ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143356 topics in this forum
-
ஞானதேசிகனுடன் இலங்கைத்தமிழ் எம்.பி., பேசியது என்ன? தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சமீபத்தில் இலங்கை மட்டக்களப்பு எம்.பி., சீனித்தம்பி யோகேஸ்வரன் சந்தித்துப் பேசியுள்ளார்.ஆயுதப் போராட்டங்களை விரும்பாதவர்கள், அகிம்சை வழியில் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் செயல்படும் தொடர்ச்சியைக் கொண்டவர் சீனித்தம்பி யோகேஸ்வரன். அவர் சமீபத்தில் ஞானதேசிகனை அவரது சொந்த வழக்கறிஞர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்."ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்தி தர, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கென ஒரு சுயாட்சி கொண்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
'மனிக்பாம் முகாம் உள்ளேயே மக்கள் இடமாற்றப்படுகின்றனர்'' இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, மீள்குடியேற்றத்துக்காக காத்திருக்கின்ற குடும்பங்களில் ஒரு பகுதியினரை அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாறி குடியிருக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மனிக்பாம் முகாம்- (படம் 8 ஜூன் 2009) மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்குள்ளேயே இடத்திற்கு இடம் தம்மை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, தங்களை விரைவில் தமது சொந்த இடமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். மனிக்பாம…
-
- 2 replies
- 545 views
-
-
ஆர்ப்பாட்டத்துக்காக யாழ். சென்றவர்கள் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் தடுத்து நிறுத்தம் வடக்கில் கடத்தல், காணாமல் போகுதல் போன்ற சம்பவங்களுக்கு எதிராக யாழப்பாணத்தில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தெற்கிலிருந்து சென்றவர்களை வவுனியா இரட்டைப் பெரியகுளத்தில் வைத்து சிறிலங்கா படையினர் தடுத்து நிறுத்தி சோதனைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த மாதம் கடத்தப்பட்ட மக்கள் போராட்டக்குழு உறுப்பினர்களான குகன் மற்றும் முருகானந்தன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ். நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் காணாமல் போனோரைத் தேடியறியும் குழு…
-
- 3 replies
- 738 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தி வரும் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும் வரை அவர்களுடன் பேச்சுக்களை நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசின் பேச்சுக் குழுவில் அங்கம் வகிககும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜி்ன் வாஸ் குணவர்த்தன கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடமே அவர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்று தொடக்கம் எதிர்வரும் 19ம் நாள் வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த பேச்சுக்கள் நடக்குமா இல்லையா எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர்! - யூ.என்.எச்.சி.ஆர் இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போரினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர் என கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயமே தடையாக உள்ளதாகவும், இதற்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சிறிலங்காவின் கைத்தொழில் முதலீட்டு அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அண்மையில் தெரிவித்திருந்தார்…
-
- 1 reply
- 595 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு பதிலளித்துள்ள கூட்டமைப்பின் 100 பக்க அறிக்கை இணைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 100 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியிலே மேற்கொள்ளப்பட்டு வந்த சரீரக, அமைப்பு சார்ந்த மற்றும் உளவியல் வன்முறைக…
-
- 1 reply
- 391 views
-
-
படை அதிகாரிகள் அனுமதி வழங்குபவர்களுக்கே இந்தியாவின் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படுமாம் - அவசர கூட்டத்தில் முடிவு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இந்திய வெளிவவகார அமைச்சர் எஸ.எம்.கிருஸ்ணா வடக்கிற்கும் விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசின் உதவி வீடமைப்பு தி;ட்டம் மற்றும் ஏனைய உதவி நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான அவசர கூட்டமொன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரங்களை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போயினர் குழுவினர். வடக்கில் இந்திய அரசினது ஜம்பதினாயிரம் வீடுகளினில் இதுவரை ஆயிரம் வீடுகள் கூட கட்டி முடிக்கப்பட்டு இருக்கவில்லை. …
-
- 6 replies
- 810 views
-
-
நாம் தமிழர்களின் உணர்வுகளை கணக்கில் எடுத்து எமது கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளோம். தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் இரு பகுதியினருக்கும் திருப்தி தரும் வகையில் தீர்க்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சத் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள், சிறிலங்காவுக்கான தனது பயணத்துக்கு முன்னர் புதுடெல்லியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார். சிறிலங்கா அரசானது, தமிழர்களுடன் நிலையான தீர்வை கண்டு கொள்ள வேண்டும்என்று தெரிவித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ் மக்களுக்கும், இலங்கையின் உள்ள தமிழ் மக்களுக்குமான உறவை முன்னேற்ற, இலங்கை இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வேகமாக தேவைப்ப…
