Jump to content

ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்களை கோரும் யாழ் மாவட்ட செயலகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 FEB, 2024 | 08:41 PM
image

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்துக்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை பாதுகாப்பாகப்பேணல் மற்றும் காட்சிப்படுத்தல் செயற்பாட்டை திறம்பட மேற்கொள்ள இதுவரை தங்களால் பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரியம் மிக்க பாவனைப்பொருட்கள், அணிகலன்கள், ஏட்டுச்சுவடிகள், புராதன நூல்கள் என்பவற்றை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கு இலவசமாக வழங்கி உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், பாரம்பரியப்பொருட்களை வழங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் ஆவணப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/177542

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.