ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
இன்னமும் கால் பங்கு நிலம், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மட்டுமே திருமலை வாழ் தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ளது. இரா.சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்கிற போட்டி அரசியலால் இருப்பதையும் கெடுத்து விடும் நிலை ஏற்படப் போகிறது. அவ்வாறு அவர் வீழ்த்தப்பட்டாலும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அவருக்குண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் நிகழ்த்தும் அதிகார மோதலால் திருமலையின் தமிழ்த் தேசிய அடையாளமும் இனப் பிரதிநிதித்துவமும் நிச்சயம் இல்லாதொழிக்கப்படும். ஏற்கனவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் திருமலை மண் கூறு போடப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மடத்தடிச் சந்திக்கும் பெரிய கடைக்கும் இடைப்பட்ட நகரப் பகுதியில்தான் தமிழ் மக்கள் இன்று செறிந்…
-
- 51 replies
- 3.3k views
-
-
தடுத்துவைக்கப்பட்டோர் மீது சித்திரவதை! தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும்,…
-
- 3 replies
- 990 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தீர்மானித்துக்கொண்டிருக்கின்ற அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகிய மூவரை கொண்ட எஸ்எம்எஸ் அணியை புறக்கணிக்குமாறும் அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்களிக்குமாறு பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இக்கூட்டமைப்பானது பிரான்சிலுள்ள 64 சங்கங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பெரிய கட்டமைப்பாகும் அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 21 replies
- 1.7k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் N.பத்மநாதன் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்திருக்கிறார். இவர் தனது இராஜினமாக் கடிதத்தை இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தங்களைத் தொடர்ந்தே தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள N. பத்மநாதன் பௌதீகத்துறை விரிவுரையாளராகத் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இன்று தன்னைச் சந்தித்த மாணவர் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உபவேந்தரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு பதில் துணைவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பத்மநாதன் 2008 யூலை …
-
- 1 reply
- 843 views
-
-
வெளி நாடுகளில் வதியும் இலங்கை ஊடகவியலாளர்கள் நாடு திரும்பலாம் - சட்ட மா அதிபர் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, மார்ச் 11, 2010 வெளி நாட்டில் இருக்கும் இலங்கை ஊடகவியாலாளர்கள் இலங்கை திரும்புவதற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளி நாடுகளில் பல ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வதிகின்றனர். அவர்கள் இலங்கை திரும்புவதாயின் போதிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என கூறியுள்ளார் மொஹான் பீரிஸ். அமெரிக்க ஊடகவியலாளர் பாது காப்பு அமைப்பு அண்மையில் பீரிஸ் அவர்களை சந்தித்தபோதே இந்த உத்தரவாதத்தினை வழங்கியுள்ளார். வெளி நாடுகளில் இலங்கை உடகபியலாளர்கள் இருந்து கொண்டு அரசாங்கத்தினை தாக்குவதில் பிரயோசனம் இல்லை. அவர்கள் இங்கு…
-
- 1 reply
- 487 views
-
-
போலீஸாரின் தொந்தரவால் ஈழ ஏதிலிப் பெண் தீக்குளிப்பு தமிழகத்தில் கரூர் ஈழ ஏதிலிகள் முகாமிலுள்ள பெண் ஒருவர் தமிழக காவல்துறையினர் கொடுத்த தொல்லை காரணமாக தீக்குளித்துள்ளார். ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து , முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர். அவர்கள் மறுத்த நிலையில், அந்த முன்று ஏதிலிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லும் மாறு அந்த பெண் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அச்சுறுத…
-
- 9 replies
- 1.3k views
-
-
"ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி மற்றும் அது சார்ந்த துறை இன்றைய அரசாங்கத்தினால் சீரழிக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்லாது கல்வித் துறையை அரசியல் மயப்படுத்தி 40 இலட்சம் மாணவர்களினதும் இந் நாட்டினதும் எதிர்கா லத்தை பாழாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலமே விமோசனம் கிடைக்கும் என்று ஐ.தே. முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடு காரண மாக 306 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்ற பெற்றோர் கடனாளிகளாகி தமது பிள்ளைகளை தனியார் பாட சாலைகளில் சேர்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …
-
- 2 replies
- 660 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப நேர மாற்றம் இடம் பெறலாம் எனவும் CNN அறிவித்துள்ளது.. இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் குரலாக இந்த ஆவணப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தாம் கடந்த வருடம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படா தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை வெளியிட்டிருக்கின்றார். அவரது இந்த அறிவிப்பு கொழும்புக்கும் ஐ.நா.செயலா ளர் நாயகத்துக்கும் இடையில் முறுகலும், உரசலும் தீவிர மடையத் தொடங்கியுள்ளன என்பதையே கோடிகாட்டு கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத் தில் இடம்பெற்றவை எனக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்தக் குற்றங்கள் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும் தவறிழை…
