ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
இந்த வழக்கு நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும், இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில் மேலதிக சந்தேகநபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக…
-
- 2 replies
- 439 views
-
-
1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான அல்பிரட் துரையப்பாவின் மருமகனான கொழும்பில் பிறந்த நிஷான் துரையப்பா, தற்போது கனடாவின் பீல் கோட்டத்தின் காவல்துறையின் தலைமையராக இருந்து இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் இங்கு காவல்துறை தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் உண்ணோட்டமிட்டார். பின்னர் அவர் துணை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். திரு நிசான் துரையப்பா தான் பிறந்த வீட்டிற்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். https://www.sundaytimes.lk/231231/news/duraiappahs-nephew-glad-to-be-back-home-543904.html
-
- 55 replies
- 5.1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 04:32 PM வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இட்டபோது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அவர்க…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை : நினைவேந்தல் முன்னெடுப்பு! திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்தும் பேசப்படுகின்றது. சர்வதேச மன்னிப்பு சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசு மீது வன்மையான கண்டனத்தை அவ்வேளை வெளியிட்டிருந்தனர். திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களான இவர்கள், பாடசாலை கல்வியை முடித்த பின்னர் பல்கலைக…
-
- 1 reply
- 260 views
-
-
பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சியில் புதைக்க நடவடிக்கை! கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – குப்பிளானில் உள்ள களஞ்சியசாலையில் பழுதடைந்த உருளைகிழங்கு விதைகளை பொதி செய்து வாகனத்தில் ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. பொலித்தீன் பையில் பாதுகாப்பாக அகற்றி விவசாய நிலங்கள், நிலத்தடிநீர் மற்றும் குடியிருப்புக்களை பாதிக்காத வகையில் புதைக்கப்படவுள்ளது. விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பில் மூன்று அடி ஆழத்திற்கு கீழே பாதுகாப்பு முறைமைகளை கையாண்டு சில தினங்களுக்குள் பழுதான உருளைக்கிழங்கு விதை…
-
- 0 replies
- 281 views
-
-
Published By: VISHNU 10 DEC, 2023 | 03:15 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில், நேற்று சனிக்கிழமை (9) உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டன. கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும், வாய்மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்துக்கான சிபாரிசினை வழங்கியதாக குறிப்பிட்டதற்கு இணங்க சமூகமட்ட அ…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 01 JAN, 2024 | 02:46 PM ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் தனது துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் துறைமுகத்திற்குள்ளும் விசேட பொருளாதார வலயத்திற்குள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிவழங்கப்போவதில்லை என கொழும்பு புதுடில்லியிடம் தெரிவித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக இந்தியாவிற்கு இலங்கை தகவலை தெரிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்தி…
-
- 1 reply
- 423 views
- 1 follower
-
-
பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர…
-
- 6 replies
- 443 views
-
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்! (புதியவன்) இலங்கை நாயகி கில்மிஷா பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது https://newuthayan.com/article/இலங்கை_நாயகி_கில்மிஷா_வந்தடைந்தார்!
-
- 56 replies
- 5.2k views
- 1 follower
-
-
பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! Published By: NANTHINI 31 DEC, 2023 | 11:03 AM பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் நாளை (ஜனவரி 1) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும், சோறு மற்றும் கொத்து …
-
- 11 replies
- 800 views
- 1 follower
-
-
2023 ஆம் ஆண்டு 14,66,556 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இந்த ஆண்டு சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை நாட்டுக்கு சுமார் 719,978 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் சமூக கட்டமைப்பின் அமைதியின்மை ஆகிய காரணிகளால் சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்ததாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகிறது. 2023 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை …
-
- 0 replies
- 170 views
-
-
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாக குறைவடையும். எனவே கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கோரிக்கையை முன்வைத்த அவர், மேலும் குறிப்பிடுகையில், 2023 மூன்றாம் காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி வேகமானது நேர்மறையாகியுள்ளது. அதற்கமைய 2022இல் மறை பெறுமானத்துக்கு வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் 2023இல் …
-
- 0 replies
- 340 views
-
-
”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்” தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக சிறந்தது. அப்படியான தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால், தானே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற பெரிய ஆசை தனக்கு இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி…
-
- 12 replies
- 1.1k views
-
-
