ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143324 topics in this forum
-
மலேசியா சென்று கே.பி.யை பிடிக்க முடியுமானால் ஏன் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாது?பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இவ் மாயா ஜால வித்தை என்கிறார் சோமவன்ச அமரசிங்க. [saturday, 2011-08-13 11:01:55] மலேசியாவிற்கு சென்று கே.பியை பிடித்து வர முடியுமென்றால் உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களை அரசாங்கத்தால் பிடிக்க முடியாதா? என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அரசாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்று குற்றம் சுமத்தினார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது.. …
-
- 0 replies
- 617 views
-
-
| வெள்ளிக்கிழமை, 12, ஆகஸ்ட் 2011 (20:53 IST) என் மகனை காப்பாற்றுங்கள்: நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை: பேரறிவாளன் தாயார் கண்ணீர் 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இ…
-
- 16 replies
- 2k views
-
-
கிழக்கில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக பொதுமக்கள் போர்க்கொடி - கோத்தாபய கடும் எச்சரிக்கை [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 03:08 GMT ] [ கார்வண்ணன் ] கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படையினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொள்ளும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நேற்று பொத்துவிலில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நேற்றிரவு 8 மணிக்கு ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. …
-
- 1 reply
- 709 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜஸ்வன்சிங்ஹா. மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவை வெளிப்படுத்தினார் சின்ஹா. சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டால் அதிலும் தான் கலந்துகொள்வார் என்று அவர் தெரிவித்தார். வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்ஹா, பீஹார் மாநிலத்தின் பலம…
-
- 6 replies
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கில் 59500 கணவனை இழந்த பெண்கள் - அரசாங்கம் 13 ஆகஸ்ட் 2011 வடக்கு கிழக்கில் 59500 கணவனை இழந்த பெண்கள் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 42565 பெண்களும், வடக்கு மாகாணத்தில் 16936 பெண்களும் கணவரை இழந்து வாழ்வதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தவிர்ந்த ஏனைய காரணிகளினாலும் இவர்கள் கணவரை இழந்திருக்கலாம் என அவர…
-
- 1 reply
- 962 views
-
-
தமிழர் அழிய பங்குவகித்த கருணாநிதியும் போர் குற்றவாளிதான்! Saturday, August 13, 2011, 13:51 இந்தியா, உலகம் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் பாரிய பங்கு இருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான கலைராஜன் தெரிவித்தார். எனவே கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான் என தமிழக சட்டசபையில் நேற்று உரையாற்றிய கலைராஜன் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் மக்களின் நலன் காக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத்தினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வீட்டிற்கு மகள் கனிமொழியை அனுப்பி, பரிச…
-
- 1 reply
- 659 views
-
-
மர்ம மனிதன்.. நாவற்குடாவிலும் தற்போது பதற்றம் நிலவுகிறது : இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. [saturday, 2011-08-13 14:35:45] மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நொச்சிமுனை நாவற்குடா வீதியில் நடமாடிய மர்ம மனிதனை பொதுமக்கள் துரத்திப்பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று (13) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ம மனிதன் பிடிபட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த இராணுவத்தினர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்து மக்களைக்கலைத்தபோது வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து பொதுமக்கள் தமது எதிர்ப்பைக் காட்டினர். தற்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் வரவழைக்க…
-
- 0 replies
- 811 views
-
-
