ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது வலுவானது. ஆனால் அது தனது வலிமையை நிரூபிக்க முடியாத அளவுக்கு, கடந்த வருடம் மே மாதத்துக்குப் பின்னர் இரண்டுபட்டு நிற்பதால் சிங்கள அரசின் மீதான போர்க்குற்றங்களை அம்பலமாக்கி அவர்களைக் கூண்டிலேற்ற முடியாத அவலம் தோன்றியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிங்கள அரசு அப்பட்டமான போர்க்குற்றங்களைப் புரிந்தது. இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கும், மனித உரிமைச் சாசனங்களுக்கும் முரணான வகையில் ஏராளமான போர்க் குற்றங்களை சிங்களப் படைகள் மேற்கொண்டன. பொதுமக்கள், ஆலயங்கள், மருத்துவமனைகளைக் குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டமை, வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன் வந்த புலிகளின் தலைவர்களைச் சுட்டுக் கொன்றமை, சரணடை…
-
- 4 replies
- 881 views
-
-
இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது என்றும் யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பயமுறுத்தி சிங்கள குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் எங்கும…
-
- 1 reply
- 885 views
-
-
அரசியல் தீர்வு மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஐனாதிபதி அவர்களுடன் பேச்சுவார்த்தை! 11.11.2010 - வியாழக்கிழமை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் சமகாலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று மதியம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இச் சந்திப்பின்போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ் நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமா…
-
- 0 replies
- 1.9k views
-
-
கோதபாய ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாதென சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக தாம் செய்திகளை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது பத்திரிகை நிர்வாகம் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த போதிலும் தமக்கு அதில் முழுமையான உடன்பாடு இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தமக்கு அளித்த நேர் காணால் எந்தவித திரிபுபடுத்தலும் இன்றி செய்தியாக வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவின் சட்டத்தரணியினால் மேற்கொள்ளப்பட்டு வந்த …
-
- 2 replies
- 514 views
-
-
கடந்த 10.11.1986 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை என்ற தமிழ்க் கிராமத்தில் இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்றுக்குக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தமிழர்களை இலங்கை இராணுவமும், சிங்களக் காடையர்களும் ஈவு இரக்கமின்றி கொன்றழித்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட 320 தமிழர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்போது நடந்த இக்கொடுமையைப் புரிந்த சிங்கள இராணுவத்துக்கோ, காடையர்களுக்கோ எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்துவந்த இலங்கை சுதந்திரக் கட்சியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மாதம் மட்டக்களப்பில் தன…
-
- 5 replies
- 811 views
-
-
ஊடகச் செய்தி இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தை காட்டி ஏறத்தாழ 150க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில் 06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசல கூட வசதி எல்லாம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் செய்யப்படிருந்தது. அவர்களும் நேரடியாக புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை உடனடியாக அமைச்சர்கள் ச…
-
- 10 replies
- 940 views
-
-
http://www.yarl.com/files/101109_vasu.mp3
-
- 15 replies
- 1.2k views
-
-
