Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னர் நாடு புதிய சுற்றுலாப் பயணிகளையும் வர்த்தகர்களையும் கவர்ந்திழுத்து வருகின்றது. ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. http://youtu.be/byxToxQRh0g இத…

  2. அமைதி முயற்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை - வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவில் நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான நோராட் (NORAD) அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நோர்வே அரசு மேற்கொண்ட அனுசரணை முயற்சிகள் தொடர்பான ஆய்வாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. அறிக்கையை வெளியிட்டுள்ள நோராட் நிறுவனத்திற்கு நோர்வே அரசே நிதியை வழங்கியுள்ளது. ஒய்வுபெற்ற அல்லது அரசியல் அனுபவம் உள்ள அதிகாரிகள் இணைந்து அரச சார்பற்ற நிறுவனங்களை அமைப்பதும், அதன் மூலம் வெளிநாடுகளிடம் இருந்து பணத்தை பெறுவதும், பின்னர் பணம் கொடுக்கும் நாடுகளுக்கு ஆதரவாக அறிக்கையை …

  3. கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என நம்பிக்கை கொண்டிருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியதாக நோர்வேயின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’2008 ஆம் ஆண்டுவரை இந்திய புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு அதிகாரியும் எல்.ரி.ரி.ஈ.யை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் எம்.கே. நாராயணன் மற்றும் ஏனைய அதிகாரிகள் தமது ஆரம்ப கருத்துகளுக்கு முரணாக, தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, எல்.ரி.ரி.யை இலங்கைப் பாதுகாப்பு படைகள் தோற்கடிக்க முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர்’ என சொல்ஹெய் கூறியதாக நோர்வேயினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காக…

  4. வணக்கத்திற்குரிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதிலும் ஏன் பிளவு? இதயசுத்தியுடன் குறிக்கோளுக்காக, தன்னலமின்றி தமிழனுக்கு விடிவு வேண்டும் என்று தன்னுயிரை தற்கொடையாக்கிய மாவீரார்கள் என்று மறக்கமுடியாத வணக்கத்துக்குரியவர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைப்படி தமிழன் என்ற ஒரு இனத்திற்கான் விடுதலைக்குத்தான் மரணித்தவர்கள். தாங்கள் வாழவல்ல. வாழவிரும்பும் உங்களை வாழவைக்க. அகத்தில் செய்ய முடியாததைப்புலத்தில் செய்கின்றோம். 'சமரசம் உலாவும் இடத்தில் ஆண்டி, அரசன், அறிஞன், அசடன்,மாவீரர்கள் என்று எல்லோரும் பேதமின்றி அமைதியாக உறங்குகின்றனர். ஆனால் இங்கு அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த நான் நீ என்று வேறுபட்டு அவர்களின் கொள்கையையும் மாசுபடுத்து தமிழர்கள் இருக்கும்போது நீங்…

    • 4 replies
    • 1.5k views
  5. தமிழ்நாடு, கூடங்குளம் அணு மின்நிலையத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் திட்டம் தாமதமாகும் பட்சத்தில் திருகோணமலை சம்பூர் அனல்மின் நிலையத்திற்கான இறுதி ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடு வதிலும் தாமதம் ஏற்படலாமென்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்காகவே கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதில் இந்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது என்று மறுமலர்ச்சித் திராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. "இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ஏன் தமிழக மக்கள் தமது உயிர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார…

    • 2 replies
    • 1.4k views
  6. எதிர்க்கட்சியின் மற்றொரு தொகுதியினர் இன்று கட்சி தாவுகின்றனர்!? Published on November 21, 2011-10:13 am வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசு பக்கம் தாவ உள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது. அரச தரப்பு முக்கியஸ்தர்களுக்கும், கட்சி தாவ உள்ளோர்களுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுகள் சுமுகமாக சாதகமாக முடிவடைந்துள்ளன என்று உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே கட்சி தாவும் பட்டியலில் முதன்மை வகிக்கின்றார் என்று கூறப்படுகின்றது. அரசியலில் நிபுணத்துவம் வாய்ந்த திறமைமிக்க அவர், அரசு …

