ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 04:51 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] puthinappalakai யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் “இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும்“ என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார். யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகா…
-
- 1 reply
- 2.2k views
-
-
செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம் வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள். பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள் இவர்கள…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று உருத்திரகுமாரன் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சனையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து நோர்வேயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து இன்று திங்கட்கிழமை (14-11-2011) பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின…
-
- 0 replies
- 530 views
-
-
வேலிகள் சரிந்து இடம்கொடுக்க ஆடுகள் பயிர் மேய்கின்றன போருக்குப் பின்பான வட புலத்து நிலைமை எப்படியாகவுள்ளது என்ற ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிதொன்றாகும். அத்தகையதோர் ஆய்வு மேற் கொள்ளப்பட்டால் வட புலத்தில் கலாசார சீரழிவுகள் கட்டு விழ்த்து விடப்பட்டுள்ளன என்ற முடிபு தெரிய வரும். யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கலாசார சீரழிவுகள் பற்றி யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள் அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்தார். எனினும் அவர் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகங்களும் அதீத கவனம் எடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. இது ஒருபுறமிருக்க, யாழ்.அரச அதிபர் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் பொலிஸாரும் கவனம் எடுக்கவில்லை என்றே கூறவேண்டும். பொல…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன் இந்திய அரசாங்கத்தின் முக்கிய தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு காலத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட நோர்வே மத்தியஸ்த்தம் வகித்ததோடு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 9 வருடங்களின் பின் இந்திய அரச …
-
- 32 replies
- 4.3k views
-
-
யாழ்.குடாநாட்டில், மேலும் இரண்டு பாரிய பதிய கடற்படை தளங்கள் அமைக்கும் முயற்சி யாழ்.குடாநாட்டினில் மேலும் இரண்டு பாரிய பதிய கடற்படை தளங்களை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மாதகல் மற்றும் கிளாலி பகுதிகளில் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தலைமை முழு வீச்சினில் செயற்பட்டுவருகின்றது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இப்பகுதிகள் அண்மையிலேயே பெரும் பிரச்சாரங்களுடன் மக்கள் மீளக்குடியமர விடுவிக்கப்பட்டிருந்தது. மாதகல் பகுதியினில் ஏற்கனவே பௌத்த விகாரைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுடன் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் நாற்பதிற்குமதிகமான ஏக்கர் நிலப்பரப்பு புதிதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 693 views
-
-
மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது பாடசாலை மாணவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகச் சொல்லப்படும் அப்பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய இந்த ஆசிரியர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். தனது பாடசாலையின் எட்டு மாணவர்களை இவர் கடுமையான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இலங்கையின் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பாடசாலையில் கடந்த நான்கு வருடஙக்ளாக விளையாட்டுத் துறை ஆசிரியராக இவர் கடமையாற்றி வருகின்றார். அப்பாடசாலையில் எட்டாம் ஒன்பதாம் வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களையே இவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய வைரசின் தாக்கம் கனடாவில்! (வாகனவோட்டிகள் பாதசாரிகள் கவனத்திற்கு) இவ்வைரசு நேரடியாக உட்காதில் உள்ள நிதானப்பகுதியை தாக்குகிறது.உட்காதில் நீர்மட்டம் போன்ற நீர்தொகுதான் எம்மை சம நிலையில் வைத்துள்ளது.இந்த நீர்பகுதி பாதிக்கபடுவதால் நாம் எமது சம நிலையை இழக்கின்றோம்.இப்படி பாதிக்கபடுபவர்கள் ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரையில் இத்தாக்கத்துக்கு ஆளாகலாம் இதற்கு (SERC 24 MG)(BETAHISTINE HCL)மருந்தின் மூலம் சிகிச்சை வழங்கபடுகிறது. ஆரம்ப அறிகுறிகள்:- தலை சுற்றுதல்,பக்கவாட்டாக நடத்தல்,கண் மங்கலாக தெரிதல்,குமட்டல்,சத்தி, நெஞ்சுபகுதியில் பிடிப்பு,ஒரு பொருளை பார்கும் போது இரண்டாக தெரிதல் அல்லது ஓடுதல் போலதெரிதல். இப்படியான தன்மை உடையவர்கள் உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரை …
-
- 1 reply
- 1.5k views
-
-
