Jump to content

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sandhan.jpg

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன்,  கல்லீரல் செயலிழப்புக் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார்.

சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371552

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சாந்தன்,  கல்லீரல் செயலிழப்புக் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

IMG-5918.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் கொன்றேவிட்டார்கள் 33வருடங்கள் காத்திருந்த தாய் என்ன செய்வார்.

கண்ணீர் அஞ்சலிகள் சாந்தண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரைக்கும் அவரது தாயைக் காணவிடாமலே கொன்று விட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ........அவரது தாயாரை யார் எப்படித் தேற்ற முடியும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சாந்தன்,  கல்லீரல் செயலிழப்புக் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

ஆழ்ந்த இரங்கல், மெதுவாகக் கொன்றுவிட்டார்கள். ராஜீவுக்காக ஒரு இனத்தையே அழித்த மாபாதக அரசு. இந்த அரசிடம் நீதியை எதிர்பார்ப்பது எவளவு மடமை என்பதை சாந்தன் தனது உயிரீகத்தூடாக மீண்டும் நிறுவியுள்ளார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் ....

Link to comment
Share on other sites

சாந்தன் அவர்களின் முடிவை தான் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசு செய்யும். கேடு கெட்ட அரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் உடலை இன்று இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

01 MAR, 2024 | 10:22 AM
image

சென்னை: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன், கடந்த 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ்: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்து வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

நீதிபதிகள்: சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி எப்போது கிடைத்தது?

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: அவரை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு சார்பில் பிப். 22-ம்தேதியே அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

நீதிபதிகள்: மத்திய அரசு முன்கூட்டியே அனுமதி அளித்தும், சாந்தனை இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பாதது ஏன்?

மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா: சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி 24-ம் தேதி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் நகரக்கூட முடியாத சூழலில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். (மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார். சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

மத்திய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டுசெல்ல தூதரக அனுமதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: உயிரிழந்த சாந்தன் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏதுவாக தூதரக அளவிலான சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான பொறுப்பு (‘நோடல்’) அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மார்ச் 4-ம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

சாந்தன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் அருகே உள்ள கிராமத்துக்கு செல்வதற்காக, அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை 9.45 மணிக்கு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டது.

பின்னர் எம்பார்மிங் செய்யப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணிக்கு சாந்தனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று விமானம் மூலம் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

https://www.virakesari.lk/article/177646

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் பூதவுடல் தாங்கிய விமானம் புறப்பட்டது: 11.30 மணியளவில் இலங்கையை வந்தடையும்

 

Oruvan

bandaranaike international airport 

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான சாந்தனின் பூதவுடல், தற்போது விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சட்டத்தரணி புகழேந்தி ஒருவன் செய்திக்கு தெரிவித்தார். 

சுமார் 11.30மணியளவில் இலங்கையை வந்தடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

https://oruvan.com/sri-lanka/2024/03/01/the-plane-carrying-shantans-lotus-leaves

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

காலமான சாந்தனின் பூதவுடல், தற்போது விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சட்டத்தரணி புகழேந்தி ஒருவன் செய்திக்கு தெரிவித்தார். 

IMG-5954.jpg

  • Sad 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் உடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

santhan.jpg

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் உடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் சென்னையில் வைத்து நேற்று முன்தினம் காலமானார்.

குறித்த கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும் அவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலை 7.50 அளவில் உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தோணிராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/293900

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் பூதவுடல் உறவினரிடம் கையளிப்பு - முடிவுக்கு வந்த இழுபறி

Oruvan

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த இழுபறி முடிவுக்கு வந்தது. 

உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டு பூதவுடல் சாந்தனின் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினர் தெரிவித்தனர். 

Oruvan

 

பூதவுடலை கையளிப்பதில் இழுபறி

சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்படலாம் என சகோதரர் மதுசுதா, ஒருவன் செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

உரிய ஆவணங்கள் தொடர்பாக கட்டுநாயக்கவில் குடிவரவு - குடியகழ்வு அதிகாரிகள் வினவுவதாகவும் இதனால் மேலும் பல மணிநேரம் தாமதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சாந்தனின் பூதவுடலுடன் வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி, உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஈடுபட்டுள்ளார். சாந்தனின் பெயர் தொடர்பிலேயே காலத்தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது.

சாந்தனின் பூதவுடல் சென்னை விமான நிலையத்தில்

இந்தியாவில் மரணமடைந்த சாந்தனின் பூதவுடல் சென்னை விமான நிலையம் ஊடாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Oruvan

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் தாயாருக்கு மருத்துவம் செய்ய மறுத்த இந்தியாவிடம் கருணையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். 

☹️

6 hours ago, Kavi arunasalam said:

IMG-5952.jpg

காந்தி ஜப்பானிய ஸ்ரைலில் உடையணிந்திருக்கிறார். என்ன விடயம்? 

ஜப்பானியர் தற்கொலை செய்துகொள்வதற்கும் இப்படி உடையணிவார்கள் 😀

இந்திய காந்தியவாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சாந்தனின் உடல்

Oruvan

முன்னாள் போராளி சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை (03) இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதம்

சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் ஒருவன் செய்தி சேவைக்குத் தெரிவித்தனர்.
 

https://oruvan.com/sri-lanka/2024/03/01/the-plane-carrying-shantans-lotus-leaves

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

காந்தி ஜப்பானிய ஸ்ரைலில் உடையணிந்திருக்கிறார். என்ன விடயம்? 

காந்தி யப்பானுக்கு போயிருந்த போது எடுத்த படம். எதற்கு குளப்பம்? புதிதாக ஒன்றை இணைத்து விடுகிறேன்

IMG-5953.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

காந்தி யப்பானுக்கு போயிருந்த போது எடுத்த படம். எதற்கு குளப்பம்? புதிதாக ஒன்றை இணைத்து விடுகிறேன்

காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அத்தோடு அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அத்தோடு அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.

நானும் படித்திருந்தேன். இவர் மட்டுமல்ல நேருவும் பயங்கரக் கில்லாடி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அத்தோடு அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.

 

காந்தி ஒரு சோதனைக் கூடம்  🤣

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அத்தோடு அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.

 

நான் என் 16 ஆவது வயதில் இதைப் படித்தேன். 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த திரு சாந்தன் அவர்களுக்கு ஈழத் தமிழரால் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குச் சொல்லும்/சொல்லப்போகும் செய்தி என்ன? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை மக்கள் இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதும், ரஜீவ் தனது பாவங்களுக்கான தண்டனையினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் தான் அந்தச் செய்தி.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jh-699x375.jpg

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சாந்தனின் உடல் : மீண்டும் பிரேத பரிசோதனை.

சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக நேற்றைய தினம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1371867

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

santhan-new-654x375.jpg

யாழ்ப்பாணத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, அன்னாரின் பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள்; மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடுப்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டு நாளை காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371864

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.