Nov 11, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / அளவெட்டிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் - இளைஞர் காயம் அளவெட்டிப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி தாக்குதல் காயத்துடன் இன்று (11) மாலை யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கையிலும், வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்துள்ளதாகவும், முதலில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நபர், பின்னர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அளவெட்டி பகுதியை சேர்ந்த ஜே ரஞ்சித் என்பவரே படுகாயமடைந்தவராவார், எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறமுடியவில்லை. pathivu
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கையில் மிகப்பெரிய கட்டடம் சீன அரசு நிறுவனம் அமைக்கும் [11 நவம்பர் 2010, வியாழக்கிழமை 6:15 மு.ப இலங்கை] கொழும்பு,நவ.11 இலங்கையில் மிகப்பெரிய கட்ட டத்தை நிர்மாணிக்கும் வேலைகளை சீன அரசு நிறுவனம் ஒன்று ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. தாமரைக் கோபுரம் (Lotus Tower) என்ற பெயரில் 350 மீற்றர் உயரமாத் தைக் கோண்டதாக இந்தக் கட்டடம் அமைக் கப்படவுள்ளது. தாமரை வடிவத்தில் இந்தக் கோபுரம் சுமார் 20 ஏக்கர் மைதா னத்தை உள்ளடக்கியதாகவும் அமைக் கப்படவுள்ளது. 200 மில்லியன் டொலர் செலவில் இந்தக் கோபுரத்தை அமைக்கும் பணி களை சீன அரசு நிறுவனம் ஒன்றே பொறுப் பேற்றுள்ளது. இது சிறிலங்கா வில் சீனா மேற்கொள்ளவுள்ள அடுத்த மிகப்பெரிய திட்டமாகும். இதன் முதலா வது மற்றும் …
-
- 1 reply
- 505 views
-
-
http://www.tbcuk.com/varather3.mp3 தகவல் மூலம்: முகநூல்
-
- 55 replies
- 4.7k views
-
-
"நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்"! புதன், 10 நவம்பர் 2010 11:57 ”நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்.” இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார். வாழ்க்கைச் செலவு மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றுக்கான குழுவினரை அலரி மாளிகையில் ஜனாதிபதி சந்தித்துப் பேசி உள்ளார். அப்போதே அவர் இலங்கையை முன்பு ஆண்டிருந்த இராஜசிங்க அரசனின் உணவுக் கொள்கைகளை நினைவு கூர்ந்தார். இராஜசிங்க மன்னன் குரக்கன் மாவால் ஆன உணவுகளையெ அமைச்சர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று உத்தரவு இட்டிருந்தார் என்றும் குரக்கனால் ஆன உணவுகளை சாப்பிட முடியவில்லை என்று சில நேரங்களில் அரசனுக்கு முறையிட்டு இருந்தனர் என்றும் ஜனாதிபதி அங்கு தெ…
-
- 5 replies
- 919 views
-
-
11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
-
- 7 replies
- 1.6k views
-
-
இதுக்குத்தான் கூறுவது புலிகளின் சேவை நாட்டிற்கு தேவை இனிமேல் உங்களையெல்லாம் எவர் வந்துகாப்பாற்றபோகிறார்கள்?யாழ் மக்களின் காணிகள் பறிமுதல் வியாபாரம் பறிமுதல் கருணாவை ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவைகாணாமல் போய்விட்டதாகவும் கூறி தற்போது விசாரணை செய்ய முடிவு டக்கிளசை ஒதுக்க திட்டம் அரசின் எந்த ரகசியங்களும் இந்தியாவுக்கு கசியகூடாது என்பதில் திட்டவட்டம் கிழக்கில் ஈரான் அரசின் நேரடி செலவில் 150 ஏக்கர் மக்களின் நிலத்தில் அமைக்கபடும் சர்வதேச தரத்திலான சர்வதேச யாத்திரிகர்களுக்கான மசூதி(இங்கு பயிற்சிக்காக அல்லது பயிற்சி பெற்ற 21பேர் கைதுசெய்யபட்டார்கள் இவர்களனைவரும் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள்) சென்றவாரம் முதல் திருகோணமலையில் மக்கள்கள் வியாபாரிகள் மேல் …
-
- 1 reply
- 1.7k views
-
-
தனது கணவர் யோகரட்னம் யோகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பஸ் ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை தான் நேரில் கண்டதாக யோகரட்னம் யோகியின் மனைவியான ஜெயவதனி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஜெயவதி இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வட்டுவாகலில் மே 18ம் திகதி தனது கணவரை படையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதை தான் நேரில் கண்டதாகவும் அவருடன் புதுவை ரத்தினதுரை ,பேபி சுப்ரமணியம், லோரன்ஸ் திலகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்ளடங்கியிருந்ததாகவும் ஜெயவதனி உறுதிப்படுத்தினார். விடுதலைப் ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
