ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சனாதிபதி வேட்பாளர் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா வேட்பு மனுவை இன்று தேர்தல் ஆணையாளரிடம் தாக்கல். அதே நேரத்தில், வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் வவுனியா மாவட்ட தமிழ் பகுதி அமைப்பாளர் இரங்கநாதன் பாக்கியநாதன் தலைமையில் வவுனியா நகரில் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். நகரில் பச்சை கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது. பொன்சேகாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதினை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் நடந்தது என தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் சரத்பொன்சேகா விரைவில் வவுனியாவிலும் மன்னாரிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளவரவுள்ளார் என அமைப்பாளர் பாக்கியநாதன் தெரிவித்தார்.
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை எடுத்துரைக்கும் 150க்கும் மேற்பட்ட படுகொலைகள் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்ட ஆவணப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA2d4de5PZc4e3022lJOymd4decOYldTc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e
-
- 0 replies
- 563 views
-
-
. வீரகேசரி இணையம்;நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது. …
-
- 6 replies
- 1.4k views
-
-
. ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்களை சேர்ந்தோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவிருப்பதனால் செயலகத்தினதும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்களை சேர்ந்தோர் தமது கட்டுப்பணத்தை செலுத்தும் காலஎல்லை நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 18 பேரும் சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த …
-
- 1 reply
- 565 views
-
-
சிறிலங்காவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திசநாயகம் விரைவில் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையில் விரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் துணை போனதாகவும் சிறிலங்கா காவல்துறையால் திசநாயக்கம் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. ஆனால் அந்த தண்டனை குறித்த சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக திசநாயகத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டதுடன், அவருக்குப் பிணை அனுமதி கோரும் மனுவும் தாக்கல்…
-
- 2 replies
- 735 views
-
-
மாத்தறை நகரில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் தேர்தல் விளம்பரப் பலகைகள் இனந்தெரியாத சிலரினால் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு, தீயிடப்பட்டுள்ளன. இந்தப் பெற்றோல் குண்டுத் தாக்குதலினால், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள சில வீடுகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் மாத்தறை மாவட்டத் தலைவர்கள், மாத்தறைக் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பிலிருந்து பசிலுக்கு 10 வீதமும் நாமலுக்கு 10 வீதமும் தரகுப் பணம் வழங்கப்படுகின்றது – மங்கள : இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற அமைப்பிலிருந்து பசில் ராஜபக்ஸவிற்கு 1…
-
- 1 reply
- 877 views
-
-
கோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் சுடப்பட்டனர் - சரத் பொன்சேகா .ளுரனெயலஇ 13 னுநஉநஅடிநச 2009 10:57 செல்வன் . சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப்படியேதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதை சிறிலங்காவின் அரச தலைவருக்கான வேட்பாளர் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட நேர்காணலில் உறுதிப்படுத்தினார். போரின் இறுதிக்கட்டத்தின்போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பற்றி தனக்கு எந்தவிதமான தகவல் பரிவர்த்தனைகளும் செய்யப்படவில்லை எனவும் விடுதலை…
-
- 19 replies
- 2.9k views
-
-
வவுனியா தாதியர் கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகளும் இடைநிலைப் பெண் பயிற்சியாளர்களும் ‘பர்தா’ அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு இலங்கையிலிருந்து தாதியர் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மாணவிகள் ‘பர்தா’ அணிந்து வருவதற்கு முன்னர் அனுமதி இருந்தது. ஆனால் - அண்மையில் புதிய பணிப்பாளர் கல்லூரி நிர்வாகத்தைப் பொறுப்பேற்றதை அடுத்து மாணவிகள் ‘பர்தா’ அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன புதிய பணிப்பாளரின் நெறிப்படுத்தலை அடுத்து முஸ்லிம் மாணவிகள் சாதாரண தாதியர் உடையையே அணிந்து வரவேண்டும் என்றும் ‘பர்தா’ அணியக் கூடாது என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த விடயம் குறித்து மீள்குட…
-
- 1 reply
- 901 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலங்களில் உள்ளவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாவாந்துறை, குருநகர், காக்கைதீவு, பருத்தித்துறையின் சக்கோட்டை, வியாபாரி மூலை, பொலிகண்டி, அல்வாய் தும்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மழை வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடுப்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தேவாலயங்களிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். மழை நீர் வடியக் கூடிய வாய்க்கால் அமைப்பு இவ்விடங்களில் இல்லாததால், வெள்ளம் தேங்கி நிற்கின்றது. தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் அதிகரித்தே காண்ப்படுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுவதால், சுகாதார வசதிகளும் இம்மக்களுக்குத் தேவைப்படுக…
