Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாய் கடிக்குள்ளான 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றது. அநுராதபுரம் மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவர்களே இன்று அதிகாலை 7 மணிளவில் இவ்வாறு நாய் கடிக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் மூன்று பேர் மோசமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாடசாலையில் இருந்த ஆசிரியர்கள் சிலர் நாயை அடித்து கொலை செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5744

  2. இரா­ணுவமுகாமுக்கு முன்னால் கத­றி­ய­ழுது மக்கள் ஆர்ப்­பாட்­டம் (கே.குமணன்) கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தம­து­ சொந்த நிலங்­களை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள இரா­ணு­வத்­தினர் அவற்றை விடு­விக்­க­வேண்­டு­மென கோரி கேப்­பா­ப்பு­லவில் உள்ள முல்­லைத்­தீவு இரா­ணு­வத்­த­லை­மை­ய­கத்­துக்கு முன்­பாக முன்­னெ­டுக்கும் போராட்டம் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் தொடர்ந்­தது. மூன்­றா­வது நாளான நேற்று போராட் டத்தில் ஈடு­பட்­ட மக்கள் கேப்­பா­பு­லவின் பிர­தான வீதியை மறித்து அமைக்­கப்­பட்­டுள்ள முல்­லைத்­தீவு பாது­காப்பு தலை­மை­ய­கத்தின் பிர­தான வாயில் முன்­பாக திரண்டு இரா­ணு­வத்­துக்கு எதி­ராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்­களை எம்­மிடம் தாருங்கள்…

  3. வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்... [saturday, 2013-07-13 20:14:47] ...தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் வலியுறுத்தல். அறிவிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுவதோடு, கால அட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்பட வேண்டியவரின் தகுதிகள் பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்ட ஆளுமை பற்றியும், ஆங்கில மொழிப்புலமை பற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்ட…

    • 17 replies
    • 1k views
  4. சுமந்திரன் விலக வேண்டும்!! மணிவண்ணன் களமிறங்க வேண்டும் மணிவண்ணன் மேயராக வருவதற்கு தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய ஒருவர் முழுமையான ஆதரவு வழங்கியிருந்தமை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எம்.ஏ.சுமந்திரன் மணிவண்ணனை சந்தித்து மேயர் பதவிக்கு நிற்பதற்கு ஆலோசனை வழங்கியிருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “களம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில், https://www.meenagam.com/சுமந்திரன்-…

  5. அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் ....... கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் :தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நன்றி நக்கீரன் . தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு , மத்திய அரசுக்கும் ஒரு தந்தி அடித்து விட்டால் ........ காலுக்குள்ளை கச்சை தீவு கிடக்கும் .

  6. உண்மையைக் கண்டறியும் குழு முள்ளிவாய்க்காலுக்கும் செல்லும் உண்மையைக் கண்டறிவதற்காக உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரும் பிரிட்டன் நாடாளுமன்றக்குழுவினர், இறுதிக் கட்டச் சமரில் மனிதப் படுகொலைகள் அரங்கேறிய முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளனர். அதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் மேற்படிக் குழுவினர் வடக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுடவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. அத்துடன், கொழும்பில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க …

  7. வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணக்கம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணங்கியுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89574

  8. பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் – சந்திரசேகரன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அவசர அவசரமாக இவ்வாறான ஒரு சூழலிலேயே சீனாவிற்கு நகரத்தை …

    • 0 replies
    • 279 views
  9. ஏமாற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். மன்னார், மரிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கமும் எங்களுக்கு நல்லதை செய்யாமல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்சிகளை செய்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவ…

    • 0 replies
    • 197 views
  10. மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு,பகல் பாராது நாளாந்தம் மின் தடங்கள் ஏற்படுவதினால் மன்னார் மாவட்ட மக்களும்,மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திடீர்,திடீர் என மின்சாரம் தடைப்பட்டு வருகின்றது.இதனால் மின் பாவனையாளர்களது விலையுயர்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முஸ்ஸிம்கள் புனித நோன்புக்காலத்தை அனுஸ்ரித்து வருகின்ற நிலையில் ஆதிகாலை நேரங்களில் மின் தடங்கள் ஏற்பட்படுகின்றமையினால் புனித நோன்புக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதே வேளை எத…

  11. இந்திரா காந்தி இலங்கையில் சீனா இராணுவ தளம்அமைப்பதை தடுத்தார். ஆனால் இப்போது ஆயுத கிடங்கே திறக்கப்பட்டுள்ளது: பழ.நெடுமாறன் கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டுபேசும்போது இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாதவன் வரவேற்றார். நிகழ்வில் பழ.நெடுமாறன் கூறியதாவது:- அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. ராணுவ உடன்பாடு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3-ம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்ப…

  12. எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க வடக்கு மக்களுக்கு முடியவில்லை: ராஜித சேனாரத்ன கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தாம் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டபோது அதிவேக வீதிகளையும் விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அமைத்த போதிலும் மக்களுக்கான வீடுகளை அமைக்க முடியாமற்போனதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியாமற்போனமையை வடக்கின் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். வட பகுதிக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை செலவிட்டு, அதிவேக வீதிகளை அமைத்தாலும் அப்பகுதி மக்களுக்கு அதில் நடந்து செல்லவ…