பொதுநலவாய கனவு கலைந்தது ஏன்? அடுத்த பொதுநலவாய உச்சி மாநாட்டை 2013ம் ஆண்டில் நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நழுவ விடாமல் பாதுகாத்த இலங்கை, 2018இல் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்தும் முயற்சியில் தோல்வி கண்டுள்ளது. சென்.கிட்ஸ் அன் நெவிஸ் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, அனைத்துலக இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசியல் வேறு, விளையாட்டு வேறு, இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று கணக்கிட முடியாது- எல்லாமே அரசியல் விளையாட்டுத் தான். இந்தப் போட்டியை அம்பாந்தோட்…
-
- 2 replies
- 1.1k views
-
-
துமிந்த சில்வா எம்.பி.யை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய் பிரிவிற்கு உத்தவிட்டுள்ளது. முல்லேரியா பிரதேசத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யும்படி கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தவிட்டுள்ளார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/30903-2011-11-15-10-03-43.html
-
- 2 replies
- 962 views
-
-
மாவீரர் தினத்தை புலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்காதீர் ஆக்கம்: ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறடிக்கப்படாது, இலங்கை அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதைத் தடுக்க முடியும். மாவீ…
-
- 7 replies
- 1.6k views
-
-
மீள்நல்லிணக்கம் சார்ந்த திட்டவட்டமான நகர்வுகள் அவசியம்: கொழும்புக்கு அமெரிக்கா மீண்டும் அழுத்தம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் மோசமான மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்துமாறு சிறிலங்காவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைப் பாதுகாப்புச் செயலர் Robert M. Scher காலியில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து அமெரிக்கா தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறது என்பதை இம்முறை தனது …
-
- 1 reply
- 584 views
-
-
நோர்வே அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தி! சிறிலங்காவின் இறைமைக்கு களங்கம் என அச்சம் விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்வேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது. இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது. இந்நிலையில், மேற்படி விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்…
-
- 0 replies
- 1.5k views
-
-
210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!? சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வேதனைகள் துன்பங்கள் மறையாத நிலையில் தாய்த் தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 3ம் திகதி சென்னை வந்த 210 சிங்களவர்கள் எழும்பூர் கென்னட் ரோட்…
-
- 3 replies
- 1.8k views
-
-
டக்ளஸ் தேவானந்தா வழக்கை விசாரிக்க நீதிபதி சுதந்திரம் மறுப்பு சென்னை: சென்னையில் நடந்த சிறுவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ராஜபக்சே ஜால்ரா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் மறுத்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் டக்ளஸ் தேவானந்தா ஆரம்ப காலத்தில் தங்கியிருந்தபோது ஒரு சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வழக்கில் சிக்கினார். பின்னர் அவர் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இதுவரை டக்ளஸ் ஆஜராகவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப…
-
- 2 replies
- 1.4k views
-
-
Nov 16, 2011 / பகுதி: செய்தி / வன்னியில் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் பேருந்துடன் தனியார் பேருந்து மோதியது: படையினர் காட்டுமிராண்டித்தனம்! தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பேருந்துடன் மோதியது குற்றம் எனக் கூறி முல்லைத்தீவு தனியார் பேருந்துச் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த மக்கள் ஆகியோர் மீது படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. பரந்தன் சந்தியூடாக முல்லைத்தீவுக்கான தனியார் போக்குவரத்துச் சபை பேருந்து முல்லைத்தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பேருந்து தனியார் பேருந்துடன் பக்கவாட்டாக உராய்ந்து சென்றுள்ளது. இதன் பின்னர் விடயம் அறிந்து அங்கு வந்த படையினர், குறித்த தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்தின் சா…
-
- 0 replies
- 817 views
-
-
உள்நாட்டு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும்:சியாம் சரண் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வைக் காணவேண்டும். ஏனைய நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டாலும் தீர்வு காணமுடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 'இந்திய வெளியுறவுக் கொள்கையும் இலங்கையுடனான நட்புறவும்' என்ற கருப்பொருளில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நீண்டு கொண்டு செல்லும் இலங்கைத்தீவின் இன ரீதியிலான பிச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பின…
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டன் செல்லவிருந்த மாணவரும் நண்பர்கள் இருவரும் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கற்பதற்காக நாட்டைவிட்டுச் செல்லவிருந்த மாணவரும் ஏனைய க.பொ.த. உயர்தர மாணவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, கடற்படையினரால் தடுத்துவைத்துள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களை நீதிமன்றில் ஆஜராக்குமாறு கோரி அவர்களின் பெற்றோர்கள் தனித்தனியாக 3 ஆட்கொணர்வு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர். திருமதி சரோஜா நாகநாதன் தனது மகனை ரஜீவ் நாகநாதனையும் ஜி.விஸ்வநாதன் தனது மகன் பிரதீப்பையும் திருமதி காவேரி ராமலிங்கம் தனது மகன…
