ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
நான்காம் ஈழ போரின் பொது யாழில் வந்த அணைத்து செய்திகளும் கருத்துகளையும் இங்கு இணைத்திருக்கிறேன் . நாம் திசை மாறுகிறோமா அல்லது நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்று யாழ் கள உறுப்பினர்கள் ( கருத்துக்கள் பதிந்தவர்கள் ) சுய சோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இருக்குமென்று கருதுகிறேன். சிலர் போருக்கு பின் யாழ் களத்திலேயே காணவில்லை . சிலர் வெளியேறி இருக்கலாம் . சிலர் போருக்கு பின் சேர்ந்து இருக்கலாம் . எனினும் நமக்கு தேவையான ஒன்றாக இதை கருதியதால் இந்த முயற்சி. நாமே எவ்வளவு மாறியிருக்கிறோம் இந்த ஒரு வருடத்தில் 1. பிரித்தானியா தமிழ்மக்களின் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம். கானொளி இணைப்பு By forlov http://www.yarl.com/forum3/index.php?showtopic=58315&st=0&p=514669…
-
- 0 replies
- 704 views
-
-
. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி. சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கம்: முன்னதாக பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த…
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தோற்கடிப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழர் தாயகம் பல்வேறு வகைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் சுமார் நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பட்டமான போர்க் குற்றங்கள் சிங்களத்தினால் அரங்கேற்றப்பட்டன. போர் முடிந்த பின்னரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மானைப் போல சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் கா…
-
- 4 replies
- 789 views
-
-
பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார் ? : சபா நாவலன் ஒரு ஆண்டு பல நீண்ட ஆண்டுகள் போல சோகத்தையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து இரத்தம் படிந்த ஆண்டாகக் கடந்து போய்விட்டத்து. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராஜபக்ச குடும்ப அரசு சில நாட்களுக்குள் கொன்று போட்டுவிட்டு உலகமக்களை நோக்கி நாம் தான் கொன்று போட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி திமிரோடு சொன்ன நாட்களின் பின்னர் ஒரு ஆண்டு ஒவ்வொரு நாளும் கணங்களாகக் கடந்து போய்விட்டது. ஒபாமா தேசத்தின் சற்றலைட்கள் பார்த்துக்கொண்டிருக்க, கருணாநிதியின் கொல்லைப் புறத்தில் தமிழர்கள் குடியிருப்புக்கள் மீது அதிபாரக் குண்டுகளும் இரசாயனக் குண்டுகளும் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து போய்விட்டது. முதியவர்களின் ஈனக் குரல்கள், கு…
-
- 13 replies
- 3.1k views
-
-
மரணத்தை வென்ற மாவீரன் இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது?????? இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம். உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை வி…
-
- 3 replies
- 2.2k views
-
-
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை எனவும் மாறாக இந்த முயற்சிகளுக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதாகவும் இதன் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் கருணா தெரிவித்திருக்கிறார். கண்டியில் பௌத்த மகாநாயக்கர்களைச் சந்தித்த கருணா அவர்களிடமே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது சகல சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்த கருணா அதன் மூலமே இன ஐக்கியம் கட்டி எழுப்பப்படும் எனவும் தெரிவித்தார். அரந்தலாவையில் 1987ம் ஆண்டு இடம்பெற்ற பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல…
-
- 4 replies
- 1.2k views
-
-
வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் கண்ணிவெடியில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் உயிரிழப்பு‐ வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் கண்ணிவெடியில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அது தவறுதலாக வெடித்ததில் பிரான்ஸ் தொழில்நுட்பவியலாளரான இவர் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 அளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சுவிஸர்லாந்தின் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குறித்த பிரதேசத்தில் புகைப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றை அகற்ற முயற்சித்த போது அது வெடித்து சிதறியுள்ளது. அதேவேளை கொல்லப்பட்டவரின் சடலத்தை வைத்திய…
-
- 3 replies
- 1k views
-
-
நாடு கடந்த தமிழீழம்: நடந்து முடிந்த தேர்தல் ! By: பிரகாஷ் எம் ஸ்சவாமி Courtesy: விகடன் - வைகாசி 12, 2010 அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்திட வேட்பாளர்களை தேர்வு செய்ய முதற்கட்டமாக தமிழீழ செயற்குழு தேர்தல்களை நடத்தியது. நியூயார்க் மாநகரில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. நியூ ஹைட் பார்க்கில் உள்ள வைஷ்ணவ கோயிலிலும், ஸ்டேடன் ஐலண்டு எனும் தீவிலும் காலை 12 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மே 17, 18 தேதிகளில் இங்கிலாந்தில் கூடி, நாடு கடந்த ஈழ அரசுக்கான அரசியல் நிர்ணய சபையைத் தேர்வு செய்வார்கள். தேசிய அவைக்கு அமெரிக்காவில் இருந்து விசுவநாதன் ருத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ் நியூஸ் (GTN) இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது பதிவு, மீனகம், ஈழம் நியூஸ் ஆகிய இணையத்தளங்கள் தமது கட்டுரை ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளதாக குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணையத்தளம் குற்றம் சுமத்தி செய்தி ஒன்றை கடந்த 01ம் திகதி வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கம் ஒன்றை பதிவு செய்ய செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. வியாபார நோக்கங்களை பெரும்பாலும் முதன்மைப்படுத்தி இணையத்தளங்களை நடத்திவரும் இணையங்களில் இருந்து செய்திகளை மறுபிரசுரம் செய்யும் போது யாருக்கும் ஆத்திரமும் கோபமும் வருவது சகஜமே. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எமது நிலைப்பாடு என்பது வேறுபட்டது. முள்ளி…
