ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
ஐ.தே.கட்சி அமைப்பாளர் ஒருவர் கடத்தல் மருதானை சுதுவெல்ல பகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை மருதானை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இதேவேளையில் தேர்தல் தொடர்பான வன்முறைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக தேர்தலை கண்காணிக்கும் சுயாதீன அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. http://meenakam.com/?p=1241
-
- 0 replies
- 456 views
-
-
கிளிநொச்சி விளையாட்டுத் திடலில் 68 கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கத் தீர்மானம்! எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் இடம்பெயர்ந்து மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சி விiளாயாட்டுத் திடலில் 68 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைப்படவுள்ளன. இதுகுறித்து நேற்று கிளிநொச்சிக்குச் சென்று கிளிநொச்சி செயலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் மேலதிகள் தேர்தல் ஆணையாளர், இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பு தொடர்ப்பான பிரதி ஆணையாளர், அரச அதிகர்கள் உட்பட உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆராயந்துள்ளனர். கரைச்சி, கண்டாவளை, பளைப் பகுதியில் மீள்குடியேற்றப்படாத 68 கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சி விளையாட்டுத் திடலில் 68 கொத்தணி அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்கள் அ…
-
- 0 replies
- 444 views
-
-
பாஸ்போர்ட் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இளைஞர் ஒருவர் யாழ்தேவி புகையிரத நிலையத்தில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியைச் சோந்த 21 வயதான செல்வகுமார் சத்தியசீலன் எனும் இளைஞனே காணாமல் போயிருக்கின்றார். கடந்த 14ம் திகதி ஏ9 வ|Pதியூடாக வவுனியா பயணித்த இவர் பின்னர் அங்கிருந்து யாழ்தேவி மூலம் கொழும்பு சென்றுள்ளார். இந்த நிலையில் இவர் கொழும்பை சென்றடையவில்லை என குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு குடும்பத்தவர்கள் முறைப்பாடு செய்திருக்pன்றார்கள். மீண்டும் கொழும்பில் யாழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
-
- 5 replies
- 756 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆர்.யோகராஜன் மற்றும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதாநந்தன் UNPயில் இணைவு‐ 30 December 09 07:48 am (BST) அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியினாலும் தனது கட்சியின் மீதான வெறுப்பினாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் கல்வி அமைச்சருமான எம்.சச்சிதாநந்தன் ஆகியோர் விலகியுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொண்டாதக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் தெ…
-
- 0 replies
- 533 views
-
-
கப்பப் பணம் கட்டிய பின்னரும் விடுதலை செய்ய மறுக்கப்படும் யாழ் இளைஞர்கள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு துணை ராணுவக்குழுவும், ராணுவ உளவுப்பிரிவினரும் சேர்ந்து ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக கடத்தப்பட்டுக் காணாமல்ப் போன இளைஞர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்படும் ஒவ்வொரு இளைஞருக்கும் தலா 200,000 கப்பமாகக் கேட்கப்பட்டு ராணுவம் முகாமொன்றின் வாயிலில் நிற்கும்படி பெற்றோர்கள் கேட்கப்படுகின்றனர். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வரும் மோட்டார் சைக்கிளில் வரும் இருவரால் பணம் வாங்கப்பட்டு குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு விடுக்கும்படி கேட்கப்படுகின்றனர். ஆனால் அத்தொலைபெச்சி இலக்க்மோ பாவனையில் இல்லாதது என்பது பின்னர் தெரிய வருகிறது. …
-
- 2 replies
- 924 views
-
-
தஞ்சையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பேரமைப்பு மாநாடு [படங்கள்] உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் ஈழத்தமிழருக்கான வாழ்வுரிமை மாநாடு கடந்த 26,27.12.20090 அன்று தமிழ்நாட்டில் தஞ்சையில் பழ.நெடுமாறன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் படங்களுக்கு: http://meenakam.com/
-
- 1 reply
- 700 views
-
-
ஆறுமுகம் தொண்டமானுக்கு 400 மில்லியன், சந்திரசேகனுக்கு 200 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எதிர்வரும் ஐனாபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் ரூபாக்களையும், அமைச்சர் சந்திரசேகரனுக்கு 200 மில்லியன் ரூபாக்களையும் பசில் ராஜபக்ச வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேநேரம் மலையகப் பகுதிக்கான சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாக்களை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 805 views
-
-