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்று முழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. அண்மையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் குழு ஒன்று மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்திருந்தது. யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுவில் குருநாகல், பதுளை, ரத்தினபுரி, சிலாபம், மன்னார் குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சூசை ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்திரு ஜோன் அடிகளார் இவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற குழுவினர் மக்கள…
-
- 2 replies
- 492 views
-
-
"லட்சங்கள் கொடுத்து யாழில் சுயேட்சைகள் களமிறக்கம் தியாகராஜா துவாரகேஸ்வரன் சாடல்" ATBC செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். http://www.yarl.com//articles/files/100303_Thiyagarajah_Thuvarageswaran.mp3
-
- 10 replies
- 825 views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மேற்கத்திய வல்லரசு நாடுகள்-இலங்கை கண்டனம்! வியாழக்கிழமை, மார்ச் 11, 2010, 11:55[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] அமைப்புகளின் கிளைகளுக்கு உலக வல்லரசு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இலங்கை [^]யில் அமைதி திரும்புவதை இவை விரும்பவிலலை என்று கூறியுள்ளார் இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயகே. புலிகள் இயக்கத்திற்கான எதிராக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோது அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அவரது உடலை எரித்து சாம்பலை கடலில் போட்டு விட்டோம் என்றெல்லாம் கூறிய இலங்கை அரசு இன்னும் நெருக்கடி நிலையை விலக்கவில்லை. மாறாக ஆயுதங்களைக் குவித்துக்…
-
- 0 replies
- 932 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் திகதி: 10.03.2010 // தமிழீழம் தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் மே 19க்குப் பின் கூட்டமைப்பின் முகமாகவும் தீர்மானம் எடுப்பவர்களாகவும் மாறியுள்ள சம்பந்தர், மாவை, சுரேஸ் (SMS அணி) ஆகியோருக்கு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் தீர்வு தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்பவற்றை அங்க…
-
- 0 replies
- 582 views
-
-
சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சில இந்திய அதிகாரிகள் செயல்பட்டதாக சிறீலங்கா பரபரப்பான குற்றச்சாற்றைக் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பான 'றோ'வைச் சேர்ந்த சில அதிகாரிகள், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ச தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக சிறீலங்காவின் அஞ்சல்துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியபோது, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் நிருபமா இந்தக் குற்றச்சாற்டை மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 5 replies
- 682 views
-
-
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. தந்திரோபாயமான ரீதியில் - கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்தும் செயல் திட்டங்களை, இந்தியாவின் சொந்தக் கடற் பிராந்தியத்தில் சீனா ஏற்படுத்தி வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் [bush] நிர்வாகம் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் - இந்தியாவினைச் சுற்றி சீனா முன்னெடுக்கும் இவ்வாறான ஒவ்வொரு செயல் திட்டத்தினையும் ஒரு ‘முத்து’ என்றும், சீனா இந்த முத்துக்களைக் கோர்த்து ஒரு மூலோபாய வலைப் பின்னலை ஏற்படுத்த முனைகிறது என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் விபரித்திருந்தனர். இது பின்னர் சீனாவின் ‘முத்துமாலை’ ம…
-
- 30 replies
- 2.2k views
-
-
இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஒரு திறந்த மடல் [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 00:45 GMT ] [ புதினப் பணிமனை ] இலங்கையின் தமிழர் தாயகத்தில் வாழ்பரும், நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும், இலக்கியத் துறையைச் சேர்ந்தவருமான நந்தன் அரியரத்தினம், புதினப்பலகை ஊடாக எழுதுகின்றார். திரு. இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியோருக்கு: கடந்த மே 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். இலங்கை அரசியலில் 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய அரசியலின் தீர்மானிக்கும் ஆ…
-
- 11 replies
- 834 views
-
-
ஈழத்தமிழர் இந்தியாவை நம்பியது பெரும் தவறு - பேராசிரியர் மார்க்கஸ் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மார்ச் 10, 2010 இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இன்று மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் பகை மறப்பு என்ற தலைப்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. ஒருவாரகால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல நூலாசிரியரும், பகுத்தறிவுவாத இயக்க சிந்தனையாளருமான பேராசிரியர் மார்க்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்தேசியம்,இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எனினும் இந்தியா…
-
