ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐந்து நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா சென்றிருந்த திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தூதுக்குழு, துணை படைத் தலைவரும் அமைச்சரவை தகைமை இல்லாத அமைச்சருமான விநாயகமூர்தி முரளீதரனைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்ட அதேவேளையில் மற்றொரு துணைப்படைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. அமைச்சர் முரளீதரனுடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த போதிலும், திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. அதனாலேயே அக்குழுவினரின் கிழக்கு மாகாணப் பயணமும் ரத்துச்செய்யப்பட்டதாக என இந்தியத் தூதரக வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வ…
-
- 2 replies
- 596 views
-
-
சிறிலங்காவில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்திய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தங்கள் ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பியது. அவர்களை முதல்வர் மு.கருணாநிதி சென்னை வானூர்தி நிலையம் சென்று வரவேற்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 536 views
-
-
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்~ அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரை இடம்பெறச் செய்யத்திருந்தாக வெளிவிகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பெயரிடப்பட்டுள்ள எவரையும் சர்வதேச போர்க் குற்றம் தொடர்பில் கைதுசெய்ய முடியாது. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரையும் இடம்பெறச் செய்து அதன்மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகளை அனுபவித்து கொண்ட கோத்தபாய சபைக் கூட்டங்கள் எதிலும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன் "நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்" என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்…
-
- 6 replies
- 1.4k views
-
-
"தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள் போல் முகாம் தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை. தங்கள் ஊருக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறுஎந்த கோரிக்கை யையும் முன்வைக்க வில்லை." என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது. முகாம்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியை சர்வதேச ஊடகங்களுக்கும், இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக மறுத்துவரும் இலங்கை அரசு, தமிழக நாடாளுமன்றக் குழுவிற்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது. முகாம்களைப் பார்வையிட்ட தமிழகக் குழுவின் சார்ப்பில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் யாவும், …
-
- 4 replies
- 981 views
-
-
வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும். இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும். இதற்…
-
- 0 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் இன்று மாலையிலிருந்து கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது. கடந்த ஓகஸ்ட்டில் பொழிந்தது போன்ற கடும் மழை இது என வவுனியாவிலிருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வவுனியாவின் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. முகாம்களின் கூடாரங்கள் ஏற்கெனவே கடும் சேதத்திற்குள்ளானதால் 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதியுற்றுள்ளனர். அவதியுறும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். இதன்காரணமாக வலயம் 6இன் இராணுவ அதிகாரிக்கும் மக்களுக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு நள்ளிரவு நேரமாகையால் மேலதிக தகவல்களை ஜீரீஎன்னால் பெற முடியவில்லை. http://www.globaltamilnews.net/tamil_news1.…
-
- 0 replies
- 535 views
-
-
இலண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தமக்கு எதிராக பிரித்தானிய அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் வெற்றி அடைந்துள்ளது.இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் கோவில் மற்றும் சிவயோகம் நம்பிக்கை நிதியமும் அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களும் விடுதலைப்புலிகளுக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் நிதி உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரித்தானிய அறக்கட்டளையினரால் அந்த அமிப்பிற்கும் அறப்பணிகளில் ஈடுபட மட்டுப்படுத்தப்பட்டதுடன். அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களை சிவயோகம் நிறுவனத்தில் இருந்தும் கடந்த ஆண்டு நீக்கியது. இந்த பிரித்தானிய அறக்கட்டளையினரின் தீர்ப்புக்கு எதிராக சீவரட்னம் அவர்கள் மேன் முறையீடு செய்தார் இந்த மேன் முறையீட்டு வழக்கு கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றது. இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெண்ணைக் கடத்திச் செல்ல முயன்ற அமைச்சர் கருணா குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் காவற்துறையினரால் கைது – தமக்கு பெரும் தொல்லை தருவதாக மக்கள் முறைப்பாடு 14 October 09 04:45 am (BST) அம்பாறை பொத்துவில் நகரில் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற அமைச்சர் கருணா குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர் காவற்துறையினரால் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் எத்தம பிரதேசத்தில் உள்ள கருணாவின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுந்தரலிங்கம் தர்மலிங்கம், ஆன்டி ரனிஸ்குமார், மகிந்த குமார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில்லைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தகுமாரி என்ற 19வது யுவதியை சந்தேக நபர்கள் கடத்திச் செல்ல முயன்றதாக பொத்…
-
- 0 replies
- 749 views
-
-
நாம் இலங்கையில் வசிக்க முடியாது என்ற காரணத்தினால் உயிராபத்துக்களை தாண்டி அவுஸ்திரேலியாவினை நோக்கி படகில் பயணித்தவேளை இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம். எம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், எம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக படகில் உள்ள அகதிகள் சார்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலெஸ் என்பவர் எச்சரித்துள்ளார்.அவுஸ்ரேலிய பத்திரிகை ஒன்று இவரது எச்சரிக்கையினை உறுதி செய்துள்ளது.இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தி மலேசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் ஊடாக இந்த கப்பலில் ஏறி பயணைத்தினை தொடர்ந்தனர். இந்தநிலையில் கப்பலில் இருந்து தகவல் தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த…
-
- 0 replies
- 508 views
-
-
அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழர்களுக்கான ஒபாமா என்னும் அரசியல் அமைப்பு ஈழத்தமிழர்கள் இனியென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே இன்று முதல் தொடங்கி உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் என்றால் என்ன? புகலிட அரசாங்கம் என்றால் என்ன? இவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வாறு தொடர்புடையதாகின்றன? என்னும் கேள்விகளுக்கான இக்கருத்துகணிப்பு இன்றுமுதல் (14-10-2009) அடுத்தமாதம் 4ம் நாள் (04-11-2009) வரை நடாத்தப்படுகின்றனது. அதில் சில கேள்விகளுக்கான விளக்கத்தையும் அவர்கள் தந்துள்ளார்கள். அவ்விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடுகடந்த அரசாங்கம் என்பது (தற்காலிக அரசு எனவும் அழைக்கப்படுகிறது), ஒரு நாட்டில் பழைய ஆட்சி…
-
- 0 replies
- 384 views
-
-
ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க வேண்டாமா ? தண்டனை வழங்குங்கள் என்று கூக் குரல் இட்டால் மட்டும் போதாது சிறிலங்காவின் போர்க் குற்றத்திற்கு தண்டனை வழங்க உதவிடுங்கள் CWVHR For More Information, Please Contact Us... Office Address: Canada 705 Progress Avenue Unit # 106 Scarborough, Ontario, M1H 2X1 E-Mail Address: Australia infoaustralia@cwvhr.com Canada infocanada@cwvhr.com New Zealand infonewzealand@cwvhr.com Phone Numbers: Australia 02 9764 2900 0403 021 839 Canada 416-628-1408 416-841-7458 New Zealand 09 533 3187 0210 235 1007 Toronto, Ontario 705 Progress Avenue Unit # 106, Scarb…
-
- 1 reply
- 982 views
-
-
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்துள்ள தகவல்கள் முரண்பாடானவையாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 11,000 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டு தனியான முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், இவ்வாறு இவர்கள் இனங்காணப்பட்ட முறை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிரித்தானியா கவலை தெரிவித்திருக்கின்றது. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இது தொடர்பாக நேற்று கேள்வி எழுப்பினார். மழை காலம் ஆரம்பமாகும் போது மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தடுப்பதற்கு இடம்பெயர்ந்த மக்களுடைய நடமாடும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், முகாம் மக்களுடைய நடமாடும் சுதந்திரத்தை உ…
-
- 0 replies
- 502 views
-
-
தழிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்ற சிறிலங்கா அரசு, இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சமாதானத்தைக் கொண்டுவரும் பொறுப்பைக் கொண்டுள்ளது என யு.என்.டி.பி.யின் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் அஜே சிபர் தெரிவித்திருக்கின்றார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் யு.என்.டி.பி.யின் பணிப்பாளர், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்காக ஐ.நா. சபைக்கு தெரிவித்திருந்த கால அட்வணைப்படி சிறிலங்கா அரசு நடந்துகொள்ளும் என தாம் நம்புவதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார். "இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய முன்ன…
-
- 0 replies
