Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் புதைந்துபோன எமது மக்களின் கனவை நினைவாக்குங்கள் திகதி: 18.12.2009 // தமிழீழம் ஈழத்தமிழ் மக்களால் 1976களில் முன்வைக்கப்பட்ட சுதந்திர தமிழீழத்திற்கான கோரிக்கை மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நாளை சனிக்கிழமை (19) கனடாவில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. வட்டுக்கோட்டை தீர்மானமும் அதன் உருவாக்கத்திற்கு வழிவத்த காரணிகளும் என்ன? வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையில் தமிழ் மக்கள் குறைந்தபட்ச பாதுகாப்புடனும், உரிமைகளுடனும் வாழ்வதற்கான ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தன…

  2. இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன. சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம். இலங்கைத் தீவி்ற்கு வெளியே - நாடு நாடாக - இப்போது 'வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்' மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது - தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து - ஏற்றுக்கொண்டு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம். …

  3. தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிப்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருப்பதாக அதன் துணைவேந்தர் அறிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA4d4de5PZc4e3022lJOSmd4decOYld1c0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e

    • 0 replies
    • 561 views
  4. சிறிலங்காவில் அதிபர் தேர்தலை ஒட்டிய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரு பிரதான வேட்பாளர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதால் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்தத் தேர்தல் காலத்தில் வன்முறைகள் தலைவிரித்தாடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA3d4de5PZc4e3022lJOSmd4decOYldRc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e

    • 0 replies
    • 553 views
  5. சரத் பொன்சேக்கா சம்பந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டேலீடர் பத்திரிகையில் வெளியான பிரதான செய்தி குறித்து இவ்வாரத்திற்குள் திருத்தங்களை வெளியிடாவிட்டால் அந்தப் பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அவர் தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகிய தினத்திற்கு மறுதினம் பத்திரிகையின் உரிமையாளர் லால் விக்ரமதுங்க, அந்தச் செய்தியை வெளியிட்ட சண்டேலீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் பெட்ரிக்கா ஜெயன்ஸ் ஆகியோரை தனது அலுவலத்திற்கு அழைத்துள்ள பொன்சேக்கா தாம் கூறாத விடயங்களை வெளியிட்டமை குறித்து அவர்கள் மீ…

  6. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் வழக்குத் தொடர முடியுமே தவிர, அவர்களை புதிய உத்தரவின்பேரில் சிறையிலிருந்து தடுப்புக்காவலுக்கு மாற்ற முடியாது. இவ்வாறு அரசுத் தரப்புக்குக் கண் டிப்பான உத்தரவு ஒன்றை உயர்நீதிமன் றம் விடுத்தது. வெள்ளவத்தையை வசிப்பிடமாகக்கொண்ட தியாகராஜா மோகனரூபன் (வயது 33) என்ற இளைஞர் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதே பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தது. இது தொடர்பாகக் கூறப்படுபவை வருமாறு: மேற்படி மோகனரூபன் 2007 செப்டெம்பர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு அவசரக…

  7. அரசின் மீது சர்வதேச நாடுகள் யுத்தக்குற்ற விசாரணைகள் நடத்துவதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் ஜெனரல் சரத் பொன்சேகா சர்வதேசத்துக்குப் பெற்றுக்கொடுத்து விட்டார் என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியது. மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ரிசாந்த வர்ணகுலசூரிய இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இவ்வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இந்நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்ட நாளாகும். அன்றைய தினம்தான் எதிர்க்கட்சிகளின்பொது வேட்பாளர் சரத் பொன்சேகா எமது படையினரையும், யுத்த வெற்றியையும் காட்டிக்கொடுத்தார். யுத்தக் களத்தில் படையினரிடம் சர…

  8. பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மாணவ விசா விண்ணப்பங்களை கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பிக்க விரும்புபவர்கள், எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமென பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் அறிவிப்புச் செய்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: மாணவ விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு தம்மை பதிவு செய்ய விரும்புபவர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் காலை 8.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்ukstudent colombo@vifshelpline.com என்ற இணையத்தள…