- 15 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு முழுமையான நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் போது அதற்கு உதவியளிக்கவும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவவும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவும் தமது நாடு தயாராக உள்ளதாக இலங்கை வந்திருக்கும் பிரித்தானிய நிரந்தர உதவிச் செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ் தெரிவித்துள்ளார் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்திருக்கும் பிரித்தானிய நிரந்தர உதவிச்செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவை இன்று சந்தித்த போதே அவர் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு முழுமையான நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட…
-
- 3 replies
- 827 views
-
-
நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வழங்குவதற்குப் போதிய கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள் அரசு தரப்பில் கேட்கப்பட்ட 2 வார கால அவகாசத்தை நிராகரித்து தமிழக அரசு நாளை இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நளினியை விடுதலை செய்வது குறித்த இந்த அறிக்கை தொடர்பான கருத்துப் பகிர்வுகள் சில மாதங்களாக இழுபட்டு வரும் நிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள…
-
- 2 replies
- 653 views
-
-
இரண்டு நாள் விஜயமாகக் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், தமது பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்பிவிட்டார். தமது கொழும்பு விஜயத்தின் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உட்படப் பல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு நடத்திய பேச்சுகளே முக்கியமானவையா கும். இந்தச் சந்திப்பு அர்த்தபுஷ்டியாகவும் திருப்தி தரும் விதத்திலும் அமைந்தது என்ற சாரப்பட வெளியில் செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்து நிற்கின்றது என்கின்றன உள்வீட்டுத் தகவல்க…
-
- 1 reply
- 838 views
-
-
உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் இலங்கை தமிழர் குறித்து மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழகத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வருவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் அணுகுமுறையாகும். எனினும், அவ்வாறு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் போது அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டில் குடியேற இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இல…
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கையின் "மஹிந்த சிந்தனை' பொருளா தாரத்தை ஒரு பிடி பிடித்து, கிழித்திருக்கின்றார் பிரபல பொருளியல் ஆய்வாளரான ஹர்ஷா டி சில்வா. "மஹிந்த சிந்தனை' அரசின் தவறான நிர்வாகம், வீண் விரயம் போன்றவை காரணமாக கடந்த வருடத் தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்ப தாக அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார். இந்த வீண் விரய இழப்பினால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமைப் பளு சராசரியாக ஒரு லட்சம் ரூபாவினால் உயர்ந்திருக் கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்த அதிகரிப்பின்படி சுமார் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினதும் மொத்தக் கடன் சுமை 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக உயர்ந்து விட்டது. தவறான ஆட்சி முறையின் விளைவால், தெ…
-
- 1 reply
- 813 views
-
-
இலங்கையில் ராணுவத்துடன் விடுதலைப்புலிகள் நடத்திய போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் இப்போதும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய வெளியுறவு துறைச் செயலாளர் நிருபமா இலங்கை சென்று இலங்கை வெளி விவகார மந்திரி ரோஹித் போகொல்லாகமவை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பிறகு போகொல்லாகம, ‘’ பிரபாகரனை தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். எங்களது கவலையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளோம். இலங்கை தொடர்ந்து…
-
- 3 replies
- 1.7k views
-
-
சீன உதவியின் நுரைசோலை அனல் மின் நிலையம் தீவைப்பு வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010 nuraisolai சீன உதவியினால் நடைமுறைப்படுத்தப்படும் நுரை சோலை அனல் மின் நிலையம் தீ வைப்பிற்கு உள்ளாகியது. இனம் தெரியாத நபர்களினால் இந்த அனல் மின் நிலையம் தீவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. தீயினை அணைக்க முப்படைகளின் உதவி கோரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எரிபொருள் களஞ்சியம் உட்பட பல சுற்றுபுற கட்டடங்கள் சேதமுற்றதாக பொலிஸ் கூறியுள்ளது. நுரைசோலை அனல் மின் திட்டம் சுற்று புற சூழலிற்கு மாசு விளைவிப்பதுடன் பூகோள ரீதியாக இந்தியாவிற்கும் அச்சுறுத்தலான ஓர் திட்டமாக சீனாவினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%A…
-
- 3 replies
- 860 views
-
-
இந்தியா, சீனாவின் அழுத்தம் காரணமாகவே சிறீலங்கா விவகாரம் தொடர்பில் பான் கீ மூன் அமைதியாக இருக்கிறார்:- பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே ஐ.நாவின்; செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஏன் செயல்திறனற்று உள்ளார் என ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்ன சிற்றி பிரஸ் ஐ.நாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் இடம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே பானின் செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் தெரிவித்துள்…
-
- 0 replies
- 329 views
-