Aug 13, 2011 / பகுதி: செய்தி / சிறுமியை பாலியல் கொடுமைக்குட்படுத்திய தேரரை தண்டிக்கவேண்டாம் என சீனாவிலிருந்து மகிந்தா உத்தரவு! 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, மிஹிந்தலை பிரதேசத்தின் பிரபல விகாரையின் விகாராதிபதியை கைதுசெய்ய வேண்டாம் என ஜனாதிபதி சீனாவிலிருந்து காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தேரரை கைதுசெய்தால் அந்த விகாரையில் ,ரண்டாவது விகாராதிபதியாக பணியாற்றும் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவான தேரருக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அத்தோடு அதுசம்பந்தமாக எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடு…
-
- 3 replies
- 1.1k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 தமிழக அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மீனவர்களால் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தினை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கச்சைதீவையும் அதன் அண்டிய பிரதேசத்தையும் சிறிலங்கா கடற்படை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தயாராகும் அதேவேளை, தேவைப்படும் பட்சத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாக சிறிலங்கா விமானப் படையை கச்சைதீவுப் பிரதேசத்துக்கு அனுப்பவும் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. முற்றுகைப் போராட்டத்தின் மூலம் கச்சைதீவுக்குள்; உள்நுழைவதனைத் தடுக்கும் வகையிலான அன…
-
- 2 replies
- 653 views
-
-
வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களைக் கைப்பற்ற இராணுவத்தினர் கடுமையான முயற்சி. Saturday, August 13, 2011, 8:50 வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களைக் கைப்பற்ற இராணுவத்தினர் மும்முரமாக செயற்படத் தொடங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக மருதங்கேணி, ஆழியவளை, வெற்றிலைக்கேணி மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது கரையோர நிலங்களை சட்டப்படி எழுதித் தருமாறு கோரியுள்ள இராணுவத்தினர் அக்காணி, நிலங்களுக்கு எவ்வளவு பெறுமதி வேண்டுமானாலும் எம்மால் தரமுடியும், ஆனால் எங்களுக்கு அக்காணி நிலங்களை சட்டப்படி எழுதித் தாருங்கள் என கட்டாயப்படுத்தி கேட்டு வருகின்றனர் . அவ்விடங்களுக்கு சமீபகாலத்தில்தான் மக்கள் மீள்குடியேற்…
-
- 1 reply
- 478 views
-
-
பளை, மத்திய கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. எல்லா நிகழ்வுகளும் நிறைவேறின. ஆனால் அங்கு பாடசாலையின் சிறப்பு மலர் வெளியிட தடை உத்தரவு வந்தது.ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அவரின் பதில் செயலாளர் இ.இளங்கோவன் இந்த திடீர் அதிரடி தடை உத்தரவை தொலைபேசி மூலம் விடுத்தார் எனத் உதயனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தச் சிறப்பு மலரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சி.சிறீதரனின் வாழ்த்துச் செய்தி இடம்பெற்றிருந்ததே தடை அறிவிப்பு உத்தரவுக்கு காரணம் என்று கல்விப்புல வட்டாரங்கள் தெரிவித்தன.நேற்றைய திறப்பு விழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறியும் ஆஸ்திரேலிய தூதுவர், யுனிசெவ் அதிகாரி, ஆளுநரி…
-
- 2 replies
- 758 views
-
-
75 சிறார் மாணவிகள் கர்ப்பம்: பெற்றோரை கண்டிக்கும் சுகாதாரப் பணிப்பாளர் திருமணமாகாத 18 வயதுக்கு குறைந்த 75 இள வயதினர் யாழ்ப்பாணத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களிலேயே இத்தகைய சமூக சீர்கேட்டு சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் திருமதி. பொறுப்புணர்வற்ற பெற்றோர், ஆசிரியர்களே இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் கண்டித்துள்ளார் சுகாதாரப் பணிப்பாளர். இணையத்தளம், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இள வயதுக் கர…
-
- 7 replies
- 1.6k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின…
-
- 4 replies
- 1.3k views
-
-
திருக்கோவிலில் பொலிஸார் பொதுமக்கள் மோதல்: ஒருவர் பலி: பலருக்குக் காயம் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில் பகுதிகளில் மர்ம மனிதர்கள் விவகாரம் காரணமாக பொதுமக்களுக்கும் பாலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களைச் சுற்றி திரண்ட பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இச்சம்பவங்களில் குறைந்தபட்சம் ஒருவர் பலியானதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். விநாயகபுரத்தில் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இன்று பிற்பகல் இருவரை பொதுமக்கள் வளைத்துப்பிடித்தனர். இச்சந்தேக நபர்களை திருக்கோவில் பொலிஸார், திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி…
-
- 2 replies
- 898 views
-
-
போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் அருகதையில்லை -சம்பிக்க Posted by சோபிதா on 12/08/2011 in செய்தி ஈராக்கில் 109,000 பொதுமக்களை கொன்றொழித்த அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் யுத்தக் குற்றம் தொடர்பாகவோ, மனித உரிமைகள் தொடர்பாகவோ குரல் கொடுக்க அருகதையில்லை என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அத்துடன், இந்தியாவின் தேவைக்காக அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது. எமது தேவைக்கேற்றவாறே படிப்படியாக அவசர காலச் சட்டத்தை நீக்குவோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஜாதி…
-
- 1 reply
- 399 views
-
-
நல்லூரில் 'சிந்தனை செய் மனமே' என்ற பொருளில் யாழ் மாவட்ட நீதிபதி விகடகவி மு.திருநாவுக்கரசு அவர்கள் யாழ்ப்பாணத்தில் தற்போது என்ன நடக்கின்றது என்பதை மிக காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் நடாத்திய சிறப்புச் சொற் பொழிவு தங்களுக்காக 1) தனக்கு பெற்றொல் ஊற்றி பெண்ணுடன் கட்டிப் பிடிப்பிடித்து சாதல் , ஜோடியாக மரத்தில் தூக்கில் தொங்குதல் என்பன யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறுகின்றது. முன்னைய காலங்களில் இவ்வாறான புதினமான சம்பவங்கள் ஒரு போதும் நடைபெறவில்லை 2) அந்தக் காலத்தில் மாதம் ஒரு விவாகரத்து, மாதம் ஒரு தாபரிப்பு , ஆறு மாதத்திற்கு ஒரு கொலை இவ்வாறு இருந்தது. ஆனால் தற்போது ஒரு மாத்திற்கு 100 தாபாரிப்பு வழக்கு, 40 விவாகரத்து, மாதம் 20 கொலை 5 பாலியல் வல்லுற…
-
- 2 replies
- 1.5k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 இன்று மலையகத்தில் இரண்டு கிறிஸ் பூதங்கள் பிடிபட்டன பொதுமக்கள் அவைகளை தாக்கும் போது சிங்களத்தில் ஓலமிட்டன.சிறிலங்காவில் இப்போ சிறுபான்மை இன மக்களை கலக்கி வருவது கிறிஸ் பூதங்கள் எனும் மாயாவிகள்.ஆரம்பத்தில் மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் தமிழ் பெண்களை இலக்கு வைத்த கிறிஸ் பூதங்கள் இப்போ கிழக்கு மாகாணம் திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் , முஸ்லிம் மக்களையும் இலக்கு வைக்கின்றது. . ஆனால் இந்த கிறிஸ் பூதம் தொடர்பில் பொலிசார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பொதுமக்கள் சில சந்தேகப்பேர்வழிகளை பிடித்துக்கொடுத்தாலும் அவர்களை இராணுவம் மற்றும் பொலிசார் விடுவித்து வருகின்றனர். . இதனால் சிறுபான்மை மக்களுக்கு பீதியும் சந்தேகமும் …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஜேர்மனிய தூதுவரான இராணுவ அதிகாரி ஜகத் டயஸை மீள் அழைக்கத் தீர்மானம்-போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் நோக்கமா? ஜேர்மனிக்கான இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பதவிக் காலம், செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அவருக்குத் தொடர்ந்தும் பணி நீடிப்பு வழங்குவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் தீர்மானித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சர்வதேச ரீதியில் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.அதேவேளை, ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான அதிகாரியான சந்திரபால லியனகே, இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திலிருந்து இலங்கைக்குத் தி…
-
- 7 replies
- 1.2k views
-
-
வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீ நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் 9ம் நாளாகிய இன்று. அதிகாலை 5.00 மணி பூசை பின் 10.00 மணிப் பூசை யாவும் திருவிழாக்கால சிறப்புடன் பல முருகனடியார்கள் ஆலயத்தில் கூடிநிற்க பத்தி பரவத்துடன் இடம்பெற்றது. தவில் நாதஸ்வர இன்னிசை மழை காதுகளை நனைக்க ஆலய மணி ஓசை எட்டுத்திக்கும் ஒலிக்க பகல் 10.15 மணிக்கு ஆலயத்தினுள்ளே எம்பெருமானின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை சமேதரருக்கு ஆலய பிரதம சிவாச்சாரியார் அவர்களால் பூசை வழிபாடுகளை சிறப்புற செய்யப்பட்டது.தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்றதை அடுத்து வேல் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீற்று நாவல் …
-
- 1 reply
- 681 views
-
-
http://www.youtube.com/watch?v=T2x4smxfGcM&feature=related http://www.youtube.com/watch?v=JAfAig5I46I&feature=player_embedded#at=37 நன்றி தமிழீழ ஆதவாளர்கள் கூட்டமைப்பு - மதுரை குறிப்பு : பிரித்தானிய உறவுகள் முதலாவது காணொளியை பார்க்க முடியாமைக்கு வருந்துகிறேன். Proxy மூலம் முயற்சி செய்து பாருங்கள்.
