ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி ஆகிய இரண்டு கட்சிகள் தொடர்பிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விசேட கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள பௌத்த கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி.யிலிருந்து பிளவடைந்த விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி ஆகிய கட்சிகள் சொத்துக்களை தேசிய மயப்படுத்தும் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சொத்துக்களை தேசிய மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி பகிரங்கமாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி,…
-
- 2 replies
- 885 views
-
-
மாலைதீவில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டுக்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரும், இலங்கையின் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு திட்டமொன்றுஅமுல்படுத்தப்படுகிறது. மாலைதீவின் அட்டு நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களினதும் மாநாடு நடைபெறும் இடத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இரு படையமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக மாலைதீவில் பணியாற்றும் இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினர். ‘மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து தூதுக்குழுவினரும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர். தவறில்லாத பாதுகாப்புத் திட்டத்திற்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து அச்சு…
-
- 6 replies
- 801 views
-
-
மாலைதீவில் இன்று ஆரம்பமாகவுள்ள 17 வது சார்க் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.அச் சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றம், இந்திய அரசாங்கத்தினால் வடக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டு திட்டம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனிடையே மீள்குடியேற்றம் மங்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்…
-
- 3 replies
- 762 views
-
-
பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. தமிழர் வர்த்தக நிலையங்களுக்குள் அத்துமீறி புகுந்த இந்தக் கும்பல் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகளை கிழித்ததோடு எச்சரித்தும் உளள்ளனர். இச்செயல் குறித்து மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து அத்துமீறிய இச்செயல் குறித்து பிரென்சுக் காவல்துறையிடம் முறையிடுவதற்கு சில வர்த்தகர்கள் எண்ணியுள்ளனர். தமிழர் தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் சிங்கள் காடையர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டமை சிங்கள காடையர்கள…
-
- 26 replies
- 2.1k views
-
-
Rajaratnam Ordered to Pay $92.8 Million Penalty A federal judge on Tuesday ordered the convicted hedge fund titan Raj Rajaratnam to pay a $92.8 million penalty, the largest ever assessed against a person in a Securities and Exchange Commission insider trading case. Combined with the fines and forfeitures ordered last month when he was sentenced to 11 years in prison for insider trading, Mr. Rajaratnam will be paying a total of $156.6 million. “The penalty imposed today reflects the historic proportions of Raj Rajaratnam’s illegal conduct and its impact on the integrity of our markets,” said Robert S. Khuzami, the S.E.C.’s head of enforcement. Legal exp…
-
- 0 replies
- 495 views
-
-
இராஜதந்திர உரிமைகள் பற்றி வியன்னா பிரகடனம் என்ன கூறுகின்றது என்றால் ”the purpose of such previleges and immunities is not to benefit individuals but ensure the efficient performance of the functions of diplomatic missions of state" இதன்படி போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா உண்மையில் சலுகைகளை வைத்து நன்மையடையக்கூடாது என்பது புலனாகின்றது. அதே வேளை இராஜதந்திரிகளின் பணிவினைத்திறனை இந்த சலுகைகள் வலுவாக்கும் என்பதும் ஆகும் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது அல்ல. . ஐக்கிய நாடுகள் சபையின் துணை தூதராக பணியாற்றும் சவேந்திர சில்வா என்பவர் ஒரு போர்க்குற்றவாளி.இந்த நபரை ஐக்கிய நாடுகள் சபை தனது சேவையில் வைத்திருப்பது மனித உரிமை அமைப்பான ஐக்கிய நாடுகள் சபைக்கே ச…
-
- 1 reply
- 958 views
-
-
யாழில் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் நிதி வழங்க முடியாது: உலக வங்கி யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் தொடர்ந்து நிதி வழங்க முடியாது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி தூதுக்குழு தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். உலக வங்கி தூதுக்குழுவினருக்கும் அரச அதிபருக்குமிடையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் உள்ளூராட்சி திணைக்களங்கள், யாழ். மாநகர சபை வேலைத்திட்டமிடல் நித…