கொக்காவில் கோபுரத்தில் இருந்து வடபகுதிக்கான தொலைக்காட்சி, தொலைபேசி, வானொலி அலைவரிசைகளை அஞ்சல் செய்யும் முழுமையான சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை தொலை தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 270 மில்லியன் ரூபா செலவில் இது புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வாணிப நோக்கில் அலைவரிசையினை பெற விரும்புவோர் தொலை தொடர்பு ஆனைக்குழுவிடம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈபிடிபி உட்பட பல சிங்கள வர்த்தக சேவைகள் அலைவரிசையினை முற்பதிவு செய்துள்ளனராம். Eelanatham. Net
-
- 0 replies
- 818 views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 11, 2010 நிதி வரும் போது வேகமான அபிவிருத்தி வரும், நிதிகள் மட்டுப்படுத்தபடும் போது அல்லது பணியாளர்கள் மட்டுப்படுத்தப்படும் போது, உதவி தேவைப்படும் பிரதேசம் வளராமல் போய்விடலாம் என அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவரான வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் கருத்துதெரிவிக்கு…
-
- 0 replies
- 556 views
-
-
ஓமானில் இருந்து உராய்வு நீக்கி எண்ணெய்யினை நேரடியாக இலங்கை பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலம் இந்திய பெற்றோலிய துறையில் தாம் தங்கி இருக்காது நேரடியாக உற்பத்தியாளர்களிடமே கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது இலங்கை அரசு. அத்துடன் இலங்கைக்கு வட்டியுடனான கடன் அடிப்படையில் கனிய எண்ணெய் வழங்க ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானின் ஜனாதிபதி மொஹமட் அஹமது நிஜாதை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்தபோதே இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் இடம்பெற்ற 9ஆவது ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இணைவாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் உமா ஓயா திட்டம…
-
- 0 replies
- 936 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபை யாழ நகர மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது எல்லா இன மக்களுக்கும் குறிப்பாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் கூட சொந்தமானது என்றார் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா.யாழ்.மாநகராட்சி மன்றத்தின் சுகாதாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதர விழிப்புணர்வுக் கண்காட்சி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ம.மரியதாசன் தலைமையில் நாவலர் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Eelanatham
-
- 0 replies
- 852 views
-
-
இலங்கையில் இருந்து 2கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை சுங்க அதிகாரிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர் . இரண்டு கோடி ரூபா பெறுமதியான இத்தங்கம் சுவிட்ஸர்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டு, சிங்கப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட இருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள மிகப் பெரிய நகைக் கடை உரிமையாளர் ஒருவரின் ஒத்துழைப்பின் பேரில் மேற்படித் தங்கம் சிங்கப்ப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட இருந்ததாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்http://www.tharavu.com/2010/11/blog-post_3655.html
-
- 0 replies
- 459 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இராணுவத்தின் மூத்த புலனாய்வு உறுப்பினர்களை காட்டிக் கொடுத்தார் என்று நம்பப்படும் விசேட அதிரடிப் படையை சேர்ந்த படை விட்டோடி ஒருவர் நேற்று பொலிஸாரால் சூரியவெவ என்கிற இடத்தில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் மூத்த புலனாய்வு உறுப்பினர்களான மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க, மேஜர் துவான் முத்தலிப் ஆகியோரை புலிகள் படுகொலை செய்கின்றமைக்கு தேவையான தகவல்களை விசேட அதிரடிப் படைச் சிப்பாயான இவர் வழங்கி இருந்தார் என்று நம்பப்படுகின்றது. இதனால் இவர் அந்நாட்களில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆயினும் இரண்டரை வருடங்களுக்கு முன் தப்பிச் சென்றிருந்தார். கொழும்பிலு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அமர்வுகளில் பங்கேற்பதற்கு பி.