-
- 0 replies
- 728 views
-
-
அமெ. இறுதி எச்சரிக்கை கவலையில் இலங்கை,அந்நாட்டின் அறிவிப்பை நாங்கள் அசட்டை செய்யவில்லை என்கிறார் கெஹலிய இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. இது எமக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. அதே சமயம் அமெரிக்கா எமக்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கையை நாம் சிறிய விடயமாகப் பார்க்கவில்லை அதனை அசட்டை செய்யவும் இல்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாம் கடந்த பல மாதங்களாக பொறுப்புக்கூறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். …
-
- 4 replies
- 982 views
-
-
எமது இலக்கு சுதந்திர தமிழீழமே!: பிரதமர் வி.ருத்ரகுமாரன் பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011 தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை புறந்தள்ளி விட்டு, சலுகை - அபிவிரித்தி அரசியலை முன்னிறுத்தும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுந்திர தமிழீழமே என நாடு கடநத தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரங்கள், நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழர் அரசியல் முன்னெடுப்புகள் என பல்வேறுபட்;ட விடயங்களுக்கு, மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும், ஐ பி சி தமிழ் வானொலியின் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் பங்கெடுத்திருந்தார். …
-
- 2 replies
- 967 views
-
-
இனவெறிப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது விசாரணை கோரி டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம் டெல்லி: இனவெறி படுகொலையை இலங்கையில் அரங்கேற்றய அந்த நாட்டு அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், இலங்கைக்கு ஆதரவு தரும் போக்கை அனைத்து நாடுகளும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் பெரும் திரளாக பங்கேற்றனர். மத்திய அரசு, அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்கு தரும் ஆதரவு போக்கை நிறுத்திக் க…
-
- 3 replies
- 486 views
-
-
கூட்டமைப்பிற்கு கடைசி வாய்ப்பு தேர்வுக்குழு அமைத்து ஆறு மாதங்களில் தமிழர்களுக்கு தீர்வை தந்துவிடுவோம் என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இந்தத் தடவை கண்டிப்பாக ஏமாற்றமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார். அறுபது ஆண்டுகளாக ஏமாற்றும் ஓர் இனவாத அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறதென்றால் அந்த ஆறு மாதங்களை அகல்வித்துப் பார்க்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை. தற்போது சனல் 4 காணொளி ஏற்படுத்தி வரும் தாக்கம், அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் கொடுக்கும் அழுத்தம் யாவும் பலம் குன்றி சுரத்து கெட்டுப்போக இந்த ஆறுமாதங்கள் போதும் என்பதை கூட்டமைப்பு கருத்தில் எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது தேவையில்லை இப்போது இருக்கும் உரிமைகளே போதுமானது என்று கோ…
-
- 0 replies
- 889 views
-
-
இன்று காலை கோப்பாய் இராஜவீதி பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு வீதியில் பனையில் கயிறு போட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் மற்றும் ஆணொருவரின் சடலமும் ஜோடியாக தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேலும் http://www.youtube.com/user/jaffnatv#p/u/0/xfyMx2rZv9c கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் த…
-
- 3 replies
- 1.6k views
-