-
- 3 replies
- 724 views
-
-
யாழ்ப்பாண சமூகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்து யாழ்ப்பாணத்துச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப் பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக் கழகத்துக்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியியல் விஞ்ஞான பட்டம் பெற்றுபின் பிரிட்டனில் கலாநிதிப் பட்டம் பெற்றுப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராய், பேராசிரியராய், பீடாதிபதியாய் சேவையாற்றி யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராய் பணியாற்றிய எமது பேராசிரியரை நினைவு கூர்வது சாலப் பொருந்தும். தமிழர் கலாசாரத்தில் ஒன்றிப் போதல் கலாசார வாழ்வை தனது பெருமையாகக் கொள்ளல், அடுத்துவரும் சந்ததிக்கு தமிழர் வாழ்வியலின்…
-
- 3 replies
- 952 views
-
-
இறுதி யுத்தத்தில் சரணடைந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அல்லலுறும் 6முன்னாள் போராளிகள் அடிப்படை மனிதவுரிமை வழக்கு தாக்கல் செய்வதற்கு நிதியுதவியை வேண்டியுள்ளனர். இவர்களது குடும்பங்களும் போரில் பாதிக்கப்பட்டுள்ள நிலமையில் இவர்களது வழக்குகளை தாக்கல் செய்ய முடியாத நிலமையில் உள்ளமையால் புலம்பெயர் உறவுகளிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஒருவருக்கு வழக்கு தாக்கல் செய்ய 30000.00ரூபா (அண்ணளவாக 200.00€) தேவைப்படுகிறது. மொத்தம் ஆறு பேருக்கும் – 30000.00Rs x 6 = 180000.00Rs அண்ணளவாக யூரோவில் 1200.00€) 6கைதிகளின் பெயர் விபரங்கள் அவர்களால் எழுதப்பட்ட கடித இணைப்பு கீழே:- இவ்வுதவியை வழங்கி சிறையில் வாழும் இவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுங்கள் உறவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
மலையகப் பகுதிகளில் திடீரென பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் முன்னர் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பதிவு முறை தற்போது, மலையகப்பகுதிக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் திடீர் பதிவு முறையால் மலையபகப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இப பதிவிற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பொலிஸ் நிலையப் அதிகாரிகள் விநியோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய மஸ்கெலியா பகுதியில் மேற்படி பதிவுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 800 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட ஆசிரிய ஆலோசகர் வவுனியா இராணுவ இரகசிய சித்திரவதை முகாமில்! Published on November 10, 2011-6:33 pm · No Comments கிளிநொச்சி கல்வி வலயத்தில் சங்கீத பாட ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் 33வயதுடைய குலவீரசிங்கம் கோகுலன் என்பவர் சுதுமலையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சுதுமலை வடக்கைச் சேர்ந்தவராவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவில் உடையில் சென்றவர்களே தாம் பொலிஸ் என்று தெரிவித்ததோடு விசாரணைக்களுக்காக அவரை அழைத்து செல்வதாக தெரிவித்து அழைத்து சென்றதாகவும் பின்னர் அவர் வீடு திரும்பவில்லையென்று அவரது மனைவி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கோகிலனின் மனைவி இலங்கை மனித உரி…
-
- 1 reply
- 938 views
-
-
முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் : சுபத்திரன் இன்னும் சில தினங்களில் இன்னொரு முறை மாவீரர் தின நிகழ்வுகள் “கோலாகலமாக” அல்லது “கொத்து வெட்டாக” நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் அவலங்கள். மனிதப் படுகொலைகள், சித்திரவதைகள், இனச் சுத்திகரிப்பு என்ற அனைத்து சமூக விரோதச் செயல்களையும் ராஜபக்ச பாசிச அரசு திட்டமிட்டு நடத்திவருகிறது. இவை அனைத்தும் குறித்த குறைந்தபட்ச அரசியல் நகர்வைக் கூட மேற்கொள்ள முடியாத புலம் பெயர் “தேசிய வியாபாரிகளின்” அமைப்புகள் உயிரிழந்தவர்களின் தியாகங்களின் மேல் மாவீரர் தினத்திற்காகக் கொச்சைத் தனமாக மோதிக்கொள்வது எதற்காக? ஒரு புறத்தில் இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழப் போராட்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஐ.நா பதவியில் இருந்து சவேந்திர சில்வாவை நீக்குக! - பான் கீ மூனுக்கு மனிதவுரிமை அமைப்புகள் கோரிக்கை!! ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி பதவிக்காக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கையளித்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு பத்து சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளன. தனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் நிராகரிக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் பான் கீ மூனிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் இடம்பெற்…