சில்லறை விற்பனை சந்தையில் நேற்று (31) ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1900 ரூபா தொடக்கம் 2200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, பச்சை மிளகாய் ஒரு காய் 15 முதல் 20 ரூபா வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருளாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் அளவு வழமையை விட எழுபத்தைந்து வீதத்தால் (75%) குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நாட்களில் பெய்த கனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்து, தொண்ணூறு சதவீதம் (90%) பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று (31ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய நகரங்களின் சில்லறை விற்பனைச் சந்தைகளில் பல வகையான மரக்கறி வகைகள் கிலோ …
-
- 4 replies
- 479 views
- 1 follower
-
-
இந்து மதத்துக்கும் அரசமைப்பில் முன்னுரிமை யாழ். வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க முடிவு பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசமைப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட சில கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் சைவ அமைப்புகள் எதிர் நோக்கும் சமயரீதியான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டபத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மற வன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது. இந்து அமைப்புகளின் கோரிக்கைகள் இதன்போது அடையாளம் காணப்பட்டு அவை அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியின் யாழ…
-
- 0 replies
- 453 views
-
-
“வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம்” "06 மாதங்களுக்குள் போதை பொருளையும் ஒழிப்போம்" adminJanuary 1, 2024 வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் மாத காலப்பகுதிக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையால் வ…
-
- 0 replies
- 485 views
-
-
யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் அபாயம்! சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்- விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்!
-
- 2 replies
- 504 views
-
-
பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை. வடக்கு சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்குமொன்று ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் கடற்பரப்பை அண்டிவாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு சுமாத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், சுமாத்திரா தீவுகளை அண்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எவ்வித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை. இதேவேளை, நேற்று இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்…
-
- 9 replies
- 729 views
-
-
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டடது. இதன்போது கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
அரசியல் ஆசீர்வாதத்துடன் குடாநாட்டில் மீண்டும் மணல் 'மாபியாக்கள்' [ஆதவன்] யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த காலங்களில் அரசியல் பின் புலத்துடன் மணல் வியாபாரத்தை முன்னெடுத்த தரப்புகள் மீளவும் மணல் விநியோகத்தில் தலையீடு செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. யாழ். மாவட்டச் செயலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகரித்த விலையில் அந்தத் தரப்புகள் மணலை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மணல் அகழ்வுகளை பிரதேச செயலரின் அனுமதியுடன் மேற்கொண்டு வருகின்றது. அகழப்படும் மணல் யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையா…
-
- 0 replies
- 256 views
-
-
சிறுமி வன்புணர்வு; 3 சிறுவர்கள் கைது ஆதவன்] ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14. 16 மற்றும் 18 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். [எ] https://newuthayan.com/article/சிறுமி_வன்புணர்வு;_3_சிறுவர்க…
-
- 0 replies
- 357 views
-
-
30 DEC, 2023 | 06:41 PM ஆர்.ராம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து பொதுவேட்பாளரை களமிறக்குவதோ, அல்லது தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும், இன,மத,மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும். அவ்வாறு இல்லாது விட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்த…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
உண்மை, நல்லிணக்க ஆ.குழுவில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு (ஆதவன்) காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு என்ற பெயரில் முன் வைக்கப்படவுள்ள உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக் குழுவில் நம்பிக்கை இல்லை. இந்த ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் கபட நாடகம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:- பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் பேசாது அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி, உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் செயற்றிட்டத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். உண்மைக்கும் …
-
- 1 reply
- 489 views
- 1 follower
-
-
30 DEC, 2023 | 05:16 PM இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொறு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார். இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
30 DEC, 2023 | 06:35 PM (நா.தனுஜா) வரி அறவீட்டைப் பொறுத்தமட்டில் (இறைத்துறை) சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக கொள்கை மறுசீரமைப்புக்களுடன்கூடிய தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மிகவும் அவசியமானவையாகக் காணப்படுகின்றன. மிகவும் சவால்மிக்க இப்பாதையிலிருந்து ஏதேனும் விலகல்கள் ஏற்படுமாயின் அது நிதியியல் முறைமைக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பாதிப்புக்களையும், மீளச்சீர்செய்யமுடியாத விளைவுகளையும் ஏற்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெள்ளிக்கிழமை (29) வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான நிதியியல் ஸ்திரத்தன்மை மீளாய்வு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விட…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-