யாழ். இரவு நேர ஊரடங்கு நாளை முதல் நீக்கம் நாளை நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். குடாநாட்டில் அமுலிலுள்ள இரவு நேர ஊரடங்குச்சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. பல வருடங்களாக அமுலிலுள்ள இந்த ஊரடங்குச் சட்டத்தினை நீக்குமாறு மக்கள் பல்வேறு வேளைகளில் கோரிக்கை முன்வைத்தபோதும் அது நீக்கப்படவில்லை. தற்போது நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் யாழ். மக்களின் மனங்களை வெல்வதற்காக மகிந்த அரசு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது இரவு நேர ஊரடங்குச்சட்ட நீக்கமும் பார்க்கப்படுகின்றது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை தற்போது யாழ். குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 583 views
-
-
மகிந்தவை ஆதரிக்க ஆதாவுல்லா கோரிக்கை சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலைகொண்டிருந்த தீவிரவாததை ஒழிப்பதற்கு முனைந்த அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு இந்நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்கும் காலம் தற்போது உருவாகியுள்ளதாக அதாவுல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலே இதனை அவர் தெரிவித்துள்ளார். தமிழ் ஆயுததாரிகளுடன் திரைமறைவில் உறவுகளை வைத்துக்கொண்டு அராஜக அரசியல் நடாத்திவரும் அதாவுல்லா அவர்கள் முஸ்லிம் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை கருத்தில் கொள்ளா…
-
- 0 replies
- 518 views
-
-
இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்கட்சியின் தேசிய அமைப்பாளர் திரு. யோகராஜன், மஹிந்த கட்சியில் அமைச்சராக இருக்கும் பிரதி கல்வி அமைச்சர் சச்சிதானந்தம் ஆகியோர் இன்று ஐக்கியதேசிய முன்னணியில் இணைந்து சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று தமது பதவிகளை இராஜனமா செய்த இவர்கள் சரத் பொன்சேகாவை தாம் ஆதரிக்க போவதாக கூறியுள்ளனர். 32 வருடங்கள் தொண்டமான்களுடன் இணைந்து சேவை செய்துள்ளேன் ஆனால் இப்போது சுயமாக சிந்தித்து மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் என்றார் திரு யோகராஜன். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 648 views
-
-
வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அதுகுறித்து ஆராய முடியும். ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரியை மட்டுமே முன்வைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு, அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை. பதிலளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டப்பின்னணியைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளோம்…
-
- 0 replies
- 760 views
-
-
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவது குறித்துக் காலக்கெடு விதிக்க முடியாது என அரசாங்கம் இப்போது அறிவித் துள்ளது. இதுவரை காலமும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாத இறுதிக்குள் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியும் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட ஒர் தினத்தில் வடக்கு இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற முடியுமென அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை எனவும், கூடிய விரைவில் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற முடியும் எனவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதே வேளை வன்னி புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பத்தியூன் நேற்று தனது உரையில் இரண்டு மாதத்தினுள் மீழ் குடியமர்வு முடிந்து விடும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு இடம்பெயர் முகாம்…
-
- 0 replies
- 313 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து 19 பேர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக மிக விரைவில் எம்மோடு இணையவிருக்கின்றனர். இந்நிலையில், விமுக்தி குமாரதுங்க பண்டாரநாயக்க அரசியலுக்குள் பிரவேசிப்பார் என்பதும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இணைவார் என்று வெளியாகின்ற செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். தென்னிலங்கையில் சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களை இல்லாதொழித்தவர்கள் வடக்கிலே தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக சுதந்த…
-
- 0 replies
- 662 views
-
-
சிங்களப் பயணிகளின் வசதிக்காகவும், அரச அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவும் - யாழ்ப்பாணத்தில் இருக்கும் இரவுநேர ஊரடங்கை நீக்கியுள்ள மகிந்த அரசு, அங்கிருந்து மட்டு நகருக்கு பேருந்து சேவையும் தொடங்குகின்றது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2KSOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 4 replies
- 715 views
-
-
சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கோத்தாபாய மற்றும் தளபதி சவீந்திர சில்வா ஆகியோர் வெளிநாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து உண்டு என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிடுகின்றார். http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc3QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYllx20aeK44B5cee20mKMW043aa4Z5BBf0e
-
- 1 reply
- 1k views
-
-
எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக எமது இணையத்தளத்திற்கு நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப் படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமான…
-
- 6 replies
- 1.6k views
-
-
