ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
பாக்.தீவிரவாதிகள் 200 பேர் வரை இலங்கையில்! இந்தியாவுக்கு அமெ. உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 12:59 பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 200 பேர் வரை இலங்கையில் உள்ளார்கள் என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கையைப் பிரதான தளமாகப் பயன்படுத்துகின்றமையே இத்தீவிரவாதிகளின் திட்டம் என்று இப்புலனாய்வு நிறுவனங்கள் எச்சரித்தும் உள்ளன. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே பிரதேசத்தில் ஜேர்மனிய பேக்கரி ஒன்றின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, 20, செப்டம்பர் 2010 (10:14 IST) தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழக மீனவர்களையும் தாக்கியுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தன. இந்த படகுகள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் கரை திரும்பிக்கொண்டிருந்தன. அப்போது தங்கச்சி மடத்தை சேர்ந்த படகில் அதன் உரிமையாளர் காலின், மீனவர்கள் சந்தியா, ஹச்சூரியன், பார்த்திபன் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடித்து விட்டு இந்திய கடல் பகுதிக்குள் வந்த போது திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் வந்து துப்பாக்கியை காண்பித்து படகை நிறுத்துமாறு கூறினர். ஆனால் மீனவர்களோ தா…
-
- 1 reply
- 691 views
-
-
20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பிலும், மாதல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்கா முடித” மீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர். கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பல…
-
- 6 replies
- 1.5k views
-
-
Villawood அகதிமுகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்மீது பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞன் ஒருவன் பூராயத்திற்குத் தெரிவித்துள்ளார். கடும் குளிரின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் இன்னல்களை ஒலிவடிவில் கேட்க இங்கே சொடுக்கவும். குறிப்பு: மேலேயுள்ள ஒலியை Real Playerஐ பாவித்து கேட்கவும். Real Player இல்லாதவர்கள் இங்கே சென்றுஇலவசமாக தரைவிறக்கம் செய்துகொள்ளலாம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று (20.09.2010) காலை 9 மணியளவில் சிட்னி Villawood முகாமில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமது சொந்த நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அவுஸ்ரேலியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களை அந்தந்த அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரங்களை நம்பி சொந்த நாட்டிற்கு அரசாங்கம் அனுப்ப எடுத்த நடவடிக்கை ஒரு இளைஞனின் உயிரை காவுகொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இந்த இளைஞனின் தற்கொலையை அடுத்து சிட்னி Villawood முகாமில் உள்ள அடைக்கலம் தேடி வந்தோர் பலர் சில கோரிக்கைகளை முன் வைத்து கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபபட்டுள்ளார்கள். உயிரைப் பணயம் வைத்து நடக்கும் இப்போராட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பலர் உள்ள…
-
- 0 replies
- 669 views
-
-
“நான் தங்கதுரையின் மகன்!” கரிகாலன் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்… ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட, தங்க துரையின் குடும்பம் தமிழ்நாட்டில் வசித்தது. அந்த தங்கதுரையின் மகன் கரிகாலனுக்குக் கடந்த வாரம் சென்னையில் திருமணம்! வெலிக்கடை சிறைக் கலவரத்தில் மோசமான சித்ரவதையால் தங்கதுரை கொல்லப்பட்ட பிறகு, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., தங்கதுரையின் குடும்பத்துக்கு அரசு சார் பாக நந்தனத்தில் வீடு வழங்கி ஆதரவு அளித்தார். தங்கதுரையின் மனைவி நவமணி, தனத…
-
- 3 replies
- 965 views
-
-
இது ஒரு பழைய கடிதம். 2009 இன் ஆரம்பத்தில் வன்னிப் படுகொலைப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஈழத்தமிழர் படும் துயர் கண்டு வெதும்பிய சீகிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேசியத் தலைவரின் மகனுக்கு வரைந்த மடல். இதில் பல விடயங்கள் நடந்து முடிந்து விட்டன. ஆனாலும் அவரது நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது .....நீங்களும் படித்துப் பாருங்கள். சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம் (2009) சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் நேற்று சாட்சியமளித்துள்ளார். விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது பற்றி நேரடியாகக் கண்ட ஒருவர், அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மனைவி, போர் நடைபெற்ற இறுதிக்காலகட்டத்தில் அங்கு இருந்தவர் என்ற வகையிலும் இன்னும் பல்வேறு வழிகளிலும் ஆனந்தி சசிகரனின் இந்தச்சாட்சி முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் அவருடைய நேர்காணல் இங்கு தரப்படுகிறது. 18.05.2009இல் எனது கணவர் தள பொறுப்பாளர் போராளிகளுடன் சரணடைந்தவர். எனது கண்ணுக்கு முன்னாலேயே முல்லைத்தீவில் அவர் சரணடைந்தார். எனக்கு அவரைக் க…
-
- 14 replies
- 1.6k views
-
-
"யோகி, இரத்தினதுரையுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே?. மக்களைப் புலிகள், கேடயமாகப் பயன்படுத்தவில்லை" ஆணைக்குழு முன் மக்கள்! iவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பின் போது தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். தமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது; என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். பின்னர்…