-
- 5 replies
- 546 views
-
-
http://www.tamilmurasuaustralia.com/2012/01/australia-dreaming.html#moreமுடிந்தால் இந்த இணையத்தை பார்த்து ..யாழில் கருத்து எழுதுங்கோ...அந்த இணயத்தில் எழுதினால் உங்கள் கருத்துக்கள் தூக்கப்படும் என்பதை அறியத்த்ருகிறேன்
-
- 3 replies
- 1.2k views
-
-
புனித அல்குர்ஆன் பிரதிகளை பாதுகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்! பள்ளிவாயலின் கண்ணியத்தையும் பாழடித்தனர்! ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரையும் தாக்கினர்!! காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாசலில் இன்று காலையில் மீண்டும் மதத்தீவிரவாதிகள் உட்புகுந்து தமது வன்முறை ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் பள்ளிவாசலில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேற்றிவிடக் கூடாது என்பதற்காக புனித குர்ஆன் பிரதிகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு தாங்கள் குர்ஆன் ஓதுகிறோம் எனப் பாசாங்கு காட்டினர். இதனால் அப்பள்ளிவாசலில் இன்று காலை நடைபெற ஏற்பாடாகியிருந்த காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் சங்கைக்குரிய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அப்துர் றஸீத் PPS…
-
- 2 replies
- 806 views
-
-
பல்கலைக் கழகங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றால் என்ன செய்வது? அப்படி ஏற்பட்டால் அந்த மோதலை தவிர்ப்பதற்காக அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையை ஈடுபடுத் த நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார். யுத்தம் முடிந்துவிட்டது. அப்படியானால் ஏன் பல்கலைக்கழகத்தில் யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்? பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்யும் அரசாங்கம் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களை சுதந்திரமாக நடமாட இடமளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளினால் உய…
-
- 0 replies
- 621 views
-
-
கனடா நாட்டில் மார்க்கம் மாநகர சபையில் பொங்கல் விழாவில் ராதிகா எம்.பி. தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாள் முதன் முதலாக கனடா நாட்டில் மார்க்கம் மாநகர சபையில் இன்று உத்தியோக பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் மாத்திரமன்றி பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் மார்க்கம் மாநகர சபை மண்டபத்தில் மார்க்கம் நகர சபையின் முதலாவது தமிழ் அங்கத்தவரான திரு. லோகன் கணபதியின் பாரியார் இராஜேஸ்வரி, கனடா வின் முதலாவது தமிழ் எம்.பி.செல்வி ராதிகா சிற்சபைஈசன் மார்ககம் பாடசாலை அறங்காவலர் யுவனிதா நாதன் ஆகியோர் பொங்கல் பொங்கினார்கள். தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் புது வருடத் தினத்தையும் தமிழர்களின் பாரம்பரிய தினமாக மார்க்கம் மாநகர சபையினால் பிரகடனப் படுத்த திரு.லோகன் கணபதி கடந்த …
-
- 6 replies
- 1.2k views
-
-
மன்னார் தீவு பகுதிக்குள் தேவையான மண்ணை வேறு இடங்களில் மக்கள் கொண்டு வரும் நிலையில்... மன்னர் மாந்தை மேற்கு காட்டுப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கைக்கு மணல்அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் கடத்தப்படுவதாக அறியமுடிகின்றது. மீள் குடியேற்ற்பட்ட மக்கள் வாழ்கின்ற சன்னார், ஈச்சலவக்கை, பெரிய மடு ஆகிய கிராமங்களைச் அண்டிய பகுதிகளிலேயே இக்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த காட்டுப்பகுதி முழுவதும் சிறிலங்கா படையினர் உள்ள நிலையில் இக்கடத்தகளின் பின்னர் படையினரின் ஒத்துழைப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதேவேளை மன்னார் தீவு பகுதிக்குள் தேவையான மண்ணை வேறு இடங்களில் மக்கள் கொண்டு வரும் நிலையில்…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் மக்களை வெறுப்படையச் செய்யும் காணி சுவீகரிப்பு விவகாரம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-16 09:54:05| யாழ்ப்பாணம்] இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதற்கப் பால், நாளாந்தம் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்து நினைக்கும் போது பேரினவாதம் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. தமிழ் மக்களின் உரிமை என்பது வேறு ஒரு கோணத்தில் சிந்திக்கப்படுகின்றது. ஆனால், இங்கோ படையினருக்கான காணி சுவீகரிப்பு என்பது தமிழ் மக்களின் இருப்பிற்கே உலை வைப்பதாக அமைகின்றது. தனியார் காணிகள், வீடுகளில் படை முகாம்களை வைத்திருப்பதால் அதற்குரித்தான மக்கள் இருக்க இடமின்றியும் பொருளாதாரப் பாதிப்பையும் ஏக நேரத்தில் அனுபவிக்கின்றனர். படையினர் என்ற கோதாவி…
-
- 0 replies
- 502 views
-
-
இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்? இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்? அவர் வந்து சென்ற பின்னராவது ஈழத்தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்படுமா? சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடம் கலாம் இங்குள்ள தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை எடுத்துரைப்பாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். வலி.மேற்கு அராலி மாவத்தை விளையாட்டுக் கழகத்தினரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட உழவர் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவற்றைத் தெரிவ…
