ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே பேசவே இல்லை?.. பொய் சொல்கிறாரா சுஷ்மா?? இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே எதுவுமே பேசவில்லை என்றும், அதுகுறித்து இந்தியக் குழுவும் எதையும் கேட்கவில்லை என்றும் இலங்கையின் தி ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசு நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது குழப்பத்தை தருவதாக அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்…
-
- 5 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் கபொத சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சீனமொழியும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பில் கன்பூசியஸ் நிலையத்தில் இடம்பெற்ற சீனமொழி பயிற்சி நிறைவு நிகழ்வில் பேசிய போது, சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா - சீன நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சீனமொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பெளதிக வளங்களை வழங்க சீனா முன்வந்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20120425106067
-
- 6 replies
- 886 views
-
-
இந்தியாவின் அக்னி ஏவுகணையை விடவும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கைச் செலவு வானளவு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அக்னி ஏவுகணை சீனா உள்ளிட்ட பிராந்தியத்தின் அண்டை நாடுகளுக்கு ஆபத்து என பலர் கருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பாரியளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைவதற்கு மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வ…
-
- 3 replies
- 791 views
-
-
தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார். 'ஆனால் அவர் அங்கு வீடொன்றை அமைத்தார். சில வருடங்களின் பின்னர், சமய நடவடிக்கைகளுக்காக பிரிதொரு அறையை அமைத்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1982 ஆம் ஆண்டு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தவேளை, அவர் 300 ஏக்கர…
-
- 11 replies
- 1.2k views
-
-
இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. ஆனால் அது 2001ம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அது மட்டப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பாக அமைந்தது. ஏனெனில் நாட…
-
- 1 reply
- 1.4k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 300 பேர் கைது செய்யப்பட்டு படைத் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை (21.04.2012) தொடக்கம் திருகோணமலை மாவட்டத்தில் படையினரும் காவல்துறையினரும் கூட்டாகயிணைந்து சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் வீடு வீடாக் சென்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றியவர்களையும் கைது செய்வதாக தெரிவிக்கப்படுகிறது திருகோணமலை மாவட்டம் சேனபுரம், கிளிவெட்டி நலன்புரி நிலையம், பட்டிமேடு, கும்புறுப்பிட்டிய, தம்பலகாமம், அம்புவெளிபுரம், பாலையூற்று, நிலாவெளி, பன்குளம், ஈச்சலம்பற்று போன்ற கிர…
-
- 2 replies
- 737 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தம்புள்ளை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தம்புள்ளை பிரச்சினையை தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வராத நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் பெரும்பாலும் கேள்வி எழுப்பப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ளை பிரச்சினையை வைத்துக் கொண்டு சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுத்து வருவதாகவும் தங்களது அரசியல் இருப்புக்கு அதனை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் …
-
- 9 replies
- 903 views
-
-
நேற்றுக் காலை 11:00 மணிக்குக் கனடியத் தமிழர் பேரவையால் கனடியப் பாராளுமன்ற ஊடகவியலாளர் சந்திப்பு வளாகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பல தேசிய ஊடகங்கள் கலந்து கொண்டன. கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர் செல்வி வாணி செல்வராசா அறிக்கை ஒன்றை வாசித்தார். 'சிறி லங்காவில் தொடந்தும் தமிழர் மீது வன்முறைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்கள் இன்றும் இராணுவ அச்சுறுத்தலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடத்தல் மற்றும் காணாமற் போதல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.' போன்ற விடயங்கள் இவ்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அத்தோடு தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வைக் காலந்தாழ்த்தாது சிறி லங்கா முன்வைக்க கனடிய அரசு அழுத்தங் கொடுக்க வேண்டும் என இவ்வறிக்கையிற் சுட்ட…
-
- 0 replies
- 447 views
-
-
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் எதிலி கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று 10வது நாளாக நீடித்து வருகிறது.5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ஈழத்தமிழ் எதிலிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. கியூ பிரிவு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இந்த முகாம் இயங்கி வருகிறது. உரிய ஆவணம் இல்லாமல் தமிழகத்துக்குள் வந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என 32 பேர், இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக வழக்குகளில் இருந்து விடுவித்து திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் திகதி முதல் 14 பேர், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 2 replies