-
- 0 replies
- 532 views
-
-
சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த 'ஜிஎஸ்பி பிளஸ்' [ GSP+ ] ஏற்றுமதி வர்த்தக வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ ஆறு மில்லியன் யூரோக்களை வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA2d4de5PZc4e3022lJOymd4decOYldJc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e
-
- 0 replies
- 499 views
-
-
சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த 'ஜிஎஸ்பி பிளஸ்' ஏற்றுமதி வர்த்தக வரிச்சலுகையை இரண்டு மாதத்திற்கு நிறுத்துவதாக முடிவு செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ ஆறு மில்லியன் யூரோக்களை வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA2d4de5PZc4e3022lJOymd4decOYldJc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e
-
- 0 replies
- 609 views
-
-
யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சரத் பொன்சேகா நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதைத் தடுக்க சதி முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது அதிபர் வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல் தடுப்பதற்கான திட்டம் ஒன்று அரசாங்க உயர் மட்டத்தில் தீட்டப்பட்டிருப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். அதிபர் பதவிக்கான நியமனப்பத்திரங்கள் நானை வியாழக்கிழமை சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கும் நிலையில் மங்கள சமரவீர இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றார். பௌத்த பிக்குகளைப் பெருமளவுக்கு தேர்தல் திணைக்களத்தின் முன்பாகக் கொண்டுவந்து சரத் பொன்சேகா தனது நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்காமல் தடுப்பதற்க…
-
- 0 replies
- 527 views
-
-
முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் உதவுவதற்கு அனைத்துலக தொண்டர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் [ David Miliband ] சிறிலங்கா அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று அவர் சிறிலங்காவின் அரசியல் மற்றும் மனிதார்ந்த நிலவரங்கள் தொடர்பான சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் - எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அரச அதிபர் தேர்தல் சுதந்திரமான முறையிலும் நியாயமான முறையிலும் நடத்தப்படுவது அவசியம். சகல இன மக்…
-
- 0 replies
- 452 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே ஜெனரல் சரத் போன்சேகா இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பாகிஸ்தானின் தி நேசன் [ The Nation ] பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும், சிறிலங்கா அதிபரின்; செயலாளர் லலித் வீரதுங்கவும் முற்றாக நிராகரித்துள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அதிகாரிகளி்ன் தலைமையாளராக [ Chief of Defence Staff ] நியமிக்கப்பட்ட விவ…
-
- 0 replies
- 412 views
-
-
கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர் வைரமுத்து பவானி. தனது உறவினர் ஒருவரின் திருமணச் சடங்கிற்காக மூன்று வருடங்களின் முன்னர் வடக்கிற்கு அவர் போயிருந்தார். கடந்த செப்டெம்பர் மாதம் வரையில் அவரால் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வர முடியவில்லை; வடக்கில் நடைபெற்ற போரில் சிக்கிக்கொண்டார். குண்டுத் தாக்குதலால் தன்னுடைய குடும்பத்தில் 6 உறுப்பினர்களையும், தனது கால்கள் இரண்டையும் அவர் பறிகொடுத்துவிட்டார்; அந்த நிலையிலும் பல மாதங்களை, மக்கள் நிரம்பி வழிந்த தடுப்பு முகாம்களில் அவர் கழிக்க வேண்டி இருந்தது. இப்போதும் கூட - அரச அதிகாரிகளின் கடும் கண்காணிப்புக்கு மத்தியிலேயே அவர் வாழ்கிறார். தடுப்பு முகாமிலிருந்து அவர் கிழக்குக்குத் திரும்பிய நாள் முதல் ஒவ்வொரு நாளும…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கையில் இறுதிபோரின்போது அரசினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்குற்றம், மனித உரிமை மீறல்களுக்கு ஐ. நா விசாரணைகளை மேற்கொள்ளும் போது அதற்கான முழு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் அமெரிக்கா வழங்கும் என அந்த நாட்டின் பொதுமக்கள் விவகாரத்திற்கான துணை செயலர் பிலிப் ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார். அரசு செயலகத்தில் பத்திரிகையாளர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார் பிலிப் ஜே.கிரவ்லி. மேலும் அவர் தனது கருத்தில் இலங்கை அரசாங்கம் தமிழர்களுடன் நேர்மையான உறவுகளை பேணி அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள துணை செயலர் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான தனது நேர்மையான அணுகுமுறைகளை கடை…
-
- 5 replies
- 942 views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6956569.ece
-
- 6 replies
- 1.4k views
-
-
