Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 19 DEC, 2023 | 02:57 PM வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொட…

  2. Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 01:17 PM மன்னார் கரிசல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம் பெற்றுள்ளது. பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற போது அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அ…

  3. ஓய்வு வயதை அறிவித்தார் சுமந்திரன் வி.ரி. சகாதேவராஜா இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில், “எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஓய்வு-வயதை-அறிவித்தார்-சும…

  4. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி! மணி யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது. மகஜரில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு, 4 வருட தாமதத்தின் பின்…

    • 2 replies
    • 342 views
  5. யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தெல்லிப்பழையில் 142 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் திருநெல்வேலியில் 43 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. (19.12.2023) காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்…

  6. ஹரிகரன் இசைநிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது December 18, 2023 யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேடை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த உங்களை மனவருத்தத்தில் ஆட்ப…

  7. GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்! adminDecember 19, 2023 உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புக…

  8. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுதான் அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினர் டொன்டேவிஸ். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆதலால்தான் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தீர்வு இப்போது தேவையாகவுள்ளது என்றும் அவர் தன் கருத்தை, நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றார். நல்லது. ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கக் காங்கிரஸினரோ அல்லது கனேடிய நாடாளுமன்றத்தினரோ ஆதரவைத் தெரிவிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம் முதல் இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்களை அவர்கள் முன்வைத்தே வந்திருக்கின்றார்கள். இந்…

  9. Published By: VISHNU 18 DEC, 2023 | 09:12 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடமாகாணத்துக்குச் சென்றிருப்பதுடன், அங்க…

  10. Published By: VISHNU 18 DEC, 2023 | 08:34 PM (நா.தனுஜா) நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பே…

  11. தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் அவரது ஆட்சிகாலத்தில்தான் கொலைகள் அரங்கேறின. கையில் வேண்டுமானால் இரத்தக்கறை இல்லாமல் இருக்கலாம் ஆனால், அலுமாரியில் நிச்சயம் எலும்புக்கூடுகள் இருக்கும் - என்று ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:- பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய மஹிந்தராஜபக்ச, தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என்றும் எம்முடன் இணையுங்கள் என்றும் கூறியுள்ளார்.2005 முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்சதான் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவரது சகோத…

  12. Published By: DIGITAL DESK 3 18 DEC, 2023 | 03:58 PM உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை சந்திப்புக்கள் நடத்தப்பட்டன. இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடய…

  13. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 03:40 PM இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமில்லை, அதன் அண்டை நாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதித்துக் கொண்டிருந்த வேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவ முன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் இயல்பான நன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்…

  14. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 2024இல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க தேசத்தை நடத்த அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்,” என வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/285098

  15. இலங்கைக்குப் பெருமை சேர்த்த `புசாந்தன்`. மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363534

    • 6 replies
    • 543 views
  16. சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை! adminDecember 18, 2023 உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்ட…

  17. 18 DEC, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். குறித்த நியமனமானது கடந்த (13) திகதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வின்சன்ட்…

  18. 18 DEC, 2023 | 11:12 AM கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும் இலகுவில் அடையாளம் காணமுடியாத கொரோனா வைரசின் புதியமாறுபாடு பரவிவருவதை தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் பரவும் புதிய நோயினால் இலங்கைக்கு எப்போதும் ஆபத்து என்பதால் இலங்கை எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளது என சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். …

  19. 18 DEC, 2023 | 10:06 AM பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில், 7/8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்த மக்கள் பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெர…

  20. அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும் கலைக்கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதால் மீண்டும் கடன் பெற முடியும். எனவே, விரைவில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்கள…

  21. வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடைக் காலம் – அரசாங்கம் ஆலோசனை. 2024 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்குள் பயணிப்பதற்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கு நிலையான செயற்பாட்டு நடைமுறையை இலங்கை தெரிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் மற்றும் சீன புவி இயற்பியல் மற்றும் நில அதிர்வு ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 க்கு கொழும்பிற்கு அன…

  22. 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை 25 வீதத்தால் வீழ்ச்சி கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/285005

  23. 17 DEC, 2023 | 05:39 PM தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நேற்று சனிக்கிழமை (16) மாலை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் 941 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 9320 பேரும், மண்முனைபற்று பிரதே…

  24. தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையில் இருந்து பாதுகாக்க முடியும் என நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் விசேட வைத்தியர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/285002

  25. 17 DEC, 2023 | 12:57 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார - அரசியல் ஸ்திரதன்மை என்பது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, பிராந்திய நலன்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை போன்ற நட்பு நாடொன்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது அதன் தாக்கம் நிச்சயம் பிராந்தியத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப மற்றும் வலு சக்தி உள்ளிட்ட புதிய இணைப்புகளினால் இலங்கை நலனடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மூன்று ஆண்டு கால இந்திய இராஜதந்திர சேவையை வெள்ளிக்கிழமையுடன் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ள உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.