • 2 replies
    • 462 views
  11. எமது பூர்வீக காணி கபளீகரம் பொத்துவில் பிரதேச செயலகம் முற்றுகை. February 29, 2024 ( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற எமது பூர்வீக காணிகளை எமது உயிர் போனாலும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மூவினத்துக்கும் பொதுவான பிரதேச செயலாளர் நீதியாக நடக்க வேண்டும். இவ்வாறு பொத்துவில் பிரதேச செயலகம் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் சிங்கள மக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். இந்த முற்றுகையும் ஆர்ப்பாட்டமும் நேற்று முன்தினம் இடம் பெற்றது . அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்திபன், பொத்துவில் உப விகாரதிபதி உத்தலமட்ட ரத்னபிரிய தேர…

  12. தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்…

  13. யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ! 29 FEB, 2024 | 10:16 AM பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன. இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்…

  14. Published By: VISHNU 29 FEB, 2024 | 02:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து - பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது. மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்தார். கொழும்பில்; புதன்கிழமை (28) இடம்பெற்ற இந்துமா சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், இந்து - பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்…

  15. Published By: VISHNU 29 FEB, 2024 | 01:54 AM இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள சட்டத்திற்கு ஏதுவாகவே வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்திய மீனவர்கள் இரண்டு, மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அச்செயலானது எவ்வித அடாவடித்தனமான செயலாக தென்படவில்லை. எல்லைக்குள் அத்துமீறி வந்தமையாலேயே அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவை வந்துள்ளது,” யாழ்ப்ப…

  16. தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் - யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் Published By: VISHNU 29 FEB, 2024 | 01:49 AM தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (28) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண …

  17. Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 10:30 AM ஆராய்ச்சிக் கப்பல்களிற்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு இலங்கை ஒரு வருடகால தடையை விதித்துள்ளது. சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது. …

  18. உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/electricity-bill-today-in-sri-lanka-1709122250

      • Like
      • Thanks
      • Downvote
      • Haha
    • 32 replies
    • 3.1k views
  19. 28 FEB, 2024 | 05:32 PM (இராஜதுரை ஹஷான்) மத்தள விமான நிலையத்தை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் கூட்டு முயற்சியுடன் ஒழுங்குப்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என துறைமுகம், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டிணைந்து மத்தள விமான நிலையத்தின் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுகம், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி …

  20. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடும் சூழலுக்கு இடமளிக்காமல் பொது தனியார் கூட்டு முயற்சியாக பேண வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் வருடாந்த அறிக்கைகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அண்மையில் (20) கவனத்திற்க் கொள்ளப்பட்ட போதே குழுத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதால், திருத்தியமைக்க 1.2 மி…

  21. 28 FEB, 2024 | 08:41 PM யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்துக்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை பாதுகாப்பாகப்பேணல் மற்றும் காட்சி…

  22. 28 FEB, 2024 | 05:33 PM முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/177523

  23. Published By: VISHNU 28 FEB, 2024 | 05:42 PM தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார். அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ…

  24. இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும், அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அதிகாரம் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு ஒரு நிதிக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் பொருளாதாரமும் வலுவாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு கணிசமான அதிகாரம் உள்ளது. கடந்த காலத்தில் இலங்கையில்…

  25. சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை! சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.