-
- 3 replies
- 913 views
-
-
சிறீலங்காவில் இருந்து தமிழ் மக்களை முற்றாக இல்லாது செய்யும் நடவடிக்கைகள் தினமும் மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் படையினரின் செறிவாக்கம், அதன் மூலம் அங்கு நகர்த்தப்படும் படையினரின் குடும்பங்கள் என மக்கள் தொகையின் விகிதாசாரம் மிக வேகமாக மாற்றமடைந்து வருகையில், தமிழ் மக்களின் நிலங்களையும் கொள்வனவு செய்வதில் சிங்கள சமூகம் அதிக அக்கறைகள் காண்பித்து வருகின்றது. வட – கிழக்கில் பெருமளவு பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படும் அதேசமயம், மாதகல் தொடக்கம் நாகதீபம் வரை புத்தரின் வழிவந்தவர்கள் நடந்த காலடிகள் தென்படுவதாக புதிய கண்டுபிடிப்புக்களையும் சிங்கள புத்தியீவிகள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.மறுவளமாக கிழக்கிலங்கையிலும், தென்னிலங்கையிலும்…
-
- 2 replies
- 1k views
-
-
ஆஸியில் புகலிடம் மறுப்பு: இலங்கைத் தமிழர்கள் சிறைச்சாலைக் கூரையில் தற்கொலை முயற்சி! திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 07:51 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள். பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 763 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 திருகோணமலை - உப்புவெளி - அம்பிலிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உப்புவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்த மனித மண்டையோடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித மண்டையோட்டுத் துண்டுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனித மண்டையோட்டுத் துண்டுகள் அநுராதபுரத்திற்கு பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . ஈழ நாதம்
-
- 0 replies
- 747 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று இலங்கை தமிழருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்தது, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக இவர் ஒத்துக்கொண்டதையடுத்தே இந்த தண்டனை வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. புலேந்திரன் எனும் இந்த தமிழர் ஆட்கடத்தலில் ஈடுபடுவதற்காக 40 ஆயிரம் டொலர்களை பெற்ற தாக கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 0 replies
- 546 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது. இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது புலிகள் அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கியே சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் பனம் பொருள் விவசாய உற்பத்தி விலைகள் அதிகரிப்பு யாழ்.குடா நாட்டின் உள்ளுர் உற்பத்திப்பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.குடநாட்டின் முக்கியமான உற்பத்திப்பொருளாக காணப்படும் பனம் பொருள் உற்பத்திகள் மற்றும் விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் செய்கை பண்ணப்பட்ட திராட்டை உள்ளுர் சந்தைகளில் ஒரு கிலோ 60 ரூபாவுக்கும் குறைவான விலைகளில் வாங்கமுடிந்ததாகவும் தற்போது இது 250 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மற்றை உற்பத்திப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த காலங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட பல பிரச…
-
- 0 replies
- 701 views
-
-
மட்டக்களப்பில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செலகப்பிரிவில் அமைந்திருக்கும் புலையாவெளி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 90 குடும்பங்கள் சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சாரம் மற்றும் நிரந்தர வீடுகள் போன்ற அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவருகின்றன. இதேபோல் கரடியானறுப் பகுதியில் அமைந்துள்ள பண்ணைத்திடல், தூண்டில்தளவாய், தேக்கஞ்சேனை போன்ற பகுதி மக்களும் அடிப்படைவதிகள இன்றி வாழந்துவருகின்றனர். பின்தங்கிய பகுதிகாளக இருக்கும் இப்பிரதேசங்களில் சீரான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ள பாதைகள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. அத்தோடு, சுத்தமான குடிநீரும் பிரச்சனையாக காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலப்பகு…
-
- 0 replies
- 398 views
-
-
அக்.7ல் தென்கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா அம்பாறை மாவட்டம் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 6வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மையில் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு நிகழ்வுகளின்போது கலை கலாச்சார பீடத்தைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கும், பிரயோக விஞ்ஞான பீடத்ததைச் சேர்ர்நத 39 மாணவர்களுக்கும், இல்லாமிய அரபு மொழிபீடத்தைச் சேர்ந்த 242 மாணவர்களுக்கும் வெளிவாரியாக பயின்ற 261மாணவர்களுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளது. இந்த பட்டமளிப்பு நிகழ்வின் முதல் அமர்வின்போது இந்தி…
-
- 0 replies
- 339 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் வன்னி அமர்வுகளுக்கு பி.பி.சி.க்கு அனுமதி மறுப்பு 2கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இடம்பெறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகளின் போது செய்தி சேகரிப்பதற்கு பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (பி.பி.சி.) அனுமதி வழங்கப்படவில்லையென அந்த நிறுவனம் கூறியுள்ளது. முன்னாள் போர் வலயத்திலிருந்த மக்களுக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மூன்று நாட்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. மோதல் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கான பணிகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அரசு கூறுகின்றது. இதேவேளை, நேற்று சனிக்கிழமை ஆரம்பமான அ…