- 360 views
-
-
நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன். இந்தியாவுக்கான தனது மூன்று நாள்கள் பயணத்தை இன்று ஆரம்பிக்கும் பான் கீ மூன், அதற்கு முன்பாக நேற்று பி.ரி.ஐ. செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்தார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பான் கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…
-
- 4 replies
- 620 views
-
-
ஆதிவாசிகளின் விளையாட்டுப் போட்டிகள்... (எம்.எப்.எம்.தாஹிர்) ரதுகல ஆதிவாசிகளின் புதுவருட விளையாட்டு விழா முதன் முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை ரதுகல வன பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விசேட விருந்தினராக பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஆதிவாசிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு ஆதிவாசிகளின் சிறுமிகள் அழகுராணி போட்டியிலும் பங்கு கொண்டனர். அங்கு இடம்பெற்ற விளையாட்டு ஒன்றில் பிரதி கல்வி அமைச்சர் ரதுகல ஆதிவாசி தலைவர்கள் மரமேறும் போட்டியொன்றிலும் பங்குகொண்டமை விசேட அம்சமாகும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. படம் இணைத்துள்ளேன். htt…
-
- 6 replies
- 4.5k views
-
-
லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ சர்வதேச பௌத்த நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று 24ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லண்டனிலுள்ள தெரிவிக்கின்றனர் . இந்த பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதலில் எவருக்கும் உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை எனவும். நேற்று 24ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதலில் எவருக்கும் உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என அறியமுடிகிறது. http://thaaitamil.com/?p=16935
-
- 8 replies
- 980 views
-
-
மக்கள் தொடர்பு அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி அமைப்பாளருமான மேர்வின் சில்வாவின் ஏற்பாட்டில் களனி பிரேசத்தின் பழைய கண்டி வீதியில் அந்தக் கட்சியின் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. ஜிமல்கா, ஆன் ஆகியோருக்குச் சொந்தமான வீடே தற்போது ஶ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமாக உருமாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னணி ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் செயற்பட்டு வந்தனர். இவர்களது தந்தை 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய இளைஞர், யுவதிகள் பலரை களனி பிரதேசத்தில் கொலை செய்த சம்பவத்துடனும் தொடர்புபட்டிருந்தார். ''ஜிமல்கா மற்றும் ஆன்'' ஆகிய இருவரும் கடந்த காலத்தில் குறித்த வீட்டை விலைமாதர் விடுதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.…
-
- 5 replies
- 1.6k views
-
-
பசியுள்ள ஓநாய்களுக்கு பௌர்ணமி நிலவாக தமிழக அரசியல்வாதிகளுக்கு "தமிழ் ஈழம்''!- ஓநாய் இந்து நாளிதழ் பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்"ஈழம்'' இருக்கின்றது என்று இலங்கைக்கு ஆதரவான இந்து பத்திரிகை சாடியுள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி அர்த்தத்தையும் உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது. "பிரச்சினையின் ஓர் அங்கம்' என்று மகுடமிட்டு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப்பத்திரிகை திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் மேலும் …
-
- 3 replies
- 638 views
-
-
மனித உரிமைகளை பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்ததாக கருதக்கூடாது. இந்த விடயத்தில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி நிரல் இயக்கப்பட்டது. அதே நிகழ்ச்சிநிரலை மீண்டும் ஜெனிவாவில் கொண்டு நடத்த முயற்சிக்கலாம். மார்ச் மாதம் அல்லது ஜூன் மாதம் அல்லது ஒக்டோபர் மாதங்களில் இவ்வாறு முயற்சிக்கலாம் என்று சிறீலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எமது அனுமதியின்றி உள்நாட்டு செயற்பாட்டுக்கு மனித உரிமைப் பேரவை தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியாது. எனினும் விரைவில் அவர்கள் எமக்கு உதவி வழங்குவது குறித்து யோசனை முன்வைக்கும் சாத்தியம் உள்ளத…
-
- 2 replies
- 596 views
-
-
அமைச்சர் பீரிஸின் இரகசிய செயல்திட்டம் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார். நேற்று 22.04.2012 அன்று சண்டேரைம்ஸ் எழுதியிருந்த அரசியல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார். வெளியுறவு அமைச்சினால் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டின் போது இந்தத் தவறு இழைக்கப்பட்டது. அந…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருமலை ஆலய இடிப்பு சம்பந்தன் தலையீட்டால் தடுக்கப்படும் - துரைரட்ணசிங்கம் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் சட்டவிரோத கட்டட அமைப்புகளை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. குறித்த ஆலயத்தின் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்டோர் அவ்விடத்திற்குச் சென்று ஆராய்ந்துள்ளனர். வைத்தியசாலையில் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோயில் கட்டடத்தின் கூரை சற்று வைத…
