ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன. மோதல்களின் போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர் காப்பு உதவிகளை பெறுவதில் இருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்ஸை தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் என்னும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டும், மட்டுப்படுத்தப்பட்ட மருத…
-
- 0 replies
- 405 views
-
-
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமல்லாது அவரது மகன் நௌசர் பௌசி ஆகியோர் இரட்டை விளையாட்டுக் காரர்கள் எனவும் தேர்தலின் பின்னர் இவர்கள் இருவர் குறித்தும் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி அமைச்சர் பௌசியை இவ்வாறு விமர்சித்துள்ளார். கொழும்பு மாநகரசபையில் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது குலதிஸ்ஸ கீ என்ற தோல்வியடைந்த வேட்பாளர், அமைச்சர் பௌசியினால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விபரித்த போது கோபமடைந்த ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் அமைச்சர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2e4OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 704 views
-
-
ஊதிய உயர்வு வழங்கப்படும் விதம் விளக்கப்பட வேண்டும் ‐ விக்ரமபாகு 24 December 09 02:06 pm (BST) ஊதிய உயர்வு வழங்கப்படும் விதத்தை விளக்குமாறு கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க ஊழியர்களது சம்பளத்தை எவ்வாறு 10000 ரூபாவினால் அதிகரிக்க முடியும் என்பதனை சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். சம்பளம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமையிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாரியளவு சம்பள அதிகரிப்பை வழங்குவதென்பது நடைமுறைச் சாத்தியப்பாடற்றதென அவர் சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 441 views
-
-
அவுஸ்ரேலியா செல்லும் வளியில் இந்தோனேசிய கடற்படையால் மேரக் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக நோய்வயப்பட்ட நிலையில் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காததால் 29 அகவையுடைய ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 வாரங்களாக கப்பலில் தங்கியுள்ள அகதிகளில் பலர் மிகவும்மோசமான பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கப்பலில் இருந்த ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற தமிழ் வாலிபருக்கு உடல் நலம் குன்றியது. அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கப்பலில் இருந்து தமிழர்கள், இந்தோனேசிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் உதவ…
-
- 0 replies
- 587 views
-
-
சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e244OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 4 replies
- 1.6k views
-
-
தான் எதுவித குற்றத்திலும் ஈடுபடவில்லை என ராஜ் நீதிமன்றில் கூறியுள்ளார். http://beta.virakesari.lk/article.aspx?id=17373&channel=Important
-
- 0 replies
- 663 views
-
-
டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம் இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்- டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள் நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது…
-
- 5 replies
- 3.1k views
-
-
வவுனியா, செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இராணுவத்தினர் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர் என வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் காயமடைந்த குறித்த 5 பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்றபோதே இராணுவத்தினர் சுற்றி வளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டனர் எனக் கூறப்படுகிறது. இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கட மையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்த…
-
- 1 reply
- 733 views
-
-
சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் குறிப்பாக நடக்க இருக்கும் அரச தலைவர் தேர்தல் தொடர்பான விடயங்களில் தலையிட வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொழும்பு அரசு எச்சரித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2U4OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 2 replies
- 806 views
-
-
இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு 675 குடும்பத்தினை சேர்ந்த 2270 பேர் சென்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட உதவி திட்ட பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் வலையம் 1, 2, கதிர்காமர் முகாம் ஆகிய தடுப்பு முகாமில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கேதீஸ்வரன் தெரிவித்தார். வந்தவர்களில் 349 குடும்பத்தினர் பூனகரி, பரமன்கிராய், பொன்னாவெளி,மட்டுவில் நாடு, இரணை மாதா நகர், நல்லூர் போன்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் அந்தந்த பாடசாலைகளில் தங்க வைக்கபட்ட பின்னர் கிராமங்களுக்கு செல்வர் என கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதே வேளை கரைச்சி வடக்கினை சேர்ந்த மக்கள் இன்று தமது காணிகளுக்கு சென்று துப்பரவு செய்ததாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். முழங்காவில், அம்பலபெருமாள், …