பல்வேறு கலந்துரையாடல்கள், விவாதங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தீர்மானத்திற்கு அமைய நேற்று இலங்கைக்கான வரிசலுகையினை தற்காலிகமாக நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடவடிக்கைக்காக இணைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வாணிப பொறுப்புக்கான பேச்சாளர் கிறிஸ்டியன் ஹோமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் இதுபற்றி தெரிவிக்கையில் இலங்கை வரி சலுகையினை தொடர்ந்து பெறுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஹோமான் அவர்கள் தொடர்ந்தும் தாம் இலங்கையுடன் வரிசலுகை அற்ற வாணிபத்தினை செய்வோம் எனவும்…
-
- 2 replies
- 524 views
-
-
இலங்கை அரசாங்கம் தமது துணை தூதரகம் ஒன்றினை மேற்கு சீனாவில் திறந்துள்ளது. மேற்கு சீனத்தில் இலங்கையின் உறவுகளை மிக நெருக்கமாக பேணுவதற்கே இந்த துணை தூதரகம் திறக்கப்படுவதாக சீனாவுக்கான இலங்கை தூதர் கருணா திலக அமுனுகம தெரிவித்துள்ளார். சிங்குவான் மாகாணத்தில் சென்கு என்ற இடத்திலேயே இந்த தூதரகம் திறக்கபட்டுள்ளது. இந்த மாகாணம் இலங்கையுடன் 2008 இல் இருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதாக கூறிய அமுனுகம 14.27 மில்லியன் டொலர் வரையான வாணிபங்களை செய்து கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். தொலைகாட்சி, ஆடைதொழிலுக்கான இயந்திரங்கள் ஆகியவற்றை இந்த மாகாணத்தில் இருந்து இலங்கை இறக்குமதி செய்வதாகவும் அதே நேரம் சீனாவுக்கு இலங்கையில் இருந்து கனியவளங்கள், இரும்பு தாது ஆகியன ஏற்றுமதி செய்யப்படுவதாகவு…
-
- 0 replies
- 429 views
-
-
அம்பாறை, திருக்கோவில் வக்காலைப் பகுதியில் நேற்றுமாலை 6.15 மணியளவில் வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு மட்டகளப்பில் இருந்து அம்பாரை வந்துகொண்டிருந்த வான் ஒன்றிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. ஆரம்ப விசாரணைகளிலிருந்து இந்த வான் ஏறாவூர்ப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.மேற்படி சம்பவத்தில் ஏற்பட்ட உயிரி ழப்புக்கள் மற்றும் காயப்பட்ட விபரங்கள் தெரியவரவில்லை . www.eelanatham.net
-
- 0 replies
- 411 views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து 99 வீதம் ஆம் என்று வாக்களித்த பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் ! 99% assent Tamil Eelam in overwhelming turn out of 31,000 in France [TamilNet, Monday, 14 December 2009, 02:23 GMT] 31,148 eligible Eezham Tamil diaspora voters over 18 in France participated this weekend in the referendum to say yes or no to independent and sovereign Tamil Eelam and 30,936 of them have said yes. The postal votes permitted to interior areas of France are yet to be counted and is expected to be between 2,000 and 3,000. In the absence of any official statistics, police estimates earlier placed the number of adult Eezham Tamils in France between 25,0…
-
- 28 replies
- 2.4k views
-
-
இன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் மஹிந்த இராசபக்ஷவும் சரத் பொன்சேகாவும் தமது தேர்தல் மனுக்களை தாக்கல் செய்தனர் மொத்தமாக 23 பேர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுவில் 22 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. விண்ணப்பங்களை ஏறுக்கொண்ட தேர்தல் ஆணையாளர் அனைவருக்கும் தேர்தல் சட்டங்கள் தொடர்பாக ஒரு மணி நேரம் வகுப்பெடுத்தார். இதில் 17 வது திருத்த சட்டமூலம் பற்றியும் விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் ஆட்சேபனை மனு கோரப்பட்டபோது சரத் பொன்சேகாவின் மனுவை ஆட்சேபித்து மஹிந்த ஆதரவாளர்களால் மனு கொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையாளர் அந்த மனு அடிப்படை அற்றது என தள்ளூபடி செய்தார். இதன் பின்னர் மஹிந்தவும், சரத்தும் கைகொடுத்தனர். (யார் வென்றாலு…
-
- 0 replies
- 387 views
-
-
கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ரெலோ கட்சியின் எம்பியான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிடுமாறு மஹிந்தவினால் பல கூட்டமைப்பு எம்பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டெலோ கட்சியின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சிவாஜி லிங்கம் ஆகியோருக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதே நேரம் இந்தியாவும்கூட்டமைப்பினரை தனியாக கேட்டால் நல்லது என ஆலோசனை தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும் தனி வேட்பாளரை நிறுத்துவதில் மஹிந்த முனைப்பாக இருப்பது பெரும் சூழ்ச்சி திட்டங்களின் அடிப்படையிலேயே என பலர் கூறினர். அதாவது தனித்து ஜனாதிபதி தேர்தலில்…
-
- 18 replies
- 2.1k views
-
-
இந்தோனேசியாவில் அந்த நாட்டு அதிகாரிகளால் ஏற்றுகொள்ள மறுக்கப்பட்ட ஓசியானிக் விக்கிங் கப்பலில் இருந்த 78 பேருக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இனி இந்த அகதிகள் எந்த நாட்டிற்கு அனுப்பபடவேண்டும் என ஐக்கிய நாடுகள் முடிவெடுத்து ஒழுங்கு படுத்தி அனுப்பும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர்களான இந்த 78 பேரும் அவுஸ்ரேலியா நோக்கி படகில் சென்று கொண்டிருந்த சமையம் அவுஸ்ரேலிய கரயோர காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் இந்தொனேசியாவுக்கு கொண்டுவந்து விட முற்பட்டவேளை இந்தோனேசிய அதிகாரிகள் அதனை மறுத்தனர். எனவே கப்பல் தொடர்ந்தும் கடலில் 40 நாட்களாக தரித்து நின்றது. இதனை தொடர்ந்து ஐ. நா, அவுஸ்ரேலியா, இந்தோனேசியா ஆகிய ஆகியோர் சேர்ந்து…
-
- 2 replies
- 1.1k views
-