ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
தமிழீழ தேசத்தின் அழிவிற்கு காரணமாக இருந்த ரஷ்சிய.. ஈரானிய.. மற்றும் பங்காளதேச படை அதிகாரிகளும் சீன அதிகாரிகளும் குடாநாட்டிற்கு திடீர் விஜயம் செய்துள்ளனர். ஏலவே இந்திய.. அமெரிக்க.. பிரித்தானிய படை அதிகாரிகளுக்கும் வன்னி மற்றும் குடாநாடு சுற்றிக்காட்டப்பட்டு வந்த நிலையில்.. தற்போது.. ஐநா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா சிக்கலை சந்தித்து நிற்கும் தருணத்தில் அதுவும் அமெரிக்கா - இஸ்ரேல் ஈரானோடு முரண்பட்டு நிற்கும் தருணத்தில்.. இந்த விஜயம் அமைந்துள்ளது. வன்னிப் போரின் போதும் வெளிநாட்டு படை அதிகாரிகள் ஆஜராகி சிறீலங்கா மனித இனப்படுகொலைப் படைகளுக்கு வழிகாட்டல்களும் போரியல் உக்திகளும் வகுத்துக் கொடுத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.tami…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று ஈபிடிபியும் அங்கஜனும் இரு வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். யாழ் கோவில் வீதியிலிருந்து அங்கஜனால் ஆரம்மிக்கப்பட்ட பேரணியும் யாழ் முனியப்பர் கோவிலிலிருந்து ஈபிடிபியால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியிம் வேம்படிச் சந்தியில் சந்தித்து யாழ் பஸ்நிலையத்தை சென்றடைந்தது. இதில் போர்க்குற்றவாளி சந்திரசிறியும் பங்குபற்றியிருந்தார். இதில் நூற்றிக்கும் குறைவான பொதுமக்களே பங்கு பற்றியிருந்தனர்.யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.saritham.com/?p=52047
-
- 1 reply
- 2.1k views
-
-
சவீந்திர சில்வா விவகாரம் மூடிய அறைக்குள் ஆசிய நாடுகள் குழு இரகசிய கலந்துரையாடல் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறித்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக அவரை ஜ.நா.அமைதி காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும் குழுவுக்கு தெரிவு செய்த ஆசிய நாடுகள் குழு நேற்று முன்தினம் இரகசியமாக கூடி ஆராய்ந்துள்ளது. ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவின் கூட்டத்தில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பங்கேற்பது பொருத்தமற்றது என்று தடை விதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து மூடப்பட்ட அறைக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நண்பகலுக்கு பின்னர் ஐ.நா.வின் 4வது இலக்க கலந்துரையாடல் மண்டபத்தில் இந்தச…
-
- 2 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அச்சுறுத்திய இராணுவத்தினர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு முல்லைத்தீவு நகரிலும், புதுக்குடியிருப்பிலும் இராணுவத்தினர் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்த போதிலும் புதுக்குடியிருப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. நேற்று முழுவதும் ஒலிபெருக்கி மூலம் சிறீலங்கா இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் சிறீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்படும் என இராணுவத்தினர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
கோத்தபாய - சிவ்சங்கர் மேனன் நேற்று அவசர பேச்சு!-இந்தியாவின் வகிபாகம் குறித்து உயர்மட்ட ஆலோசனை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பிலான இந்தியாவின் வகிபாகம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய சிரேஷ்ட ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் அவசர பேச்சுகளை நேற்று நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மாநாடு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்படி முக்கிய பேச்சு தொலைபேசியூடாக நடத்தப்பட்டது என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் அநீதியான போக்க…
-
- 2 replies
- 911 views
-
-
மேற்குலக நாடுகளின் சவால்களை இலங்கை எதிர்கொள்ள முடியாது! சதாம் ஹுசைன், கடாபி நிலை மஹிந்தவிற்கும் இடம்பெறலாம்!-ஜனாதிபதி சட்டத்தரணி குணசேகர ஜெனிவா மனித உரிமை பேரவையில் மேற்கு நாடுகளின் சவால்களை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது. அர்த்தம் உள்ளதும் நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதுமான உத்திகளை கையாளவேண்டுமே தவிர உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக ஜெனிவா அமைக்கப் போகும் விசாரணைக் குழுவை முட்டாளாக்க வேண்டும். அக் குழுவில் உள்நாட்டவர்கள் யாராவது சாட்சியளித்தால் அவர்களின் குடும்பங்களோடு ஒதுக்கி வைக்க வேண்டும். எவ்விதமான சிவில் உரிமைகளும் வழங்கக் கூடாது என்றும…
-
- 1 reply
- 838 views
-
-
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று நள்ளிரவு 6வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு வேளையில் ஆயுதங்களுடன் வந்த ஐந்து நபர்கள் வீடுகளில் இருந்த மக்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கொள்ளையர்கள் அனைவரும் தமிழில் பேசினர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதமுனையில் வீடுகளில் இருந்தவர்கள் பணயம் வைக்கப்பட்டே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதரவு பெற்ற குழுக்களே இக்கொள்ளைகளை நடத்தியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கிளிநொச்சி காவல்நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளனர். http://www.saritham.com/?p=52066
-
- 0 replies
- 659 views
-
-
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், தனக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையிலுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது என்ற முடிவைத் தலைமைப்பீடம் திடீரென மாற்றியமைத்ததற்கு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் தலைவர் சம்பந்தன் எமக்கு தெளிவுபடுத்துவார் என தாம் நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். இந்தியா சென்றுள்ள எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நாடு திரும்பியதும் இது தொடர்பில் அனைவரும் ஒன்றுகூடி பரிசீலித்துப் பார்த்தால் சிறந்ததாக அமையும் என்று தான் கருதுகின்றோம் என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டார். ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட…
-
- 0 replies
- 785 views
-
-
தசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-27 10:00:08| யாழ்ப்பாணம்] ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்க…
-
- 3 replies
- 914 views
-
-
இலங்கையில் ஆர்ப்பாட்டம்! அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை! இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதை முன்னிட்டு குறிப்பாக அமெரிக்காவை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதே இதற்கான காரணமாகும். இந்தநிலையில் நாளை நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. 47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனை…
