ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக்கோரியும் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக நேற்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
பிள்ளையான் ஐ.தே.க விற்கு ஆதரவு? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சுப் பதவியை வகிக்கும் கருணாவுடன் தொடர்ச்சியாக நீடித்து வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிள்ளையான் இவ்வாறானதோர் தீர்மானத்தை விரைவில் எடுக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட தலைவர்களுடன் தற்போது இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக கருணாவை பிள்ளையானும், பிள்ளையானை கருணாவும் பொது இடங்…
-
- 6 replies
- 931 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 917 views
- 1 follower
-
-
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் போலிப்பிரசாரம் செய்கிறார் : 'டைம்ஸ் ஒப் இந்தியா' வில் இலங்கை தூதரகம் கண்டனம் வீரகேசரி இணையம் 4/1/2009 10:59:49 AM - நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அநாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத
-
- 0 replies
- 656 views
-
-
அண்மையில் சிறி லங்கா கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுளில் உயிரிழந்த பொது மக்களின் விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் உடனடியாக தந்து உதவுங்கள்.நன்றி.
-
- 0 replies
- 634 views
-
-
கடுமையாக போராடும் விடுதலைப்புலிகள்: விரக்தியில் விளிம்பில் சிறிலங்கா இராணுவம் [ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, 04:32.11 PM GMT +05:30 ] இராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் சிறிலங்கா இராணுவத்தினர் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்ச முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது. ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது இராணுவம். கார…
-
- 0 replies
- 946 views
-
-
சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அதன் உறுப்பு உரிமையுள்ள நாடு ஒன்று நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக அதிக அக்கறை கொள்ளவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக தமிழீ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொ…
-
- 1 reply
- 457 views
-
-
இலங்கையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பாக உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவுக்கும் அதற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் மிகவும் தீவிரமான கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுவரும் மனித பேரழிவுகளை நிறுத்தும் முயற்சிகளுக்கு தற்போது மேற்குலகம் செவிசாய்க்க ஆரம்பித்துள்ளது. இலங்கை விவகாரங்களுக்கு என பிரித்தானியா சிறப்பு பிரதிநிதியை இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நியமித்ததை தொடர்ந்து இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்ட முறுகல் நிலை மெல்ல மெல்ல தீவிரம் பெற்று வருகின்றது. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 ஆஸ்திரியா, …
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு -கொலம்பியா நீதிமன்றத்தில் தாக்கல் வீரகேசரி நாளேடு 4/1/2009 8:41:02 AM - தமிழர்கள் படுகொலைகளுக்கு எதிரான அமெரிக்க குழு, அமெரிக்க திறைசேரி செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக் லன்டாசாகர் ஆகியோருக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படுவதை ஆட்சேபித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கலின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், திறைசேரி போன்றவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் படுகொலைக்கு எதி…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலேயே இந்தக் கருத்தை தமிழக மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் சேர் ஜோன் கோல்ம்சுக்கும் இடையிலான சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமைக்காக நோர்வே அரசாங்கத்துக்கு சிறிலங்கா தமது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதுடன் அதனை வன்மையாகவும் கண்டித்தருக்கின்றது. கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவர் ரோர் ஹற்றீமை நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு அழைத்த அதிகாரிகள், தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தாமல் இவ்வாறான சந்திப்புக்கான ஏற்பாடுகளை நோர்வே அரசாங்கம் செய்தது ஏன் எனவும் வெளிவிவகார அமைச்சு அதிக…
-
- 0 replies
- 474 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறிலங்கா படையினர் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
சென்னை மயிலை மாங்கொல்லையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில்,ஈழத்தமிழர்களுக்கா
-
- 1 reply
- 635 views
-
-
தமிழகத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளும், கூட்டணி முடிவுகளும் ஓரளவுக்குத் தீர்மாகிவிட்டது. வாக்காளர்கள் நியமனங்களும், பிரச்சாரங்களும் இன்னமும் தொடங்கப்பட்டாத நிலையிலேயே, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கான எதிர்பிரச்சாரம் வலுத்து வருவதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவினதும், காங்கிரசினதும், ஆதரவாளர்களாக இருந்தவர்களே இத்தகைய எதிர் பிரச்சாரத்தில் குதித்திருப்பது இந்தக் கூட்டணியின் தேர்தல் வெற்றிப்பிரச்சாரத்துக்குச் சற்றுச் சவாலாகவே தென்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆடிய நாடகமே இந்த அதிருப்பதி நிலை தோன்றக் காரணமெனச் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர் போராட்டதை ஆதரித்துப் பேசிய, தமிழுணர்வாளர், இயக்குனர் சீமானை, கொளத்தூர் மணி, ஆக…
-
- 0 replies
- 798 views
-
-
Every Tamil Should listen to this and WORK TOWARDS TO FREE TAMILEELAM http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...al/Net24/KP.mp3
-
- 0 replies
- 643 views
-
-
திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில் அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிரு…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.9k views
-
-
மூன்று வாரங்களில் போர் நிறுத்தம்: இலங்கை அரசு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இலங்கையின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கும் மற்றும் சிறிய அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதனையடுத்தே போரை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் போராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறிய அமைச்சர் போராசிரியர் பீரிஸ், போரில் விடுதலைப் புலிகளை அரசாங்க படைகள் வெற்றி …
-
- 8 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவரால் சிங்களத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா? சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா அரசினிற்கு நிதி உதவி செய்வததை தடுப்பதற்காக புலம்பெயர் தேசத்து தமிழ உறவுகள் தாம் வாழகின்ற நாடுகளில் அந்தநாட்டின் நீதிமன்றங்களிலோ அன்றேல் அந்நாடுகளில் இதற்கெனவே விசேடமான நீதிமன்றங்கள் இருந்தால அவற்றிலேயோ வழக்குகளைப் பதிவு செய்யலாமா? இவ்விடையத்தைப்பற்றி, யாருக்காவது துறையியல் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் தொடர்பிருந்தால் ஆலோசிக்கலாமே! எழுஞாயிறு.