பி.சி. செய்திச் சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. நல்லிணக்க ஆணைக் குழு இம்மாத நடுப் பகுதியில் யாழ். மாவட்டத்தில் மக்களின் சாட்சியங்களை பதிவு செய்ய உள்ளது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டவர் எவரும் யாழ்ப்பாணம் செல்ல முடியாது. இந்நிலையில் யாழ்ப்பாணம் செல்லவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்கவும் பி.பி.சிக்கு அனுமதி வழங்க பாதுகாப்பமைச்சு அனுமதி மறுத்து விட்டது. ஆனால் அனுமதி மறுப்புக்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. ஆணைக் குழுவின் அமர்வுகளில் பி.பி.சி. பங்கேற்க முடியாத வகையில் கடந்த இரு மாதங்களுக்கு இடையில் இரண்டாவது தடவையாக பி.பி.சிக்கு தற்போ…
-
- 0 replies
- 719 views
-
-
ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன. 80 பெண்கள் அடங்கலாக இப்படியான ஆபாச நடிகர்கள் 83 பேரது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கடந்த வாரம் பெற்றிருந்தனர். அவர்களைக் கைது செய்ய உதவுமாறு கோரி இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவர்கள் குறித்து இன்னமும் பொதுமக்களிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று பொலிஸ் தரப்புப் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார். இவர்கள் கைது செய்யப்படுமிடத்து, இத்தகைய ஆபாசப்படங்களை தயாரித்தவர்களை இலக்கு வைக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தக…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பில் நேற்று இரவு முதல் பெய்துவரும் பலத்த மழையினால் கொழும்பு நகரின் பெரும்பாலான வீதிகள் வெள்ளநீரில் மூழ்கிக் கிடப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனால் கொழும்பின் எட்டியாவத்தை - கொட்டாஞ்சேனை ,வஜிரா வீதி, ஹெவலொக் வீதி, ஆயுர்வேத சந்தி, பௌத்தலோக்க மாவத்தையின் சில பகுதிகள், மருதானை, வோர்ட் பிளேஸ் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் கடந்த 18 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக 400 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று காலை 7.00 மணிவரை பெய்துள்ளமை பதிவாகியிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை இன்று மாலைவரை தொடரும் எனவும் இடி, மின்னலின் தாக்கம் காணப்படும் எனவும் பொ…
-
- 0 replies
- 492 views
-
-
அத்துமீறி நாவற்குழியில் குடியேறின சிங்களக் குடும்பங்கள்: யார் தடுத்தாலும் அங்கேயே இருப்போம் என தெரிவிப்பு திகதி:11.11.2010 யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்து தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள் சந்தடி ஏதுமின்றி எவரது அனுமதியுமின்றி நேற்று எதிர்பாராத வகையில் நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் குடியேறியுள்ளன. இதனால் அந்தப் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று கம்புகள், தடிகள் சகிதம் தடாலடியாக வீடமைப்பு அதிகார சபைக் காணிக்குள் நுழைந்து கொட்டில்களை அமைக்க ஆரம்பித்தனர். மளமளவெனக் கொட்டில்கள் அமைக்கும் பணியில் அவர்கள் நேற்ற…
-
- 0 replies
- 441 views
-
-
அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - கண்டன அரங்க கூட்டம் 14 நவம்பர், ஞாயிறு மதியம் , ஐகப் அரங்கம்- லயோலா கல்லூரி அருகில், நுங்கம்பாக்கம் தோழர் தியாகு - தமிழ்தேசிய விடுதலை இயக்கம் விடுதலை ராஜேந்திரன் - பெரியார் திராவிடர் கழகம் அய்யநாதன் பத்திரிகையாளர் பேரா. சரஸ்வதி தாமரை கவிஞர் ரஜினிகாந்த் வழக்கறிஞர் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அருள் எழிலன் பத்திரிகையாளர் பா. புகழேந்தி வழக்கறிஞர்- தமிழக மக்கள் உரிமை கழகம் பாலா கார்டூனிஸ்ட் பாரதி தமிழன் பத்திரிகையாளர் புருஷோத்தமன் ஓவியர் மே 17 இயக்கம் சங்கர் சவுக்கு ரமேஷ் கீற்று தமிழ்வேலன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லே) மக்கள் விடுதலை சுந்தர்ராஜன…
-
- 0 replies
- 436 views
-