Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இங்கே எழுதப் போகின்ற விடயம் சிலருக்கு புதியதாக இருக்கலாம். நடைமுறைச் சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் வெறுமனே நக்கலான பதில்களோடு நிறுத்தி விடாது, இதிலே உள்ள சாதக, பாதகங்களை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன். நடைமுறைச் சாத்தியம் இல்லையென்றால் அதை காரணங்களோடு விளக்குங்கள். குவன்ரனாமோ பற்றி அறிந்திருப்பீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். அங்கே அமெரிக்கப் படையினரால் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதான குற்றச்சாட்டுகள் நிறைய உண்டு. ஒபாமாவும் தேர்தலின் போது இந்தச் சிறைக் கூடத்தை மூடுவதாக வாக்குறிதி தந்ததாக ஞாபகம். அது கிடக்கட்டும். அமெரிக்கப் படையினர் தமது கைதிகளை அடைத்து வைத்திருக்கும…

    • 86 replies
    • 9.1k views
  2. இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09-11-2009 சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்ற…

    • 0 replies
    • 1.3k views
  3. தமிழ்மாறன், கொழும்பு 08/11/2009, 14:36 ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் நீதிக்கு முரனாக அரசியல் நலன் கருதி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைக் இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து 6 மாதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நீடிக்கபடவுள்ளது நிலையில் இதற்கான முடிவை ஐரோப்பிய பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் எடுக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடைநிறுதினாலும், …

  4. வவுனியாவில் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மதியம் வவுனியா பிரதேசம் ஒன்றில் இனம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே எதிர்பாராத இம்மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இராணுவத்தினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/news/4032/54//d,view.aspx

  5. காந்தன், வவுனியா 08/11/2009, 13:37 வவுனியாவில் 7 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுடன் இருவர் கைது! வவுனியாவில் கிளைமோர் குண்டுடன் சந்தேகத்தில் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரிடம் 7.25 கிலோ fpuhk; எடையுள்ள சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு வெடிக்கக்கூடிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. கிளைமோருடன் டிக்னேற்றர், வெடிக்க வைக்கும் தானியங்கி, வேறு சில சாதனங்களும் மீட்க்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். pathivu

  6. சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய தேசிய முன்னனியின் சார்பில் பொது வேட்பாளராக இவர் நிறுத்தப்படலாம எனத் தெரியவருகிறது. புதிதாக உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரவு தேசிய சனநாயக முன்னனி என்பன இணைந்துள்ளன. இதே வேளை பொது வேட்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டால், ஜேவிபியும் பொதுக்கூட்டமைப்பில் இணையும் என ஏலவே தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்களுக்கான நலன்கள் பேணப்படுதல் க…

    • 0 replies
    • 749 views
  7. தமிழ்மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வு திட்டத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு விரைவில் முன்வைக்கப்போவதாகவும், அது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தீர்வு திட்டம் தொடர்பான வரைவு 80 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. புதிதாக சேர்க்கப்பட்டவேண்டிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அனைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் என கூறிய ஆனந்தன் எம்பி, எந்ததொரு இனத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் தீர்வு திட்டம் அமைந்துள்ளது என்றார். தீர்வு திட்டம் அரசிடம்கையளிக்கப்பட…

    • 0 replies
    • 754 views
  8. இலங்கையில் மனித நேயமிக்கவர்கள் மீண்டும் மக்கள் முன் வருக. பம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா? எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே. குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது. குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் தமது கருத்துக்களை முன்வைக்கையில் இது போன்ற மனித நாகரீகமற்ற சம்பவத்திற்காகா கவலைப்படு…

  9. வலிகாமம் மேற்கில் தொல்புரம், காழுவன், துணைவி சந்தி ஆகிய பிரதேசங்களில் புதிய மினி முகாம்களும், இராணுவ காவலரண்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த பகுதிகளில் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளும் காலை மாலை நேரங்களில் இடம்பெறுகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த பகுதிகளில் அண்மையில் வன்னியில் இருந்து வந்த மக்களே குடியேறியுள்ளனர் ஆகவே இவர்களுக்கு மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    • 2 replies
    • 877 views
  10. தனி தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையில் போர் ஓயாது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் வழங்கி வீழ்த்தி விட்டது. Vaiko9விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறும் இலங்கை அரசு இன்னும் அப்பாவி தமிழர்களை முள் வேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்? இலங்கை பிரச்சினைக்காக முத்துக்குமார் உள்பட 14 பேர் தமிழகத்தில் தீக்குளித்தனர். ஆனால் அவர்களின் தியாகத்தை போலீசார் பல்வேறு பிரச்சினைகளை கூறி கொச்சைப்படுத்தினார…

