ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
'ஞானசாரரை சிறையிலடையுங்கள்' அஸ்லம் எஸ்.மௌலானா “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாகச் செயற்படுகின்ற ஞானசார தேரரை சிறையிலடைப்போம் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் கூறியதாவது, "பௌத்த தீவிரவாதிகள், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு…
-
- 0 replies
- 129 views
-
-
'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம் பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் யாழ் மத்திய கல்லூரியின் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம். சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், கௌரவ விருந்தினர்களாக யாழ் மருத்துவ பீட உயிர் இரசாயனவியல் தலைவர் கலாநிதி ச.பாலகுமார்,…
-
- 1 reply
- 343 views
-
-
-சுமித்தி தங்கராசா நடைபெறவுள்ள தேர்தலில் வன்முறை மூலம் வெற்றி அடைய வேண்டிய தேவை எமக்கில்லை. தேர்தலில் நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு இருக்கின்றது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பிரதேசவாத மற்றும் இனவாத சக்திகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என்றும் அவர்; கேட்டுக்கொண்டார். யாழ். தொழில்நுட்ப வளாகத்தில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'யாழ்ப்பாணத்தில் வாழும் எனது அன்புக்குரிய நண்பர்களே! உங்கள் தாய்மொழி மூலம் உங்களுடன் உரையாட முடியாததற்கு வெட்கப்படுகின்றேன். கவலைப்படுகின்றேன்…
-
- 1 reply
- 455 views
-
-
'டக்ளஸை கைது செய்ய முடியாது' சென்னை சூளைமேட்டில் 1986 நவம்பர் மாதத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்கள் முன் நிறுத்துவது இயலாது என்று இந்திய மத்திய அரசின் சார்பாக இன்று வாதிடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது அவ்வழக்கு விசாரணைக்காக தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்துவரவேண்டும் எனக்கோரும் பொது நல மனு தலைமை நீதிபதி எம் வை இக்பால் மற்றும் நீதிபதி டி எஸ் சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோதுதான் கூடுதல் அ…
-
- 3 replies
- 1k views
-
-
'டாடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள். கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெ…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
[size=5]புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் கருத்து[/size] [size=4]2012 அக்டோபர் மாதம் 12 வெள்ளிக் கிழமை- பி.ப 08:11[/size] [size=4]புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில், நாட்டில் உள்ள மக்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளினால், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த டிசெம்பர் மாதம் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் இங்கிலாந்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். புலம்பெயர்ந்த தமிழர்களுடன், கருத்துக்களை பரிமாறும்…
-
- 0 replies
- 970 views
-
-
'டிகோ' வினை வாங்கிய எடிசலாற் நிறுவனம் - பின்னணியில் கோத்தபாய? WRITTEN BY SARA இலங்கையில் இயங்கிவந்த டிகோ கையடக்கத் தொலைபேசி நிறுவனத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதான தொலைபேசி வலையமைப்பான எடிசலாற் நிறுவனம் கொள்வனவு செய்ததன் பின்னணியில் பசில் ராஜபக்ச இருப்பதாக தெரியவந்துள்ளது.ஏடிசலாற் நிறுவனம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தொலைத்தொடர்புகளை ஒழுக்குப்படுத்தும் முன்னாள் தலைவர் பிரியந்த காரியப்பெரும சில எதிர்ப்புகளை வெளியிட்டிருந்த போதிலும் அனுச பெல்பிட்ட அந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட பின்னர் உடனடியாக அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கொடுக்கல், வாங்கல்களை சட்டரீதியாக மேற்கொள்வதற்காக எ…
-
- 0 replies
- 803 views
-
-
'டெங்குவால் வைத்தியசாலையில் இருந்த நான் சம்பவத்தை அறிந்து வீட்டில் இருந்த கணவருக்கு கோல் பண்ணினேன்.." : மீதொட்டமுல்ல சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களின் உள்ள குமறல்கள் (எம்.சி.நஜிமுதீன்) 'டெங்குவால் உயிர் தப்பினேன்" டெங்கு நோயால் பிடிக்கப்பட்டு அண்மைக்காலமாக நான் அவதிப்பட்டேன். வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சைபெறுவதற்கு விருப்பமில்லாத என்னை எனது கணவர் வற்புறுத்தி வைத்தியசாலையில் அனுமதித்தார். எனினும் அவரின் வற்புறுத்தல் தன்னை மரணத்திலிருந்து தப்பிக்கவைத்ததாக குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் எற்பட்ட அனர்த்தத்தில் வீடு சேதமடைந்து டெரன்ஸ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் கயணி என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் க…