-
- 0 replies
- 811 views
-
-
மருத்துவர்கள் ஒருவருடைய நோயைக்குணப்படுத்துவதில் அக்கறை கொள்வதில்லை. பணம் கறப்பதே ஒரே நோக்கமாக உள்ளனர். மருத்துவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள மருத்துவப் பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சி.டி. ஸ்கேன்இ எம்.ஆர்.ஐ. ஸ்கேன்இ எக்ஸ் ரேஇ சிறுநீர் பரிசோதனைஇ ரத்தப் பரிசோதனை என்று மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் எழுதிக் கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் மருத்துவர்களுக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் விகிதாசாரமாக 'கமிஷன்' அளிப்பதான விவகாரம் இருந்து வருகிறது. இது தவிரஇ மருந்துக் கடைகள்இ பன்னாட்டு உள்நாட்டு மருந்து உற்பத்க்டி நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதற்கு பல்வேறு வகையி…
-
- 1 reply
- 973 views
-
-
குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் உறுப்புக்கள் மாயம்! Published on November 14, 2011-12:16 pm குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிக் கொண்டிருந்த இலங்கை கலாவாவி – விஜிதபுர – புதிய புலியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் கடந்த மாதம் 31ம் திகதி திடீரென மரணமானார். இவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவருடைய உடலில் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட அவயவங்கள் இல்லாது காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் கடந்த 11ம் திகதி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது குவைத்திலேயே குறித்த பெண்ணின் உள் உறுப்புக்கள் அகற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உள் உறுப்பு…
-
- 1 reply
- 898 views
-
-
http://thamilarasu.com/ தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஈயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். வி.உருத…
-
- 6 replies
- 2.6k views
-
-
அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்ய 200€ தந்தால் போதும் 2009ம் ஆண்டு சரணடைந்த கந்தையா குணநாதன் என்ற முன்னாள் போராளி தனக்கான மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்கான உதவியினை வேண்டியுள்ளார். இவரது மனைவி நிர்மலாதேவி இறுதியுத்தத்தில் காயமடைந்து வலது கை முழுமையாகப் பாதிக்கப்பட்டவர். ஆயினும் தங்களது பெண் குழந்தைக்கு உணவைக் கொடுக்க தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய 2வீடுகளில் வீட்டுப்பணி வேலைகள் செய்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். கந்தையா குணநாதன் அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் வருமாறு:- அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்ய கருணையுள்ளம் படைத்த உறவுகள் 30ஆயிரம் ரூபாவினை (அண்ணளவாக200€) வழங்கினால் அவருக்கான வழக்கி…
-
- 0 replies
- 975 views
-
-
கடந்த முப்பதாண்டு கால தமிழீழ விடுதலைப் போராட்டம் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையினை அனைத்துலக மயப்படுத்தியிருக்கும் சூழலில் ஈழத் தாயகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தமிழர் போராட்டங்களுக்கும் தற்போது அனைத்துலக பரிமாணம் உண்டு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இக்கருத்தினை பிரதமர்.வி ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 70களில் இருந்த நிலைமைகள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஈழத்தமிழர் தேசம் ஏறத்தாழ 1 மில்லியன் மக்கள் பலம்கொண்ட ஈழத் தமிழ் டயாஸ்பாறாவினையும் தனது அங்கமாகக் கொண்டுள்ளது. இதனால் தாயகத்தில் நடைபெறும் பேராட்டங்கள் அனைத்துலகமயப்ப…
-
- 1 reply
- 703 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இன்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். விடுதி முகாமையாளர் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 2.1k views
-
-
அன்பார்ந்த கனடாவாழ் தமிழீழ மக்களே! எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழத் தேசியத்துக்காய் தம் உயிர் ஈந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வான தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், வழமை போல, தமிழ் தேசியச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கனடியத் தமிழரின் கட்டமைப்புகளினால், நவம்பர் 27, 2011 அன்று, நான்கு நிகழ்வுகளாக ரொரன்ரோவிலும், மற்றும் மொன்றியலில் ஒரு நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளது. கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (Canadian Tamils Rememberance Organization - CTRO), வழமை போல முன்னெடுக்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), கனடா தமிழ் மகளிர் அமைப்பு, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை, தமிழர் கலை பண்பாட்டுக் க…
-
- 10 replies
- 1.8k views
-