  9. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் போர்க்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளையிட்டு அவரைப் பாதுகாப்பதற்கு நான் முற்படப்போவதில்லை. அவருடைய பொறுப்புக்களுக்கு அப்பால் சென்று எதனையாவது அவர் செய்திருந்தால் எதற்காக நான் அவரைப் பாதுகாக்க முற்பட வேண்டும்? இவ்வாறு கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்களித்துள்ள பேட்டியில் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளையில், அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக தான் செல்ல வேண்டி ஏற்பட்டாலும் கூட தன்னுடைய கட்டளையில் செயற்பட்ட படையினர் அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு உட்படுத்தப்படுவதை தான் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்திருக்கின்றார். தான் இராணுவத்தில் இருந்தது போரில்…

    • 0 replies
    • 466 views
  10. சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் கொள்கை அறிக்கையில் இனப்பிரச்சனை தொடர்பாகவோ, தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பது பற்றியோ எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. சரத் பொன்சேகா தனது பத்து அம்ச கொள்கைப் பிரகடனத்தை கண்டி சிறி புஷ்பாதான கேட்போர் கூடத்தில் வெளியிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் அவருக்கு ஆதரவு வழங்கும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். சரத் பொன்சேகாவின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வைக் கொடுக்கப் போகிறேன் என்பது பற்றியும் அவர் வாய் திறக்…

  11. தேசியதலைவரின் மகள் துவாரகாவின் இறந்ததாக உள்ள உடல் எதனையும் இராணுவம் கண்டுபிடிக்கவில்லை என இராணுவ பேச்சாளர் உதய நாணையகார தெரிவித்துள்ளார். அண்மையில் இணையதளம் ஒன்றில் வந்ததாக கூறப்படும் துவாரகாவின் இறந்த உடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர். தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் தவிர்ந்த வேறெந்த உடல்களையும் அதாவது பிரபாகரன் அவர்களின் குடும்ப உறுப்பினர் உடல்களையும் தாம் கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர்.

  12. இடம்பெயர்ந்த மக்கள் தமது இழந்துபோன தமது வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் மீளக்கட்டியமைத்துக்கொள்வதற்கு 3,262,381 அமெரிக்க டாலர் உதவி தேவைப்படுவதாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவரும் அமைப்புக்களில் ஒன்றான கரித்தாஸ் (Caritas) அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையிலான போர் கடந்த மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்தபோது இடம்பெயர்ந்த சுமார் 3,00,000 மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டனர். இவர்களில் சுமார் அரைப் பகுதியினரை விடுவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், ஏனையவர்களை ஜனவரி இறுதிப் பகுதிக்குள் விடுவிப்பதாக உறுதியளித்திருக்கின்றது. இந்தநிலையில் விடுதலை செய்யப்படும் மக்கள் வீடு ஒன்றையே…

  13. தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுத் தவிக்கும் மக்கள் ஒரு புறம் இருக்க, வெளியே வந்தவர்களோ எங்கு செல்வது, என்ன செய்வது எனத் தெரியாது திண்டாடுகின்றார்கள் என சமூகப் பணியாளர் வணபிதா டேமியன் பெர்னான்டோ குறிப்பிடுகின்றார். http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA3d4de5PZc4e3022lJOImd4decOYlddc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e

    • 0 replies
    • 564 views
  14. கொழும்பு, பொரல்ல சொய்ஸா பெண்கள் வைத்தியசாலையில் பணியாற்றும் இளம் தாதியொருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். தாதியொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த மூன்று தாதியர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 வயதான தாதியொருவரே டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார். http://www.globaltamilnews.net

  15. ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுவினை தாக்கல் செய்த கையோடு இன்று மஹிந்த இராசபக்‌ஷ அவர்கள் கதிர்காமம் சென்றார். அங்கு கிரி விகாரைக்கு சென்று தேர்தலில் வெற்றி வே|ண்டி போதி பூசையில் ஈடுபட்டார். அதன் பின்னர் கதிர்காமம் முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார். இந்த வழிபாட்டில் மஹிந்தவின் உறவினரும் கதிர்காமம் பிரதேச சபை தலைவருமான சசீந்திர ராசபக்‌ஷவும் கலந்து கொண்டுள்ளார்.