  13. இலங்கை முகாம்! நெஞ்சை சுட்ட நிஜம்! நேரில் கண்ட பத்திரிகையாளர் ஜெயாமேனன்! தேன் என்று சொல்வதால் நாக்கு இனிக்காது. நலன்புரி முகாம் என்றும் உலகின் மிகப்பெரிய மறுவாழ்வு மையம் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் மனித அவலத்தின் சாட்சியாகவே இருக்கின்றன இலங்கையில் உள்ள அகதி முகாம்கள். சொந்த மண்ணில் அகதிகளாகத் தவிக்கும் ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்களின் வாழ்நிலை குறித்து அரசுத்தரப்பிலான அதிகார மிக்க பொய்களைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளின் நிவாரண உதவியைப் பெறுவதற்காக ராஜபக்சே கட்டவிழ்த்துவிடும் பொய்களை ரத்தினக் கம்பளத்தில் தாங்கிப்பிடித்து, அதனை அப்படியே வெளியிடும் சில ஊடகங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் ம…

  14. (எம்.மனோசித்ரா) எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உலக சந்தையில் எரிபொருள் தாங்கியொன்றின் விலை 20 டொலர் வரை குறைவடைந்த போதிலும், அதன் மூலம் பயன்பெறக் கூடிய சலுகையை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஊடாக நிதியமொன்றை ஸ்தாபித்து மக்களுக்…

    • 2 replies
    • 363 views
  15. தொப்பிகலைகாட்டுப் பகுதியில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சிறிலங்கா பொலிசார் தெரிவிப்பு மட்டக்களப்பு தொப்பிகலை காட்டுப் பகுதியிலுள்ள தரவைக்குளத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட 3 விமான அழிப்பு ஆயுதங்கள் நேற்று மாலை மறைவிடமொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியாவில் நிவாரண கிராமமொன்றில் கைதான விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வவுனியாவிலிருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழுவினரால் ஆழமான குழியொன்றில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆயுதங்கள் பகுதி பகுதியாக மசகு பூசப்பட்டு பொலித்தீனினால் சுற்றி புதை…

  16. ஆபாச இணையதளங்கள் சிறிலங்காவில் தடை – சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் படங்கள், வீடியோக்கள் கொண்டுள்ள சுமார் 12 ஆபாச இணையத்தளங்களைத் தடைசெய்யும்படி சிறிலங்கா தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணையத்துக்கு (TRC) சிறிலங்கா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் பலவற்றை இந்த தளங்கள் கொண்டிருப்பதாகவும், இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதால் அனைவரும் அவற்றைப் பார்க்கிறார்கள் என்றும் போலீசார் முறையிட்டதாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கொழும்பு குற்றவியல் நீதிபதி நிஷாந்த கப்புராச்சி கூறியுள்ளார். வலைத்தளத்தின் சொந்தக்காரர்கள் இந்தத் தளங்களை 14 நாட்களுக்குள் தடுக…

    • 16 replies
    • 2.1k views
  17. யாழ். கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணறுகளின் நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலத்தில் புதைத்திருந்த டீசல் தாங்கி மூலம் 2 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவடைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை எரிபொருள் கசிவினை அடுத்த இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கிணறுகளில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு நீரில் டீசல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீடிரென்று தீப்பற்றி எரிந்து அதிலிருந்த ஒருவரும் படுகாயமடைந்து பின்னர் மரணமாகியிருந்தார். அத்தோடு குறித்த நிலையத்தின் முகாமையாளரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்…

  18. தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, 'தந்தை செல்வா நினைவுப் பேருரை' நேற்று (25) மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ராஜித சேனாரத்ன 'இலங்கையில் அதிகாரப் பகிர்வு' என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். "தந்தை செல்வா சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வேறு தெரிவுகள் இல்லாமல் தமி…

    • 1 reply
    • 301 views
  19. கல்வித்துறையிலும் இராணுவத்தை பலப்படுத்தி ஏனைய மாணவர்கள் நிராகரிக்கப்படும் நிலை ; சாணக்கியன் நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். 1970 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்த கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர் எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது ஒரு நாட்டின் ம…

    • 1 reply
    • 291 views
  20. யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது நாயன்மார்கட்டில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்ற சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வாக்களிப்பு முடிவடையும் நேரத்திலேயே ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதற்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை காவல்துறையினர் அனுமதிக்காதபோதே இருதரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவி…

    • 0 replies
    • 442 views
  21. மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்கா…

  22. நாட்டின் அபிவிருத்தியில் சீனா மிக முக்கிய பங்காளி என சிறிலங்கா தெரிவித்துள்ளது. நிதி உதவிகளை வழங்கியதுடன், மட்டுமல்லாது மிகமுக்கியமான தருணங்களில் பீஜிங் தம்முடன் கூடவே நின்று செயற்பட்டுள்ளது எனவும் கொழும்பு கூறியுள்ளது. அண்மையில் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது, எமக்கான ஆதரவை சீனா விரிவுபடுத்தியுள்ளது என்று அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார். வடமேற்கு மாகாணத்தில் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மின் நிலையத்தின் முதல் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தியில் சீனா மிக முக்கிய பங்காளி என்று அங்கு அவர் அழுத்திக் கூறினார். ச…

    • 0 replies
    • 407 views
  23. இலங்கை வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. வவுனியாவில் உள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளம்பெண்கள் இலங்கை ராணுவத்தால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறுவர்களையும் இந்த வகையான செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இலங்கையில் இருந்து முகாம்களுக்கு வரும் சிங்கள வியாபாரிகள், இளம் சிறுவர், சிறுமியரைத் தங்களுடன் பெருமளவில் கொண்டு செல்வதாகவும், அங்கு பாலியல் மற்றும் கொத்தடிமைகளாக அவர்கள் மாற்றப்படுவதாகவும் அத…

  24. முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் உடன் கைது! August 14, 2021 முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த காவற்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவற்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார். 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.