-
- 0 replies
- 352 views
-
-
கொழும்பு : இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.அதேசமயம், இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை, இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.கரடியனாறு காவல் நிலையத்தில் டைனமைட்டுகள் வெடித்துச் சிதறியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் சீனர்கள், மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள். உயிரிழந்தவர்களில் பலர் முன்னாள் விடுதலைப் புலிகள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தமிழர்களை சீன நிறுவனம் தனது சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தியிருந்ததாம். வெடிவிபத்தில் இந…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010 எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை கடந்த மாதம் 13 ஆம் திகதி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள் 492 பேரின் நலன் பேணும் நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றார் மனிதாபிமான தொண்டரும், தாதியும் ஆன Marg Lachmuth. இவர் கனடாவின் பிரித்தானிய கொலம்பிய தீவில் உள்ள Metchosin மாவட்டத்தில் வசித்து வருபவர். இவர் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் பணியாளராக பணிசெய்தவர். தனக்கு தமிழ் மக்களில் வலி தெரியும் என கூறும் இவர் கப்பலில் வந்த அகதிகளை கனேடிய அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரிப்பதனால் அவர்கள் சோர்வடைந்துள்ளார்கள் என கூறுகின்றார். செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவின் கனேடிய கிளையினால் முன்னெடுக்கப்படும…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 18 replies
- 3.3k views
-
-
நேசக்கரம் அமைப்பினால் புலம்பெயர்மக்களின் உதவிகளை ஒருங்கிணைத்து தாயகத்து மக்களிற்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளில் அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற நகரமான செல்வா நகர் மக்களிற்கான சுயதொழில் வாய்ப்பு மற்றும் பிள்:ளைகளிற்கான கல்வியுதவிகளும். கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் மகாவித்தியாலத்தின் தாய் தந்தையரை இழந்த மாணவர்களிற்கான கல்வியுதவி மற்றும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டது. இந்த உதவிகளை நேசக்கரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் தீபச்செலவ்வன் அவர்களினால் வழங்கப்பட்டது கனகபுரம் மகாவித்தியால அதிபர் சேதுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயலாளர் பொன்.காந்தன், பாடசாலை அபிவிருத்திச்…
-
- 0 replies
- 802 views
-
-
ஈழ நாதம் முதன்மை செய்தி மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஆயுத கொள்கலன் ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகளின் களஞ்சியமே வெடித்ததாக ஒரு பகுதியினர் கூறியுள்ளனர். ஆனால் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சீன கம்பனிக்கு சொந்தமான வெடிமருந்து கொள்கலனே வெடித்ததாக இன்னொரு அறிக்கை கூறுகின்றது. மூன்று கொன்ரெஇனர்களில் வைக்கபப்ட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதில் 30 பொலிச்சர் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈழ நாதம் இரண்டாம் செய்தி ஈழ நாதம் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்கபப்ட்டிருந்த ஆயுத கொள்கலன் ஒன்று வெட…
-
- 39 replies
- 5k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010 எங்கள் உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என 350 பெற்றோர்களும் துணைவியர்களும் பிள்ளகளும் நேற்று மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளித்தனர். "எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள்' என்று கண்ணீரும் கம்பலையுமாக மஹிந்தவின் பம்மாத்து ஆணைக்குழு முன் 350 பெற்றோர்கள் துணைவியர்கள் சாட்சியம் அளித்தனர். நேற்று கரைச்சி உப அரசாங்க அதிபர் பணிமனையில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங் களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க கூடி இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் சீரோ சிவிலியன் கசுவல்றீஸ் எனும் அடிப்படையில் தாம் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டதாக முழு பூசணிகாயை சோற்றுக்குள் …
-
- 4 replies
- 679 views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில், சிறீலங்கா காவல்துறையினரின்; நிலையத்திற்கு அண்மையில் வெடித்துள்ள பல தொன் எடை கொண்ட டைனமைற் என்ற வெடிபொருள் பூகோள பிராந்திய அரசியலில் ஒரு வெடிப்பதிர்வை ஏற்படுத்தி உள்ளது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அமெரிக்காவில் நிற்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா சீனாவுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் கொழும்பு வதிவிட பிரதிநிதிகள் கிழக்கு சென்றுள்ள நிலையில் சீனா நிறுவனத்திற்கு சொத்தமான வெடிபொருள் கொள்கலன் வெடித்துச் சிதறியுள்ளது. சீனா நாட்டு பிரஜைகளும், பெருமளவான சிறீலங்கா காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். வெடிமர…
-
- 11 replies
- 1.5k views
-