  7. துரோகி என முத்திரை குத்தப்பட்டால் அஞ்சப் போவதில்லை - ஹிருனிகா 21 நவம்பர் 2011 துரோகி என முத்திரை குத்தப்பட்டாலும் அதற்கு அஞ்சப் போவதில்லை என அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிக்கா தெரிவித்துள்ளார். தந்தையின் படுகொலையாளிகளுக்கு உள்நாட்டில் உரிய தண்டனை வழங்கப்படாத பட்சத்தில், அதற்காக சர்வதேச ரீதியில் போராடத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சர்வதேசத்தின் உதவியை நாடுவதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மைத் துரோகியாக அடையாளப்படுத்தும் நபர்களை விடவும் தமக்கு நாட்டின் மீது பற்று அதிகமாகவே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பட…

  8. 24.11.11 ஹாட் டாபிக் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது’ என நார்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். நார்வே அரசின் உத்தரவின் பேரில் இலங்கைப் போர் குறித்து தயாரிக்கப்பட்ட ‘அமைதிக்கான அடமானங்கள்’ என்ற தலைப்பிலான 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த வாரம் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அதில்.. ‘‘இலங்கையில் சமாதான முயற்சிகள் 2003-2004-ம் ஆண்டு தொடங்கியபோது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களை …

  9. பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை) பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு அணுகப்படும் என்ற சந்தேகமே எனது யோசனைக்குக் காரணம். இன்றைய தினம், நவம்பர் 13 இந்நிகழ்வு நடைபெறுவது கூட ஒரு எதிர்பாராத அனுகூலத்தைத் த…

  10. 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் ஆளுங்கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளிவந்துளள்ன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லங்கா சீ நியூஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பாலானோரே அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய …

    • 2 replies
    • 1.8k views
  11. அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய காலச் சூழலில் சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களை உருவாக்கி சில ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்…

  12. வடக்கில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில், பாலியல் வன்முறை மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த வாரம் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். வடக்கிற்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதாகவும் இதனால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண பிரதிக் காவல்துறை மா அதிபர் வீ.இந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலை…

    • 2 replies
    • 770 views
  13. விரிவான ஓர் அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகளை எதிர்கொள்வதற்கு விரிவான அரசியல் கூட்டமைப்பு ஒன்றை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வெள்ளைக் கொடி வழக்கில் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சரத் பொன்சேகாவை, ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கருஜெயசூரிய நேற்று சிறைச்சாலையில் சந்தித்துள்ளார். இதன்போது விரிவான அரசியல் கூட்டமைப்பு ஒன்றை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சரத் பொன்சேகா வலியுறுத்தியதாக கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதன் பின்ன…

  14. வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது. வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ. ரி.எம். பி. பீ வராவெவ,எம்.இஸட் ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரெட்ரிகா ஜேன்ஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பலர் சாட்சியமள…

    • 5 replies
    • 1.3k views
  15. தென்னிந்தியாவிலிருந்து சுமார் 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் சுமார் 30 வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களே தற்போது நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா அகதிகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த இலங்கையர்கள் பலர் தற்போது புனர்வாழ்வுக்காக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். http://youtu.be/22qO2C9_KDU http://www.saritham.com/?p=41345

  16. புலம்பெயர்ந்த தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றி, போலி ஆவணங்களின் மூலம் விற்பனை செய்து வந்த குழுவொன்று சிறிலங்கா காவல்துறையிடம் சிக்கியுள்ளது. போலி ஆவணங்களின் மூலம் தமது காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புலம்பெயர்ந்தவர்கள் பலரும் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மூன்று பத்தாண்டுகளில் புலம்பெயர்ந்து சென்ற 15 இற்கும் அதிகமான தமிழர்கள் இதுபற்றிய முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் கிருலப்பனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். கிங்ஸ்லி கோஸ்த…

    • 2 replies
    • 1k views
  17. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள் தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரதமர் டி.எம். ஜயரட்ன யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை இடம் பெற்ற இந்து ஆலயங்களுக்கு நிதிவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு எ…