  11. சரத் பொன்சேகாவின் பிடியில் நீண்ட காலம் இருந்த அவருக்கு விசுவாசமாக இருக்கும் என நம்பப்படுகின்ற சிங்க ரெஜிமென்ற் படையணியே கொழும்பில் பாதுகாப்பு தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு இதுவரை பொறுப்பாக இருந்தது. ஆனால் நேற்றில் இருந்து இந்த சிங்க ரெஜிமென்ற் படையணி வாபஸ் பெறப்பட்டு கவசப்படையணியினை சேர்ந்த பிரிவுகள் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளன. இதே நேரம் சிங்க ரெஜிமென்ற் சரத் பொன்சேகா மற்றும் சில உயர் அதிகாரிகளின் பாதுகாப்பில் மட்டும் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த செயற்பாடு அரசாங்கத்தின் சரத் பொன்சேகா மீதான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்துகிறது என தெரிவிக்கபடுகின்றது.

  12. வன்னி, துணுக்காய் கல்வி வலயத்தின் முதன்மை பாடசாலையான மத்திய கல்லூரி நாளை திங்கள் கிழமை திறக்கப்படவுள்ளதாக முல்லை அரச அதிபர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அண்மையில் துணுக்காய் பகுதியில் குடியேறியுள்ளதால் இந்த பாடசாலை திறக்கவேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதே நேரம் 56 பாடசாலைகள் துணுக்காய் கல்வி வளாகத்தில் இருக்கின்றன இந்த பாடசாலைகளும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

  13. ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதில் எனக்கு பிரச்சினை இல்லை ஆனால் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணங்கவேண்டும் என ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளார். நேற்று உதயன் ஆசிரியர் வித்தி அவர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால் பொதுவேலைத்திட்டம் ஒன்றின் கீழ் பொது வேட்பாளர் ஒருவரை எதிரணி சார்பில் ஏகமனதான நிறுத்தும் திட்டத்துக்கு ஒத்துழைக்க தாம் தயார்.அதற்கு முன்னர் அடிப்படையான சில விடயங்களில் இணக்கம் காணப்படவேண்டும். பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டாலும் அத்திட்டத்தை ஏற்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் அப்படி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிற…

  14. பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. ‘மே, 1968… அர்ச்சகரின் மீதுதான் தவறு!’ – அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும். ‘என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?’ – பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை. …

    • 28 replies
    • 2.6k views
  15. சிறிலங்கா பொதுவுடமை நாடுகள் அமைப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பிபிசிக்கு வாக்களியுங்கள் Should Sri Lanka be suspended from the Commonwealth? Should Sri Lanka be suspended from the Commonwealth? PLEASE VOTE "YES" and pass it on...!!!

  16. உலகம் மறந்துபோக முற்பட்ட உண்மைகளை மீண்டும் உரத்துக் கூறியவர்கள் புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன்றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள். அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்று…

  17. கொம்புசீவும் அமெரிக்காவும் தடுமாறும் இந்தியாவும் போர் முடிவடைந்ததும் நடைபெறப்போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன. இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன. ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சிகள், ரணிலை முன்னிலைப்படுத்தும் எதிர்க்கட்சியினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரோடு இணையும் சிறுபான்மையின தேசியக் கட்சிகள் என்பவற்றோடு நான்காவதொரு அணியாக அரசியல் களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் சேர்ந்து கொள்வாரென எதிர்வு கூறப்படுகிறது.அவர் தேர்தலில் இறங்கி தற்போதைய ஆட்சியாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென இரண்டு தரப்பினர் விரும்புகின்றனர். உள்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியைக் கைப்பற்ற விரும…

  18. ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது "தலைவனின் ஆளுமையும் வெற்றியும்" புரிகிறது "அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலா…

