ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்டியமர்த்துவதற்கு அரசாங்கம் அதிகளவு முன்னுரிமை கொடுத்துவருவதாகத் தெரிவித்த சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, கற்பனை செய்வதைவிட இது மிகவும் கடினமான இலக்கு எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாதலின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்குகொண்டு உரையாற்றிய அரசுத் தலைவர், உள்நாட்டில் இடம்பெயர்நத தற்காலிக வசதிகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களுடைய வீடுகளுக்கு துரிதமாக அனுப்பிவைப்பதே அரசின் முக்கியமான நோக்கம் எனவும் தெரிவித்தார். அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவத…
-
- 0 replies
- 356 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்று வெகு விரைவில் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படும் எனவும், வடபகுதியில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்காவின் துணைப் படைத் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுக்கு வந்ததையடுத்து கட்சிக்கான யாழ். மாவட்ட அமைப்பாளர் ஒருவரை நியமித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வடபகுதியில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கட்சியின் செயலகம் ஒன்றைத் திறந்துவைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியையும் வகிக்கும் அ…
-
- 0 replies
- 412 views
-
-
பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?.. "எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லா…
-
- 15 replies
- 952 views
-
-
தமது உயிர்களுக்குப் பாதுகாப்பளித்து அடைக்கலம் கொடுக்குமாறு இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஒருத்தி அதிகாரிகளிடம் கெஞ்சிய மனதை உருக்கும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 832 views
-
-
முகாமிலுள்ள ஒரு தொகுதி விடுதலை புலி உறுப்பினர்களுக்கு, டிசெம்பர் 15 ஆம் திகதியளவில் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை தேசிய நல்லிணக்க நீரோட்டத்தில் கலப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்து சரியான தகவல்கள் இல்லை, புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கே.பி, பாலகுமாரன் உட்பட, சிலரின் பெயர்கள், அரச புலனாய்வுப் பிரிவினராலேயே கசிய விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர், கோத்தபாய ராஜபக்ச, வெளிநாட்டு அமைச்சர் றோகித போகொல்லாகம போன்றோரின் அமெரிக்க விஜயத்தை அடுத்தே இத்தகவல்கள் வெளி வருகின்றது. செப்டம்பர் 21 ஆம் திகதியன்று, அமெரிக்க இராஐங்க திணைக்களம், போர்க் குற்றம் தொடர்பான விரிவான அறிக்கையயான்றினை காங்கிரஸ் சபைக்கு சமர்பிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
இது சிவசேகரத்தாரின், தமிழக இதழான புதிய ஜனநாயகத்துக்கென கொடுக்கப்பட்ட பேட்டி. தன் கடும் புலியெதிர்ப்பினை மார்க்சிய கோட்பாட்டுக்களுக்குள்ளும், மார்க்சிய புனைவுகளினூடும் மறைத்து கொள்ள முயன்று, அதில் தோல்வி கண்ட தமிழ் புத்திசீவித்தனத்தின் ஒரு பேட்டி சிவசேகரம் மீது வைத்திருந்த நல்ல அபிப்பிராயம் அனைத்தும், இந்த புலியெதிர்ப்புப் பேட்டியால் இல்லாமல் போய்விட்டது. பேராசிரியர் என்பதற்கு அப்பால், சிறந்த கவிஞர், சமூக ஆய்வாலார் என்பதால் அவரால் சிறந்த விதத்தில் அலசியிருக்க முடியும். ஆனால் கடும் புலியெதிர்ப்பு அவரின் புலமையை அழித்துவிட்டது. சிங்கள பேரினவாதத்தின் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையின் எதிர்வினை தான் புலிகள் என்பதனை ஏற்காமல், எந்தவிதமான மறுவிவாதமும் இன்றி புலிகளிகளை பாசி…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் மற்றும்,போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளுக்கான இயக்குனர் ராதிகா குமாரசுவாமி அவர்கள், வரும் மாதம் நவம்பர் 8ம் திகதியில் தனது விசேட பிரதி நிதியாக மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களை இலங்கை அனுப்பவுள்ளார். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பான நலன்களை பார்வையிடுவதற்காகவே இவர் செல்கின்றாராம். கடந்த மாதம் கோத்தபாய, ரோகித போகொல்லாம,ரட்னசிறி ஆகியோரை சந்தித்த குமாரசுவாமி இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துறையாடியதாகவும் அதன் பின்னரான இன்னெர் சிற்றி பிரெஸ் இன் கேள்விக்கு பதிலளிக்கையில் தாம் ஒரு பிரதினிதியினை அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மே 17 2009 இற்கு முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்த போது சிறுவர்கள் அ…
-
- 1 reply
- 603 views
-
-
இலங்கையர்கள் உலகளாவிய ரீதியில் வெளியேறி செல்வதற்கு அங்கு இடம்பெறும் உள்நாட்டு யுத்தமே காரணம் என அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் தெரிவித்துள்ளார் செய்தியாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர், பொதுமக்களை கடத்தி வருதல் மற்றும். எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படு;த்தும் சம்பவங்களுக்கு அவுஸ்திரேலியா, மன்னிப்பு வழங்காது எனக் குறிப்பிட்டார். எந்த ஒருவரும் சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக்கு உரித்துடையவர் இல்லை என கருதப்பட்டால் அவர் உடனடியாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார் எனக் குறிப்பிட்ட அவர் இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 12 மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவே அங்கிருந்து மக்கள் அதிக…
-
- 1 reply
- 800 views
-
-
