ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
கழிவகற்றலில் அக்கறையில்லை சுப்பிரமணியம் பாஸ்கரன் 'கிளிநொச்சி நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சேரும் கழிவுகள் உரிய முறைகளில் அகற்;றப்படாமல் காணப்படுவதுடன், கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையினர் அக்கறை செலுத்துவதில்லை' என்றும் பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள கிளிநொச்சி பொதுச்சந்தை, பஸ் தரிப்பிடம், இரணைமடு பொதுச்சந்தை, இரணைமடுச்சந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேர்கின்ற கழிவுகளை அகற்றுவதற்கான முகாமைத்துவம் பின்தங்கிக் காணப்படுவதாக, வர்த்தகர்கள், பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக…
-
- 0 replies
- 230 views
-
-
மகா ஒயா பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி: 3 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 05:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியான மகா ஒயா பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மகா ஒயா பிரதேசத்தில் உள்ள தம்பட்டி எனும் இடத்தில் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை பி…
-
- 0 replies
- 954 views
-
-
யுத்தத்தின் போது அமெரிக்கா உதவியது: டிலான் By J.Stephan 2012-11-30 16:03:37 யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா எமக்கு உதவியது அதேவேளை சில பிரச்சினைகளையும் கிளப்பினர். இதனால் எந்தப் பிரச்சினையையும் கிடையாது என பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இந்தியா இன்று பெரிய அண்ணாவாக அன்றி பெரிய அக்காவாக மாறியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில். யுத்தத்தின் போது இந்தியா சீனா பாகிஸ்தான் என பல…
-
- 6 replies
- 418 views
-
-
வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கட்டையால் தாக்கினர் – மாற்றுத்திறனாளி முறைப்பாடு! மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதா…
-
- 0 replies
- 297 views
-
-
By J.Stephan 2012-12-04 16:00:58 ஆபிரஹாம் லிங்கன், அதிகாரத்தை பரவலாக்கி அமெரிக்காவை ஒன்றுபடுத்தினார். ஆனால் இலங்கையிலுள்ள சில முட்டாள்கள் அதிகாரங்களை ஓரிடத்தில் கையளித்து நாட்டில் இனரீதியான இராச்சியங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என ஐ.தே.க. எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'பாராளுமன்றம் இன்று சேறுபூசும் இடமாக மாறியுள்ளது. அதன் இறையாண்மைக்கு கொச்சைப்படுத்தும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புரிமை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தாம் எதிர்ப்பவர்களை கீழ்த்தரமாக விமர்…
-
- 0 replies
- 381 views
-
-
மட்டக்களப்பு பங்குடாவெளியிலுள்ள கருணா குழுவினரின் முகாம் கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளானமை யாவரும் அறிந்ததே. செங்கலடி- பதுளை வீதியில் பங்குடாவெளியிலுள்ள இந்த முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணா குழுவினரின் இந்த முகாமில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கருணா குழு உறுப்பினரான முகாம் பொறுப்பாளரும் மற்றொருவரும் உடனிருந்த பிள்ளையான் குழு உறுப்பினர்களால் உணவருந்திக்கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொலைசெய்த 7 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக ஜே.வி.பி போராடும்.-அநுரகுமார தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராடுவோம் என்று ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க, யாழ் வணிகர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ இந்தச் சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்திருந்தது. இதன்போது எமக்கு தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்கள். குறிப்பாக காணிப் பிரச்சினை முகாம்களில் உள்ள மக்களது மீளக்குடி…
-
- 0 replies
- 237 views
-
-
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் தாயாரில்லை என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர் நிறுத்தம் ஒன்றுக்கு நாம் தயாரில்லை. இதனால் வரும் எந்த சவாலையும் நாம் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். விடுதலைப் புலிகளால் யுத்த நிறுத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் அதனுள் நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம்.பயங்கரவாதம் இன்று எம்மிடம் சிக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை இல்லாது அழிக்க வேண…
-
- 9 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் cash/voucher (C/V) திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என உலக உணவு நிகழ்ச்சித் திட்ட அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. "யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 15,000 ற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் அடுத்த இரு ஆண்டுகளில் 45,000 பேர் இதில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது" என உலக உணவு திட்டத்தின் சிறிலங்காவுக்கான பதில் பிரதிநிதி மட்ஸ் பொல்வல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் ஒரு மாதத்திற்கு 11 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சான்றுச் சிட்டை பெற்றுக் கொள்வர். இது ஆறு மாதகாலத்திற்கு பயன்படுத்தக் …
-
- 0 replies
- 350 views
-
-
மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை முன்னால் இந்த ஜனனதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கலந்து கொண்டு கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். htt…