-
- 1 reply
- 698 views
-
-
வன்னியில் யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காகப் பிரிட்டனிலிருந்து 'வணங்கா மண்" (வன்னி மிஷன் ஷிப்) என்ற நிவாரணக் கப்பல் இன்று (31) புறப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ{க்குத் தெரியவருகிறது. வன்னி யுத்தப் பிரதேசத்தில்; சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய,உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று புறப்பட்டுள்ளது. 500 தொன் பொருட்களுடன் புறப்பட்டுள்ள இந்தக் கப்பலில் டாக்டர்கள் குழுவொன்றும் இடம்பெற்றள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்தக் கப்பலை நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் பாலித கொஹனவையைத் தொடர்பு கொண்டு லங்கா ஈ நியூஸ் கேட்டபோத…
-
- 5 replies
- 2.7k views
-
-
யுத்தவலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலமையை கருத்தில்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையாலும் விடுதலைப் புலிகளாலும் முன்மொழியப்பட்ட யுத்தநிறுத்தத்தை சிறீலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யுத்தம் முடிவுக்கு வரும்வரை தாங்கள் சர்வதேச மற்றும் உள்ளுர் அழுத்தங்களுக்கு அடிபணியப்போவதில்லை என தெரிவித்ததாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இருதரப்பையும் யுத்தத்தை நிறுத்தி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க ஆவணசெய்ய வேண்டும் என கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. நன்றி-பதிவு
-
- 3 replies
- 1.1k views
-
-
4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வு மெல்பேர்ண் நகரில் இற்றை வரை நடைபெற்ற அனைத்து தமிழ் நிகழ்வுகளுக்கும் மகுடம் சூட்டியது போன்று காணப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் முகங்களே தெரியாத அளவுக்கு பார்த்த இடம் எங்கும் தமிழீழத் தேசியக் கொடிகளும் தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்களும் ஆயிரக்கணக்கில் மக்களின் கைகளில் மிதந்து கொண்டிருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையுடன் இணைந்து மெல்பேர்ணை தளமாக கொண்டியங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் மெல்பேர்ண் நகரின் மத்தியில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அகவணக்கத்துடன் தொடங்கியது. "எங்கள் நி…
-
- 3 replies
- 1k views
-
-
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கும் பொருட்டும் பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும் பொருட்டும் உடனடிப் போர்நிறுத்தத்துக்கு விடுக்கப்படும் அழைப்புக்களை விடுதலைப்புலிகள் வரவேற்பதாக அறிவித்துள்ள அதேவேளையில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் புலிகளை அழித்து போரில் வெற்றி ஈட்டும் வரை யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து புலிகளுக்கு எதிரான போர் ஒரு போதும் நிறுத்தப்பட மாட்டாது என்று சிறீலங்கா அரசு மீண்டும் சூளுரைத்துள்ளது. இதற்கிடையே வன்னியில் பொதுமக்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதை அங்குள்ள சுகாதார தரப்பினர் பிபிசிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் அல்ல பயங்கரவாதிகள் கோத்தபாய ராஜபக்ஷ: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் என்று கூறுபவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதால் கைதுசெய்யப்படவில்லை எனவும் பயங்கரவாதிகள் என்பதால் கைதுசெய்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளார் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பலர் ஊடகதுறையினராக மாறினர். உதயன் பத்திரிகையைச் சேர்ந்தவரும் ஊடகவியலாளர் எனவும் அவருக்கு ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் அந்த நபர் ஒரு பயங்கரவாதி எனவும்…
-
- 1 reply
- 862 views
-