-
- 13 replies
- 1.8k views
-
-
கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய - அவரின் வழிகாட்டலுக்கு அமையவே - நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு படிமுறையாக, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து நிறைவுபெற்று, இன்னும் சில நாடுகளில் நடைபெறவும் இருக்கின்றன. இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற புதிய முயற்சியை கண்டுகொண்ட சிங்கள பேரினவாத அரச இயந்திரம் அதனை தடுத்து நிறுத்துவதற்…
-
- 20 replies
- 1.9k views
-
-
அவுஸ்ரேலியாவுக்கு சென்ற படகு க்டலில் முழ்கியது ஐவர் பலி மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 அநாதைகளாக கடல் கடக்கும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக செல்கின்ற வேளை அங்கு கடலில் என்ன நடக்கின்றது என்பதே தெரிவதில்லை. இவ்வாறு கடந்த வாரம் புறப்பட்ட படகு ஒன்று 64 தமிழர்களுடன் கடலில் மூழ்கியுள்ளது. படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக்கடலில் சிக்கித் தவித்த இவர்களை நேற்று முன்தினம் அந்த வழியே சென்ற ரஷ்ய கப்பல் ஒன்று மீட்டது. அதில் 59 பேர் மட்டுமே இருக்கக் காணப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர்காப்பு கவசங்கள் அந்தப் பகுதியில் மிதந்தன. மீட்கப்பட்ட பயணிகளுடன், அவர்கள் வந்த படகையும்…
-
- 0 replies
- 619 views
-
-
அரசாங்கம் இரகசியமாக என்னுடன் கதைக்கின்றது. - சம்பந்தன் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கவேண்டும் என அறிக்கைவிட்டு கொண்டு இருக்கின்றார் . அதே வேளை பேச்சுக்கு அழைத்தால் தாம் பேச தயார் என்றும் கூறுகின்றார். ஆனால் சம்பந்தன் அவர்கள் இரகசியமாக அரசுடன் பேசி வருவதாக நாசூக்காக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதுபற்றி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியுமா? அரசுடன் பேசுவது தொடர்பாக கொழும்பு வாராந்த பத்திரிகையான நேசனுக்கு வழங்கிய செவ்வியில் சம்பந்தன் கீழ் வருமாறு கூறியுள்ளார். ""முக்கிய விடயம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டுள்ளீர்களா?'' என்ற கேள்விக்கு ""நான் அவருடன் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார். கொழும்பு, மே 10 இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கக்கூடிய ஆர்வலர்களுட னான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் சென் னையில் இடம்பெற்றபோது அவர் அதில் கலந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட…
-
- 1 reply
- 400 views
-
-
''ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் எங்கள் பதவிகளைத் துறந்து எமது மக்களது விடுதலைக்காக உலகத் தமிழர்களுடன் இணைந்து போராடங்களை முன்னெடுப்போம்'' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக இணையத் தளங்களில் வந்த செய்திகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் சற்றுத் தலை நிமிர்த்த வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடத்தை மீது சந்தேகம் தெரிவித்தவர்கள் கூட, இந்தச் செய்தியால் உற்சாகம் கொண்டுள்ளார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் நொருங்கிப்போய், பேச்சு - மூச்சிழந்து முகம் புதைத்…
-
- 12 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம் இந்த வருடத்தின் வாக்காளர் பட்டியலினை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக சிறிலங்காவின் தோ்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் கிராம அதிகாரிகளுக்கு ஆலோசனை வகுப்புக்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அவர்களுக்கு தேவையான ஆவணங்களும் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை தவிர வாக்காளர் பட்டியலினை தயாரிக்கும் பணிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கான தமது பிரதிநிதிகளை நியமிக்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் வாக்க…
-
- 0 replies
- 414 views
-
-