சரணடைந்ஜெயராஜ் எழுதியுள்ள விரிவான தகவல்கள் .த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன? டி.பி.எஸ். .இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வு…
-
- 15 replies
- 2.6k views
-
-
சண்டேலீடர் பத்திரிகைக்கு ஜெனரல் சரத் பொன்சேக்கா வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டமை சம்பந்தமாக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அவர் சண்டேலீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜயன்ஸக்கு தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளார். தான் தெரிவித்த கருத்துக்களைத் திரிபுபடுத்தியமை தொடர்பாக சட்டத்தரணி அறிவித்தலை அனுப்பியுள்ள சரத் பொன்சேக்கா 38 வருடகாலமாக இராணுவத்தில் பணியாற்றி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறும் அப்படியில்லை எனில் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சண்டேலீடர் பத்திரிகை 500 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். …
-
- 5 replies
- 653 views
-
-
தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மூன்று தடவைகள் சிறீலங்கா அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் ஏன் அழைத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டால் நான் நான்காம் மாடிக்கு செல்லநேரிடும். ஆகவே, நான் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்" என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின்னர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில்: கைதுசெய்யப்பட்ட கே.பி. கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் அனுராபண்டாரநாயக்க மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தங்க…
-
- 0 replies
- 852 views
-
-
"தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு, இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்": வைகோ திகதி: 29.12.2009 // தமிழீழம் தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு. இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2654&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 0 replies
- 462 views
-
-
சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது பற்றிய கலந்துரையாடல் ஒன்றும், சீனத் தூதுவருடனான உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றும் கடற்படைத் தலைமைப் பீடத்தில் நடைபெற்றுள்ளது. [படங்கள் இணைப்பு] http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc3QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYlln20aeK44B5cee20mKMW043aa4Z5BBf0e
-
- 0 replies
- 572 views
-
-
எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை தமிழ்மொழி பேசுவோர் ஏன் ஆதரிக்கக் கூடாது என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் மொழிபேசும் உறுப்பினர்கள் நேரடியாக பதிலளிக்காது சமாளித்துக்கொண்டனர். கூட்டமைப்பு தேர்தல் பிரச்சார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு மாகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது . ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம் அஸ்வர் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், ரிசாத் பதூர்தீன், தேசிய ஐக்கிய முன்னணியின் உப தலைவர் அபுல் கலாம் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீ…
-
- 6 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார் என்று வைகோ பேசினார். தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இத்தனை துயர…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையின் பாரிய வன்முறையாளர் கோத்தபாய கடந்த ஓரு தசாப்த காலமாக தாய்நாட்டையே பார்த்திராத போது, திடீரென களத்தில் இறக்கப்பட்டதன் விளைவாக மனிதாபிமானம் பாராமல் பல அப்பாவி உயிர்களை பலிகொடுக்க நேரிட்டது:- "த கார்டியன்" பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இலங்கையின் பாரிய அடிப்படை மனித உரிமைகள் வன்முறையாளர் என த சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தில் பணியாற்றுகின்றவர் என்ற அடிப்படையில் அவர் மனித உரிமைகள், மனிதாபிமானம், சர்வதேச யுத்த சட்டங்கள் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சகோதரத்துவத்துக்காவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அவர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த ஓரு தசாப்த காலம…
-
- 1 reply
- 791 views
-
-
தஞ்சாவூரில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை, அவர் வந்திறங்கிய திருச்சி விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்தி, அவர் எங்கிருந்து வந்தாரோ அதே நகருக்கு மீண்டும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் நமது நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள். உரிய பயண ஆவணங்களுடன் வந்த சிவாஜிலிங்கத்தை எதற்காக நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதை தெரிவிக்காமலேயே குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்றி மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிற்கும் வரும் அன்னிய நாட்டினரை அவர்கள் முறையான பயண ஆவணங்களுடன் வந்துள்ளனரா என்பத…
-
- 1 reply
- 617 views
-