    • 7 replies
    • 1.6k views
  18. லண்டனில் இந்திய ஆதரவு முகமூடிக்குழுக்களினால் இம்முறை EXCEL மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வழமையாக லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெறும் மண்டபத்தோடு பல மண்டபங்களை, இம்முறை TOP GEAR நிறுவனம் முன்பதிவு செய்ததை அடுத்து, இந்திய ஆதரவுக்குழுக்கள் அங்குள்ள தேசிய நினைவெழுச்சி நாளை நடத்துவதற்கு ஓர் சிறிய மண்டபத்தையே முன்பதிவு செய்திருந்தனராம். அம்மண்டபம் 5000 மக்களையே கொள்ளக்கூடியதாக இருந்த நிலையிலும், தாம் முன்னைய மண்டபத்தைப் போல் பெரிய மண்டபத்தையே இம்முறை பதிவு செய்ததாகவும், அதே அளவு (ஏறக்குறைய 30 தொடக்கம் 50 ஆயிரம் மக்கள்) மக்களை கொள்ளக்கூடியதாக இருக்கும் என வானொலி, தொலைக்காட்சிகள…

  19. “உனது கணவர் போன இடத்துக்கே உன்னையும் உனது பிள்ளைகளையும் அனுப்பி வைப்பேன். அதிகம் துள்ளாதீர்” இவ்வாறு தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டு வருவதாக சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லகஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இது தொடர்பில் கறுவாக்காடு பொலிஸில் அவர் செய்துள்ள முறைப்பாட்டில். தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யப் போவதாகத் தொடர்ச்சியான தொலைபேசிகள் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தத் தொலைபேசி அழைப்புகளின் .இலக்கங்களை அறிந்து கொள்ள முடியாதுள்ளது. தனது கணவர் கொல்லப்பட்ட தினத்திலிருந்தே தனக்கு இவ்வாறான கொலை அச்சுறுத…

  20. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முதற்தோற்றச் சான்றுகள் இருப்பதாலேயே இந்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை செய்யப்பட வேண்டிய சம்பவங்கள் குறித்தோ, இதற்குப் பொறுப்பானவர்கள் என்றோ எவரது பெயரையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலைகளை மேற்கொண்டதாக கூறும் சனல் 4 தொலை…

  21. எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். . கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள ஒரு புறச்சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பித்திருக்கும் அரசு, இதற்கு அதீத முக்கியத்துவத்தையும் வழங்கிவருகிறது. ஆணைக்குழு அறிக்கையால் ஏற்படும் சர்வதேச…

  22. சிங்கள இனத்தவர் என்ற வகையில் நாம் எவ்வளவு மிலேச்சதனமானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாகவும் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மனிதருக்கு இன்று நேரும் நிலைமைகள் இலங்கையர் என்ற வகையில் அதிருப்தி அளிக்கின்றது என்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நான் வேதனைப்படுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக ஏகாதிபத்திய ஆட்சியை மேற்கொள்ள முயற்சித்தால் சதாம் ஹூசெய்ன் மற்றும் லிபிய தலைவருக்கு ஏற்பட…

  23. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும், 400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அவர் முழுமையாக வெளியிடுவாரா என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சந்தேகம் கிளப்பியுள்ளது. உணர்ச்சிபூர்வமான தகவல்கள் அடங்கிய பகுதிகளை நீக்கிவிட்டு அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அந்த வாரஇதழ் உயர்மட்ட வட்டாரங்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழில் வெளியான பத்தியின் சிலபகுதிகள். “காலியில் கடந்தவாரம் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், சிறிலங…

  24. தமிழர், சிங்களவர் எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் : ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம் நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி இந்திய முறையிலான தீர்வே சிறுபான்மையினருக்கு, சமஷ்டிக்கு ஒரேயோரு மாற்றாக ஏற்புடையதாக இருக்கும், சமஷ்டி என்ற வார்த்தை சிலருக்கு பிடிக்காமல் போனாலும், அதுவே மிகச்சிறந்த தீர்வாக அமையும். ஒற்றையாட்சி என்ற வார்த்தையும் மற்றைய சாராருக்கு பிடிக்காத வார்த்தையே. நாடு பிளவுபடும் என்ற தப்பான கருத்துக் கொண்டவர்களுக்கு சில விளக்கங்களை நீங்கள் கொடுப்பீர்களேயானால் அவாகள் நிச்சயமாக சமஷடி முறையை ஏற்பார்கள் என உறுதியாக நம்புங்கள்' என ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுககு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்ப…

  25. அரசியல் தீர்வு குறித்த, அரசாங்கத்துடனான தமது பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும், இழுப்பறியில் செல்வதால், பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கையினை மக்கள் இழந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார். பேட்டியை கேட்க கேழே உள்ள குறியீட்டை அழுத்தவும்: http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=3177:2011-11-20-04-59-43&catid=1:latest-news&Itemid=18'>http://akkinik…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.