-
- 4 replies
- 676 views
-
-
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் மற்றும் மிக் உள்ளிட்ட தாக்குதல் விமானங்களை தாக்கி அழிப்பதற்காக ஸ்டோர்லா விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள மயில்வாகனம் ரமணன் என்பவருக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கனேடிய பிரஜையான மயில்வாகனம் விடுதலைப்புலிகளுக்கு நீர்மூழ்கி தொழிற்நுட்பங்களை பெறுவதற்காக 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பிரித்தானியா நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியிருந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் கனேடிய காவற்தறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, ரமணன் குறித்த தகவல்கள் தெரியவந்ததாகவும் அந்த ஊடக…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் இன்று காலை நாடு திரும்பினர்இந்த பயணத்தின்போது இலங்கையின் இன்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆராய்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சுற்றுப் பயணத்தின்போது முதலில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினர் அங்கு இராஜாங்க திணைக்கள அதிகாரிகள், கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் பிரதி அரசியல்துறை அதிகாரி மற்றும் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆகியோரை சந்தித்து தமிழ்மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இனப்பிரச்…
-
- 1 reply
- 737 views
-
-
எங்கள் இனத்தை கருவறுக்கத் திருவுளமோ! போருக்குப் பின்பான ஈழத்தமிழ் மக்களின் பரிதாபகரமான நிலைமைகள் பூதாகரமாகி வருவதை காண முடிகின்றது.அதில் எங்கள் வாழ்வியல் சார்ந்த பலபிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் கட்டுபாடற்ற இளம் சமுதாயத்தைக் காப்பாற்றுவது என்பது முடியாத காரியமாகி வருவதை நினைக்கும் போது நெஞ்சம் வெடிக்கும் போல் உள்ளது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றவர்களாக சமகாலத்திலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இருக்கின்ற நிலைமையில்,நாட்டின் சில பகுதிகளில் உள்ள சீரழிந்த கலாசா ரத்தை எங்கள் மண்ணிலும் நடைமுறைப்படுத்தும் பணி துரிதமாக நடைபெறுவதை அறியும் போது, கட்டாந்தரையில் நின்று கதறிக்கண்ணீர் விட வேண்டும் போல் இருக்கிறது.விபசாரத் தொழிலை இங்கு ஏற்படுத்துவதன் மூலம் …
-
- 0 replies
- 826 views
-
-
இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தைதயாரித்த பிரிட்டனின் சனல் – 4 அலைவரிசை, அந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு ஆவணப்படத்தையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என இந்த ஆவணப்படுத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து இரண்டாவது விசாரணையொன்றை நடத்தும் நிகழ்ச்சியை தயாரிக்குமாறு பிரிட்டனின் ஐ.ரி.என். புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் சனல் 4 அலைவரிசையின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் டொரத்தி பெய்ர்ன் கூறியுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் சில காட்சிகள சனல் 4 அலைவரிசை வரலாற்றில் ஒளிபரப்…
-
- 6 replies
- 1.4k views
-
-
மீனவர் தாக்குதல் மூலம் இந்தியா மீது இலங்கை அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது - தா.பாண்டியன் தமிழக மீனவர்களை தாக்குவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் ஒன்றை நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். கடலில் மீன் பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத் தள்ளும் ஒரே நாடு இலங்கை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கெண்டு வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன், இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக அவர்களை சு…
-
- 1 reply
- 685 views
-
-
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா தன் மீதான் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளான். தனக்கு இருக்கும் இராஜதந்திர சிறப்புரிமைகளை சுட்டிக்காட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளான். . கடந்த செப்ரெம்பர் மாதம் சவேந்திரசில்வா மீதான இந்த வழக்கினை விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்து சிங்கள ஆயுதப்படைகளினால் கொல்லப்பட்ட கேணல் ரமேஸ் அவர்களின் துணைவியாரால் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சவேந்திரசில்வாவிற்கான அழைப்பாணையினை அவரது தனிப்பட்ட வீட்டில் சேர்ப்பிக்கப்பட்டது. . இதே வேளை அமெரிக்கா போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திரி சிறப்புரிமையினை உறுதிப்படுத்தி பத்திரம் ஒன்று வழங்கியது. இந்த சிறப்புரிமைய…