-
- 0 replies
- 161 views
-
-
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தும்,' டெசோ' கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்,நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான 'டெசோ'அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது.'ட…
-
- 0 replies
- 511 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் சில வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் அதிகரிப்பினால் காணப்படும் நெறிசல் தொடர்பில் வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் அல்லது காணொளிகள் போலியானவை அல்ல. நாளாந்தம் சுமார் 2,000 தொற்றாளர்கள், 100 அண்மித்தளவிலான மரணங்கள் பதிவாகின்றன. இது, கடந்த ஒன்றரை ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகவும் அபாயமுடையதாகும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். டெல்டா வைரஸ் தொற்றின் வேகம் நூறு வீதமானது. இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எந்தவொரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். 18 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு இம்மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கப்ப…
-
- 0 replies
- 275 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். இந்த விடயங்கள் குறித்த சம…
-
- 13 replies
- 1.2k views
-
-
'த.தே.கூ பிச்சை எடுக்கவில்லை' ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தவுக்கு, இணக்க அரசியல் என்றால் என்ன என்று தெரியவில்லை. நாங்கள், இணக்க அரசியல் செய்யவில்லை. சரியாகக் கூறுவதாயின் நாங்கள் பிச்சை எடுக்கவில்லையென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன், அரசாங்கத்திடம் சலுகைகளை பெறவில்லை என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருக்கும், வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களுக்கு தேவையானவற்றுக்கு, சரியானவற்றுக்கு நாம் ஆதரவளிப…
-
- 0 replies
- 252 views
-
-
-வா.கிருஸ்ணா தமிழ் மக்களின் பல போராட்டங்கள் மற்றும் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவான கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுக்கின்றமை கவலைக்குரிய விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது நினைவுதினம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '65 வருடகால போராட்ட வரலாற்றில், இலட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த இனமாக தமிழினம் மட்டுமே உள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக மூவின மக்களும் மடிந்துள்ளார்கள…
-
- 0 replies
- 738 views
-
-
'த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்' சண்முகம் தவசீலன் ஜெனிவாஅமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இறுதியாக 17.02.2016 அன்று நடைபெற்றிருந்த…
-
- 4 replies
- 470 views
-
-
'த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு' ஏ.பி.மதன் இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளப் போவதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'த…
-
- 1 reply
- 427 views
-
-
'த(க)ண்ணீருக்கும் அப்பால்...!"-சபேசன் (அவுஸ்திரேலியா)- மாவிலாறு அணையைத் திறக்க வேண்டும் - என்ற ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்காவின் அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்கா அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மகிந்தபுர, செல்வநகர், 64 அவது மைல்கல் ஆகியவற்றில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மூதூர் இறங்குதுறைக் கடற்படை முகாம், கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மற்றும் பச்சன…
-
- 0 replies
- 924 views
-
-
'தகவல்களை மறுக்கலாம்' தேசிய பாதுகாப்பு தொடர்பான இறைமைக்கு பங்கமானது பொருளாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் சர்வதேச உறவைப் பாதிக்கும் குற்றவழக்குத் தொடுப்பதை தடுக்கும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அழகன் கனகராஜ் தகவலறியும் உரிமைச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24), நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்க முதற்கோலாசானுமான கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு, மக்கள் விடுதலை முன்னணி தமத…
-
- 0 replies
- 263 views
-
-