அரசுத் தலைவர் பதவிக்கான அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள ஜே.வி.பி, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட அரசுத் தலைவர் பதவியை இல்லாதொழிப்பதற்கான அரசியல் செயற்றிட்டம் ஒன்றையும் தாம் வகுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது தற்போதைய காலகட்டத்தில் அரசுத் தலைவர் பதவிக்கு திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதை தாம் எதிர்ப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும், அரசாங்கம் எமது கோரிக்கையைக் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு தேர்தலுக்கான அறிவித்…
-
- 0 replies
- 365 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட திருப்தி தெரிவிக்கவில்லை. வவுனியா முகாம்களுக்கு நாம் மேற்கொண்ட பயணம் மிகவும் வேதனையையும், கடினமான வலியையுமே எமக்கு ஏற்படுத்தியது அந்த மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவைகள் கண்கலங்கிவிட்டேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐந்துநாள் பயணமாக இலங்கை வந்து வவுனியா முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவ…
-
- 2 replies
- 920 views
-
-
இலங்கை சென்றிருந்த இந்திய எம். பிக்கள் தூதுக்குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.கருணாநிதி நேற்று மாலை வர வேற்றார். நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையை அங்கு வைத்து முதல்வரிடம் கையளித்தனர்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் பேசும் போதுபருவ மழை ஆரம்பமாகும் முன்னர் அகதிகளை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டதாகவும் முதல்வர் மு.கருணாநிதி கூறினார். தமது ஆட்சியினை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியல் கட்சிகள், தமிழீழ மக்களின் போராட்டத்தினை எந்தவித குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லாமல் பாவிப்பது ஒரு தொடர்கதை. ஆனால் இந்த வருடம் தாயகமண்ணில் தமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசுத் தலைவர் பதவிக்கான அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள ஜே.வி.பி, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட அரசுத் தலைவர் பதவியை இல்லாதொழிப்பதற்கான அரசியல் செயற்றிட்டம் ஒன்றையும் தாம் வகுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது தற்போதைய காலகட்டத்தில் அரசுத் தலைவர் பதவிக்கு திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதை தாம் எதிர்ப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும், அரசாங்கம் எமது கோரிக்கையைக் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு தேர்தலுக்கான அறிவித்…
-
- 0 replies
- 434 views
-
-
சிறிலங்காவில் நீர்கொழும்பு நகருக்கு அருகேயுள்ள கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து மேலும் இரண்டு தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவ்விருவரும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்தே இந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களைக் கொண்டுவருவதற்கு இந்த இருவருமே விடுதலைப் புலிகளுக்குத் தகவல் கொடுப்பதாகவும் காவல்துறைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 282 views
-
-
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வகுத்துச் செயற்படுவதற்கான நோக்கத்துடன் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அடுத்த வாரம் விலகுகிறார். மாத்தளையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் இதனை உறுதிப்படுத்தினார். அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பரப்புரை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவே பதவியைத் துறப்பதாகவும் அவர் தெரிவித்தார். ‘எதிர்வரும் 20ஆம் நாள் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க உள்ளேன்' என்றார் பசில். நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வாசித்த பின்னர் தான் தனது பதவியை விட்டு விலகுவேன். அதன் பின்னர் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்…
-
- 0 replies
- 376 views
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிக்கலானவையாக இருக்கின்றன என்றும் அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதனால், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்த முடியாமல் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர்கள் மட்டத்திலான ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பண்டாரநாயக்க நினைவு அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமானது. அரச தலைவர் அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். "இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்தும் பணிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை அகற்றும் பணி எமது முழுமையான கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட அப்பணிகள் கு…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது என்றார் கருணாநிதி. பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்... கேள்வி - கண்ணி வெடிகளை காரணம் காட்டி இலங்கை அரசு தாமதம் செய்கிறதே? முதல்வர் - அங்குள்ள தமிழர்கள் பெயரால் இங்குள்ள ஆர்வலர்கள் கூறும் கருத்து அது. கேள்வி - தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றப் படுவார்களா? முதல்வர் - அப்படி திட்டம் இல்லவே இல்லை என்று இலங்கை மறுத்திருக்கிறது. கேள்வி - உண்மையான முகாம்களை காட்டவில்லை. ராணுவம் காட்டிய முகா…
-
- 0 replies
- 673 views
-
-
வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது மற்றொரு பிரதிநிதியை ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவிற்கு அனுப்பி வைக்கிறது. முகாம்களில் உள்ள சிறுவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காணுமாறு அரசுக்கு அழுத்தங்களை வழங்குவதற்காகவே ஐ.நா. பிரதிநிதி அனுப்பி வைக்கப்பட உள்ளார். ஐ.நா.வின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் விவகாரங்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமியின் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மேர்ட் விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். ராதிகா குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார் என ஐ.நா. இணையத் தளம் கூறுகின்றது. ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய ராத…
-
- 0 replies
- 264 views
-
-
வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் மக்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என தமிழ்நாட்டில் இருந்து சென்ற திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று புதன் கிழமை இந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஏனையவர்களும் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 58,000 பேரையும் மீளக்குடியமர்த்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளன எனவும் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களில் ஒருவர…
-
- 0 replies
- 297 views
-
-
அம்பாறை பொத்துவில் நகரில் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற அமைச்சர் கருணா குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர் காவற்துறையினரால் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் எத்தம பிரதேசத்தில் உள்ள கருணாவின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுந்தரலிங்கம் தர்மலிங்கம், ஆன்டி ரனிஸ்குமார், மகிந்த குமார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில்லைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தகுமாரி என்ற 19வது யுவதியை சந்தேக நபர்கள் கடத்திச் செல்ல முயன்றதாக பொத்துவில் காவற்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை பொத்துவில்லில் உள்ள கருணா குழுவின் அலுவலகத்திற்கு கடத்திச் சென்ற போது, தான் அங்கிருந்து தப்பிச் வந…
-
- 5 replies
- 887 views
-
-
சிறிலங்கா படைகளின் தலைமைத் தளகர்த்தாவும் தரைப் படையின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓரங்கட்டும் முயற்சிகள் எவற்றிலும் அரச தரப்பு ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் ஊடகத் துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன. ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த போதே அவர் இப்படிக் கூறினார். விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் பதவியை சரத் பொன்சேகாவிற்க்கு வழங்கியதன் மூலம் போர் வெற்றியாளரான அவரை அரசு சிறுமைப்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். நீண்டகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய படை அதிகாரிகளைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் அரசு நடந்து கொள்வதாக எதிர்க் கட்சிகள் தெரிவித்து வரும் குற்றச்…
-
- 0 replies
- 407 views
-
-
வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் மக்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று புதன் கிழமை இந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஏனையவர்களும் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 58,000 பேரையும் மீளக்குடியமர்த்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளன எனவும் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர…
-
- 0 replies
- 457 views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐந்து நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா சென்றிருந்த திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தூதுக்குழு, துணை படைத் தலைவரும் அமைச்சரவை தகைமை இல்லாத அமைச்சருமான விநாயகமூர்தி முரளீதரனைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்ட அதேவேளையில் மற்றொரு துணைப்படைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. அமைச்சர் முரளீதரனுடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த போதிலும், திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. அதனாலேயே அக்குழுவினரின் கிழக்கு மாகாணப் பயணமும் ரத்துச்செய்யப்பட்டதாக என இந்தியத் தூதரக வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வ…
-
- 2 replies
- 596 views
-
-
சிறிலங்காவில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்திய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தங்கள் ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பியது. அவர்களை முதல்வர் மு.கருணாநிதி சென்னை வானூர்தி நிலையம் சென்று வரவேற்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 536 views
-
-
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்~ அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரை இடம்பெறச் செய்யத்திருந்தாக வெளிவிகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பெயரிடப்பட்டுள்ள எவரையும் சர்வதேச போர்க் குற்றம் தொடர்பில் கைதுசெய்ய முடியாது. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரையும் இடம்பெறச் செய்து அதன்மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகளை அனுபவித்து கொண்ட கோத்தபாய சபைக் கூட்டங்கள் எதிலும் …
-
- 1 reply
- 1.2k views
-