-
- 0 replies
- 417 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் காவல்துறையினரின் புதுவிதமான சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 613 views
-
-
குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்குமாறு மக்கள் கோரிக்கை 1996 ஆம் ஆண்டு மூதூர் – குமாரபுரத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை – குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் க…
-
- 1 reply
- 256 views
-
-
சந்தேகநபர் ஒருவரை அவசரகாலச்சட்டத்தின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஒன்றரை வருடங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபர் ஒருவரை 90 நாட்களுக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு அனுமதிப்பதற்கும், விளக்கமறியலில் வைத்திருப்பவரை மீண்டும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் சட்டமா அதிபருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த வர்த்தமானியை ரத்துச்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு சட்டவிரோதமாக மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.10 மணிக்கு இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு செல்லவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தங்களின் பயணப்பையில் வைத்திருந்த அலங்கார பூக்களினுள் வெளிநாட்டு நாணயங்ளை மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கடத்தலில் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய இருவரும் கட்டுந…
-
- 0 replies
- 167 views
-
-
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்அக்கராயன் மண்ணிலே அக்கிராச மன்னனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மன்னனிற்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொங்கல் பொங்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவது பழக்கம் இன்று கரைச்சி பிரதேச சபையினால் அந்த மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்த சென்ற போது …
-
- 0 replies
- 356 views
-
-
தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் - கடலுக்கு அடியில் - ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு - நினைவு - நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்து களை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது. இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் கிழக்குப் புற கடலோர மக்கள் இன்னும் மீளவேயில்லை. …
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை 07 ஜனவரி 2013 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேர்த் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். குடும்பஸ்த்தரான தமிழர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வழங்கவில்லை. நெஹ்ரூ மற்றம் மனுஸ் தீவுகளில் புகலிட முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவரின்…
-
- 2 replies
- 331 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் உரிய நியதிகளைப் பின்பற்றியே நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் மோசமான முறையில் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134881/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 155 views
-
-
அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்
-
- 17 replies
- 3.6k views
- 1 follower
-
-
கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. - [தமிழ்நாதம்] டந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார…
-
- 54 replies
- 8k views
-
-
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அந்தரங்க செயலாளராக இருக்கும் அவரது சகோதரர் மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை, போலி உறுதிகளை தயாரித்து அபகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமன்னார் புகையிரத நிலைய பழைய பாலத்தடி உட்பட தலைமன்னார் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் தன்வசப்படுத்தியுள்ளார். இந்த காணிகளுக்கு உரிமையானவர்கள் அதன் உறுதிப் பத்திரங்களை வைத்துள்ள போதும் குறித்த அமைச்சரின் சகோதரர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி அக் காணிகளுக்கு சுற்று வேலிகளை அடைத்து வருகின்றார். தலைமன்னார் காவல்துறையினர் அமைச்சரின் சகோதரருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். பல வ…
-
- 0 replies
- 440 views
-
-
‘யாழ். மக்களின் பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்’ -எஸ்.நிதர்ஷன் யாழ். மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தேவைகள் மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார். யாழுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார், அமைச்சர் வாசுதேவவின் யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்த…
-
- 0 replies
- 444 views
-
-
'காணிகள் விடுவிக்கப்படாதென ஜனாதிபதி அறிவிக்கவில்லை' -எஸ்.ஜெகநாதன் 'வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயமாகச் சுமார் 4,400 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் 460 ஏக்கர் காணிகள் விரைவில் வி…
-
- 0 replies
- 358 views
-
-
இடம்பெயரும் வன்னி மக்கள் மீது சிறிலங்கா முப்படையினரும் கூட்டுத்தாக்குதல்: பெண் பலி; 60 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 07:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதில் அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர். வடமராட்சி கிழக்குப் பகுத…
-
- 2 replies
- 528 views
-