'தகாத வார்த்தையால் என்னை திட்டுகின்றனர்' - எம்.றொசாந்த் எனக்கு அலைபேசியில் அழைப்பை எடுக்கும் சிலர், பேராயர் என்றும் மதிக்காமல் என்னைத் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், பாதிரியார் என்ற மரியாதை இல்லாமல் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர். ஜனாதிபதி கூட பாதிரியார்களுக்கு மரியாதை செய்கையில் இவர்கள் இவ்வாறு ஏசுகின்றனர். இது கண்டித்தக்கது. பாடசாலையின் பிரச்சினை பெரிதாவதற்கு வெளியாட்களின் உள்நுழைவே காரணம். இதனால், பாடசாலையில் சி.சி.டி.வி கமெ…
-
- 0 replies
- 343 views
-
-
'தங்கத்தால் தடுமாறிய செல்வம்' அழகன் கனகராஜ் தங்கம் என்றால் தங்கம் தான், அதிலென்ன, அந்ததத் தங்கம் அதுவும் வடக்கு தமிழர்களின் தங்கம், அவைக்கு நேற்று புதன்கிழமை கேள்வியாய் வந்து, அவையையே ஒருகணம் அதிரவைத்துவிட்டது எனலாம். நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தின் பின்னர் பிரதமரிடம்; கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், தேயிலை மற்றும் இறப்பரின் நிர்ணய விலைகள், உர மானியம் தொடர்பிலும் கேட்கப்பட்டிருந்தன. தெற்கு மக்களுக்குக் காணி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வடக்கு மக்களுக்குத் தங்கமும் …
-
- 0 replies
- 453 views
-
-
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையில் எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் அது தடிமன் ஏற்பட்டாலும் அதை கண்டித்து அறிக்கைவிடும் எனவும் அமைச்சர் விமல் வீரசன்ஸ இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். 'ரதுபஸ்வல சம்பவத்தை நாம் சரியொன கூறவில்லை. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிள்ளை வருகின்றார். ஒரு பூச்சி பக்கத்தில் பறந்தாலும் ஐக்கிய அமெரிக்க அறிக்கை விடுகின்றது' என மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார். இந்த வெளிநாட்டு அவதானிகள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதில் முழு மூச்சமாக உள்ளனர். அவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிக்க முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். "மேற்கத்…
-
- 4 replies
- 482 views
-
-
-எம்.றொசாந்த் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாக அறியப்பட்ட கே.வைரவநாதன், இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் மத்தி தேவாலய வீதியை சேர்;ந்த கே.வைரவநாதன் (தற்போது வயது 53) ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு அம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை (11) கடிதம் அனுப்பப்பட்டுள்ள…
-
- 0 replies
- 340 views
-
-
சிறீலங்கா படையினரினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டும் வரும் நிலையில் சனல்4 ஊடகங்கள் அதனை ஆதாரபூர்வமாக வெளியுலகுக் காட்சிப்படுத்தி அதிர்ச்சியளித்தது. 'சிறீலங்காவின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் பல போர்க்குற்ற குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தி சிறீலங்கா அரசிற்கு மேற்குலக நாடுகளினால் பெரும் அழுத்தத்தினை கொடுக்க உதவியாக அமைந்தது. இதனை தொடர்ந்து கொலைக்களத்தின் தொடர்ச்சியாக 'தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' என்ற இரண்டாவது ஆவணப்படத்தினை வெளியிட தீர்மானித்துள்ளது சனல்4 தொலைக்காட்சி. இக்காணொளியில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அதன் தயாரிப்பாளர் Callum Macrae, ‘தி இன்டிபென்டென்ட்' நாளேட்டு…
-
- 0 replies
- 560 views
-
-
நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. இலங்கையின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் இலங்கையில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும் முயன்றுள்ளது. நான்கு கற்கைகளை அராய்வதன் மூலம் இவ் ஆவணத் திரைப்படமானது இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ரா…
-
- 0 replies
- 601 views
-
-
யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்குவேன் என்று யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா எச்சரித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், எழிலூர் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி, இந்த விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை, இதனால் நாங்கள் ஒப்பமிட முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பதிலாளித்த மேயர் "நீங்கள் கையொப்பம் இடத்தேவையில்லை வாற கோபத்திற்கு தண்ணீர்போத்தலால் வாங்கப்போறிங்கள்" என்று சபை முன்னி…
-
- 0 replies
- 287 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ப…
-
- 3 replies
- 391 views
-