-
- 2 replies
- 970 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் பின்னர் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் கோரிச் சென்ற தமிழர்களின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு சுவிஸ் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் ஆதரவு வழங்கியதை அகதி அமைப்புக்கள் கண்டித்துள்ளன. சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், தற்போது அங்கே அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கேற்ற பாதுகாப்பான சூழல் காணப்படுவதாகவும், இதனால் சிறிலங்காவின் ஒரு பகுதியைத் தவிர ஏனைய இடங்களைச் சேர்ந்தவர்களை மீளவும் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதென இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தீர்மானித்திருந்ததாக சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் தற்போதும் சிறிலங்காவில் நிலைப்பாடு உறுதித்தன்மையற்றதாக இருப்பதாக சுவிஸ் அ…
-
- 0 replies
- 504 views
-
-
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்குஎதிரான போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விலக்களிக்க கூடாது என அமெரிக்க மத்திய நீதிமன்றில் சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.அதேவேளை, சவேந்திர சில்வாவின் இராஜதந்திர பதவியை ரத்து செய்யுமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் போர்க் குற்றவாளி கடமையாற்றி வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் மிகப் பெரிய நிறுவனம் என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சவேந்திரவிற…
-
- 0 replies
- 551 views
-
-
வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட கூட்டமைப்பினர், இலங்கையின் இன்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆராய்ந்துள்ளனர் இதனிடையே இந்த விஜயம் குறித்து, விஜயத்தில் பங்கு கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் விபரம் தருகிறார். கீழே உள்ள குறியீட்டை அழுத்தவும்.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=3091:2011-11-10-09-50-08&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 857 views
-
-
முன்னர் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்லர், அவர்களை அப்படி ஏற்றுக் கொண்டுவிடாதீர்கள் என்று வெளிநாடுகளிடம் கூறி வந்த அரசாங்கம் இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவ்வாறு கூறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த முதலாம் திகதி ஐ.நா.பொதுச்செயலர் பான் கீமுனைச் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அதற்கு முன்னர் ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரும், மனித உரிமைகள் அமைச்சருமான மகிந்த சமரசிங்க, ஐ.நா. பொதுச் செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் லைன் பாஸ்கோ, ஐ.நா.பொதுச்செயலரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஐ.நா. பொ…
-
- 0 replies
- 915 views
-
-
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்துக் காணிகளையும் பதியும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கேட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை அடுத்து வடக்கு கிழக்கில் காணிகளைப் பதியும் நடவடிக்கைகளை நிறுத்தும்படி காணி அமைச்சு வடக்கு கிழக்கு மாகாண அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. "கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவை அடுத்து ஜனவரி 19ஆம் திகதி வரை காணிப் பதிவை இடைநிறுத்தி வைத்திருக்கிறோம்'' என்று வடமாகாணக் காணி ஆணையாளர் உதயனுக்குத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டபிள்யூ.எல…
-
- 0 replies
- 668 views
-
-
மன்னார் மாவட்ட அரசஅதிபர் என்.வேத நாயகன் மற்றும் முல்லைத்தீவு அரசஅதிபர் ஏ.பத்திநாதன் ஆகியோர் நேற்றுப் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகை யில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு அரசஅதிபர் ஏ.பத்திநாதன் மொனராகலைக்கு இடமாற்றப்பட்டதை அடுத்து என்.வேதநாயகன் அந்த இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்துக்கு புதிய அரசஅதிபராக சரத்ரவீந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் கடும் விமர்சனத்தைக் கிளப்பி உள்ளன. மன்னார் அரசஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்துக்குப் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது தமக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக அரச அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தச் செயல் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு எதிரானது …
-
- 0 replies
- 823 views
-