-
- 12 replies
- 1.3k views
-
-
யாழ் பற்றி நல்ல ஆவண பதிவுகள் இந்த தொடுப்பில் இருக்கு http://iam.lk/region/jaffna/ மேலதிக தொடுப்புக்கள்.. http://vimeo.com/kannanarunasalam http://kannanarunasalam.com
-
- 1 reply
- 2.1k views
-
-
இலங்கையுடன் கசப்பாக மோதலுக்கு தயாராகும் அமெரிக்கா, பிரிட்டன் பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கொழும்பு கூறுகிறது. இலங்கையுடன் கசப்பான மோதலுக்கு பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு எதிராக சர்வதேச தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இந்நாடுகள் ஈடுபட்டுள்ளன என்று த இன்டி பென்டன் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பாளி என்பது குறித்து முழுமையாக விசாரணை செய்யுமாறு இலங்கைக்கு அழைப்புவி…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது இனத்தின் அழிப்பை சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து நியாயப்படுத்தும் நடவடிக்கையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் டக்ளஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு …
-
- 5 replies
- 1k views
-
-
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றவென சிறிலங்காவிலிருந்து டக்ளஸ் தேவானந்தா உட்பட பல போர்க் குற்றவாளிகள் சமுகமளிக்கவுள்ளனர். இவர்களை ஜெனீவா சட்டங்களிற்கு அமைவாக நாடுகடந்த அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மூலம் ஒட்டுமொத்தமாக கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமரான வி.உருத்திரகுமாரனைக் கோரியுள்ளது. அமைச்சர் டக்ளஸின் போர் குற்றங்களை அமெரிக்க தூதரகம் அறிந்திருந்தது. இதை விக்லி லீக்ஸ்(Wikileaks) வெளிப்படுத்தியிருந்தது தெரிந்ததே. இதுவே இவரின் குற்றத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. ஜேர்மன் நாட்டு பிரதி தூவரான முன்னாள் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்…
-
- 8 replies
- 956 views
-
-
அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நாளை கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடு; மக்களுக்கு அள்ளித் தருவதாக வாக்குறுதி பொருளாதார அமைச்சின் கீழ் உள்ள மீள் எழுச்சிக் குழுக்களை ஒன்றிணைத்து ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தைத் கண்டிக்கும் முகமாக நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரச தரப்பினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மின்சார வசதியில்லாத பகுதிகளுக்குச் சூரிய மின்கலம் வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்க…
-
- 6 replies
- 711 views
-
-
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2012 - 18:01 ஜிஎம்டி Facebook Twitter பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பா…
-
- 5 replies
- 1.1k views
-
-
நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரின் போது சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவெற்றப்படலாம் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசு கதிகலங்கி நிற்கிறது. இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடி சிறீலங்காவுக்கு அவர்களை ஆதரவு தரும் படி கோருவதற்காக மீண்டும் சிறீலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனிவாவிலிருந்து இன்று பயணமாகியுள்ளார். http://www.eeladhesa...lle-nachrichten
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மேரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்திருந்ததாகக் கூறினார்…
-
- 1 reply
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள உத்தேச பிரேரணையை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாவிலுள்ள செய்தியாளாகள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 47 நாடுகளைக் கொண்ட மேற்படி ஐ நா மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தாலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று, ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியா செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி முகாமில் உள்ள இடம்பெயர் மக்கள் மீதான தொடர் கெடுபிடி நடவடிக்கையில் முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி அபயக்கோன் ஈடுபட்டுவருவதாக மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.முகாம்மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அபகரிப்பது, அவர்களை கொச்சைப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற குறிப்பிட்ட அதிகாரி இன்று முகாம் மக்கள் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்தவர்களும் தலா நூற்றைம்பது ரூபா கட்டாயமாகச் செலுத்தவேண்டும் என்று இராணுவ அதிகாரியால் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே ஆறு தடவைகள் தாம் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஏழாவது தடவையாகவும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்…
-
- 5 replies
- 1.9k views
-
-
அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்,கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மிலிந்த மொரகொட தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாளை கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கஆதரவாளர்களும் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அமெரிக்காவின் திட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நாளைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலான விசேட மகஜர் ஒன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாசிடம் ஒப்படைக்கப்படஉள்ளது. …
-
- 5 replies
- 1.7k views
-
-
ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போயிருந்தால், அவர்களும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பதில் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும். விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பு, புலிகள் என்ன செய்தனர் என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்க வேண்டும். பொதுமக்களுக்க…
-
- 5 replies
- 752 views
-
-
இந்த இணையத்தை இன்று தான் பார்த்தேன் நன்றாக இருக்கிறது நீங்களும் போய்ப் பாருங்கள். மெய்நிகர் யாழ்ப்பாணம் - முப்பரிமான பார்வையில் பாடசாலைகள் மற்றும் கோவில்கள் Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கு வழி சமைக்கின்றது இந்த Jaffna 360. இது வடமராட்சி,தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவகம் எனும் பிரிவின் கீழ் கோவில்கள்,பாடசாலைகள்…
-
- 2 replies
- 1.1k views
-