-
- 0 replies
- 767 views
-
-
எந்த வகையிலும் இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கப்போவதில்லை-பொன்சேகா சூளுரை எவ்வகையிலும் இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கப்போவதில்லையென சிறிலங்காவின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் இரானுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 40 வருடங்களாக என்னுடன் கடமையில் இருந்தவர்களுக்காக நான் செயற்பட்டுள்ளேன். அவ்வேளையில் நான் என்னுடன் இருந்த எந்தவொரு அதிகாரியையும் காட்டிக்கொடுக்கவில்லை. யுத்தத்தின் போது பல பொறுப்புக்களை ஏற்று நான் செயற்பட்டேன். சிலர் வெற்றியை மாத்திரம் பொறுப்பேற்கின்றனர். அதற்கு நடனமாடுவோர் இந்த நாட்டில் உள்ளனர். இராணு…
-
- 1 reply
- 562 views
-
-
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை 77 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் இந்த முறைப்பாடுகளை அடிப்படையாக வைத்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பாதுகாப்பிற்கான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 17 பேரில் 12 பேர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே வேளை தேர்தல் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு கொலையும் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. இந்த முறை தேர்தல் கண்காணிப்பிற்கு ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் செல்ல மறுத்துள்ளனர். இதே வேளை ஆசிய நாடொன்றின் கண்காணிப்பாளர்களை மஹிந்த நாடியுள்ளதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 467 views
-
-
பருவமழை காரணமாக சிறிலங்காவில் 60 வீதமான குளங்கள் நிரம்பியுள்ளன. அண்மையில் சிறிலங்கா முழுவதிலும் பெய்த கடும் மழையின் காரணமாக அங்குள்ள 60வீதமான குளங்கள் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசன இலாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த போகத்திற்கான விவசாய செய்கைக்குரிய நீர் பிரச்சினையின்றி கிடைக்குமென நீர்ப்பாசன இலாக தெரிவிக்கின்றது. சிறிலங்கா முழுவதிலும் 13 பிரதான நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மன்னார் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் சிறிலங்காவின் பிரதான நீர்த்தேக்கமான சேனநாயக்க சமுத்திரம் சுமா…
-
- 0 replies
- 523 views
-
-
கொழும்புக்கு அருகே உள்ள ரத்மலானை இந்துக் கல்லூரியில் தற்போது 273 முன்னாள் சிறுவர் போராளிகள் கல்வி கற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். “ஏனையவர்களுக்குத் தொழிற் பயிற்சி அல்லது தொழில் நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; ஏனெனில் அவர்களின் கல்வி தடைப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன” எனத் தெரிவித்தார், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க. கொழும்பில் கல்வி கற்று வரும் முன்னாள் போராளிகள் அங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களிலும் அம்பேபுசவில் உள்ள முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் இந்த முகாம்களில் அவர்களுக்குத் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டன; ஆனால், அவர்களுக்…
-
- 0 replies
- 841 views
-
-
அடைக்கலம் தேடி அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற வழியில் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருந்த தமிழ் அகதி இளைஞர் ஒருவர் மருத்துவ உதவிகள் கிடைக்காத நிலையில் இரத்தவாந்தி எடுத்து மரணமாகியுள்ளர். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2A4OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 713 views
-
-
ன்னி தடுப்பு முகாம்களில் உணவுக்காக சிறிலங்காப் படையினருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள தமிழ் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று படை அதிகாரிகள் மறுத்துள்ளனர். நடத்தப்பட்ட விசாரணையில் அந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையில் இல்லை என்பது கண்டறியப்படதாக வன்னிப் பகுதிக்கான சிறிலங்கா தரைப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தெரிவித்தார். “அந்த மாதிரியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்பதை அதிகாரத்துடன் என்னால் சொல்ல முடியும்” என்றார் அவர். படை ஆட்களுக்கு எதிராகவோ அதிகாரிகளுக்கு எதிராகவோ அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பில் முறையிடுவதற்கு முழு சுத்திரம் இருக்கின்றது எனவும் …
-
- 5 replies
- 4.2k views
-
-
வவுனியாவிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் இரவு நேர தபால் இரயில் கல்கமுவ பிரதேசத்தில் தடம்புரண்டதில் 29பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது 3 இரயில்கள் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதில் படுகாயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தபால் பொதிகளை கொண்டு செல்லும் பணிகள் தாமதமடைந்துள்ளதுடன் தற்போது கொழும்புக்கும் வவுனியாவுக்குமிடையிலான இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா கொழும்பு இரயில…
-
- 1 reply
- 534 views
-
-
அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல் வணக்கம், தமிழ் ஊடக நண்பர்களே !!! இத்துடன் இணைத்து அனுப்பப்படும் “அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல் – (அவசரகால உதவி நிவாரணத் திட்டம்) பற்றிய அறிவித்தலையும், நிதிசேகரிப்பு படிவத்தையும் தயவுசெய்து உங்கள் இணையத்தளத்தில் அல்லது ஊடகத்தில் பிரசுரித்து அல்லது இணைப்பை ஏற்படுத்தி பெரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் உங்களிற்கு அறிமுகமான சகோதர இணையத் தளங்களிற்கும் / ஊடகங்களிற்கும் இதை அனுப்பிவைத்து உதவிடுமாறு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம். இந்நிகழ்வில் ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் முன்னர் பெருமளவில் பாதிப்புற்ற…
-
- 2 replies
- 681 views
-
-
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜக்சவின் உத்திரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தமைக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருக்கின்றது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2IUOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 2 replies
- 885 views
-
-
வவுனியா தடுப்பு முகாமில் இருந்து யாழ் வந்த 17 வயது மாணவன் உட்பட நான்கு ஆண்கள் மர்மமாக கொலையுண்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் காணாமல் போனபின்னரே கொலையுண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மல்லாகம், கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த சந்திரகாந்தன் சதீஸ் (வயது 17) என்பவர் காணாமற்போனதாக கடந்த 4 நாள்களாகத் தேடப்பட்டு வந்தார். அவர் மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தார். இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் பின்னர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர், உறவினர்களால் தேடப்பட்டுள்ளார். நேற்று அளவெட்டி பிணாக்கை எனும் இடத்தில் பாழடைந்த கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தெரிவித்தைத் தொடர்ந்து குறி…
-
- 4 replies
- 1.3k views
-
-
வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தேயிலை, ரப்பர் ஆகியவற்றுக்கான கொள்வனவுக் கட்டளைகள் அதிகரித்திருப்பதை அடுத்து சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சி குறையத் தொடங்கியுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2SUOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 3 replies
- 859 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடாது எதி்ர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனாட் செவர் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு மற்றும் நேரப்பிரச்சனை காரணமாக அதிபர் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிக்கல நிலை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் சிறிலங்காவின் தேர்தல் திணைக்கள ஆணையாளர் தயானந்த திசநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். இருந்த போதும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள அ…
-
- 1 reply
- 562 views
-
-
ஆயுதங்களை ஏற்றியபடி தாய்லாந்தில் பிடிபட்ட வானூர்தி சிறிலங்காவுக்குத்தான் சென்றது என்று அதன் வானோடிகள் ஐவரும் உறுதிப்படுத்தி உள்ளதாக அவர்களின் சட்டவாளர் இன்று தெரிவித்தார். வடகொரியாவில் ஏற்றப்பட்ட ஆயுதங்களுடன் அந்த வானூர்தி ஈரானுக்குச் சென்று கொண்டிருந்ததாக தாய்லாந்து புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இடையில் எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரையிறங்கிய அந்த வானூர்தி ஈரான் சென்று சேர்வதற்கு முன்னதாக சிறிலங்கா, அசர்பைஜான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இடங்களில் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தது என்று ஆயுதக் கடத்தல் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்தத் தகவல்களை வானோடிகள் ஐவரினதும் சட்டவாளர் சொம்சாக் …
-
- 2 replies
- 1.1k views
-
-
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு சிறிலங்கா சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதனால் தொற்று நோய்களின் தாக்கமும் கூடவே அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சிறிலங்காவில் டெங்கு நோயின தாக்கம் காரணமாக 06 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 26பேர் வரையில் டெங்குநோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலை தொடரும் நிலை காணப்படுவதாகவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும் எனவும் சிறிலங்காவின் காலநிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. http://meenakam.com/?p=844
-
- 0 replies
- 528 views
-