-
- 1 reply
- 1.1k views
-
-
பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்படிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டார்களா?: சம்பந்தன் (சி.குருநாதன்) 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, இந்தியா மற்றும் நாடுகளுக்கு சென்றாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு எம்மிடம் தான் வரவேண்டும் என்று அரசாங்க அமைச்சர்கள் இப்போது கூறத்தொடங்கியுள்ளனர். அன்று தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1957 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் இருந்த இலங்கை அரசாங்கங்களுடன் செய்து கொண்ட பண்டா-செல்வா உடன்படிக்கை மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கை ஆகியவற்றுக்கு என்ன நடந்தன என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா? அவ் உடன்படிக்கைகளை கிழித்தெறிந்துவிட்டு தமிழ் மக்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது யார் என்பதை மற…
-
- 0 replies
- 751 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு, மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்சை தளமாகக் கொண்ட ஏசிஎவ் எனப்படும் பட்டினிக்கு எதிரான நிறுவனமும், ஸ்பீக் எனப்படும் மனிதஉரிமைகள் அமைப்பும் இணைந்து கையளிக்கவுள்ளன. 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 ஏசிஎவ் பணியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், இந்த வழக்கில் சிறிலங்கா அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதைக் சுட்டிக்காட்டும் வகையிலும், இந்த அறிக்கை அமையவுள்ளது. மூதூர் படுகொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், சிறிலங்கா அதிகாரிகள்…
-
- 2 replies
- 461 views
-
-
அம்பாறை – மஹா ஓயா பகுதியில் சிறீலங்கா பாதுகாப்பு படைவீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹா ஓயா காவல்துறை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படைவீரர் ஒருவரே தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அம்பாறை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 562 views
-
-
தனித் தமிழ்ஈழத்திற்கு குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கே.ரங்கராஜனுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவின் தலைவர் சுஸ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ரி.கே. ரங்கராஜன், இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப் போல சொல்லியிருக்கிறார். 1987ல் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் ப…
-
- 0 replies
- 649 views
-
-
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நடைபெறும் மே தினப் பேரணி, பொதுக் கூட்டம் ஆகியவற்றுக்கு ஆட்களை அழைத்துவருவதற்கு அந்தக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் தலா 20,000 ரூபா வீதம் வழங்க மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஒரு பேருந்திலாவது ஆட்களை அழைத்துவருவதற்கான ஏதுநிலை இல்லையென தொகுதி அமைப்பாளர்கள் கட்சி தலைமையகத்திற்கு அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தை அல்லது மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தாத தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா 20,000 ரூபாவை வழங்கும் பட்சத்தில் அதிக ஆட்களை கொண்டுவருவதற்கான ஏதுநிலை ஏற்படும் என கட்சியின் பொருளாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும யோசனை முன்வைத்துள்ளார். இந்த யோசனைக்கே மகிந்தர் இணக்கம் தெரிவித்துள்ளார். அ…
-
- 2 replies
- 379 views
-
-
சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண இதுதான் சரியான சந்தர்ப்பம். அதற்கு ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கான தனது மூன்று நாள்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து செயலாளரிடம் கேட்டபோது.. …
-
- 0 replies
- 461 views
-
-
ரவூப் ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளத் தயார் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை. http://www.globaltam…
-
- 14 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழம் அமைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: தனி ஈழம் தவிர இலங்கை தமிழ் மக்கள் வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் தீர்வு அல்லது அதிகார பரவல் போன்ற உறுதிமொழிகள் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை. அவை வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. கொடுத்த உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றவில்லை. அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக உள்ள பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தனி ஈழம் அமைப்பது தான். இதனை நிறைவேற்ற காலம் வந்து விட்டது. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் அமைக்க இந்தியா உதவியது போல் தனி ஈழம் அமைக்…
-
- 7 replies
- 1.1k views
-