உறவினர்கள் தொடர்புகொள்ளவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று தனது நெஞ்சில் பச்சைக்குத்திய நபர் ஒருவர் பக்கவாதத்தால் இறந்துள்ளார். அவரது உடல் தமிழகத்தில் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரை தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளவும். அவரது படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தமிழகத்தில் தாராபுரத்தில் ஒருவர் பக்கவாதத்தால் மயக்கமடைந்து இருப்பதை அறிந்த பொதுமக்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நெஞ்சில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றும் ஆதி என்றும் பச்சைக்குத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது உடலம் கோவை அரசு மருத்துவமனையில் தோழர்கள் அறக்கட்டளை பொறுப்பாளர் சாந்தக்குமாரின் பொறுப்பில் உள்ளது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளி. நீதிமன்றம் இன்று சிறிலங்கா அரசு திறப்பு சுமார் 30 வருட காலத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. நீதிமன்ற கட்டிடம் யுத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தினுள் அமைந்திருந்த பிறிதொரு கட்டிடத்தில் நீதிமன்றப் பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த நீதிமன்ற கட்டிடத்தினை புனரமைப்பதற்கான பணிகளை நீதி அமைச்சு மேற்கொண்டுள்ளது. விரைவில் புனரமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தில் நீதிமன்றச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு நாட்டில் வேறு பணிகளி…
-
- 0 replies
- 524 views
-
-
யேர்மன் வாழ்த் தமிழ் உறவுகளே! உலகம் வாழ் தமிழ் உறவுகளோடு கைகோர்த்து எம் தேசத்து அழிவை பெரும் இனப்படுகொலையைக் கண்டும் கையைவிரித்தவாறு இருந்த உலகிடம் எமது உரிமைப் போரின் உண்மையை உரைக்க, போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் குரல்கொடுக்கத் தயாராவோம். ஒதுக்குவோம் இந்த நாளை உரைப்போம் எம் உறவுகள் துயரை கேட்போம் நீதியை மீட்போம் எம் தாயகத்தை......
-
- 0 replies
- 626 views
-
-
பிரிட்டனின் புதிய அரசுடன் உறவை வலுப்படுத்துவதில் கொழும்பு நாட்டம் [ தினக்குரல் ] - [ May 09, 2010 04:00 GMT ] பிரிட்டனுடன் உறவை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் கொழும்பு, புதிதாக அதிகாரத்துக்கு வரவுள்ள அரசுடன் பிணைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளதுடன், ஆட்சியமைப்பதற்கான சாத்தியத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இலங்கையில் போன்றே பிரிட்டனிலும் "புதிய ஆரம்பம்%27 இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் பீரிஸ்,கலாசார, கல்வி…
-
- 0 replies
- 409 views
-
-
கிழக்கில் மேலும் படைமுகாம்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கடற்படை மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், இது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு நகருக்கு அண்மித்த டச் பார் மற்றும் வாகரைப் பிரதேசத்திலுள்ள பால்சேனையிலும் புதிதாக இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பட்டிப்பளை பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலம் இராணுவ பயிற்சி முகாமொன்றிற்காக அடையாளம் காணப்பட்டிருப்பது பற்றி தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தான் அவசர கடிதமொன…
-
- 0 replies
- 709 views
-
-
பிரான்சில் போர்க்குற்றவியல் நாள்- மே-18 அனைவரையும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்
-
- 0 replies
- 531 views
-
-
மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 உலகத்தமிழர்கள் மே மாதத்தில் 12- 19 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு படுத்தி அனுட்டிக்கின்றனர். ஆகவே தாயகத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என புலம்பெயர் மக்கள் மற்றும் ஏனையோரும் கேட்டதற்கு அமைய தாயகத்திலும் வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக…
-
- 14 replies
- 871 views
-
-
தென்காசி: ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாம் ஐபியும், ராவும். கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 37 ஈழத் தமிழர்கள் களை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்து கொல்லம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 37 பேரில் முல்லைதீவை சேர்ந்த புரோக்கர் டென்னீசன் என்பவரை கேரள காவல்துறையினர் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் முல்லைதீவு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களை இவரும் (டென்னீசன்) மற்றும் சிவா என்பவரும் படகுகள் மூலம் அழ…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக்குமாறு சிங்கள பிரதமர் கோரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 இலங்கையில் புலிகளை ஒழித்துவிட்டோம் ஆனால் வெளி நாடுகளில் நீங்கள் புலிகளை வளர்க்காதீர்கள் இவ்வாறு சிங்கள பிரதமர் டி.எம். ஜெயரட்ன அவர்கள் வெளி நாடுகளை கேட்டுள்ளார். வெளிநாடுகளில் வசித்துவரும் சுமார் 15 லட்சம் புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கையில் தங்கள் சமூகத்தினருக்கென சுதந் திரதாயகம் ஒன்றை உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கென இயக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அனுதாபிகள் எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் சுவிற்ஸர்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிப்பு இயக்கம் ஒன்றை நடத்த…
-
- 0 replies
- 486 views
-
-
கிழக்கு மாகாண சபையில் நிதி மோசடியா? பிள்ளையான் மறுப்பு வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 தனது மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிள்ளையான் மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணசபையின் கணக்காய்வு குழுவுக்கு மேற்படி கணக்காய்வு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே முதலமைச்சரினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D…
-
- 0 replies
- 487 views
-