ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142984 topics in this forum
-
இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அன்றி எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தமது கொள்கை எனத் தெரிவித்த சம்பந்தன் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே தாம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவை தமது நட்பு நாடாகக் கருதுவதாகவும் எனினும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி நடக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் குறிப்பிட்ட சம்பந்தன் தமது கட்சியின் கொள்கைக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்ப…
-
- 2 replies
- 393 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 ஊடகவியலாளர் கனகரவியின் செய்திக் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/1014
-
- 0 replies
- 704 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்றைய செய்தியலைகள் நிகழ்வில் தமிழகத்தில் இருந்து அருள் எழிலன் நளினியின் விடுதலைக்குத் தடையாக உள்ள விடயங்கள் பற்றி செய்தி வழங்குகின்றார். http://www.yarl.com/articles/node/1013
-
- 0 replies
- 500 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் M.K.சிவாஜிலிங்கம் http://www.yarl.com/articles/node/1012
-
- 0 replies
- 518 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் http://www.yarl.com/articles/node/1011
-
- 0 replies
- 531 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/node/1010
-
- 0 replies
- 449 views
-
-
ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா? நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்க…
-
- 15 replies
- 3.9k views
-
-
விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளிகள் கொழும்பிற்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் எனினும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடம் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் எந்த நேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை ஊகிக்க முடியாது என்றும் எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். ரத்னசிறியின் இந்தக் கருத்…
-
- 2 replies
- 900 views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறினார். இதேவேளை, இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து கொழும்பு சட்ட ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும் எனவும் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தினார். ht…
-
- 7 replies
- 862 views
-
-
தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்களை அனுப்பிவைக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். மரபணு பரிசோதனையின் மூலம் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு த…
-
- 0 replies
- 683 views
-
-
குச்சவெளியில் வதியும் 400 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது.திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் தற்காலிகமாகக் கொட்டில்கள் அமைத்து வசித்து வரும் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பங்களையே அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குடும்பங்களுக்கு காணிகளோ அல்லது தற்காலிக வீட்டு வசதிகளோ இன்னமும் வழங்கப்படாத நிலையில் பசில் இராகபக்ஷ அந்த குடும்பங்களை வெளியேறுமாறு பணித்துள்ளார். http://www.sankamam.com/beta/index.php?eNoljDEOwjAMXDD_0qGbJTu246SIIY7Tf6B2YVwwhvJ_tYLlprs7FmJaptf2-D73-2D2wl7BiQiyYYMgzZB6DHNW5y7z8XcFa6OqBjbowqoKV0kgFmIjI9US8_Z5_77qNYsXGFxcOuReEkRyhHA2aasTGk63E506XCIM
-
- 5 replies
- 965 views
-
-
புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்: தலையாட்டுகிறாரா சம்பந்தர்? . .விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக…
-
- 1 reply
- 745 views
-
-
அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் முயற்சிகள் நடைபெறவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்ப டையிலேயே தேர்தலை நோக்கிய தாகவே அனைத்து கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றிய…
-
- 1 reply
- 663 views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். 31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 4 replies
- 1.4k views
-
-
திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.' இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அள…
-
- 13 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நலன்புரி நிலைய மக்களை மீள் குடியேற்றுவதாக இந்தியாவிலடம் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மீள் குடியேற்ற துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது மீள் குடியேற்றம் தொடர்பில் காலக்கெடு எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனினும் அதற்கான கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் குறிப…
-
- 1 reply
- 662 views
-
-
இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது இலக்கை நிறைவேற்றிக்கொள்வதற்காக தற்போது ஏனைய வழிகளில் செயற்பட முயன்றுவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குற்றஞ்சாட்டியுள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அகமட் ஷஹிட்டுனான சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் அச்சுறுத்தல்களுக்கான ஆபத்தை எதிர்நோக்கிவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் எனவும் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். http://www.tamil.dailymirror.lk/2009-08-13-06-05-34/1019-2010-02-23-04-42-48.html
-
- 1 reply
- 783 views
-
-
சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளரும் அரசின் கைப்பாவையுமான சிறீரங்கா இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களை வடக்கு கிழக்கு தமிழ் மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் இணையுமாறு கேட்டுள்ளார், வரப்போகும் பொதுத்தேர்தலில் மாணவர்கள் சார்பாக இரு மாணவர்களைப் போட்டியிட வருமாறு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் சென்று அழைப்புவிடுத்துள்ளார். விபரம் தெரியாமல் மாணவர்கள் அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். ரங்காவைப் பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி இந்தச் சதிவலையில் சிக்காமல் இருக்க உதவுமாறு உங்களுக்குத் தெரிந்ததானைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இன்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ரங்கா இதற்கு அழைப்புவிடுத்துள்ளார்
-
- 0 replies
- 955 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியில் சிங்கள பாடத்திற்கு பெளத்த துறவி நியமனம் Posted on February 22nd, 2010 in செய்திகள் சிங்களபாடம் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருந்த பொழுதிலும் கடந்தகாலங்களில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இந்தப்பாடம் கற்பிக்கப்படுவதில்லை தற்போது மீண்டும் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான ஆசிரியர் நியமனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு தற்போது சிங்கள பாடக்கற்பித்தலுக்காக பெளத்ததுறவி ஒருவர் நியமனம் பெற்றிருக்கிறார் குறித்த ஆசிரியர் நேற்று அதிபரை சந்தித்து தமது நியமனம் குறித்தும் தங்குமிட வசதி தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகிறது. சிங்களபாடம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கப்படுவது சாதாரண விடயம் என்றபொழுதிலும் வரலற்று…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்டஇ வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில்இ அரசியல்வாதிகளாயினும் சரிஇ சாமான்யராயினும் சரிஇ ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவைஇ என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர். சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் தங்கள் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தார்கள். ஆயினும்இ இந்த இழப்புகள் தனித்தனியான சட்ட உடன்படிக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன்கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு, பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன். வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான். வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது. சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு …
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசு என்ற மாயையும்... [TamilNet, Monday, 22 February 2010, 18:49 GMT] தமிழர் தலைமையின் வரலாற்றுக் கடமையும் தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்ட, வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில், அரசியல்வாதிகளாயினும் சரி, சாமான்யராயினும் சரி, ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவை, என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர். சிங்களவர்களைப் …
-
- 2 replies
- 961 views
-
-
கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!:-இராணுவ வட்டாரங்கள். [Monday, 2010-02-22 09:37:10] தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தினரால் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிராக சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள அறையினுள் ஒலிபெருக்கி ஒன்றினை இராணுவ விசாரணையாளர்கள் பொருத்திவைத்துள்ளனர். …
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ்க்கூட்டமைப்பின் இரகசியங்களை அம்பலப்படுத்தப்போகிறேன்: சிவநாதன் கிஷோர் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தப்போவதாகவும் அதற்காக இன்று அல்லது நாளை விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியு…
-
- 2 replies
- 786 views
-
-
அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்ப்பு வெளியிட்டாலும் பொன்சேகாவுக்கு இராணுவமே தீர்ப்பளிக்கும்:- இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய. அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்ப்பு வெளியிட்டாலும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என சிரேஷ்ட சிறீலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2009 இலக்கம் 35 கூட்டுப்படைத்தலைமை அதிகாரி சட்டமூலத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு எதிராக சிறீலங்கா இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவச் சட்ட அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இராணுவத்…
-
- 2 replies
- 856 views
-