-
- 3 replies
- 755 views
-
-
இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அலரிமாளிகையில் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார்: இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ள இந்தியாவினது வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா, நேற்றையதினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராணி ராஜபக்ஷ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்திருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை பிரதமர் தி.மு.ஜயரட்ன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக…
-
- 6 replies
- 907 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது முஸ்லிம்களுக்கான தீர்வு அவசியம் எனஇலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் மற்றும் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் பங்குபற்றினர். சகல இனங்களையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினைக்கான …
-
- 3 replies
- 550 views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக் காண நடவடிக்கையை துரிதபடுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவது இந்தியாவின் கடமையாகும் என இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளாகளிடம் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற…
-
- 2 replies
- 585 views
-
-
பேச்சுக்கள் சரியான திசையில் செல்ல இந்தியாவின் தலையீடு அவசியம்!: கிருஷ்ணாவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள் 'சிறிலங்கா அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் சென்றுவிட்ட போதிலும் அதில் ஒரு அங்குல முன்னேற்றம் கூட ஏற்படவில்லை" என கொழும்பு வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், "சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் மூலமாக எந்தவொரு தீர்வையும் எட்டுவதற்கான மனநிலையில் இல்லை" எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடயத்தில் இந்தியா தலையிட்டு முக்கிய பாத்திரம் ஒன்றை ஏற்று பேச்சுக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதுவிட்டால் இந்தப் பேச்ச…
-
- 3 replies
- 483 views
-
-
தமிழ் தொடங்கிய இடம் எது? ஒரிஜினலா தமிழ் எங்கே தொடங்கியிருக்கும்? தமிழ்ப்பகுதிகள்ளில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறது.. அப்படியானால் தமிழர் வரலாறு என்ன..? எங்கயோ குழம்புது... இது எல்லொருக்கும் தெரிந்த விடயம்தான்.. அதாவது யாருக்கும் என்ன நடந்து.. எப்படி நடந்தது எண்டு தெரியாது.. எல்லாம் அழிக்கப்பட்டு விட்டது. குத்துமதிப்பு தகவல்கள் எதுவும் நம்பும்படியா இன்டெர்னெட்டில் இல்லை.. தெரிஞ்சவ அறிஞ்சவை, அறியாதவர்களுக்கு எடுத்துவிடுங்கோ.. வெல்.. குத்துமதிப்பும்.. மித்துக்களும் (myth)..
-
- 4 replies
- 1.6k views
-
-
இதயச்சந்திரன் பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் வரலாற்றை வரைபவர்கள். மாற்றங்களை உருவாக்கும் உந்து சக்திகளும் இவர்களே. இந்த மாமனிதர்களை நினைவு கூருவது, அவர்களின் இழப்பில் வெளிக் கொணரப்பட்ட போராட்ட உணர்வுச் செய்தியை மக்களுக்களிடையே கொண்டு செல்வது, வரலாற்றை எழுதுபவர்களின் பணியாகிறது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோமென 2009 மே 18 இல் வெற்றி முழக்கமிட்ட சிங்கள பேரினவாத தேசம், புலிகளின் அனுதாபிகளால் ஆபத்தென கூக்குரலிடத் தொடங்கி…
-
- 1 reply
- 955 views
-
-
அரசியல் உட்பட எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும் பொலிஸார் தமது கடமைகளிலிருந்து விலகி செயற்பட முடியாது. சகல சந்தர்ப்பத்திலும் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். சட்டத்தையும், ஒழுங்கையும் உரிய முறையில் அமுல்படுத்தும் விடயத்தில் ஒழுக்கமுடனும், பொறுப்புடனும் பொலிஸார் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதிநவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையம் நேற்றுக்காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் நாட்டில் நிலவிய 30 வருட காலமாக சகல தரப்பினரினதும் கவனம் முப்படையினரின் பக்கம…
-
- 0 replies
- 447 views
-
-
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்தள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில், இறுதியான முடிவுகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழி்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையின்போது, காணி அதிகாரங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது…
-
- 0 replies
- 483 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது முஸ்லிம்களுக்கான தீர்வு அவசியம்: எஸ்.எம்.கிருஷ்ணா இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது முஸ்லிம்களுக்கான தீர்வு அவசியம் எனஇலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கல்முனை பிரதி மேயர் ந…
-
- 0 replies
- 310 views
-
-
அரசின் தலைக்குள் ஏறுவதற்கு மறுக்கும் பாடம் என்ன? “எந்தவொரு ஆயுதப்போராட்டத்துக்கும் ஆயுத வழியில் தீர்வு காணமுடியாது. அதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும். அப்படித் தீர்வு காணத்தவறினால், குறிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் அதே ஆயுத வழிப் போராட்டம் தலைதூக்கும் என்பதே உலக வரலாறு”. இப்போது அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 311 views
-