  16. இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் இதுவரை காலமும் கனடா விதித்து வந்த பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த சூழ்நிலை காரணமாக அவசரத் தேவைகள் தவிர இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்வதனைத் தவிர்க்குமாறு கனடா முன்னர் அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு கனடாவின் முன்னைய பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் இலங்கைக் கனேடியர்கள் நாட்டுக்கு விஜயம் செய்யவார்கள் என கனேடிய தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அதிகளவான கனேடியர்கள் இலங்கைக்கு சுற்…

  17. 20 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்குவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனத் தெரிவக்கப்படுகிறது. தமக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு கால சிறைத்தண்டனை தொடர்பில் ஊடகவியலாளர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளின் போது அரச தரப்பு சட்டத்தரணி இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளார். திஸ்ஸநாயகத்தினால் கோரப்பட்டுள்ள பிணை மனுவிற்கு அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிணை மனு மீதான விசாரணைகளுக்கு நாள் ஒன்றை நிர்ணயிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்து வரும் முதலாவது…

  18. சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த ஆறு இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வு விசாரணைப் பிரிவினரால் நேற்று செட்டியார்தெருவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தேவேந்திரராஜா தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களை அடுத்த சில தினங்களில் நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net

  19. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை அலுவலகங்களில் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படுவதாக அதன் யாழ். மாவட்ட அமைப்பாளர் திலக்குமார உடுகம தெரிவித்தார். தமது கட்சியின் பிரதான அலுவலகம் 83, வேம்படி வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் 10 கிளை அலுவலகங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்தவற்காகத் தாம் யாழ்ப்பாணத் தில் அலுவலகங்களைத…

  20. அரியாலை வடக்கு, சுண்டுக்குளிப் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இறந்தவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. திருநாவுக்கரசு சற்குணவதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தெரியவரு வதாவது, இறந்த பெண்ணின் வீட்டுச் சூழலில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கே பூட்டிய அறையினுள் தலை, கழுத்துப் பகுதிகளில் இருந்து இரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் விரிப்பினால் போர்த்திய நிலையில் சடலம் காணப்பட்டது. சடலம் துர்நாற்றம் வீசியதிலிருந்து மூன்று, நான்கு நாள்களுக்கு முன்னரே அவர் இறந்திரு…

  21. தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி! முறியடிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் அரசுக்கு ஆலோசனை!! .புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்துவரும் குமார் மேசஸ், வோல்டர் ஜெயவர்த்தன போன்ற சிங்…

  22. இன்று பொல்காவலை பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டியும் அரசாங்க அமைச்சர் ஒருவரின் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த காயங்களுடன் குருனாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அம்புலன்ஸ் வாகனம் மற்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டது. குறித்த அம்புலன்ஸ் வாகனம் பொலிஸ் தடைகளையும் மீறி வேகமாக சென்றதாகவும் இதனால் அந்த அம்புலன்ஸ் விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

  23. வவுனியா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மிகவேகமாக பரவி வருகின்றது. தடுப்பு முகாம் உட்பட பல கிராமங்களில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 8ம் வகுப்பு மாணவனும் உள்ளடங்குவர். நாளாந்தம் 100 க்கணக்கானோர் சிகிச்சை பெற்றுவருவதாக வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். முகாம்களில் இதுவரை 700 பேர் வரை டெங்கு காச்சலினால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கூறியுள்ளார். வவுனியா வைத்திய சாலையில் இரத்த பரிசோதனை செய்யும் வசதிகள் பற்றாக்குறைவாக இருப்பதாகவும், ஆளணியினரும் பற்றா குறைவாக இருப்பதாகவும் வைத்திய கலா நிதி சத்தியலிங்கம் கூறியுள்ளார்.

  24. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் மகன், வானியல் ஆய்வாளராக பயிற்சி பெறும் நோக்கில் நாசா நிறுவனத்தில் இணைந்துகொண்டுள்ளதாக மிகவும் நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்துகொண்ட முதலாவது இலங்கையர் என்ற பெருமை கோதபாய ராஜபக்ஸ மகன் பெற்றுள்ளார். பலகோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் கல்வியில் இதுவரை இலங்கையர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பாரியளவில் செலவிட்டு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவில் இலங்கையில் கோடீஸ்வரர்கள் உருவாகததால் இலங்கையர் எவரும் நாஸா நிறுவனத்தில் பயிற்சிகளுக்காக இணைந்துகொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துளளார். இலங்கையர் என்ற வ…

  25. போர் இடம்பெற்ற கடைசிக்காலப்பகுதியில் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அரசு விளக்கமளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவுடன் பேச்சுக்களை நடத்திவிட்டு, சென்னை ஊடாக நாடு திரும்புவதற்கு முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று வெளியிடப்பட்ட கருத்து க…

    • 3 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.