- 326 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினரும் விடுதலைச் சிறுதைகள் அணியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர். இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதிமுகாம்களில் மக்களின் உண்மை நில…
-
- 0 replies
- 839 views
-
-
கருணாவைச் சந்தித்துப் பேச இந்திய எம்.பிக்கள் மறுப்பு!அதனாலேயேஅவர்களின் கிழக்கு விஜயம் ரத்து அமைச்சரும், ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீல.சு.கவின் உப தலைவருமான வி.முரளிதரனை (கருணாவை) சந்தித்துப் பேசுவதற்கு, இலங் கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மறுத்து விட்டது. அதனாலேயே அக்குழுவினரின் கிழக்கு விஜயம் ரத்துச்செய்யப்பட்டது என இந்தியத் தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இக்குழுவினரின் யாழ். விஜயத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடமும் கிழக்கு மாகாண விஜயத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் முரளிதரனிடமும் அரச உயர் மட்டத்தினரால் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஆ…
-
- 0 replies
- 573 views
-
-
ஆஸ்லோ: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய நடவடிக்கையான நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவா நகரில் நிறுவப்படவுள்ளது. சர்வதேச நகர் என்பதால் ஜெனீவாவில் தமிழீழ அரசை நிறுவ புலிகள் அமைப்பு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் ருத்ரகுமாரன் விஸ்வநாதன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஆஸ்லோவில் நடந்தது. ஆஸ்லோவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களையும், அமைப்புகளையும் பொது மேடையில் சந்தித்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டத…
-
- 0 replies
- 855 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்கவே காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் குழு அங்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷ தனிப்பட்ட அழைப்பு எதனையும் விடுக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற முறையில் பக்கத்து நாட்டு அதிபரால் அனுப்பப்பட்ட அழைப்பை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் பரிசீலித்திருக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க உதவும் வகையில் காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள…
-
- 1 reply
- 418 views
-
-
தேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு முழுமையான காணொளிகள் பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு ஈழவர்குரல்
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசின் தமிழ் விரோதப் போக்கையும் அட்டூழியங்களையும் உலகநாடுகள் இப்போது உணரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு அரசியல்வாதிகள் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இலங்கை அரசு இடைத் தங்கல் முகாம்கள் என்ற போர்வையில் வதை முகாம்களில் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர். அனர்த்தம் காரணமாக ஒரு நாட்டில் வீடிழந்தவர்களுக்கு அரசு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்களை முட்கம்பிகளுக்குள் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்கவேண்டும். இதைத்தான் சகல மனிதாபிமானமுடையோரும் மனிதாபிமான அமைப்புக்களும் நாகரிக வளர்ச்சியடைந்தவர்களும் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் எம…
-
- 2 replies
- 797 views
-
-
சுவிஸ்முரசம் "வாய்மூடி மௌனியாக இருக்கும் கூட்டமல்ல நாங்கள்,வாளெடுத்து மானம் காக்கும் மானத்தமிழினம் நாங்கள்”இந்த வசன நடையை எங்கோ ஒரு நாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான திரைப்படத்தில் கேட்ட ஞாபகம். அந்த அளவு தமிழ் உணர்வுடனும் தமிழ் மீதும் பற்றுக்கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திவந்த கருணாநிதி தனது உறவுகள் வகை தொகையின்றி கொல்லப்படும்போது சரி முள்வேலிக்குள் அகப்பட்டு கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது சரி சினிமாத்தனத்துக்காவது எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று சிங்கள அரசுக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் கறையினை களையும் பணியில் இந்திய மத்திய அரசுடன் கைகோர்த்து கருணாநிதி நடவடிக்கை மேற்கொண்டுவருவது இலங்கை தமிழ் மக்கள் …
-
- 4 replies
- 932 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய முதல்வராக யோகேஸ்வரி பற்குணராசா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது. அத்துடன், யாழ். மாநகரசபையின் பிரதி முதல்வராக துரைராசா இளங்கோவும் தெரிவான ஏனைய உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். யாழ். மாநகரசபையின் முதல்வராகத்தாம் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் தமது சத்தியப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை அதன்போது திருமதி பற்குணராசா யோகேஸ்வரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவை வருமாறு:
-
- 0 replies
- 829 views
-