  19. ’’நவம்பர் மாதமென்பது ஒரு மகத்தான மாதம் என்பதை நாம் இந்தப் பக்கங்களில் வருடக்கணக்காக எழுதிக் கொண்டே வந்தோம். இன்று மட்டும் அதை எப்படி மறுப்பது. அல்லது மறப்பது?. நமது ஈழத்தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். அந்த மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றவர்களாய் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டும். அதை சிங்கள தேசத்திடமிருந்து வாய்களால் கேட்டு வாங்கிவிட முடியாது. அதைப் போராடித்தான் பெறவேண்டும் என்ற நம்பிக்கைகளோடு போராடப் புறப்பட்ட அந்த பிரபாகரன் என்னும் வீரத்தமிழத் தலைவன் பிறந்த மாதம் இந்த மகத்தான நவம்பர்தான். இதே மாதத்தில் தான் இந்த மாவீரர் பற்றிய நினைவெழுச்சி நிகழ்வுகளும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தன. அந்த …

  20. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் மீனவர்களிடமிருந்தும், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்தும் கப்பம் பெற்றுவருவதாக வடக்கின் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு - யாழ்ப்பாணம் பயணத்திற்கான ஒருவழிக் கட்டணமாக தற்போது தலா பயணியிடம் 2000 ரூபா அறவிடப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கப்பம் கொடுக்காவிடின், பயணியிடம் அறவிடப்படும் தொகையை 1100 ரூபாவாக உரிமையாளர்களுக்கு குறைக்க முடியுமென இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், அமைச்சரின் சகாக்கள் நாள்தோறும் தம்மிடம் கப்பப் பணம் சேகரித்து வருவதாக வடக்கிலுள்ள மீனவர்கள் இராணுவத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்துவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. …

    • 10 replies
    • 1.5k views
  21. மனநிலை சரியில்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்த சம்பவத்தை நேரில் கண்ட டி.என்.எல் தொலைக்காட்சியில் துணை செய்தி ஆசிரியர் சிசிகெலும் டஹம்பிரியா பாலகே வியாழக்கிழமையன்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். மேற்படி சம்பவத்தைப் பல போலீஸ் காரர்கள் பார்த்துக் கொண்டிருந்ததாலும், அவர்களின் மேற்பார்வையிலேயே அந்த இளைஞர் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாலும் இது குறித்து தாம் போலீஸுக்கு முறையிடவில்லை என அவர் கூறினார். கடற்கரையில் நடந்தது என்ன என்பதை தாம் கமரா ரெக்கோடர் மூலமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தை அடுத்தமைந்துள்ள கட்டடத்தின் 7 ஆவது மாடியில் இருந்து பார்த்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஒரு நபரை மூவர் தடிகளால் அடித்தப…

    • 0 replies
    • 711 views
  22. இடியட் இண்டியன்ஸ்… கோழைத் தமிழர்கள்! இடியட் இண்டியன்ஸ்… கோழைத் டமிலர்களே….’’ இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக, தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள். இந்திய நாட்டையும், தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த மீனவர்கள், இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது? யாரிடம் சொல்வது? சொன்னால் நம்புவார்களா? என்றெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில், ‘இலங்கைக் கடற்படையில் சீன வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து அறிக்கை அனுப்பு…

  23. கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக அங்குள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் இயங்க வைப்பது மற்றும் அபிவிருத்தி பணி குறித்தும் ஆராயவென இன்று விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட புதிய அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து சென்றுள்ள மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர் களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார். மேல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை மீண்டும் இயங்க வைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பாடசாலைகளிலிருந்து இட…

  24. தமிழ்மாறன், கொழும்பு 05/11/2009, 15:20 விசாரணைக்காக சென்ற செல்வம் அடைக்கலநாதன் இதுவரை வீடு திரும்பவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீதான விசாரணைகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் அவர் வீடு திரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய செல்வம் அடைக்கலநாதனை கட்டுநாயக்க வானூர்த்தி நிலையத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைகள் நடத்தியிருந்தனர். பின்னர் நேற்று மாலை கொழும்பு திவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டிடத்தொகுதியில் சென்ற பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் இவரைச் சந்தி…

  25. அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்கக் கோருகிறது தமிழ்க் கூட்டமைப்பு 2009-11-07 05:37:33 மீளக்குடியமர்வை துரிதப்படுத்தவும் வலியுறுத்து.. நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டமையால் இனியாவது அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஜனநாயகம் மலர அரசு இடமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது. வவுனியாவிலுள்ள அகதிகளை விரைவாக மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். இது தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு: அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.